பெண்கள் ஆண்களுக்கு சமமல்ல!-பெண்கள் ஆண்களுக்கு சமமல்ல!

பெண்களைப் பற்றி வில்லியம் கோல்டிங் எனும் ஆங்கில நாவலாசிரியர் சொல்கிறார்: பெண்கள் தங்களை ஆண்களுக்குச் சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக் கின்றனர் என்றே நான் நினைக்கிறேன். ஆண் களுக்கு நிகரானவர் இல்லை பெண்கள். மாறாக, ஆண்களை விட பன்மடங்கு உயர்ந் தவர்கள். ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால் அவள் அதைப் பெரிதாக்கிச் சிறப்பு செய்து விடுவாள். உன் உயிரணுவைக் கொடுத்தால் அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள். ஒரு வீட்டைக் கொடுத்தால் அதை அவள் குடும்பமாக விருந்து படைப்பாள். புன்னகையை அளித்தால், அவள் தன் இதயத்தை உனக்குக் கொடுத்து விடுவாள். கொடுப்பது எதுவாயினும், அதைப் பல மடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம். எனவே, அவளுக்குச் சிறிய அளவில் நீ ஏதாவது தொல்லை கொடுத்தாயானால் உடன் அதை டன் கணக்கில் உனக்குத் திருப்பிக் கொடுப்பாள் என்பதையும் புரிந்துகொள்."

- எஸ்.விஜயலெட்சுமி, கும்பகோணம்

போற்றுவோம்!

* விதைத்த விதை நெல்லைக் கணவர் தர அதை அரிசியாக்கி வீட்டின் கூரையையே விற காக்கி சிவனடியாராக வந்த இறைவனுக்கு உணவு சமைத்த இளையான்குடி நாயனாரின் மனைவி.

* பெற்ற மகன் வாழை இலை கொணரச் சென்றபோது பாம்பு தீண்டி இறக்க, உடலை ஓர் அறையில் மறைத்து வைத்து தம் குல குரு அப்பர் பெருமானுக்கு உணவு பரிமாறிய அப்பூதி அடிகளின் மனைவி.

* அடியார்களுக்கு அமுது படைப்பதற் காகவே கணவர் சுந்தரப் பெருமானிடம் செல் வம் கேட்க அதற்காகப் பல செந்தமிழ்ப் பதிகங் களை இறைவனிடம் பாடி பரிசுகள் பல பெற காரணமான பரவை நாச்சியார்.

* மணமுடித்தவுடன் ஞானசம்பந்தப் பெருமானுடன் ஜோதியில் கலந்து இறைவனடி சேர்ந்த அவரது மனைவி தோத்திரப் பூர்ணாம்பிகை.

* ஆத்திசூடி வினாயகர் அகவல் என பல தேன்தமிழ் இலக்கியங்கள் தந்த ஔவையார்.

- பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்

Post Comment

Post Comment