சொல்ல விரும்புகிறோம்!-நாங்க ரெடி!

இணைய வழியில் இணைந்து மங்கையர் மலருடன் பயணிக்க நாங்க ரெடி. புத்தகம் கடையில் வந்து விட்டதா, பேப்பர்க்காரன் போடுவானா? மாட்டானா? என்ற பல குழப்பங்கள் இனி இல்லை. ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16ம் தேதிகளில் எங்கள் உள்ளங்கையில் தவழும் ‘மங்கையர் மலரை’ படிக்கக் காத்திருக்கிறோம்... காத்திருக்கிறோம்... காத்திருக்கிறோம்... எங்கள் ஆதரவு என்றுமே எங்கள் உயிர்த் தோழி ‘மங்கையர் மலருக்கு’ உண்டு என்று மங்கையர் மலர் வாசகிகள் சார்பில் உறுதிமொழி அளிக்கிறேன்.- உஷா முத்துராமன், மதுரை

மங்கையர் மலரை இணையதளத்தில் வாசிக்கும் காலம் வரப்போவதாகச் செய்தி வந்துள்ளது. ஏற்கெனவே சகோதரர் கல்கி ஆன்லைனில் வந்து விட்டார். இப்போது சகோதரி மங்கையர் மலரும் ஆன்லைனில் வரப்போவதாக அறிய முடிகிறது. சின்ன செல்போனில் பக்கம் பக்கமாகப் புரட்டிப் படிப்பது மிகவும் சிரமமாக இருக்குமோ?- எம்.இராசேந்திரன், லால்குடி

சங்க இலக்கியம் தொட்டு சமீபத்திய எழுத்துப் படைப்புகள் அனைத்தும் கணினி மயம் ஆகும் வேளையில், மங்கையர் மலர் இதழும் தன்னைச் சமூக வலைதளங்களில் இணைத்துக் கொள்வது மகிழ்ச்சியான ஒரு விஷயம். இந்த அப்டேட் என்பது வாசக, வாசகிகளை இன்னமும் அதிகப்படுத்தும் என்பதும் அப்டேட்டான உண்மை. மேலும், இந்த நாற்பது வருட விழா தருணத்தில் இந்த டிஜிட்டல் விஷயம் மேலும் சிறப்பு.- சி.கார்த்திகேயன், சாத்தூர்

மங்கையர் மலர் இதழும் மின்னிதழாகப் போகிறது என்ற அறிவிப்பு மனதைத் தாக்கி னாலும், எளிதாய் வந்து எப்போதும் போல் கைகளில் மின்னப் போகிறது என்பது மனதைத் தேற்றுகிறது. வாசகர்களுக்குப் புரியும் வகை யில் பட விளக்கமும், கேள்விகளுக்குப் பதிலாகச் சந்தேகங்களைத் தீர்த்துவைத்து வழக்கம் போல் மகுடத்தை எடுத்து வைத்துக் கொண்டது மங்கையர் மலர்.- மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

‘பாப் கட்டிங்’ செங்கமலமும் தோழிகளும் கண்டேன். என்னவோ ஏதோ என்று பார்த் தால் அட, கல்யாணியும், செங்கமலமும் நமது யானைகள். வியப்பில் கண்கள் விரிய ஆரம்பித்தன.- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

சிவப்புக் கம்பளம் விரிப்பதன் பின்னணி யில் மறைந்துள்ள விஷயத்தை அறிய வைத்த அனுஷாவின் பதில் மிகச் சிறப்பு! கூடவே நீலக் கம்பளம் பற்றிய தகவலையும் அறிந்தபோது, ‘ரெட்’டிப்பு சந்தோஷம் ஏற்பட்டது.- த.சத்தியநாராயணன், அயன்புரம்

மார்ச் 16-31 இதழில் கவலைப்பட்டே களைத்துப் போகிறவரா நீங்கள்?" என்ற தலைப்பில் ஜி.எஸ்.எஸ். கேட்ட எட்டு கேள்விகளுக்குப் பதிலளித்து 27 மதிப்பெண் கள் பெற்றேன். மதிப்பெண்களை வைத்து என் மனநிலையைப் புரிந்துகொண்டு எதிர் காலத்தில் சிறப்புடன் செயல்படவும், கவலை களைக் குறைக்கவும், மனஅமைதி பெறவும் என்னை நான் தயார்ப்படுத்திக் கொண்டேன். மிக்க நன்றி.- ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை

‘வனம் காப்போம்; வளம் பெறுவோம்’ காடுகளும் வளங்களில் ஒன்றுதான். எனவே, காடுகளையும் காக்க வேண்டும் என அறிவுறுத்தியது.-எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி

‘மதுமிதா’வின் பேட்டி சிக்கலான ஜாங்கிரி போல இனித்ததற்குக் காரணமே அவருடைய சிக்கல் இல்லாத தெளிவான பதில்கள்தான். கேட்ட கேள்விகளுக்கு முகபாவங்களில் பதில் சொல்லி, நான் நடிப்பதில் கில்லாடி என நிரூபித்த அவர், ‘திரைவானில்’ மின்னி மேன்மேலும் மிளிர வாழ்த்துகள். - ராதிகா, மதுரை

‘அன்பு வட்டம்’ அனுஷாவின் பதில்களில் நகைப்பு! (பேய், பிசாசு, ஆவி) திகைப்பு (தர்மயுத்தம்), வியப்பு (சிகப்பு கம்பளம்), பதைப்பு (முடியாது என்று விட்டு) சாதுர்யம் (ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்) ஆதங்கம் (பத்து வருஷமா) அசத்தல் (கோடை வெயிலுக்கு) கிண்டல் (தரமான அ1 சம்பவம்) புரட்சி (இனி வருங்கால புடைவை) நையாண்டி (நூறு பேர் சேர்ந்து) இப்படியாக பல ரசனை களில் ரசிக்க வைத்தது.- சுகுணா புகழேந்தி, கரியமாணிக்கம்

அன்று படிக்க இயலவில்லை. இன்று படித்ததும் பாராட்டாமல் இருக்க இயல வில்லை. அன்னியோன்னியமான எழுத்து. புதுக்காவிரி வந்து சில நாட்கள் ஆனதும், அழுக்குகள் இல்லாமல், தெளிவாக ஓடுமே... அதுபோல் எழுத்துப் பிரயோகம் ஜோர்!

கோபுலுவின் ஓவியமும், கற்பனையை அந்தக் காலத்திற்கே கொண்டு சேர்த்து விட்டது.- ராஜிராதா, பெங்களூரு

மேன்மையான இதயங்களில் ஈடுபடும் மனசு இருந்தால், உயரிய பொருள் எளிதில் வசப்படும்" என்பதை அருமையான கதை மூலம் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ‘ஒரு வார்த்தை’யில். பாராட்டுகள்.- கே.பி.ஜெயந்தி, மதுரை

‘சாதனைப் பெண்மணி’ மண்வாசனை மங்கை சீதாலட்சுமி பற்றிப் படித்தது பெருமை யாக இருந்தது. நாம் உயிர் வாழத் தேவையான உணவு, அவை எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் புரியவைத்த பக்கம்!- லக்ஷ்மி ஹேமாவதி, சென்னை

‘உலக வன தினம்’ பற்றிய தகவல் அருமை. காடு பெருமை சொல்லும் பயனுள்ள பகுதி. பாராட்டுகள்.- நந்தினி கிருஷ்ணன், மதுரை

ஆஹா - 50, கருத்து யுத்தம் போன்றவற் றையும் ஆரம்பிக்கலாமே! அதோடு, சமையல் போட்டியோ, பொது அறிவுப் போட்டியோ கூட அறிவிக்கலாமே!- பிரபா டாக்கர், ஹைதராபாத்

‘தேர்தல் வருது! தேர்தல் வருது’ ஜோக்ஸ் படித்து ‘சிரிப்பு வருது... சிரிப்பு வருது! வயிற்று வலியும் கூடவே வருது! வருது...- வி.கணேஷ், மதுரை

‘ஹோலி ஆயிரே’ என்று முழக்கமிட்டு விட்டு 1944 ம் ஆண்டு வெளிவந்த ‘ஜ்வார்’ பாட்டை திரைப்படத்தில்தான் முதன் முதலாக ஹோலி காட்சி படமாக்கப்பட்டது என்றும், அதுதான் திலீப்குமாரின் அறிமுகப் படம் என்றும் கூறிவிட்டு ஒரு படம் கூட திலீப் குமாரைப் பற்றி வெளியிடாதது வருத்தமாக உள்ளது.- நிர்மலா ராவ், சென்னை-73

‘இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானப் பெண்ணே. அவர் ஏதுமறியாரடி ஞானப் பெண்ணே...’ இந்தப் பாடல் வரிதான் ‘ஒரு வார்த்தை’ படித்ததும் நினைவிற்கு வந்தது. நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம்; கேட்போம்; பார்ப்போம்.- அனிதா, மாடம்பாக்கம்
Post Comment

Post Comment