சித்திரை மகளே வருக!கவிதை : எம்.கோதண்டபாணி - ஓவியங்கள் : வேதாஞாயிறும் திங்களும் பூரண புத்தொளி வீசும்

புண்ணிய சித்திரையே வருக...

அவதார நாயகர் ஸ்ரீராமரை உத்பவித்த தலை மாத திருமகளே வருக...

காதலர் கூடிக் களிக்கும் காமன் பண்டிகை காணும் வசந்த ருதுவே வருக...

உலகம் உய திருமந்திரத்தை பொதுமந்திரமாக்கிய உடையவர் அவதாரத் திங்களே வருக... வருக...!

மீனாட்சி - சோக்கன் மண விழா காண வரும் பூமகள் சித்திரையே வருக...

கனலா தகிக்கும் சித்திரையில் குளிர் நிலவா எழுந்தருளும் கள்ளழகரே வருக...

சிவனாரின் சிந்தையில் சித்திரையில் உதித்த (வி)சித்திர குப்தரே வருக...

அள்ள அள்ளக் குறையாத அட்சயமா அவதரித்த அலைமகளே வருக... வருக...!
Post Comment

Post Comment