ஆல்ரவுண்ட் ஆளுமை!பேட்டி : பத்மினி பட்டாபிராமன் -ஃபேஷன் டிசைனர், நம்பிக்கையூட்டும் பேச்சாளர், எழுத்தாளர், தொழிலதிபர் அவர். பெண்மைக்குரிய மென்மையான அழகும், தெளிவான திட சிந்தனையும், உறுதியான மனமுமாக பெண்களுக்கு ரோல் மாடலாக விளங்குபவர்.18 வயதில் திருமணமாகி வெளிநாடுகள் சென்றவர். மஸ்கட்டில் பல ஆண்டுகள் சொந்தமாக ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவ னம் நடத்தியவர். முதலில் ஒரு மலையாளப் படம். பிறகு 2008ல் ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தில் நடிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து, 50 திரைப்படங்கள் வரை நடித்திருக்கிறார். இன்றும் நடித்து வருகிறார்.

பலமுறை சிறந்த குணச்சித்திர நடிப்புக்காக அரசு விருதும், மற்ற விருதுகளும் பெற்றவர். புத்திசாலியான திரைப்பட இயக்குனர்.‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’, ‘ஹவுஸ் ஓனர்’ போன்ற படங்களை இயக்கியவர்.

‘ஹவுஸ் ஓனர்’ படம் இந்தியன் பனோரமா வில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், அவருக்கு பெரும் வரவேற்பளித்து, தனி அடையாளம் தந்து, புகழ் சேர்த்தது ஙூஞுஞு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வ தெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிதான்.

தனது துணிவான, தெளிவான காம்ப்ரமைஸ் ஆகாத நெறியாள்கையால், சுமார் 2000 எபிசோடுகள் அந்த நிகழ்ச்சியை நடத்தி, பெரும் வெற்றி தேடித் தந்தவர்.பல குடும்பங்களில் இருந்த சிக்கலான பிரச்னைகளுக்குத் துணிவான, நேர்மையான அணுகுமுறையால் தீர்வு தந்தவர்.கலைஞர் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகும், ‘நேர் கொண்ட பார்வை’ இவரது ஆளுமைக்கு மற்றோர் சான்று.என்னம்மா இப்படி இவ் வளவு திறமைகளைக் கொண்டிருக் கீங்களேம்மா" என்று வியக்க வைப்பவர் திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன்.

தற்சமயம் அமெரிக்காவுக்கு மகள் வீட்டிற்குச் சென்றிருக்கும் அவருடன், கொஞ்சம் வித்தியாசமான கேள்விகளோடு மங்கையர் மலர் சித்திரை சிறப்பிதழுக்காக தொலை பேசியில் உரையாடினோம்...

நீங்கள் பயணம் செத நாடுகளில் உங்களுக்குப் பிடித்த இடம்? (கலகல வென்று அவருக்கே உரித்தான சிரிப்புடன்...)

எனக்குப் பொதுவா வெளிநாட்டுப் பயணங்களில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. ஆனால், கணவரின் வேலை நிமித்தம், மஸ்கட், துபாய் மற்றும் எனது மகள்களின் இருப்பிடம் காரணமாக அமெரிக்கா, லண்டன் என்று பயணம் போக நேரிடுகிறது.அமெரிக்காவில் க்ராண்ட் கேன்யான் என்னை அப்படியே மூச்சடைக்க பிரமிக்க வைத்தது. இயற்கையின் பிரம்மாண்டம் அது.

இந்தியாவிலேயே எத்தனையோ இடங்கள் கொள்ளை அழகு. இங்கே குற்றாலம் செல்லும் போது, அருவிகளைத் தாண்டி பின்னே உட்பக்க மாகச் சென்றால் அடர்ந்த காடு, அகத்தியர் குகை, சுத்தமான நீர், காற்று, ஒரு அற்புதமான உணர்வு அது. காட்டுக்குள், ஆழ்ந்த அமைதியில் இயற்கையின் அருகே மிக நெருக்கமாக இருப்பது போன்ற அனுபவம். மனசுக்குள் கிடைக்கும் அதிர்வுகள் ஆனந்தம். ஊட்டி அருகே முதுமலைக் காடுகளின் பகுதியான மசினகுடி எத்தனை அழகு அங்கே. காலையில் சூரிய உதயம் பார்க்கும் போது நம்மை வேறு உலகத்துக்கே அழைத்துச் சென்று விடும்.இப்படி பல இடங்களைச் சொல்லலாம்.

வியந்து பார்த்த ஒரு கலை நிகழ்ச்சி...?

லண்டன் பிராட்வேயில் நான் பார்த்த ‘விக்கெட்’ (Wicked) இசை நாடகம் என்னைப் பிரமிக்க வைத்தது.அப்புறம், அமெரிக்காவில் லாஸ்வேகாசில் பார்த்த பாராநார்மல் செயல்களை அடிப்படையாக வைத்த சூப்பர் நேச்சுரல் ஷோ பார்த் தேன். ரொம்பப் புதிராக, புதிதாக இருந்தது. அமானுஷ்யமாகவும் இருந்தது. ஹிப்னாடிசம் எல்லாம் செ கிறார்கள்.

விரும்பிச் சுவைத்த உணவு...

எனக்குச் சுத்த சைவ இந்திய உணவுகள், குறிப்பாக கம்பு, ராகி கூழ் இவையெல்லாம் ரொம்பப் பிடிக்கும்.வெளிநாடுகளில் என்றால், அமெரிக்காவில் ஒரு எத்தியோப்பிய ரெஸ்டாரன்டில் சாப்பிட்ட அருமையான வெஜிடேரியன் வகைகள்.

லண்டனில் லேக் டிஸ்ட்ரிக்ட்டில் சாப்பிட்ட ஸ்பானிஷ் வகைகள். பொதுவாக எனக்கு சமையல் செவது கேக் செவது இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்.செய்த ஷாப்பிங்... (நம்ம கேள்வியிலே ஷாப்பிங் இல்லாமலா) பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க லக்ஷ்மி மேம்.

விதவிதமான வாட்சுகள், சன் கிளாஸ் இவையெல்லாம் வாங்குவேன். பொதுவா இந்தியாவில் ஷாப்பிங் செயத்தான் பிடிக்கும். செட்டிநாடு ஸ்டைல், ஸ்டெயிண்ட் கிளாஸ் இப்படிச் சில.

என் சகோதரிகள் இருவரின் கணவர்களும் ராணுவத்தில் இருந்ததால் அவர்கள் மாற்ற லாகிச் செல்லும் ஊர்களுக்கு ஒரு விசிட் போ விடுவேன். ஜோத்பூரில் இருந்தபோது தினமும் ஷாப்பிங்தான். கேரளாவில் பாரம்பரிய கலைப் பொருட்கள் வாங்குவேன். பொம்மை மாட்டு வண்டி போன்றவை என் கலெக்ஷனில் உள்ளவை.

இந்தியப் பொருட்கள் தவிர, வெளிநாடுகளில், மினியேச்சர் கலைப் பொருட்களை வாங்கும் பழக்கம் உண்டு.நம்முடைய பாரம்பரிய நம்பிக்கைகள்,

பழக்க வழக்கங்கள் இவற்றையும், நவீன சிந்தனைகளையும் ஒரு புள்ளியில் இணைக்க முடியுமா?

இணைகிறதே... ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்கிறார்: The more I understand Science, the more I believe God.

இந்த மாடர்ன் உலகில் நடக்கும் சில விஷயங்களைப் பார்க்கும்போது, நம்முடைய பாரம்பரிய நம்பிக்கைகள் எவ்வளவோ மேல் அல்லவா?

மஞ்சள் கயிறு கழுத்தில் அணிவது, மஞ்சள் தேத்துக் குளிப்பது எல்லாம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் என்று சயன்ஸ் கண்டுபிடிப்பு கூறுகிறது.

காலில் மெட்டி அணியும்போது குறிப்பிட்ட விரலின் நரம்புக்கு, வெள்ளி நல்ல பலன் தருகிறது.நெற்றிப் பொட்டு அந்த இடத்தின் அதிர் வைத் தாங்குகிறது. விரதங்கள் வயிற்றுக்கு நன்மை தருகிறது.இப்படி நம் பாரம்பரியப் பழக்க வழக்கங் கள், நன்மையானவை என்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சில பழக்கங்கள், மனிதராக ஏற் படுத்தியவற்றிலிருந்து நான் மாறுபடுகிறேன். குறிப்பாக, ஒருவரின் இறுதிச் சடங்கில் பத்தா வது நாள் காரியங்களின் சில சடங்குகள், பெண்களுக்கு உரிமை மறுக் கப்படுவது இவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.

இன்றைய ஊடகங்கள், பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவுகின்றனவா அல்லது, அவர்கள் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறார் களா?

நான் திரைப்படத்துக்கு 2008ல் முதலில் வந்தபோது, எனக்கு, குடும்பம் உட்பட திரைப்படப் பின்னணி எதுவுமே இல்லை.மிகச் சில ஊடகங்கள் தான் அப்போது என்னைப் பற்றிக் குறிப்பிட்டன. பொது வாழ் வில் பெண்களுக்கு எதிரான ஒரு மனநிலையும் சமூகத்தில் இருந்தது. பெண்களுக்கு சம உரிமை என்பதை ஏற்றுக்கொள்ள தயக்கம் இருந்தது.

ஆனால், இன்று நிலைமை மாறி வருகிறது. ஊடகங்கள் பெண்களுக்கு எதிராக எதுவும் செயவோ பேசவோ முடியாதபடி ஊடகங் களின் பங்களிப்பு இருக்கிறது.நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேச ஆரம்பித்த பின்னர் ஊடகங்கள் அளித்த ஆதரவு காரணமாகத்தான் இன்று பலரும் என்னைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறார்கள்.என் கருத்துப்படி, ஊடகங்கள் பெண்களுக்கு உதவுகின்றன என்றுதான் கூற வேண்டும்.

ஊடகங்களுக்கு எனது பணிவான வேண்டு கோள் என்னவென்றால், உங்கள் செதிகளை வெளியிடும்போது பொறுப்பாகச் செயல்படுங் கள். ரெஸ்பான்சிபிள் ஜர்னலிசம் உங்கள் நோக்க மாக இருக்கட்டும்.உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்...

என்னுடைய பயணம் எதுவும் திட்டமிட்டது அல்ல. ஆனால், எனக்கு என் பெற்றோர்தான் ரோல் மாடல். நாங்கள் ஐந்து பெண்கள், ஒரே ஒரு சகோதரன். நான் கடைக்குட்டி. இப்போது பேரன்டிங் என்று குழந்தை வளர்ப்பு பற்றி எல்லா மீடியாவிலும் பேசுகிறார்கள்.

அப்போது அப்படி அல்ல. அவர்கள் வாழ்க்கை யிலிருந்து நாமாகவே கற்றுக் கொள்வதுதான். சுயமரியாதையுடன் வாழ் வதற்கான அடித்தளம் என் வளர்ப்பில் இருந்தது.சென்னை ஐ.ஐ.டியில் டாக்டரேட் செய்து கொண்டிருந்த ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் எனக்கும் 1984 ஜனவரியில் திருமணம் நடந்தது. பின்னர்தான் நான் கரெஸ் பாண்டென்சில் பி.காம்., முடித்தேன்.மிக ஆச்சாரமான குடும் பத்தில் பிறந்து அதைவிட ஆச்சாரமான குடும்பத்தில் மருமகளானவள் நான். அந்தக் குடும்பத்தில் பெண் கள் யாரும் வேலைக்குப் போவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

நான் இன்று இவ்வளவு முன்னேற்றம் அடைந்திருப் பதற்கு முழுக் காரணமும் எனது கணவரின் சப்போர்ட்தான்.எனக்கு மூன்று பெண்கள். அவர்களது தனித்துவம் மாறாமல், திறமைகளைப் போற்றி வளர்த்திருக்கிறோம் என்பதில் எங்களுக்கு அலாதி பெருமிதம்.

