முகூர்த்த நேரமும் சிசேரியன் பிரசவமும்


ராஜி ரகுநாதன்நல்ல நேரம் பார்த்து சிசேரியன் பிரசவம் செய்து குழந்தையின் பிறப்பை நிச்சயம் செய்வது சரியா?

குழந்தை பிறந்த தேதி, நேரம் இவற்றைக் கூறி அவனுடைய எதிர்காலம் எவ்வாறு உள்ளது? என்று முன்பெல்லாம் பெற்றோர் ஜோதிடர்களை அணுகி கேட்டறிவதுண்டு. ஆனால், இப்போது? எந்தத் தேதி எந்த நேரத்தில் பிறந்தால் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதை முன்கூட்டியே ஜோதிடர்களைக் கேட்டு அறிந்துகொண்டு, அந்த நேரத்தில் சிசேரியன் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். தாயின் நட்சத்திரத்தைக் கணித்து எந்த நாளில் சிசேரியன் செதால் தாக்குக் குழந்தையால் நன்மை நடக்கும், குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று பார்த்து அன்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்கிறார்கள்.

இந்த முகூர்த்தம் பார்க்கும் ஜோரில் தாக்கும் சேக்கும் நேரும் மருத்துவப் பிரச்னைகள், குழந்தைகளின் ஆரோக்கியம்... இவற்றைப் பற்றிக் கவலை கொள்ளாமல் காற்றில் பறக்க விடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நல்ல முகூர்த்தம் உள்ள தென்று ஒரே நாளில் இருபது முப்பது சிசேரியன் டெலிவரி ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கும் அழுத்தத்திற்கும் மருத்துவர் கள் ஆளாகிறார்கள்.

சிசேரியன் ஆபரேஷன் என்பது மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்த அற்புதமான அறுவைச் சிகிச்சை முறை. தாயின் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக ஏற்பட்ட செயல் முறை. ஏனென்றால், கடந்த காலத்தில் இத்தகைய அறுவைச் சிகிச்சை முறைகள் அறியப்படாத நிலையில், பிரசவம் என்றாலே செத்துப் பிழைப்பது என்ற அச்சம் இருந்தது. அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் ஆசைப் பட்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. அத்தகைய அச்சத்தி லிருந்து பெற்றோரைக் காப்பதற்காக ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியே சி-செக்ஷன் எனப்படும் சிசேரியன் அறுவைச் சிகிச்சை.

அதனைக் கண்டுபிடித்த மருத்துவத்துறைக்கு உலகம் நன்றிக் கடன்பட்டுள்ளது. ஆனால், அதனை ‘உத்தமபுத்திரன்’ பிறப் பதற்காக உபயோகித்துக் கொள்வேன் என்று சிசுவின் பெற்றோரும் அவர்களின் பெற்றோரும் வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?

கர்ம சித்தாந்தத்தை அனுசரித்தே ஜோதிடம் செயல்படுகிறது. அந்தக் கருத்தின்படி அவரவர் சென்ற பிறவிகளில் செத புண்ணிய பாவங் களின் விளைவாகவே பிறக்கப் போகும் சிசுவின் வாழ்க்கை இருக்குமே தவிர, ஜாதகம் பார்த்து சிசேரியன் செது விடுவதால் மட்டும் அவனுக்கு ஏதோ புது வாழ்வு கிடைத்துவிடுவதில்லை.இதற்கு உதாரணமாக ராவணனின் கதை யைப் பார்க்கலாம். ராவணன் மிகச் சிறந்த ஜோதிடன். அவன் தன் மகன் இந்திரஜித் உயர்ந்த ஜாதகக்காரனாக விளங்க வேண்டும்... அவன் யாராலும் வெல்லப்பட முடியாதவ னாக... மிகச் சிறந்த அறிவாளியாக... மரணமற்ற வனாக விளங்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் நவகிரகங்களையும் நட்சத்திரங் களையும் தன் விருப்பப்படி நிற்கும்படி கட்டளையிட்டான். அவை எல்லாம் ராவண னைக் கண்டு அஞ்சின. நவகிரகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து அவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான் ராவணன். தம் சிம்மாசனத்தின் கீழிருந்த படிக்கட்டுகளின் மீது படுக்க வைத்து அவற்றின் மேல் நடந்து மேலேறிச் செல்லும் பழக்கம் அவனுக்கு உண்டு என்று கூட ஒரு கதை உண்டு. அவனுடைய சக்தியையும் அதிகாரத் தையும் கண்டு அவை அவன் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தன. ராவணனின் ஆணைப்படி அனைத்தும் இந்திரஜித்தின் ஜாதகத்தில் பதினொராம் இடத்தில் வந்து நின்றன.

ஆனால், தங்களை அவமதித்த ராவணனுக்கு புத்தி புகட்ட எண்ணி சனிகிரகம் மட்டும் பன்னிரண்டாம் இடத்தில் வந்து நின்று சிறிது கோணலாகப் பார்த்தது. அதனால்தான் ராவண னின் வாழ்க்கை கோணல் ஆயிற்று என்று சொல்வார்கள். இந்திரஜித் லட்சுமணனின் கையால் மரணமடைந்தான்.

