ஆம், பெண்களே!தனுஜா -உங்கள் ஆரோக்கியம் குறித்தான விஷயங்களில் மிகுந்த சுயநலமாக இருங்கள். அதை உங்கள் பெண் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். உங்கள் பெண் குழந்தைகளுக்கு எட்டு வயதாகும்போதே சுய சுத்தம் பராமரிக்க, தன் உடல்நலனின் அக்கறை ஆகியவற்றைப் பழகச் சொல்லித்தர வேண்டும். அதற்குப் பின்வரும் காலங்களில் அவள் பருவ வயதின் உடல்நிலை மாற்றங்களையும் மனநிலை மாற்றங்களையும் பற்றி அவளிடம் விரிவாகப் பேசுங்கள். பருவமடைந்தபின் மாதவிடாக் காலங்களையும் அதில் சுய சுத்தம் பேண வேண்டிய அவசியத்தையும் தயக்கமின்றி உரையாடுங்கள். மாதவிடா மற்றும் கறை குறித்தான அவள் பயங்களைப் போக்குங்கள். அதன் பின் அவள் எடுக்க வேண்டிய சத்தான உணவுகளைப் பற்றித் தெளிவாக்குங்கள். தன்னையும் தன் உடல்நிலையையும் எப்படிப் பேணிப் பாதுகாக்கவேண்டும் என சிறுவயதிலேயே அவள் மனத்தில் இருத்தி வையுங்கள்.

ஆம், பெண்களே!

அவளின் பதின்ம பருவத்தில் வெளியுலகத் தின் தாக்கத்தில் புற அழகைப் பராமரிக்க அவளே பழகி விடுவாள். புற அழகைப் பரா மரிப்பதும் அவசியம்தான். அதோடு அவளின் உள் ஆரோக்கியத்தையும் இயற்கை அழகினை யும் பராமரிக்கக் கற்றுக் கொடுங்கள். உடல் ஆரோக்கியமே முக அழகினை அதிகரித்துத் தரும் எனப் புரிய வையுங் கள். சத்தான உணவுகள் மற்றும் பழங்கள் அதற்கு எவ்வளவு உதவும் என சிறு வயதிலேயே புரிய வைத்து விட்டால், காலம் முழுவதும் தயங்காமல் அதைக் கடைப்பிடிப்பாள்.

பெண், திருமண வயதை நெருங்கும்போதோ, அல் லது திருமணமாகிச் செல் லும்போதோ, அவள் நாள் தோறும் புகுந்த வீட் டினரின் ஆரோக்கியத் தோடு தன் ஆரோக்கியத்தையும் தவறாமல் பராமரிக்க வலியுறுத்திச் சொல்லுங்கள். அவளுக்குத் தேவையான ஓவு மற்றும் உறக் கம் அதனின் அவசியத்தைச் சொல்லி வையுங் கள். வீட்டினருக்குப் பிடித்த உணவினைச் சமைத்துப் பரிமாறி மகிழ்வது போல, தனக்குப் பிடித்தமான உணவினையும் சமைத்து உண்ண வேண்டிய அவசியத்தை உணர்த்துங்கள்.

அவளின் தாமைப் பருவத்தில் அவள் எடுக்க வேண்டிய சத்தான உணவுகள், மகிழ்ச்சி யான மனநிலை எவ்வளவு முக்கியம் என்பதைக் கவனத்தில் வைக்கச் சொல்லுங்கள். பிரசவத்திற்குப் பின் சத்து இழப்பிற்காக அவள் எடுக்கவேண்டிய சத்தான காகறி, பழவகைகள், ஆகாரங்களின் அவசியத்தை உணர்த்துங்கள். பிரசவத்துக்குப் பின் அவளின் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உடற்பயிற்சி, நடைப்பயிற்சி கட்டாயம் அவசியம் எனப் புரியவையுங்கள். உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரு வது அவளின் உடல் புற அழகையும் ஆரோக் கியத்தையும் அதிகரிக்கும் என்பதை வலியுறுத்துங்கள்.

ஆம், பெண்களே!

