ஆட்டிசம் பயிற்சி...அற்புதமான முயற்சி!சந்திப்பு : பத்மினி பட்டாபிராமன் -டி.வி.யின் மேல் ஒரு கரடி பொம்மை. அதை உற்றுப் பார்க்கும் ரமிக்கு மூன்று வயது. பொதுவாக விரலை நீட்டி அதைச் சுட்டிக்காட்டி மழலையில் கேட்பது நார்மல் குழந்தைகளின் வழக்கம். ரமி, கொஞ்சம் வித்தியாசமாகப் படைக்கப்பட்டவள். அம்மாவின் கையைப் பற்றி இழுத்து அந்தக் கரடியைத் தொட்டுக் காட்டுகிறாள். விளையாடணுமாடி செல்லம்?" அம்மா எடுத்துக் கொடுக்கிறாள். வாங்கிக் கொண்டு காரிடாருக்குச் செல்லும் ரமி, அங்கே விளையாடும் மற்ற குழந்தை களைப் பார்க்கிறாள். அவர்களோடு சேராமல், தானே ஓர் ஓரமாக உட்கார்ந்து விளையாடுகிறாள். அவளோடு மற்றவர்களுடன் சரியான முறையில் கம்யூனிகேட் செய்ய முடியாது. ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தை அவள்

ஏப்ரல் 2ம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆட்டிசம் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி தருவதற்காக சென்னை நீலாங்கரையில், முதன் முதலாக வீ கேன் (WeCAN) என்ற மையத்தைத் துவக்கியவர் கீதா ஸ்ரீகாந்த்.சார்டர்ட் அக்கௌண்டன்ட் படித்து விட்டு ஆடிட்டராகவும் நிறுவனச் செயலாளராகவும் பணி புரிந்த கீதா ஸ்ரீகாந்த், அந்த வேலையை விட்டு, ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பயிற்சி கொடுக் கும் படிப்பை அமெரிக்காவில் படித்து வந்திருக்கிறார். Applied Behavior Analysis (ABA), முதுகலை, BCBA (Board Certified Behavior Analyst) உட்பட பல பட்டங் களை அங்கே பெற்றிருக்கிறார். இந்தியாவிலேயே இத்தகைய தேர்ச்சி பெற்ற 30 பேரில் இவரும் ஒருவர்.கடந்த பல வருடங்களாகவே நாம் ஆட்டிசம் பாதிப்பு பற்றி கேள்விப்படுகிறோம். ஆட்டிசம் என்றால் என்ன? அது எத்தகைய பாதிப்பு? ஏன் ஏற்படுகிறது? எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்கான பயிற்சிகள் என்னென்ன? நிறைய கேள்விகளோடு கீதாவைச் சந்தித்தோம்.

எந்த வயதில் ஆட்டிசம் வருகிறது?

ஆட்டிசம் உயிர் நரம்பியல் வளர்ச்சி மாறுபாட்டினால் (bio-neurological developmental disability) வருவது. ஒரு குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டுபிடித்து விடலாம்.

இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

இந்தக் குழந்தைகளின் முதல் பிரச்னை பேச்சு மூலம் மற்றவர்களைத் தொடர்புகொள்ள இயலாமல் இருத்தல். அதனால் பேச்சு வராது என்பதல்ல. ஆனால், எதை, எப்படி, எதற்காகப் பேச வேண்டும் என்பது தெரியாது. காது நன்றாகக் கேட்கும். வாசல் அழைப்பு மணி அடித்தாலோ, டி.வி.யில் பிடித்த பாடல் வந்தாலோ ஓடி வருவார்கள். சிலர் டி.வி.யில் கேட்ட ஏதாவது வசனத்தை அருமையாகப் பேசுவார்கள். முதலில் கேட் பவர்களுக்கு வியப்பாக இருக்கும். இந்தக் குழந்தைக்கா ஆட்டிசம் என்று. ஆனால் அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். யாராவது கேட்கிறார்களா என்று கவனிக்க மாட்டார்கள். கைகொட்டுவது, குதிப்பது, முன்னும் பின்னும் அசைந்துகொண்டே இருப்பது போன்ற ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்யும் Repetitive behaviors இவர்களிடம் காணப்படும் குறை பாடு. சிலர் சுவரைத் தொட்டுக்கொண்டே நடப்பார்கள். சில குழந்தைகள் ஒரு கார் பொம்மையைப் பார்த்தால் விதம்விதமாக விளையாடாமல் அதன் சக்கரத்தை மட்டும் சுற்றிவிட்டு அதையே பார்த்துக் கொண்டிருப் பார்கள்.

