திருமணத்திற்குப் பின் லிமிட் கிளாமர் தப்பில்லை!


ராகவ்குமார்சினிமாவில் ஹீரோயின்களுக்குத் திருமணம் ஆகிவிட்டால் தொடர்ந்து வாப்பு கிடைப்பது கடினம். ஆனால் இப்போது ட்ரெண்ட் கொஞ்சம் மாறிவிட்டது. சென்னை பெண் சாந்தினி முன்பு சில படங்கள் நடித்து இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு பல முன்னணி டைரக்டர்கள் படங்களில் நடிக்க வாப்பு கிடைத்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் திருமணம் காதல் திருமணம்" என்று ரொமான்ஸ் பேச வந்தவரிடம், மேடம் இப்ப பண்ற படங்கள் பற்றிப் பேசலாம். காதல் பற்றி அப்புறம்தான்" என்று மாற்றினோம்.

இப்போ என்ன படம் கைவசம் உள்ளது?

எட்டுப் படங்கள் பண்றேன். சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும், மணி செல்வம் டைரக்ட் பண்ணும் படம், பாலாஜி சக்திவேல் டைரக்ட் செயும் படம், ராதாமோகன் இயக்கும் ‘பொம்மை’, அரவிந்த சாமி சதுரங்கவேட்டை-2. இன்னமும் சில படங்கள்."

பாலாஜி சக்திவேல், ராதாமோகன் இரண்டு வேறுபட்ட டைரக்டர் களிடம் நடிக்கும்போது கிடைத்த அனுபவம் எப்படி?

பாலாஜி படங்கள் மட்டும் இல்லாது நடிப்பும் இயல்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். நாம் ஸ்பாட்டில் இயல்பாக கேமராவிற்குப் பின்னால் செயும் செயல்களையும், பேசுவதையும் படம்பிடித்துவிடுவார். பின்புதான் இது எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். ராதா மோகன், ரொம்ப நார்மலா, டென்ஷன் படாமல் டைரக்ட் செவார்."

கடந்த வருட சினிமா தியேட்டர் மூடல் உங்களுக்கு சாதகமா? பாதகமா?

ஓரளவு சாதகமாகத்தான் இருந்தது. நான் நடித்த சில படங்கள் OTT தளம் மற்றும் அமேசான் வீடியோவிலும் வெளியாயின. என் குடும்ப நபர்கள் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இந்தக் காலங்களைப் பயன்படுத்திக் கொண்டேன்."

தியேட்டர்களில் உள்ள வரவேற்பு, வலைதளங்களில் உள்ளதா?

நிச்சயம் இல்லைதான். தியேட்டர் தரும் அனுபவம் தனி. நண்பர்கள் குடும்பத்தினர் என அனைவரும் கைதட்டி ஒரு காட்சியை ரசிப்பது தனி சுகம். ஆனால், நிறைய படங்கள் நடித்து தியேட்டரில் வெளிவராத சூழலில் இதுபோன்ற தளங்களில்தான் வளரும் கலைஞர்களின் திறமை வெளிப்படும்."

திறமை இருந்தும், நிறைய படங்கள் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகையாக வரமுடியாமல் போனது தமிழ் பேசத் தெரிந்த நடிகை என்பதுதான் காரணமா?

தமிழ்ப் பெண்ணாக இருப்பதால் முன்னேற முடியவில்லை என்று நான் நினைக்கவில்லை. சிலருக்குத் திறமையை வெளிப்படுத்த சினிமாவில் சில காலம் ஆகும். எனக்கு இப்போ தான் வாப்பு கிடைத்துள்ளது."

உங்க காதல் எப்படிப்பட்டது?

எங்கள் காதல் பள்ளிக் காதல். நானும் நந்தாவும் ஸ்கூல் பிரண்ட்ஸ். இருபது வருடப் பழக்கம். நட்பு காதலாக மாறியது. எங்கள் இரு வீட்டாரும் நண்பர்கள் என்பதால் திருமணத்திற்குப் பச்சைக் கொடிதான்."

பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆண் இருப்பது உண்மையா?

என் வெற்றிக்குப் பின்னால் இல்லை, முன்னால் இருக்கிறார் நந்தா. நந்தாவும் ஜீ டி.வி.யில் சீரியல்கள் நடித்துவரும் நடிகர் என்பதால் இந்தத் துறையின் கஷ்டம் புரியும். எனவே எனக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார். கணவரின் சப்போர்ட் என் பணியை நிம்மதியாகச் செய உதவுகிறது."

முதலில் காதலைச் சொன்னது யார்?

நந்தாதான் முதலில் காதலைச் சொன்னார்."

என்ன பரிசு தந்தார்?

எனக்கு சா பாபா பிடிக்கும் என்ப தால் சா பாபா படம் போட்ட தங்க மோதிரம் பரிசு தந்தார்." (சென்டிமென்ட் காதல்)

தேனிலவு போன இடங்கள்?

ஐரோப்பிய நாடுகள்."

நீங்கள் மாமியார் மெச்சும் மருமகளா? சீரியல் மருமகளா?

என் கணவருக்கு இணையாக என் வேலைக்கு ஆதரவு தரும் நபர் என் மாமியார். அதனால் மாமியார் மெச்சும் மருமகளாக நடந்து கொள்வேன்."

திருமணத்திற்குப் பின்பு கிளாமர் ரோல் செய முடியுமா?

இதில் என்ன தப்பு? எனக்குப் பொருந்தும் லிமிட் கிளாமர் ஓகே."

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :