உழைப்பால் உயர்ந்தவர்.உற்சாகம் மிகுந்தவர்.சந்திப்பு : ப்ரீத்தி ராஜகோபால் -அவரிடம் அதிகாரமும் ஆட்சியும் இருந்தாலும், எந்தவித அலட்டலும் இல்லாமல், மிக நட்போடு எம்மை உபசரித்த விதம் வியக்க வைத்தது. மலர்ந்த முகத்தோடு அனைத்துக் கேள்விகளுக்கும் உற்சாகமாகப் பதிலளித்தார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

1999 முதல் 2021 வரையிலான உங்க அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எது, ஏன்?

நான், வாஜ்பா அவர்களைச் சந்தித்தது, நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தது, அமித்ஷா அவர்களைச் சந்தித்தது போன்ற நிறைய தருணங்களைச் சொல்லலாம். மேலும், சுஷ்மா ஜி, உமா பன்டோரி, வசுந்தரா மேடம், அருண்ஜெட்லி போன்றோர்களைச் சந்தித்து உரையாடிய தும் மிகச் சிறப்பான தருணங்கள்.

தேசியச் செயலாளராக ஒருவர் இருக்கும்போது, ஒரு பெண்ணை யாரும் தலைவரா யோசிச்சு இருக்க மாட்டாங்க. ஆனா, அந்த நேரத்தில், பொதுச் செய லாளரா இருந்த நடராஜ் அவர்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு, ‘உங்களையே ஏன் தலைவராக ஆக்கக்கூடாது’னு சொல்லி அதன் பிறகு எனக்குத் தலைவர் பதவி கொடுத்தாங்க. அந்தத் தருணம் என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.

முதன் முதலில் பா.ஜ.க.வில் இருந்த பெண் தலை வர் நீங்கதான். அப்படிப்பட்ட நிலைமையில், ஒரு பெண் என்ற முறையில், உங்களுக்கு ஏற்பட்ட தடைகள் என்ன?

தடைகள் இல்லாம எந்தப் பயணமும் இல்லை. அதுவும் ஒரு பெண் என்ற முறையில், அரசியல் பயணத் தில் தடைகள் நிறையவே இருக்கும். ஆண்களுக்கு இணையான ஒரு நிலை.

ஒரு பெண் இரண்டு மிகப் பெரிய பொறுப்புகளைச் சுமக்கிறாள். அதுல, என்னைப் போன்ற பெண்களாக இருந்தால் மூன்று பொறுப்புகள். உலகங்களைச் சந்திக்கறாங்க, ஒன்று குடும்பம், தொழில் மற்றும் பொது வாழ்க்கை. இதோடு ஒப்பிடும்போது ஆணுக்கான பொறுப்புகள் மிகக் குறைவுதானே?

‘இறைவா எனக்குச் சுமைகள் அதிகமானதே என்று நான் கவலைப்படவில்லை, அதைச் சுமக்கும் அளவிற்கு எனது முதுகை அகல மாக்கு என்று நான் அடிக்கடி வேண்டுவது உண்டு.

உங்களையே ஒரு காலத்தில் தமிழகத்தின் சுஷ்மாஜினு சொல்லி யிருக்காங்க. அதைப் பத்திக் கொஞ் சம் சொல்லுங்க?

ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது, அது கூடவே பொறுப்புணர்ச்சியும் அதிகமாகிடுச்சு. நான் வியந்து பார்த்த ஒரு ஆளுமையுடன், அதுவும் அப்படிப்பட்ட ஒரு கடின உழைப்பாளியுடன் என்னை ஒன்றுபடுத்திப் பேசினது மகிழ்ச்சியையும், கூடுதல் உழைப்பையும் அறிவுறுத்தியது. என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு வேலை எடுத்துக் கொண்டாலும் அதில் உள்ள நன்மையை எடுத்துக் கொண்டு அதன் வழியில் செல்வேன்.

பொது வாழ்க்கையில் இருக்கும்போது உங்களுக்கான தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப் பட்டதாக நினைக்கிறீங்களா?

அப்படி நினைக்கக்கூட நேரம் இல்லாமல் இருக்கிறேன் என்பதுதான் உண்மை. எப்பவும் நான் ஏதோ ஒரு வேலையோடு பிணைக்கப்பட்டுத்தான் இருப்பேன். மனம் ரொம்ப இறுக் கமாகும்போது, கடை வீதிக்குச் செல்வதுண்டு. ஆனால், அதுவும் இப்போது இல்லை.ஏனென்றால் பாதுகாப்பு மற்றும் கூட்டம் கூடுதல், புகைப்படம் எடுத்தல் என்று தேவை இல்லாத சிரமங்களை உண்டுபண்ணும் என்பதால்.

தெலுங்கானா, புதுச்சேரி, தமிழகம் மூன்று மாநிலங்களிலும் பணி செயறீங்க. மூன்று மாநிலங்களிலும் உள்ள ஒற்றுமை என்ன? மாற வேண்டியது என்ன?

மூன்று மாநிலங்களும் ஒரு வளர்ச்சித் திட்டங்களால் ஒருங்கிணைக்கப்படவேண்டும். எனக்கு இறைவன் மூன்று மாநிலங்களிலும் பணி செயும் வாப்பைக் கொடுத்ததால், நமது சகோதர மாவட்டங்கள் வளர்ச்சி அடைய என்னால் இயன்றதைச் செய்ய முற்பட்டு வருகிறேன். தெலுங்கானாவைப் பொறுத்தவரை நம்மைப் போன்று பிரம்மாண்டமான கோயில்கள் இல்லை. ஆனால், அவர்களுக்கு இறைபக்தி நிறைய உண்டு. என்னோடு வரும் பாதுகாப்பு அதிகாரிகள் நமது கோயில்களைப் பார்த்துப் பிரமித்துப் போகிறார்கள்; வியந்து போகிறார் கள் அவர்கள் மகிழும் வண்ணம் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செயலாம்.

மேலும், கொரோனா காலத்தில் தெலுங்கா னாவில் சில நடவடிக்கைகள் எடுக்கும்போது தமிழக சுகாதாரத் துறையிடம் கேட்டு ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தில் இருக்கும் அம்மா கிட் (பரிசுப் பெட்டகம்) பார்த்துத்தான் தெலுங்கானாவில் KCR kit அறிமுகப்படுத்தி யிருக்கிறார்கள். அது ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், கிராமப்புறங்களில் இருப்ப வர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்தவர்கள் இப்போது மருத்துவமனைக்குச் சென்று, குழந்தைகளைப் பிரசவிக்கிறார்கள்.

புதுச்சேரிக்கு வந்தவுடன் ஊட்டச்சத்து உணவு, பரிசுப் பெட்டகம் இரண்டையும் அறிமுகப்படுத்தினேன். குழந்தைகளுக்கு முட்டை ஒன்றிலிருந்து மூன்றாக உயர்த்தி னேன். இதுபோன்ற மூன்று மாநிலங் களிலும் உள்ள நல்லவற்றை எடுத்து அவை வளர்ச்சி யடைய எனக்கு ஒரு வாப்பை இந்த இறைவன் வழங்கியிருக்கிறான். அதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

உங்களுடைய அணுகுமுறை வித்தியாச மானதா?

வித்தியாசமானதுன்னு சொல்ல முடியாது. சுறுசுறுப்பாக இயங்குவது, மக்களை நோக்கி யது என்று சொல்லலாம். மக்களுள் ஒருவராக என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன். மக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறேன். நான் கட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு செவ்வாக் கிழமையும் மக்களைச் சந்திக்கும் தினமாக வைத்திருந்தேன். நிறைய பேர் என்னிடம் கேட்டதுண்டு,

‘நீ என்ன MP or MLA வா’ என்று. நம்மால் முடிந் ததைச் செவோம் என்பதே என் எண்ணம்.

தெலுங்கானாவில் ராஜ் பவனை, ‘பிரஜா பவன்’ என்று சோல்வார்கள். பொது மக்கள் வர முடியாமல் இருந்த நிலையை மாற்றி, சாமானியர்களையும் வரும்படி செதேன், அங்குள்ள பத்திரிகைகள் கூட எழுதினாங்க, ‘இவங்க தமிழிசை இல்ல, ஜன இசை’ என்று. இறைவன் கொடுத்த பணியை இன்னும் சிறப் பாகச் செவேன் என்பது எனது நம்பிக்கை.