பெண்ணின் நடுத்தரவயது என்பது அவள் கவனமாக இருக்க வேண்டிய வயது. உடலில் முகத்தில் சற்று மாற்றங்களை உணரும் வயது. சற்று தன்னம்பிக்கை குறைந்து, சலிப்பாகத் தோன்றும் காலகட்டம். கணவன் மற்றும் பிள்ளைகள் தன்னை விட்டுச் சற்றுத் தள்ளிப் போனதாக உணரும் காலச் சூழல். மெதுமெதுவா நோகள் எட்டிப் பார்க்கத் தொடங்கும் தருணம். முதுகுவலி, முட்டி வலியென கூப்பிடாமலே வரும் அழையா விருந்தாளி களா. இந்தக் காலகட்டத்தில் யாரும் எவரும் எதையும் அவளிடம் உணர்த்தப் போவதில்லை. அவளே தன் சூழலை உணர்ந்து முன்பை விட உடல், மனநலனில் அதிக கவனம் கொள்ள வேண்டும். கால்சியம், இரும்புச் சத்து என உடலுக்குத் தேவை ஏற்படும் தருணம். உடல் எடை அதிகரித்து, அதன் பரிசாகப் பல்வேறு உடல் உபாதைகள் போனஸாகக் கிடைக்கக் கூடிய காலகட்டம். முடி உதிர்வது, நரை முடி என அழகைப் பதம்பார்க்கும். புற அழகும் சற்றுக் குறைய ஆரம்பிக்கும் பருவம். அதை சத்துமிகு பழங்கள், காகறிகள் மூலம் ஒரளவு ஈடு செயலாம். புற அழகையும் பல்வேறு சிகிச்சைகள் மூலம் தொடர்ந்து பராமரித்தே ஆக வேண்டும். அது அவளின் மணவாழ்க்கையைச் சிக்கலில் லாமல் கடக்க உதவும். உடல் நலனைப் போலவே மனநிலை யையும் தனக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள் மூலம் பேலன்ஸ்டாக வைத்துக் கொள்ள முயலலாம். எப்போதையும் விட பெண் அதிக கவனமாக தன் ஆரோக்கியத் தைப் பேண வேண்டிய மிக முக்கிய காலகட்டமிது.

ஆம், பெண்களே!

அடுத்ததாக பெண் மிக மிக எச்சரிக்கையாக கடக்க வேண் டிய பருவம். பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் தம் இயக்கத்தை நிறுத்தி வைக்கும் மெனோபாஸ் பருவம். மெனோபாஸ் வருவதற்கான அறிகுறி களோடு தொடங்கும் உடல் உபாதைகள் ஒருபுறம், ஹார்மோன் சிக்கல்களால் ஏற்படும் மன உபாதைகள் ஒரு பக்கமென அவளைப் பாடாப்படுத்தி எடுக்கும். திடீர் உடல்நிலை மாற்றத்தையும், திடீர் மனநிலை மாற்றத்தை யும் கையாளத் தெரியாமல் ஒரு தடுமாற்றம் ஏற்படும். மிக அழுத்தமான காலம். கூடவே கூடுதல் இலவச இணைப்பாக எலும்புத் தேமானம், சர்க்கரை, தைராடு, உயர் ரத்த அழுத்தம் என அழையா விருந்தாளிகளால் பெருந்தொல்லையால் அலைக்கழிக்கப்படும் காலகட்டம். அதிகப்படியான உதிரப்போக்கு, கால வரையறையற்ற உதிரப்போக்கு என ஒன்றன்பின் ஒன்றாக உயிரை எடுக்கும். இவை ஆண்டுக்கணக்கில் நீடிக்கக்கூடிய பிரச்னைகள். சத்தான ஆகாரங்கள், மிதமான உடற்பயிற்சி, காற்றோட்டமான நடைப்பயிற்சி, இவற்றுடன் யோகா, தியானம் என மனதையும் ஆரோக்கிய மாகப் பேண வேண்டியது மிக அவசிம். இப் பிரச்னை குறித்து உங்கள் கணவர், மகன் மற்றும் மகளுக்குப் புரிய வையுங்கள். அவர் களின் உதவியுடன் எளிதாகக் கடந்து வாருங்கள். இதுகுறித்த விழிப்புணர்வை சக பெண் களுக்கும், சக ஆண்களுக்கும் ஏற்படுத்துங்கள். இதுகுறித்து பொது இடங்களில் பேசத் தயங்க வேண்டிய தில்லை.

ஆம், பெண்களே!

தன் வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்தை மகிழ்ச்சி யாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்கும் பெண்கள் தங்கள் சுய ஆரோக்கியத்தைப் பரா மரிக்க நேரம் ஒதுக்கியே தீர வேண்டும். தனக்கு திருமண மாகி விட்டது, குழந்தை பிறந்தாயிற்று இனி நமக் கெதற்கு அழகு என அலட்சிய மாக இருக்க வேண்டியதில்லை. தேவையான நேரத்தில் மருத்துவ உதவி பெற சற்றும் தயங்காதீர்கள். ஒரு பெண் எந்த வயதிலும் அவளின் புற அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ள லாம். அதில் தவறேதும் இல்லை. தன் புற அழகோடு ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் பெண், வாழ்நாள் முழுவதுமே தன்னம்பிக்கை யோடு மிளிர்வாள்.

ஆம்,பெண்களே!

ஆரோக்கிய விஷயத்தில் சுயநலமாக இருங்கள்! அதை உங்கள் பெண் குழந்தை களுக்கும் வலியுறுத்துங்கள்! வாழ்க்கை வாழ்வதற்கே!
Post Comment

Post Comment