சம்மரை சமாளிக்க...-* கோடை காலத்தில் மோர், இளநீர்,எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் தினமும் ஏதேனும் ஒன்று அவசியம் பருகுங்கள். உடல் உஷ்ணத்தைத் தணிக்க இந்தப் பானங் களெல்லாம் சிறந்தவைதான்.

* சுட்டெரிக்கும் இந்தக் கோடை காலத்தில் பகலில் வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மறுக்காமல் குடை, தண்ணீர், சன் கிளாஸ் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

* சம்மர் சீசனில் சிந்தெட்டிக் ஆடைகள் வேண்டவே வேண்டாம். சீசன் முடியும்வரை காட்டன் உடைகள் அணிவது நல்லது.

* ஒரு கைப்பிடி ரோஜாப்பூ, ஒரு கைப்பிடி ஆவாரம்பூ, ஒரு ஸ்பூன் சந்தனத் தூள், ஒரு ஸ்பூன் சிறு பயறு இவற்றை விழுதாய் அரைத்து உடம்பில் பூசிக் குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.

* கடும் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க வெள்ளரிக்காய்ச் சாறுடன் பீட்ரூட் சாறு சேர்த் துப் பருக, உடல் சூடு தணியும். பித்தப்பையில் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.

* கோடை காலத்தில் சிலருக்கு, பானைத் தண்ணீரைப் பருகினால் சளி பிடித்துக் கொள்ளும். அவர்கள் அந்தத் தண்ணீரில் சிறிது துளசி இலைகளைப் போட்டு அருந்தினால் சளி பிடிக்காது.

* இந்த சீசனில் கிருணிப் பழம், நுங்கு, இளநீர் அதிகமாகச் சாப்பிட வேண்டும். மதிய உணவுக்குப் பின் வெள்ளரிக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுபோல் தர்ப்பூசணியைத் தினமும் சாப்பிடலாம். இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாகம் தீர்க்கும். சிறுநீரகம் நன்கு வேலை செய்ய உதவும்.

* வெள்ளரிக்காயுடன் பாசிப் பருப்பு,சின்ன வெங்காயம், வரமிளகாய், சிறிதளவு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கூட்டாகச் செய்து சாப்பிட, கோடைக்கு மிகவும் நல்லது.

* கோடை சமயத்தில் வெயிலில் அலைந் ததால் ஏற்படும் தலைச்சுற்றல், மயக்கத்திற்கு ஏலக்காய் கஷாயம் சிறந்த நிவாரணியாகும். நான்கைந்து ஏலக்காயைத் தட்டி, அதை அரை தம்ளர் நீருடன் சேர்த்துக் கொதிக்க விட வேண் டும். அதனுடன் பனைவெல்லம் கலந்து கஷாயமாகக் காய்ச்சிக் குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி புத்துணர்வு பெறலாம்.

* வடித்த கஞ்சியின் சூடு ஆறியபின் உடலில் தடவி குளிர் நீரில் குளித்து வந்தால் வியர்க்குரு தொல்லை தீரும்.

* கோடை காலத்தில் வெந்தயத்தைத் தயிரில் ஊறவைத்து காலை நேரத்தில் குடித் தால் உடல் உஷ்ணம் குறையும். மலச்சிக்கல் நீங்கும்.

* கோடை காலத்தில் மணத்தக்காளிக் கீரையைச் சாறு எடுத்துக் குடித்தால் உடல் சூட்டைத் தணிப்பதுடன் தொண்டை வறண்டு போகாமல் காத்து, ரத்தத்தைச் சுத்தம் செய்யும்.

* கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், சிறிது பெருங் காயத்தை மோரில் கலந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

* வெயிலுக்கு நீர் மோரில் நறுக்கிய பச்சை மிளகாய்க்குப் பதில் சிறிதளவு பொடித்த சுக்கு சேருங்கள். சுவை தூக்கலாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

* வெங்காயத்தை நறுக்கி பசு நெய்விட்டு வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப் பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் மூலம் குணமாகும்.

* சீரகத்தைச் சிறிதளவு எடுத்துத் தேங்காய்ப் பால் விட்டு நன்றாக அரைத்து, கட்டியின் மீது பூசிவர, வேனல் கட்டி மறைந்துவிடும்.

* கோடை காலத்தில் தயிருக்குப் பதில் மோரை அதிக அளவு குடித்தால் தாகம் அடங்கும். வியர்வையினால் வெளியேறும் நீர்ச்சத்தை மோர் ஈடுசெய்கிறது.

* குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந் தால் கட்டிகள் மீது குளுமையான நுங்கை மசித்துத் தடவ, சீக்கிரமே குணமாகிவிடும்.- கீதா ஹரிஹரன், கேரளா

திடீர் குல்ஃபி செய்து குழந்தைகளை அசத்தலாம்:

ஒரு கப் இனிப்பில்லாத கோவா, (இனிப்பு கோவா என்றால் சர்க்கரையைக் குறைத்துக் கொள்ளலாம்) ஒரு கப் பால், முக்கால் கப் சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு இரண்டு மூன்று சுற்று சுற்றி இட்லி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும். இதில் முந்திரித் துண்டு, பிஸ்தா துண்டு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து குல்ஃபி கிண்ணத்தில் விட்டு ஃப்ரீஸரில் வைத்தால் சிறிது நேரத்தில் குல்ஃபி ரெடி. சின்னச் சின்னக் கிண்ணங்களிலும் விட்டு வைத்தால், சீக்கிரம் உறைந்துவிடும். குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.- ஸரோஜா ஸ்ரீநிவாஸன், மும்பை
Post Comment

Post Comment