பக்க விளைவுசிறுகதை : சீனிவாசன் சுப்ரமணியன் - படங்கள் : பிரபு ராம்ஒரு சோம்பலான ஞாயிற்றுக்கிழமை. அஷோக் நகரின் 17வது அவென்யூ இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது. பார்வதி இல்லம் அதில் விதிவிலக்கில்லை; பார்வதி அம்மாளைத் தவிர. கணவரின் குறட்டை சமையலறை வரை. பார்வதி வெட்கத்தோடு எழுபதுகளில் நடராஜனை நினைத்துக் கொண்டாள். கல்யாணம், முதல் இரவு முடிந்து மறுநாள் வழக்கம் போல, பார்வதி சீக்கிரம் எழுந்து விட்டாள். புதிய அனுபவத்தின் வெட்கம் விலகாமல் புன்முறுவலோடும், கொஞ்சம் கர்வத்தோடும் அவசரமா ஆடைகளைத் திருத்திக் கொண்டு இளம் குறட்டையோடு தூங்கும் கம்பீரமான கணவனைப் பார்த்தாள். அப்பா... சரியான முரடு தூங்கறதைப் பாரு... ஒண்ணும் தெரியாத பாப் பாவாட்டம், அவசரமா பார் வையை விலக்கிக் கொண்டாள்... அது பெண்களின் இயல்புதானே!

நடராஜன் ரிடையர்டு பேங்க் ஆபீசர், பார்வதி அம்மாள் வீட்டு மேனேஜர். மூணு பசங்க இதுல இரண்டு பையன்கள் ஆஸ்திரேலியால செட்டில் ஆகி விட்டார்கள், ரெண்டு வருஷம் ஒருமுறை முடிந்தால் அப்பா அம்மாவைப் பார்க்க விஜயம். இல்லை நடராஜன் தம்பதிகள் ஆஸ்திரேலியா விசிட். இந்த கொரோனா வந்ததுல இருந்து அந்த விசிட்களுக்கு புல் ஸ்டாப். ஆ மறந்துட்டோமே கூட இருக்கற பொண்ணு பிரேமா.

எல்.ஐ.சி.ல ஆபிசர், இன்னும் கல்யாணம் ஆகலை (ஏதாவது நல்ல பையன் இருந்தா சொல்லுங்கோ, வயசு 25, அழகான பொண்ணு, சம்பளம் கிட்டத்தட்ட 12 L per year, வடமா, பூசம்). நேற்று பெரியவன் சேகரிடமிருந்து போன் முதல்லே அம்மாவுக்கு.

யம்மோவ் இந்தியால கொரோனா தடுப்பூசி ண்ஞுணடிணிணூ ஞிடிணாடித்ஞுணகளுக்குப் போட ஆரம் பிச்சு ஒரு மாசம் ஆறது நீயும் அப்பாவும் ஏதா வது பிரைவேட் ஆஸ்பத்திரில எடுத்துக்கோங் கம்மா, அப்பதானே இங்கே ஈசியா டிராவல் பண்ண முடியும்."

போடா பயமா இருக்கு" இது பார்வதி. என்னம்மா பயம் சின்ன ஊசிதானே?" அதில்லைடா பக்கவிளைவு ஜாஸ்தியாமே, பக்கத்து வீட்டு பங்கஜம் சொல்றா யாரோ ஒரு மாமிக்கு இந்த ஊசி போட்ட 15 நாள்ல கருகருனு மீசை தாடி வந்துடுத்தாம்."

சேகர், அதெல்லாம் வெட்டிப் புரளி. அப்பா கிட்ட போனைக் கொடு நான் சொல்றேன்..."

அப்பா கார்த்தால முத வேலையா போ வாக்சினேட் பண்ணிக்கோங்கோ. பக்கத்துல தானே இருக்கு அட்சயா ஹாஸ்பிடல் 250 ரூபா கட்டி போட்டுக்கோங்கோ கூட்டமே இல்லையாம். என் பிரெண்ட் சுரேஷோட பேரண்ட்ஸ் எடுத்தாச்சு.

அம்மா பேச்சைக் கேக்காதீங்கோ. ஒரு பக்க விளைவும் இல்லை, மீசை வரதாம் மீசை..."