நல்ல முகூர்த்த நேரத்திற்கு ஏற்ப சிசேரியன் செது கொள்வதால் தாக்கும் சேக்கும் எந்த அளவு பாதுகாப்பு கிடைக்கிறது?

இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறும் நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் ஆச்சர்யம் ஏற் படுகிறது. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் மருத்துவர். அவரே ஒரு சிறந்த கைனகாலஜிஸ்ட். தனக்கு மிக நல்ல மகவு பிறக்க வேண்டும் என்று மிகச் சிறந்த ஜோதிடரி டம் சென்று முகூர்த்த நாள் தேர்வு செய்து கொண்டு வந்தார். சிசேரியனுக்கு அனைத்தும் தயார் செய்து கொண்டார். இனி அவர் படுக் கையில் ஏறிப் படுத்தவுடன் மயக்க மருந்து கொடுப்பது மட்டுமே பாக்கி. அந்த நேரத்தில் அவர் எப்போதிலிருந்தோ மருத்துவம் பார்த்து வந்த ஒரு பேஷன்டிற்கு எமர்ஜென்சி ஏற்பட்டதால், அவர் தனக்காக ஏற்பாடு செது கொண்ட மருத்துவச் சிகிச்சை அனைத்தையும் அந்தப் பெண்ணிற்குச் செயும்படி ஆயிற்று. இது உண்மையாக நடந்த நிகழ்ச்சி என்று அந்த மருத்துவப் பெண்மணி பின்பு விவரித்தார். அந்த மருத்துவர் அனஸ்தீசியா கொடுப்பது முதல் அனைத்து ஏற்பாடுகளையும் செதது இன்னொரு புது உயிரை இப்பூவுலகிற்கு அழைத்து வருவதற்காக! ஆனால், அந்தக் கணத்தில் தனக்கு ஓர் உயர்ந்த சிசு பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட அவருள் இருந்த மருத்துவர் என்ற குணம் முக்கியமாகி விட்டது. உடனடியாக தன் பேஷன்டைக் காப்பதில் முற்பட்டார்.ஜோதிட சாஸ்திரத்தை அனுசரித்து ஒரே நாளில் ஒரே கணத்தில் பிறந்த அனைத்து சிசுக்களின் ஜாதகங்களும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டா.

ஒரே மாதிரி இருக்குமானால் நமக்கிருக்கும் முகூர்த்தங்களில் பிறந்தவர்கள் ஒரே செட் செட்டாக ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும் அல்லவா? ஏன் வித்தியாசமாக இருக்கிறது?

வெளிநாடுகளில் மருத்துவர்கள் தம் வசதிக்கேற்ப கர்ப்பிணிப் பெண்களை சிசேரிய னுக்கு உட்படுத்துவது சில நேரங்களில் நிகழ் கிறது. ‘பிரசவ அறை காலியாக உள்ளது. வந்து விடுங்கள்’ என்று கர்ப்பிணிகளுக்கு அழைப்பு விடுத்து சிசேரியன் செவதாகக் கேள்விப் படுகிறோம். சனி, ஞாயிறு விடுமுறை நாள். எனவே, வெள்ளிக்கிழமையே சிசேரியன் செது கொள்ளுங்கள்" என்று கூறுவதாகவும் கேள்விப்படுகிறோம். சிசேரியன் எனும் உயர்ந்த மருத்துவ முறையை நல்ல வழியில் உபயோகிக்க வேண்டிய பொறுப்பு பேறுகால மருத்துவர்களிடம் உள்ளது.

எப்போதும் குற்றங்களைப் பிறர் மேல் சுமத்தும் நம் வழக்கப்படி சில மருத்துவர்கள், ஜோதிடர்கள் முகூர்த்தம் பார்த்துக் கொடுப் பதால்தான் பெற்றோர்கள் மருத்துவரை நிர்ப் பந்தம் செகிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள். இது உண்மை அல்ல என்கிறார்கள் ஜோதிடர்கள். மருத்துவர்கள், பெற்றோர்களிடம் இதுபோல் செயற்கையாக சிசேரியன் செது கொள்ளாமல் சுகப் பிரசவம் ஆவது நல்லது என்று தெரிவித்தால், ஜோதிடரிடம் செல்லத் தயங்குவார்கள்.பிறக்கப் போகும் குழந்தையின் உயிரோடு பெற்றோர் விளையாடுகிறார்கள் என்று மருத்துவர்களும் ஜோதிடர்களும் எச்சரிக்கிறார்கள். சாதாரண சுகப் பிரசவத்தை இவ்வாறு ரணப் பிரசவமாக செயற்கையாக்கிக் கொள்வது சரியல்ல என்பது நிபுணர்களின் அறிவுரை! தனிப்பட்ட மருத்துவப் பிரச்னை ஒரு சமுதாயப் பிரச்னையாக உருமாறிவரும் காலகட்டமாக இது உள்ளது. இத்தகைய நிலை உகந்ததல்ல. நம்மை உஷார்ப்படுத்திக்கொள்வோம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :