தோழர் பொன்னுத்தாயி!ராஜ்மோகன் -தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில், வேட் பாளர்கள் லட்சம், கோடி என்று தமது சொத்துக் கணக்கை சமர்ப்பித்துவிட்டு, விலையுயர்ந்த குளுகுளு காரிலும் பிரசாரத்திற்கு என்று வடி வமைக்கப்பட்ட பிரத்யேக வாகனங்களிலும் சென்று வாக்கு சேகரித்துக்கொண்டிருக்க, தனது கணவரின் ஆட்டோவில் அமர்ந்துகொண்டு எளிய முறையில் பிரசாரம் செது வருகிறார் மதுரை திருப்பரங்குன்றத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாயி.

அரசியல் என்றாலே படாடோபம் என்றாகி விட்ட நிலையில் பொன்னுத்தாயி அவர்களின் எளிமை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இத்தனை எளிமையான பின் புலத்தில் இருந்து அதிகார சக்திமிக்க மக்கள் பிரதிநிதியாக விரும்பும் பொன்னுத்தாயியின் கதை சாமானிய வர்க்கத்தில் இருக்கும் பெண் களுக்கு ஓர் உத்வேகம் தரக்கூடியது. யார் இந்தப் பொன்னுத்தாயி? எல்லோரும் அறிந்த பிரமுகராக மாறியது எப்படி?

விருதுநகர் மாவட்டம்தான் சொந்த ஊர். அப்பா ஒரு சாதாரண சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருப்பவர். அங்குதான் எனது பள்ளிக் கால வாழ்க்கை ஆரம்பித்தது" என்கிறார் பொன்னுத்தாயி.கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த அந்த மண்ணில்தான் சமூக சேவைக்கான விதையும் எனக்குள் விதைக்கப்பட்டது. நான் பள்ளி மாணவியாக இருந்தபோது எங்கள் ஊரில் ஒரு கழிப்பறை பிரச்னை ஏற்பட்டது. பலரிடம் மனு போட்டும் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை. அனை வருக்கும் ஒரு சொர்வு ஏற்பட்டது. பலவிதப் போராட்டங்களும் நிகழ்த்தி அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை. ஒரு நாள் தோழர்கள் சிலர் களமிறங்கினர். அவர்கள் ஒரு தொடர் போராட்டத்தை முன்வைத்தனர். அவர்கள் களம் இறங்கிய பின்னர் அந்தப் பிரச்னை முற்றி லும் தீர்ந்தது. பள்ளி மாணவியாக இருந்த எனக்கு இது மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியது. இரண்டு விஷயங்கள் எனக்குப் பிடித்துப் போனது. ஒன்று எந்த ஒரு பிரச்னையையும் விடாமுயற்சி மூலம் தீர்க்க முடியும். பிறர் குறைகளைத் தீர்க்கும்போது நமக்குள் ஒரு முழுமை அடைவதை உணர முடியும். பிறருக்கு உதவும் எண்ணம் அங்கிருந்து அதிகமானது.

கொஞ்சம் வளர்ந்து பள்ளி மாணவியாக இருந்தபோது அறிவொளி இயக்கத்தில் இணைந்தது மிகவும் பிரபலமான காலகட்டம்.கல்வியறிவு இல்லாதவர்களுக்குக் கற்றுக் கொடுக்க ஒரு வாப்பை உருவாக்கியது அறி வொளி இயக்கங்கள். எனக்கு அதில் ஆர்வம் வர, அதில் என்னை இணைத்துக்கொண்டேன். கல்வியைப் பற்றியும், கல்வியின் அவசியத்தைப் பற்றியும் ஒரு பள்ளி மாணவியை விட யாரால் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திவிட முடி யும். அந்தக் காலகட்டத்தில் கல்வி வியாபாரமாக மாறிக்கொண்டிருந்த நிலை. கல்வி இடை விட்டோர், படிக்க முடியாதவர்கள், படிக்க விரும்பும் முதியவர்கள் இவர்கள் மத்தியில் படிப்பின் ஆர்வத்தைத் தூண்டுவது, இயன்ற வரை அவர்களுக்கு அடிப்படைக் கல்வியை வழங்குவது, இவையெல்லாம் அப்பொழுது எங்களுக்கு ஆர்வம் மிகுந்த பணியாக இருந்தது. ஒரு பள்ளிக்கூட மாணவி என்னென்ன சாதனை கள் புரியமுடியுமோ அதனைச் செய்தோம்.