மற்ற விஷயங்களில் அவர்களது ஈடுபாடு ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மட்டுமே இருக்கும். ஒருவரின் கண்களைப் பார்த்துப் பேச மாட்டார்கள். மற்றவர்களிடம் தங்கள் உணர்வுகளைத் தெரியப்படுத்துவதோ மற்றவர் களது உணர்வுகளைப் புரிந்து கொள்வதோ முடியாதது.

ஒரு பழக்கத்துக்கோ ஒரு ஒழுங்கு முறைக்கோ வந்து விட்டால், அதிலிருந்து மாறு படுவது இயலாதது. உதாரணத்திற்கு, பள்ளிக்குச் செல்லும்போது வழக்க மான பாதையை விட்டு மாற்றுப் பாதையில் செல் வது போன்ற மாற்றங்களை இவர்களால் ஏற்கவே முடி யாது.

அனேகமாகச் சிறுமிகளை விட, சிறுவர்களுக்குத்தான் அதிகம் ஆட்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது என்பது உண்மையா?

உண்மைதான். அறிவியல் பூர்வமாக இதற்கான காரணம் தெரியவில்லை. ஆட்டிசம் பாதித்த பெண் குழந்தைகளின் நடவடிக்கைகள் வேறு மாதிரி யாக இருக்கும். அமெரிக்காவில் 2000மாவது ஆண்டு தொடக்கத்தில் 150 பேரில் ஒருவருக்கு என்றிருந்த ஆட்டிசம், இன்று 59 பேரில் ஒருவருக்கு என்று அதிகரித்திருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஜனத் தொகை அதிகம் இருப்பதால் பாதிப்பின் அளவு இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இதைப் பற்றிய விழிப்புணர்ச்சி, சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதை எப்படிக் குணப்படுத்துவது?

குணப்படுத்த முடியாது. பயிற்சிகள் கொடுத்து, அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தலாம். ஆயுள் முழுவதும் தொடரும் பாதிப்பு இது. இதை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (autism spectrum disorder - ASD)என்று சொல்கிறோம். பாதிக்கப்பட்ட ஒவ் வொரு தனி நபருக்கும் அவர்களது திறமை களும், நடவடிக்கைகளும் மாறுபடும். சிலர் மற்றவர் துணையோடுதான் இருக்க வேண்டி யிருக்கும். சிலருக்குத்தானே எல்லாம் பார்த்துக் கொள்ள முடியும். கற்றுக் கொள்ளும் ஆற்றல், சிந்தித்துச் செயலாற்றுவது போன்றவையும் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.

ஆட்டிசம் பாதித்தோரின் கல்வி, வேலை வாப்பு எப்படி ?

கல்வி ஓரளவு கற்றுக் கொள்வார்கள். சிலருக்குக் கணக்கு போன்றவை கடின மாக இருக்கும். வேலை வாப்பைப் பொறுத்த வரை, சுமார் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக் கிறார்கள். மற்றவர்களுக்கு, அலுவலகச் சூழலைப் புரிந்துகொண்டு வேலை செவதென்பது கடினம்.

‘வீகேன்’ மையம் எந்த விதமான பயிற்சிகளை அளிக்கிறது?

