தோகை மயில்!மயில் பற்றிய அரிய தகவல்கள்


வாசகர் ஜமாய்க்கிறாங்க
வி.கலைமதி சிவகுரு, நாகர்கோவில் -* மயில்கள் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஆனால், மனித தடைக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

* கால் விரல்களுக்கிடையில் சவ்வுகள் இருந்தாலும், மயில்கள் நீச்சலடிப்பதில்லை.

* பொதுவாக மயில்களின் உடல் அழகான வடிவம் கொண்டிருப்பதால் கண்களைக் கொள்ளை கொள்கிறது. ஆண் மயில்கள்தான் மிகவும் அழகானவை.

* மதவழிபாடுகளில் சரஸ்வதிக்கு அடையாளமாகவும், கிரேக்கர்கள் வழிபாட்டி லும் இடம்பிடித்துள்ளது மயில்.

* வெள்ளைநிற மயில் கள் உருவாகக் காரணம் ஒரு மரபணு மாற்றமே.

* இனச்சேர்க்கை முடிந்தபின் பெண் மயில்கள் 3 முதல் 6 முட்டைகள் இடும். குஞ்சு பொரித்து வளரும் வரை தாய் மயில் அவற்றைப் பாதுகாக்கும்.

*மயில்கள் இனச் சேர்க்கைக்கு வெவ்வேறு மயில்களையே நாடுகின்றன.

* பொதுவாக மயில்கள் மழையை அறிவிக்க ஒலி எழுப்புகின்றன. அந்த ஒலியை அகவுதல் என்கிறோம்.

*எளிதில் மனிதர்களுடன் பழகும் தன்மை கொண்டது. அவை பழகும் மனிதர்களிடம் மற்றவர்கள் நெருங்கிப் பழகுவதை விரும்புவ தில்லை.

*விஷப் பாம்புகளிடம் போட்டி போட்டா லும் மயில்கள்தான் நிச்சயம் வெல்லும். கோயி லைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மயில்கள் அரணாக இருக்கின்றன.

*மயில்கள் தன்னை ஆபத்திலிருந்து காத்துக் கொள்ள மட்டுமே குறிப்பிட்ட தூரம் வரைதான் பறக்கும்.

* தாவரங்கள், விதைகள், பூக்கள், எறும்பு கள், தானியங்கள் மற்றும் சிறிய பாம்புகள், தவளைகள், வண்ணத்துப்பூச்சிகள், எலிகள் ஆகியவற்றை உண்ணுகின்றன.

* இவை குறைந்த மரங்கள் கொண்ட நிலப்பரப்பிலே வாழுகின்றன. இந்தியா, பர்மா மற்றும் இலங்கையில் பரவலாகக் காணப்படும்.

* மயிலின் வேறு பெயர்கள்: சிகி, ஞமலி, தோகை, சிகாவளம், சிகண்டி, மஞ்ஞை, ஓகரம், பிணிமுகம், கலாபி, நவிரம், பீலி, கேகயம் ஆகும். மயூரம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும்.

* வேட்டையாடுதல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Post Comment

Post Comment