நடராஜன் சரிடா சேக்கு, போட்டுக்கறோம்,"

அந்த போன் முடிந்தவுடனே சின்னவன் ரகு, அதே கதை, கண்டிப்பா இன்னிக்குப் போட்டுண்டு அந்த வாக்சினேஷன் சர்டிஃபிகேட் காபி ரெண்டு பேருக்கும் அனுப் பறேன் ரகு."

நடராஜன், ஏ பாரு , டிபன் சாப்டு கிளம்புடி அந்த ஊசியையும் போட்டுத் தொலைப்போம்." பார்வதிக்கு ஊசியை நினைச்சவுடனே கண்ல ஜலம், நடராஜனுக்குத் தெரியாம கண்ணாடி யைக் கழட்டி புடைவைத் தலைப்பில் கண் ணைத் துடைத்துக் கொண்டாள்.

மருத்துவமனை. இருபது வயதான தம்பதி கள் பிளாஸ்டிக் சேரில் காத்திருந்தது தெரிந்தது.

வாட்ச்மேன், வாசலிலேயே நிறுத்தி 2 டோக்கன் 2 பிரின்டட் பார்ம் கொடுத்தார். டோக்கன் 120, 121. வாட்ச்மேன், உக்காரு சாரே, அந்த பாரத்தை ரொப்பி, ஆதார் ஜெராக்ஸ் வச்சுக் குடு, நம்பர் வரும் ஊசி போட்னு போக்கினே இரு."

நல்லவேளை ஜெராக்ஸ் கடை பக்கத்தில இருந்தது, இதுதான் அவருக்கு சம்பாதிக்கிற நேரம். ஒரு காபி 4 ரூபா (நார்மலா ஒரு ரூபா தான்) பார்வதி அம்மாள் முகத்தில் புன்னகை யும், அகத்தில் எக்கச்சக்க பயத்தையும் வச்சிண்டு பதவிசா பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந் திருந்தார். பாரம் ரெண்டையும் நிரப்பி ஆதார் ஜெராக்ஸை வைத்து வாட்ச்மேனிடம் கொடுத் தார் நடராஜன்.

அவன் என்னமோ மனுவைப் பெறும் அமைச்சரைப் போல அவற்றைப் பார்த்து, கொண்டு போ தூரத்தில் டேபிளில் இருந்த மெடிகல் ஸ்டாஃபிடம் கொடுத்தான். சாவகாச மா அமர்ந்து காத்திருந்தவர்களை நோட்டம் விட்டார் நடராஜன். எல்லாம் வயதான தம்பதிகள், வெளிநாட்டில் குழந்தைகளை விட்டு விட்டு இங்கே பரிதவிக்கும் முதுமைகள். எல்லா பெண்கள் முகத்திலும் பயம் வெளிப் படையாகத் தெரிந்தது. வாக்சினேட் பண்ணிக் கொண்டு வெளியே வருபவர்களின் முகங் களைப் பார்த்து கொஞ்சம் சமாதானம் அடைந் தார்கள். இதில் லோக்கல் பத்திரிகைக்காரர் ஒருவர், காத்திருப்பவர்கள், ஊசி போட்டுக் கொண்டு போகிறவர்கள் எல்லாரையும் நோண் டிக் கொண்டிருந்தார், பாவம் அவர் பிழைப்பு, ஏதாவது பரபரப்பான செய்தி வேண்டும்.

மெடிகல் ஸ்டாஃப் மெதுவாக நம்பர் கூப்பிட வாட்ச்மேன் கொஞ்சம் பலமாக, 118,119 கூப்பிட்டார். கொஞ்சம் டென்ஷனோட அந்த முதியவர்கள் எழுந்திருக்க, பார்வதி அம்மாளுக்கு இப்போது பதற்றம் தொற்றிக் கொண்டது.

‘அடுத்து நம்மளதான்’ நடராஜன் இடுப்பில் ஒரு விரலால் குத்தினாள்.

சரிடி பாரு பதட்டப்படாம உக்காரு" இது நடராஜன். சத்தம் போட்டுக் காக்க, காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியினில் நோக்க... அனிச்சையாக பார்வதத்தின் வாய் சஷ்டி கவசம் முனகியது.

அடுத்த ஐந்து நிமிடத்தில் 120,121" வாட்ச்மேன் குரல் ஒலித்தது. நடுக்கத்துடன் பார்வதி நடராஜன் கையை இறுகப் பற்றிக் கொண்டார் நடராஜன்.

