பெண்கள் வாக்கு யாருக்கு?ராஜ்மோகன் சுப்பிரமணியம் -இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத புதிய அனுபவங்களுடன் இந்தத் தேர்தல் நடை பெறுகிறது. இது கடந்த 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சூழ்நிலை. கலைஞர், ஜெயலலிதா போன்று பெரும் வசீகரமிக்க ஓர் ஆளுமை இல்லாத தேர்தல்.

என் அன்பான கழக உடன்பிறப்புகளே!" என்ற அந்தக் கரகரப்புக் குரலைக் கேட்டால் போதும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடையே ஓர் உற்சாகம் பற்றிக் கொள்ளும். கறுப்புக் கண்ணாடியும், மஞ்சள் துண்டுமாக கலைஞரின் முகம் அவர்களின் முன் நிழலாடும். கடல் அலைபோல் கூடும் மக்கள் கூட்டத்தில் மையமாக, ஒரு சிறு புள்ளியாகத் தனது தலைவனைப் பார்க்கத் தொண்டர்களிடையே ஒரு பரவச நிலை ஏற்படும்.இதே நிலைதான் ஜெயலலிதாவிற்கும்.

புரட்சித் தலைவரின் ரத்தத்திற்கும் ரத்தமான உடன்பிறப்புகளே" என்று அவர் அழைக்கும் போது, ‘அம்மா! அம்மா!’ என்று கூட்டம் ஆர்ப் பரிக்கும். இந்த இரு பெரும் தலைவர்களும் இப்பொழுது இல்லை. இந்நிலையில், ‘ஒரு தொண்டராக இருந்து முதலமைச்சரான விவசாயி நான்’ என்ற பிரகடனத்துடன் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. அணியும், பதினாறு வயது முதல் பொது வாழ்க்கையில் இணைந்து, சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக பல்வேறு பொறுப்புகளை வகித்து, தெளிவான அனுபவ அறிவுடன் கருணாநிதியின் வாரிசு என்ற அடையாளமுடன் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அணியும் களம் இறங்கியுள்ளது.

இந்தத் தேர்தலில் முதன் முறை வாக்காளர் கள் மிகவும் கணிசமாக உயர்ந்திருக்கிறார்கள். 1.37 கோடி இளைஞர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. சுமார் 13 லட்சம் பேர் 18 முதல் 19 வயதானவர்கள். சுமார் 1.24 கோடி பேர் 19 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள். மொத்த வாக்காளர்கள் 6,26,74,446 பேர். இதில் ஆண்கள் 3,08,38,473 பேர். பெண்கள் 3,18,28,727 பேர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர். ஆக ஆண் களைவிட 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பெண் வாக்காளர்கள். இந்தப் பெண்களின் வாக்குகள் எந்தப் பக்கம் வீசும் எப்படிப்பட்ட வேட்பாளர்களை வாக்காளர் தேர்வு செ கிறார்கள் என்பது குறித்து இன்றைய இளந் தலைமுறை பெண்கள் சிலரிடம் பேசினோம்.

சரண்யா ரவிச்சந்திரன், நடிகை

பெண்கள் சமூகத்தின் ஓர் அங்கம். ஆனால் அவர்களோடு குழந்தைகள் நலம், குடும்ப நலம், இளைஞர்கள் நலம், முதியோர்கள் நலன் என்று பல வகையில் திட்டங்களைச் செயல்படுத்தும் கட்சிக்குத்தான் வாக்கு. மன்னிக்க, கட்சி என்று சொல்லும்போது எல்லாக் கட்சிகளும் மாறி மாறி இலவசங்களையும், கவர்ச்சிகரமான வாக்குகளையும் அள்ளி வீசுகின்றன. இது கொஞ்சம் குழப்ப மான நிலைதான். அத னால் எனது தொகுதியில் முதலில் யார் யார் வேட் பாளர் என்று ஒரு பட்டியலிடப் போகி றேன். அவர்களில் படித் தவர், பண்பானவர், கிரிமினல், பின்புலம் இல்லாதவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு வாக்களிக்கவே விரும்புகிறேன். இந்தக் கட்சி ஜெயிக்கும் ஊகத்தின் அடிப்படையிலோ, இந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்று ஒரு காரணத்திற்காகவோ வாக்கு அளிக்க விரும்பவில்லை. நமது வாக்கு நமது உரிமை. சில சமயங்களில் நாம் தேர்ந் தெடுத்த நபர் வெற்றிபெறாமலும் போகலாம். ஆனால், நாம் வாக்களிப்பதில் ஒரு சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும்போது அது ஒரு சமூகத்தின் மனப்பாங்காக மாறி ஒருநாள் நிச்சயம் மாற்றம் வரும்.

சசிரேகா, ஆர்கிடெக்ட்

நம்மை ஆட்சி செய நேர்மை, ஒழுக்கம், சேவை மனப்பான்மையோடு ஆட்சியாளர்கள் இருக்கவேண்டும். ஆனால், துரதிருஷ்டமான சூழல் என்னவெனில் அப்படியொரு மக்கள் சேவகரை நாம் தேட வேண்டியிருக்கிறது. நமக்கு ஏற்ற அந்த நேர்மையாளர் இல்லாத நிலையில் நம் முன் இருக்கும் சாத்தான்களில் குறைந்த தீமை செயக்கூடிய ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டிய தர்மசங் கடமான நிலையில் இருக் கிறோம். இதைக் காரணம் காட்டி தேர்தலைப் புறக்கணிக்கவோ, செல்லாத ஒரு வாக்கு அளித்து வாக்கு உரிமையை வீணாக்கவோ முடியாது. எனவே நேர்மை, ஒற்றுமை, ஒழுக்கம், நல்லிணக்கம் போற்றக் கூடிய தூமையான ஒருவர் வரும் வரை ஓரளவு நல்லவர்கள் என்று நினைக்கும் ஒரு வருக்கே வாக்களிக்க வேண்டும்.

சுரபி, சமூக ஊடக வல்லுனர்

என்னோட வாக்கு காங்கிரஸ் கட்சிக்கு. வேட்பாளர்களுக்கு ஒரு வரலாறு இருக்கணும். நீங்கள் வாரிசு அரசியல் என்று திரும்பத் திரும்பப் பேசினாலும் நல்ல பாரம்பரியத்தில் இருந்து வரும் ஒருவர் மிகவும் சரியானவராகவே இருப்பார். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில் தங்கம் தென்னரசு, பழனி வேல் தியாகராஜன் போன் றோரைச் சொல்லலாம். அந்த வகையில் பெரியாரின் கொள்ளுப் பேரன் திருமகன் ஈ.வே.ரா.வுக்கு கைச்சின்னத்தில்தான் என் வாக்கு. பெரியார் பெண் களுக்குப் பெற்றுத் தந்த உரிமைக்கும் திருமகன் போன்ற துடிப்பான தலை மையை ஊக்குவிக்கவும், பெர்சனலாக எனக்கு ராகுல் காந்தியைப் பிடிக் கும் என்பதாலும் எனது வாக்கு காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை. இத்தனை வெளிப்படை யாகப் பேசினால் நீங்கள் வெளியிடவேண்டும். வெளியிடுவீர்களா ?

கார்த்திகா தணிகாச்சலம், ரேடியோ ஜாக்கி

பெண்களுக்கு உரிமை, மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதைச் செயல் படுத்தும் கட்சிக்குத்தான் என் வாக்கு. பெண் களைப் பாதுகாக்கும் ஒரு அரசுதான் நல்ல அரசாக இருக்க முடியும். மாநிலங்களின் உரிமைகளை விட்டுத் தராது ஓர் அரசு அமைய வேண்டும் என்பது என் விருப்பம். அதே நேரம் பெண்களை மூடநம்பிக்கைக்கு மீண்டும் இட்டுச்செல்லாமல் அவர்களின் சுதந்திர சிந்தனை களுக்கு வாப்பு அளிக்க வேண்டும். சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். இப்பொழுது ஒருவித மான பிற்போக்கு சிந்தனை யைப் பலர் புகுத்த முயல் கின்றனர். தமிழ்நாட்டிற்கு என்று ஒரு பெருமை இருக் கிறது. பெரியார், அறிஞர் அண்ணா போன்றோர் உரு வாக்கிய சமூக நீதி, சமத்துவத்திற்கு சவாலான சூழல் உருவாகி யுள்ளது. இந்தச் சவால்களை முறியடிக்கும் சக்திக்குத்தான் எனது வாக்கு.

சௌமியா ஹரிகரன்

என் போட்டோவை போடக்கூடாது என்ற கண்டிஷனுடன் பேசினார் சௌமியா ஹரிகரன். என்னோட சாஸ் பா.ஜ.க.தான். ஆனால் என்னோட தொகுதியில் அவர்கள் நிற்கவில்லை. அதற்காக கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க. வுக்குப் போடமாட்டேன். நோட்டாவுக்குப் போடுவேன் என்றவர், எனக்கு ஏன் பா.ஜ.க. பிடிக்கிறது தெரியுமா? என்று அடுத்த கேள் வியை அவரே கேட்டு, பதிலும் சொன்னார். மோடிஜிதான் இதுவரை வந்த பிரதமர்களிலேயே சிறந்தவர். இந்தியாவை ஒரே குடையின் கீழ் ஒருமித்த தேசமாக்க துணிச்சலுடன் முயற்சி செகிறார் என்றார் சௌமியா.ஒரு நீண்ட ஆவுக்குப் பிறகு பதிலளித்தார் மென்பொருள் வல்லுனர்

திவ்யா செல்வராஜ்

நான் அப்படியொன்றும் பெரிய அரசியல் வல்லுனர் இல்லை. இன்றைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது எனக்கு எடப்பாடி அல்லது கமல்ஹாசனுக்கு வாக்களிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், இன்னும் முடி வெடுக்கவில்லை. பா.ஜ.க.வுக்கோ அல்லது தி.மு.க.வுக்கோ எனது வாக்குகளைச் செலுத்த விருப்பமில்லை. கடந்த தேர்தல்களில் முதலமைச்சர் எடப்பாடி விவசாயக் கடன் தள்ளுபடி முதல் சில நல்ல திட்டங்களை அறி வித்து இருக்கிறார். ஆனால், பா.ஜ.க.வின் கூட்டணிதான் நெருடு கிறது. அதே நேரம் கமல் ஹாசனும் நம்பிக்கை தரு பவராக இருக்கிறார். ஆனால், அவர் பின்னாட் களில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்பதை நம்பு வதற்கு இல்லை. எந்தக் கட்சியைப் பார்த்தாலும் அவர்களிடம் ஒரு நம்பிக்கையும், ஒரு ஏமாற்றமும் இருக்கிறது. வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன் வரை யோசித்து சரியான முடிவெடுப்போம் என்று தீவிரமான அலசலை முன்வைத்தார் திவ்யா.

சில பெண்கள் பளிச்சென்று பதிலளிக் கிறார்கள். சிலரிடம் நேரடியான பதில் வர வில்லை. ஆனாலும், ஒரு தெளிவு இருக்கிறது. எங்கள் அப்பா சொன்னார், வீட்டுக்காரர் சொன்னார், அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று மற்றவர்களின் சிந்தனையில் முடிவெடுக் காமல் சுயசிந்தனையில் முடிவெடுக்கும் வகையில் பெண்கள் தங்கள் வாக்குரிமையை வைத்திருக்கின்றனர். இது பெருமைக்குரிய விஷயம்.பெண்களின் வாக்கு என்பது வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. இலவசங் களை வெறுக்கிறார்கள். அறிவார்ந்த விஷயங் களை மட்டுமே ஆதரிக்கிறார்கள். பிற்போக்குத் தனமான திட்டங்களை மறுக்கிறார்கள்.

போட்டியிடும் கட்சிகள் எல்லாம் பெண் களைக் குறிவைத்து கவர்ச்சிகரமான அறிவிப்பு களை வெளியிட்டுள்ளன. அதில் இந்தப் பெண்கள் கூட்டம் மயங்கியதாகத் தெரிய வில்லை. இவர்கள் தெளிந்த அறிவுடனே இருக்கிறார்கள். அதனை இந்தத் தேர்தல் நிரூபிக்கும் என்றே தெரிகிறது.

Post Comment

Post Comment