பெரிய பெண் இரட்டை முதுகலைப் படிப்பு முடித்தவர். பி.எஸ்.ஜி. டெக்கில் எம்.எஸ்சி., சாஃப்ட்வேர் என்ஜினீயரிங் படித்து விட்டு அமெரிக்காவில் எம்.எஸ். முடித்தவர்.

தற்சமயம் சான்ஃபிரான்சிஸ்கோவில் ஒரு நிறுவனத்தில் டைரக்டர் ஆஃப் என்ஜினீயரிங் பணியில் இருக்கிறார். அவரது கணவரும் ஒரு என்ஜினீயரிங் . இருவருமே நன்றாகப் பாடுவார் கள். போட்டோகிராஃபி, சமையல், இரண் டிலும் ஆர்வம் மிக்கவர் என் மூத்த மகள். அவர் களுக்கு ஒரு மகன்.

இரண்டாவது பெண், அனைத்திந்திய லெவலில் சி.ஏ., படிப்பில் ரேங்க் வாங்கியவர். சிறந்த பாலே டான்சர். லண்டனில் பெரிய நிறு வனத்தில் பணிபுரிகிறார்.

சென்னை எம்.ஓ.பி.யில் எலக்ட்ரானிக் மீடியா படித்த மூன்றாவது பெண், சொஷியல் செக்டரில் பணியாற்ற விரும்பி, டாட்டா டிரஸ்ட்டில் சேர்ந்தார். இந்தியா முழுவதும் 300 கிராமங்களுக்கு மேல் சுற்றுப் பயணம் செது கிராமப்புறப் பெண்களின் கல்வி பற்றிய பணியில் இருந்தார். தற்சமயம் மும்பையில் முதுகலை படித்து வருகிறார்.

மிகச்சிறந்த ஆளுமை கொண்டவரான நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை?

என்னுடைய தந்தை கிருஷ்ணஸ்வாமி, ராஜாஜி அவர்கள் துவங்கிய சுதந்திரா கட்சியில் இருந்தவர். அந்தக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்.

எனக்கு அரசியலில் ஏனோ அவ்வளவாக ஈடு பாடு இல்லை. குடும்பம், குழந்தைகள் வளர்ப்பு என் பதில்தான் முதன்மை கவனம் இருந்தது. அரசியலுக்குத் தேவையான மன ஓட்டம் என்னிடம் இல்லை. அரசியலில் இல்லாவிட்டால் என்ன, ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற நிகழ்ச்சிகளில் எங்களிடம் பிரச்னைகளோடு வருபவர் களுக்கு பெரிய பதவியில் இருப்பவர்களை அணுகி உதவி செய முடிகிறதே.

நல்ல காரியங்கள் செய பதவியிலோ, அரசியலிலோ இருக்க வேண்டும் என்பதில்லை. சமூகத்தில் நம்மால் பிறருக்கு என்ன உதவிகள் செய முடியுமோ அதைச் செது வருகிறோம். தினக்கூலி வாங்குவோர் குடும்பங்களுக்கு, இந்த கொரோனா காலத்தில் தொடர்ந்து உதவி வருகிறோம்.

சாதனைப் பெண்ணான நீங்கள் மங்கையர் மலர் வாசகியருக்குச் சொல்ல விரும்புவது...?

ஒரு குடும்பப் பெண்ணாக, மனைவியாக, தாயாக, கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் செயா மல், நல்ல விஷயங்களைச் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்து வருவது எனது பலம் என்று நினைக்கிறேன்.நாம் உழைக்கத் தயாராக இருந்தா வாப்பு கள் தானே வரும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

சொந்த வாழ்க்கையையும், ஆர்வமுடன் ஈடு படும் துறைகளையும் சரியாக பேலன்ஸ் செய முடியும் என்று நிரூபித்து வருவதோடு அதையே தனது வெற்றியாகவும் குறிப்பிடும் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாசகியர் சார்பில் ஒரு பூங்கொத்து இதோ.


Post Comment

Post Comment