எல்லா மகள்களுக்கும் அப்பாதான் ரியல் ஹீரோ. தீவிர காங்கிரஸ் கட்சித் தொண்டரான உங்க அப்பா, சித்தப்பா போன்றோர்கள் இருக் கும்போது அதே வீட்டிலிருந்து, நீங்க எப்படி பா.ஜ.க.வில் இணைந்தீர்கள்?

ஆரம்பக் காலத்தில் எனது அரசியல் பய ணம் எளிதானதாக இல்லை. எனது குடும்பம் காங்கிரஸ் குடும்பம். அந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க. அத்தனை பலம் பொருந்தியதாக இல்லை. ஆளும்கட்சியான காங்கிரஸ் வீட்டுல இருந்துகிட்டு, இவங்க ஏன் எதிர்க்கட்சியில் அதுவும் அதிக பலம் இல்லாது இருக்கும் கட்சி யில் இருக்காங்கன்னு நிறைய பேரு கேலியும் கிண்டலும் பண்ணினாங்க. ஆனாலும், நான் கொண்ட கொள்கையிலிருந்து மாறவில்லை. நிச்சயம் மக்களுக்கான ஒரு கட்சியாக இது வளர்ச்சி அடையும் என்பதில் பூரண நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை போகப் போக இன்னும் ஆழமானது.

உங்களின் பலம் எது? பலவீனம் எது?

நான் எதையுமே பலவீனம்னு நினைக்க மாட்டேன். எந்த ஓர் எண்ணத்திலும், செயலி லும் இருக்கக்கூடிய பலத்தை மட்டுமே கருத்தில் கொள்வேன். ஏதாவது பலவீனம்னு இருந்தாக் கூட, அதிலும் ஒரு பலம் ஒளிந்திருக் கும் இல்லையா? அதை எடுத்துப்பேன். அதுதான் என்னோட நம்பிக்கை. முடியாதுனு எதை யும் நினைக்க மாட்டேன். பத்து மீட்டர் நடக்க முடியுமான்னு கேட்டா, யோசிக்க மாட்டேன், நடக்க ஆரம்பிச்சுடுவேன். முடியற வரைக்கும் நடப்போம்னு கிளம்பிடுவேன். அந்தத் தன்னம் பிக்கை, கடின உழைப்புதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது. ஒரு விஷயத்தில் நான் ரொம்பத் தெளிவா இருப்பேன். குறுக்கு வழி என்பது எதுவுமே கிடையாது. உழைப்புக்கு நிகர் உழைப்புதான். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா, கடுமையா உழைச்சு உயர வேண்டியதுதான்.

என்னோட பேச்சாற்றல், எழுத்தாற்றல் இரண்டுமே இரு பலங்கள். மிகப் பெரிய பலம் என்னோட தொண்டர்கள். பலவீனம் இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு வரும். ஆனால், நான் எதையுமே பலவீனமா எடுத்தது கிடையாது.

நீங்கள் நினைத்த இலக்கை அடைந்து விட்டதாக நினைக்கிறீர்களா?

அரசியலில் இருக்கும் யாருக்குமே, மக்கள் பிரதிநிதியா இருக்கணும்னு ஆசை இருக்கும். அதுனாலதான் தேர்தல்ல போட்டி போடுவாங்க. வெற்றி வாப்பை மக்கள் ஏன் நமக்குக் கொடுக்கலேன்னு நினைப்பேன். ஒரு சட்ட மன்ற உறுப்பினராவேன்னு நெனச்சேன். ஆனா, பல பேர் அமர்ந்திருக்கற அவையிலே ஆளுநர் உரையாற்றுவேனு நினைக்கல. தமிழ்ல பதவிப் பிரமாணம் எடுத்தது என் வாழ்க்கையில் பெரும் பேறாகக் கருதறேன். தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அடிக்கடி சொல்வதுண்டு, ‘தமிழைக் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னைப் பெற்றதனால் பேசுகிறேன்னு’.தமிழை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது எனது லட்சியம். தமிழ்நாட்டு மக்கள் எல்லா வளங்களோடும் வாழவேண்டும். அதுவே என் பிரார்த்தனை.