ஏ பாரு இங்கே பாத்தியா எண்பது வயசுப் பாட்டி ஊசி போட்டுண்டு பொக்கை வாயைத் திறந்து மோகனமா சிரிக்கிறா, ஒண்ணும் பண்ணாது வா..., மெடிக்கல் ஸ்டாப், நிரப்பிய பாரம் சரிபார்த்தார், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் பார்த்தார், ஆளுக்கு ஒரு கார்டு எழுதிக் கைல புன்னகையோட கொடுத்தாள். உள்ளே கம்ப்யூட்டர்ல என்ட்ரி போட்டுப் பணம் கட்டுங்க சார். ஒரு விசால மான சுத்தமான ஹால், தடுப்புப் போட்டு முன் பகுதியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர். உள் பகுதி யில் ஒரு டேபிள் ஒரு டாக்டர், இரண்டு மலை யாள நர்சுகள், ஒரு படுக்கை, பேஷன்டுக்கு உக்கார வைத்து ஊசி போட ரெண்டு இருக்கை.

கம்ப்யூட்டர் ஆள் பாவம் சிரிக்கத் தெரியாதவர் போல... கண்ணாலேயே உக்காரச் சொன்னார். கையிலிருந்த கார்டை வாங்கி கணினியில் இறக்கினார், ரசீது போட்டு கார்டுக்கு ரூபா 250 வீதம் 500 ரூபா வாங்கி, ரெண்டு பேர் கார்டு, ரசீதைக் கையில் கொடுத்து கட்டை விரல் காட்டி உள்ளே அனுப்பினார்.உள்ளே நுழைந்தவுடன் டாக்டர் both of you comfortable?ன்னு (அது மட்டும் அவர் வேலை போல) சொன்னார். மலையாள நர்ஸ் மேடம் வாங்கனு முதலில் பார்வதி யைக் கூப்பிட, சர்வாங்கம் நடுங்க நடராஜனை ஒட்டிக் கொண்டார். சரி இரு. முதல்ல நான் போட்டுக்கறேன்"னு நடராஜன் இருக்கையில் அமர்ந்து பார்வதியைத் திரும்பிப் பார்ப்பதற்குள் இடது மேற்கையில் கொசு கடித்தது. நர்ஸ், ஆச்சு சார்... அழுத்தித் தேக்காதீங்க வெளி ஹால்ல 10 நிமிஷம் உக்காந்துட்டு போங்கனு புன்னகையோடு சொன்னாள்.

ஆச்சா... இவ்வளவுதானா 250 ரூபாக்குனு..." விளையாட்டாக் கேட்டார் நடராஜன்.

ஆமாம் சார் 0.5 எம்.எல்.தான். அரை லிட்டரா போட முடியும்"னு மோகனமாச் சிரித்தாள் நர்ஸ்.

பார்வதி அம்மாளின் நடுக்கத்தைக் கண்ணில் வழியும் நீரைப் பார்த்த நர்ஸ், நீங்க பெட்ல சௌகரியமா படுங்க... அரை நொடில வலிக் காம போடறேன்..." நடராஜன் எதிரில் நிற்க வேண்டாம்னு ரெண்டு படி இறங்கி எக்சிட் ஹாலில் அமர்ந்தார். உடனே எங்கிருந்தோ தோன்றிய பத்திரிகை நிருபர், சார் உங்க அனு பவம் எப்படி?" நடராஜன், சாதாரண ஊசி போலத்தான் ஒரு வித்தியாசமும் இல்லை"னு சொன்னது நிருபருக்கு ஏமாற்றம். இதற்குள் உள்ளே இருந்து பாருவின் சத்தம்.

நடராஜனை விட நிருபர் பரபரப்பானார். பதறிப்போ இரண்டு படிகளைத் தாவி ஏறி உள்ளே போனார் நடராஜன். பாரு படுக்கையில், டாக்டர், நர்ஸ் ரெண்டு பேரும் சுற்றி.வாக்சினேஷன் ஹால் கதவு மூடப்பட்டது. டாக்டர் முகத் தில் பதற்றம். பாருவின் முகம் முழுவதும் வியர்வை. டாக்டரிடம் எனக்கு முன் நிருபர் பாந்து கேட்டார், என்ன ஆச்சு? சீரியஸான சைட் எஃபெக்ட்டா?" டாக்டர் என்னைப் பார்த்து, இவர் யார் சார்?"

யாரோ நிருபர் டாக்டர்." நீங்க உடனே வெளில போங்க பேஷன்ட்டுக்கு ஒண்ணும் இல்லை வெறும் மனப்பிராந்தி பயம்தான். பத்திரிகைக்கு ஒண்ணும் செதி கொடுத்துடா தீங்க."இப்போ பார்வதி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார், கண்ணைக் கசக்கிக் கொண்டு, எனக்கு எல்லாம் மங்கலா தெரியுது, ஊசி போட்டதுக்கு அப்புறம்..."

நிருபருக்கு இது போதாதா? பாயந்து வெளியே ஓடினார், போட்டோ கிராஃபரை வரவழைத்து செதியை சூடாக்க. டாக்டர் நடராஜனிடம், இவங்க எக்சிட் ஹால் படுக்கைல 10 நிமிடம் இருக்கட்டும், ஏதாவது பிராப்ளம்னா மேற்கொண்டு பார்ப்போம்..." நர்சிடம் ஒரு அரை மணி நேரம் வாக்சினேஷன் பிராசஸ் நிப்பாட்ட வெளில சொல்லிடு..." பயம் டாக்டர் கண்ணிலும்.

நர்ஸ் ஒரு பக்கம், நடராஜன் ஒரு பக்கம் பிடித்து நடத்தி எக்சிட் ஹால் படுக்கைக்கு கொண்டு போனா படி இறங்கத் தடுமாறினாள் பார்வதி. படுக்கையில் படுக்க வைத்தார்கள்.இதற்குள் வாக்சினேஷனுக்குக் காத்திருந்த வர்கள் இடையே சலசலப்பு (நமது பத்திரிகை நிருபர் கிளப்பியது) ஊசி போட்டவுடனே குருடாயிட்டாங்களாமே, தோலெல்லாம் உரிஞ்சு விழுதாமே, அடக்க முடியாத லூஸ் மோஷனாம், ரத்த வாந்தியாமே? காத்திருந்த கூட்டம் மெதுவா நழுவத் தொடங்கியது.

பக்கத்து ஜூஸ் கடையில் இருந்து மிக்ஸ் புரூட் ஜூஸ் (பாருவுக்குப் பிடிக்கும்) ஒரு டிஸ்போசபிள் தம்ளரில் வாங்கிக் கொண்டு பாருவிடம் வந்தார் நடராஜன், பாரு படுக்கை யில் இப்போது உட்கார்ந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள், இவர் வந்தது கூட தெரியாமல்.

நடராஜனே கொஞ்சம் பயந்து போனார், பாரும்மா இந்தா ஜூஸ், குடி இதை முதல்ல."ஏங்க என்னை விட்டுப் போகாதீங்க... பயமா இருக்கு."நடராஜன் ஆதரவா அவள் கையைப் பற்றிக் கொண்டார்.

மலையாள நர்ஸ் ஓடிவந்து, ஏம்மா உங்க ஸ்பெக்ஸ், படுக்கைல இருந்தது" என்று கொடுத்தாள். அவசரமா அதை நடராஜன் வாங்கி பாருவின் கையில் கொடுத்தார். அதை அணிந்து கொண்ட பாருவின் முகம் பளீரென மலர்ந்தது, எனக்கு எல்லாம் தெரியறது பழைய படி."

நடராஜன், அடி பாவி கண்ணாடியைப் போட்டுக்காம எல்லாரையும் கலங்கடிச் சுட்டியே."ஏங்க ஊசி போட்டாச்சா தெரியவே இல்லையே." நர்ஸ் இதை டாக்டரிடம் போச் சொல்ல, கோபம், நிம்மதி, சிரிப்பு கலந்து பார்வதியைக் கைதொட்டு படுக்கையை விட்டு இறக்கி, போயிட்டு வாம்மா என் தேவதைன்னார்.வெளியே கைகோர்த்து வந்த நடராஜனும், பார்வதியும் பரபரப்பா வந்த நிருபரைப் பார்த்து மோகனமாச் சிரித்தனர். பாவம் நிருபர் ஒரு சூடான பக்கவிளைவு பிரேக்கிங் நியூசை இழந்தார்.
Post Comment

Post Comment