இப்படிச் சிறு வயது முதலே மக்களுடன் நெருக்கமாக இருக்கும் வாப்புகள் எனக்கு அமைந்தன. ஒரு நிறைவைத் தந்தன. என்னால் பன்னிரண்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. குடும்பச் சூழல் அப்படி. பள்ளிக்குச் செல்லாததால் நிறைய நேரம் கிடைத்தது. அப்பொழுது ஜனநாயக வாலிபர் அமைப்பு என் கவனத்தை ஈர்க்க, அதற்கான வயதும் வாப்பும் அமைய, அதில் என்னை இணைத்துக்கொண்டேன். இதுதான் எனது முதல் அரசியல் பிரவேசம்.இயக்கப் பணிகளுக்காக அடிக்கடி மதுரை, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களுக்கு, அலுவலகங்களுக்குச் செல்வேன். அங்குதான் தோழர் கருணாநிதியைச் சந்தித்தேன்" என்று லேசான வெட்கமுடன் கணவரைப் பார்க்கிறார் பொன்னுத்தாயி. அப்பொழுது அவர் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தார். முதலில் சமூக சேவை யில் ஒருமித்த கருத்துடன் இயங்கினோம். பின்னர் இருவருக்கும் பிடித்துப்போக வாழ்க்கைத் துணையானோம். அன்றிலிருந்து நான் முழுக்க சமூகப் பணிகளிலும், இவர் குடும்ப வருமானத்திற்காக ஆட்டோ ஓட்டுவதி லும் கவனம் செலுத்தி வருகிறோம். இருவரும் இருபது வருடங்களாக இப்படியே பயணித்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய பள்ளிப் பருவம் முதல் பார்த்தால் முப்பது வருடங்களாக மக்கள் பணியைத் தொடர்கிறேன்" என்றார்.

இதற்கு முன்பு பஞ்சாயத்துத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியிருந் தாலும், அதனால் மனச்சோர்வு இல்லை" என்று சொல்லும் பொன்னுத்தாயி, இம்முறை நிச்சயம் வெற்றிபெறுவேன்" என்கிறார் நம்பிக்கையுடன்.மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் சுத்த மான குடிநீர், கல்வி, வேலை வாப்பு, சுகா தாரம் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங் கள்தான். இவற்றில் இன்னும் இப்பகுதி தன்னிறைவு பெறவில்லை. மதுரைக்கு மிக அருகில் உள்ள தொகுதி, அதனால் மதுரையைக் கடக்கும் வாகனங்களால் அடிக்கடி போக்கு வரத்து நெரிசலுக்கு உள்ளாகும் பகுதி திருப்பரங் குன்றம். கழிவு நீர் வெளியேற்ற தெளிவான திட்டம் இல்லை. நீர் மேலாண்மையிலும் மேம்பாடு தேவை. இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

நான் வாக்கு சேகரிக்கச் செல்லும்போது ‘வாக்கு அளியுங்கள்’ என்று மட்டும் கேட்க வில்லை. அந்தப் பகுதியில் என்ன பிரச்னை என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டே செல்கிறேன். அதுபற்றிக் குறிப் பெடுத்துக்கொண்டே நடக்கிறேன். பல முதியவர்களுக்கு இன்னும் அவர்களுக்கான உதவித் தொகை முறையாகக் கிடைக்கவில்லை. ஊனமுற்றோர்களுக்கு அரசு சொன்ன சலுகை கள் சென்று சேரவில்லை.

ஏன் இந்த அரசு அறிவித்த எந்தத் திட்டமும் முழுமையாக எம் மக்களுக்கு வந்து சேர வில்லை. இப்பொழுது எங்கள் கூட்டணி குழந்தைகள், மாணவர்கள், மகளிர், குடும்பத் தலைவிகள், முதியோர் நலன் என 500க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இது தவிர எங்கள் இயக்கமும் பல நல்ல வரைவுகளை மக்களுக்காக உருவாக்கியுள்ளது. இந்தப் பயன்களை அடித்தட்டு மக்களுக்குக் கொண்டு சேர்த்தாலே தொகுதியில் ஒரு நல்ல மேம்பாடு கிடைக்கும். இதுவரை தொகுதியில் இருந்து கொண்டு இதைச் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்த நான், வெற்றிபெற்ற வுடன் இவற்றையெல்லாம் என் அதிகாரத்தைக் கொண்டு செயத் தொடங்குவேன்" என்றார் தன்னம்பிக்கையுடன்.

மக்களுக்காக மக்களால் கட்டமைக்கப்படு வதே ஜனநாயகம் என்றார் ஆபிரகாம் லிங்கன். மிக எளிமையான நிலையில் இருந்து வாழ்க் கையின் இன்னொரு கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கும் தோழர் பொன்னுத்தாயி போன்றோரின் விடாமுயற்சியும், உயர்வும், எளிய குடும்பப் பின்னணியில் இருக்கும் பெண் களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும்.

Post Comment

Post Comment