முதல் முறையாக வோட்டுப் போடும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

முதலில் தயவு செது உங்களின் வோட்டை பதிவுசெய வாக்குச்சாவடிக்கு வாருங்கள். பத்து வேட்பாளர் இருந்தா யாரு நல்ல வேட் பாளர்னு பாருங்க. யாருக்கும் வோட்டு அளிக்க விருப்பம் இல்லை என்று உங்களது வாக்கை வீணடிக்காதீர்கள். கொஞ்சம் ஆராந்து செயல் படுங்கள். வேட்பாளரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். முதலில் சேவை மனப்பான்மை யோடு இருக்கும் வேட்பாளரைக் கண்டறியுங் கள். நிச்சயம் வாக்களியுங்கள். இது ஜனநாயகக் கடமை என்பதை மறவாதீர்கள்.

உங்களின் வெற்றிக்கு மிகப் பெரிய துணையாய் இருக்கறது யாரு? ஏன்?

எனது கணவர்தான். எனக்குள் இருக்கும் ஒரு சமூக சேவகியை எனக்குக் காட்டியவர். அவர் இல்லேன்னா எனது பொது வாழ்க்கை இத்தனை சிறப்பாக இருந்திருக்காது.

ஒரு ஆண் பெரிய பதவியில் இருந்தால் ஏற்றுக்கொள்ளும் உலகம், அதே ஒரு பெண் அந்தப் பதவியை அடைந்தால் அந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?

நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மைதான். இன்று எவ்வளவோ முன்னேறி இருக்கிறோம் என்றாலும், ஒரு பெண் உயரிய பதவியை அடையும் போது இன்னும் நிறைய கேள்விகள் எழுகின்றன. யாருடைய துணையில் இந்தப் பெண்ணுக்கு இந்தப் பதவி கிடைத்தது? யார் சிபாரிசு செதார் கள்? என்றெல்லாம் ஆராயும் உலகம், அதே பதவி ஒரு ஆணுக்குக் கிடைக்கும்போது இதுபோன்ற அனாவசியக் கேள்விகள் எழுவ தில்லை. திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் செயல்பட வேண்டும். திறமை யால் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும். அதுக்கு மிகப் பெரிய அடித்தளம் அமைக்க வேண்டும். பெண்களின் திறமையை வெளிக் கொணர ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

அதற்கு நீங்கள் சொல்லும் தீர்வு?

பெண்களுக்கு அந்த அளவுக்கு வாப்பு களைக் கொடுக்க வேண்டும். 33% என்பது குறி யீடாக இல்லாமல் அதிகமான அளவில் பெண் களுக்கு வாப்புக் கொடுக்கணும். ஆண் - பெண் என்று இல்லாமல், திறமைக்கு வாய்ப்பு, பதவி என்று அடிப்படையில் மாற்றம் வர வேண்டும்.

பெண்களுக்குப் பொதுவா நீங்க சொல்ல விரும்புவது?

உங்க வேலையை ஒழுங்கா செயுங்க. மன நிறைவோடு செயுங்க. சில பெண்கள் குடும்ப வாழ்க் கையே வேண்டாம்னு நினைக் கறாங்க. அது தவறு, நான் எப்பவும் சொல்வதுண்டு நாங் கள் ‘சாதமும் படைப்போம், சாதனையும் படைப்போம்’. பெண்களால் முடியாதது எதுவும் கிடையாது. எத்தனை துன்பம் வந்தாலும், ஒரு இலக்கை வைத்துக்கொண்டு அதை நோக்கியே உங்களின் பயணம் இருக்கட்டும். வழியில் வரும் தடைகளைக் கண்டு திரும்பாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டும். உடல்நலத்தையும் பெண்கள் பார்த் துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை யோகா, மெடிடேஷன் செய்து மன உறுதியோடு இருக்க வேண்டும்.
Post Comment

Post Comment