Applied Behavior Analysis என்பது மனிதரின் நடவடிக்கை, சுற்றி இருப் பதைக் கற்கும் திறன் பற்றிய அறிவியல். அதில் பட்டம் பெற்றிருக்கும் நான், மற்றும் சுவாதி நாராயண் மற்றும் எங்கள் அமைப்பினர் அனை வரும் இணைந்து பல திட்டங்களை வெற்றிகர மாகச் செயலாற்றி வருகிறோம்.

*குழுவோடு இணைதல், மற்றவரோடு தொடர்புகொள்ளுதல், பேசுதல், படித்தல், எழுதுதல், தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுதல் என்று பலவிதங்களிலும் ஆட்டிஸம் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறோம்.

*வர்பல் பிஹேவியர் புரோக்ராம் ((Verbal Behavior Program)மூலம் ஆட்டிசம் பாதித்த சிறு குழந்தைகளுக்குப் பேசவும், விளையாடவும், ஒருவர் செவதைப் பார்த்து, தானே செயவும் கற்றுத்தந்து, மேலே உயர் வதற்கான வலுவான அடித் தளம் அமைத்து தரு கிறோம்.

*வார இறுதி நாட்களில், ‘சோஷியல் ஸ்கில்ஸ் குரூப்’ என்ற நிகழ்ச்சி நடத்துகிறோம். ஆறு வயதிலிருந்து பன்னிரண்டு வயது வரை உள்ள ஆட்டிசக் குழந்தைகளை மற்ற குழந்தை களோடு பழக விட்டு, நட்பின் தன்மையைப் புரியவைக்கிறோம்.

*பொது இடங்களில் எப்படிப் பேச வேண் டும், குரலை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், யாரோடு என்ன பேச வேண்டும் என்பதிலிருந்து பாலின வேறுபாடு என்பது வரை எல்லாமே இவர்களுக்குக் கற்றுத் தருகிறோம்.

*அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், மன இறுக்கம் இவற்றைப் பற்றியும் மனம் விட்டுப் பேச வைக்கிறோம்.

*ஐந்து முதல் பதினாறு வயதாகும் சிறார்க் கென, அவர்கள் திறன், சிந்திக்கும் விதத்தை மேம்படுத்தவும், சவால்களைச் சந்திக்கும் திறனை வளர்க்கவும் பலவிதமான உடலுக்கும், மனதுக்கும் உரம் தரும் விளையாட்டுகள் வைத்திருக்கிறோம்.

*உடலைப் பாதுகாப்பது எப்படி என்று கற்றுத்தருகிறோம்.

*நாடகங்கள் போட்டு அவர்களது ‘உணர்ச்சி வெளிப்பாட்டினை’ ஊக்குவிக் கிறோம்.

*புத்தகங்கள் படிக்க வைக்கிறோம்.

*ஆட்டிசம் பாதிப்பு கொண்ட இளை ஞர்கள் மற்றும் நடு வயதினருக்கு அவர்களது மன அழுத்தம் போக்குதல், கோபத்தைக் கட்டுப்படுத்தல், குடும்ப உறவுகள் புரியவைத்தல் எனப் பல பயிற்சிகள் உண்டு.

* ஆட்டிசம் பாதித் தோரின் குடும்பத்தின ருக்கும் அவர்களை எப் படிக் கையாள வேண்டும் என்பதற்கான முறைகளை யும் சொல்லித் தருகிறோம்.

சென்னை மட்டுமன்றி பல ஊர்களுக்கும் சென்று ஆட்டிசம் பற்றிய முகாம் களையும், பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறோம். இந்த மையத்தில் இப்போது ஆட்டிச பாதிப்புள்ள சுமார் 30 பேருக்கு நேரடி யாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தவிர, ஒவ்வொரு வருடமும் ஆட்டிசம் நபர்களைக் கொண்ட சுமார் 100 குடும்பங்களுக்கு

ஆலோசனைகள், பயிற்சிகள் அளித்து வருகிறோம். அற்புதமான பணி, அபரிமிதமான அர்ப்பணிப்பு, உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துகள்" என்று மங்கையர் மலர் சார்பில் ஒரு பூங்கொத்து அளித்து விடைபெற்றோம்.
Post Comment

Post Comment