ஒரு வார்த்தை!


அனுஷா நடராஜன்சமீப காலமாக ‘யூ டர்ன் அன்பு’ (!) என்ற தில்லாலங்கடியான விஷயம் பல குடும்பங்களில் நடப்பதைப் பார்க்கிறேன்.

கிளம்பு, காத்து வரட்டும்!" (சாம்பிள் 1)

இப்போது அந்தக் கணவனுக்கு வயது 65 +ஆரம்பத்திலிருந்தே மனைவியிடம் பெரிய காதல் வேண்டாம், குறைந்தபட்ச பரிவு கூட காட்ட நேர மில்லை. ஐயா அவ்வளவு பிஸி! வேலை, தொழில், பணம் பணம்" என்று ஆலாய்ப் பறக்கும் வாழ்க்கை!இன்னும் சில ஆண் ஜென்மங்கள் வீட்டுக்கே வருவதில்லை. தீபாவளி, பொங்கல் என எப்போதாவது தலைகாட்டுவதோடு சரி!இன்னும் சில கேஸ்கள், போதை, பெண், கோர்ட்டு, கேஸ், கடன், சீட்டு, ரேஸ் என எதில் எதிலோ மாட்டிக் கொண்டு ஆண்டுக்கணக்கில் தலைமறைவாகியிருப்பார்கள்!அவனது மனைவியும் பிள்ளைகளும் இந்தக் குடும்பத் தலைவனிடம் எதை எதையோ எதிர்பார்த்து, ஏமாந்து, எப்படியோ தட்டுத் தடுமாறி, தரமாய்ப் பிழைத்து நல்ல நிலையில் இருக்கும் போது, போன மச்சான் திரும்பி வருவான், நோயோடு நொடிந்து போய் அவன் வந்ததும் ஆரத்தி எடுப்பதோடு, குடும்பமே பாசமழை பொழியணும்னு வேறே எதிர்பார்ப்பு.ஏன் எப்பவும் கோவமாவே இருக்கீங்க? இரண்டு வார்த்தை பாசமா பேசுங்க?" என்று இளம் வயதில் மனைவி கெஞ்சிய போதெல்லாம், கெத்து காட்டி முறைத்தவன் இன்று அப்படியே ‘யூ டர்ன்’ அடித்து நல்லவன் ஆயிட்டானாம்! வெறுத்துப் போயிருக்கும் குடும்பமோ, கிளம்பு, காத்து வரட்டும்!" என்கிறார்கள்!

இப்ப என்ன வேண்டியிருக்கு? (சாம்பிள் 2)

* ஆச்சாரம், அடுக்களை அதிகாரம், பொஸஸிவ் னெஸ், மாமியார் அகங்காரம் என பல விதங்களில் மருமகளை ஆட்டிப் படைத்த மாமியார்கள் இன்று வயசாகி முடங்கிப் போனதும், ‘யூ டர்ன்’ அடித்து பாச மழை பண்டரிபாய்களாகி விடுகின்றனர். குடும்பத்தில் எல்லோரும் (குறிப்பாக மருமகள் கள்) பணிவிடைகள் செய்வதோடு, அம்மா... அம்மா" என்று தாங்கணும்னு எதிர்பார்க்கிறார்கள்.

மருமகள்கள் மட்டும் சாமானியமா என்ன? ஆரம்பத்தில் குடும்பத்தில் ஒட்டாமல் கத்தரி போட்டுவிட்டு... பின் தனக்கு மருமகள் வரும் நேரம் சொத்துக்காகவோ அல்லது ‘நாங்க ஒற்றுமையானவங்கதான்’னு சீன் போடவோ யூ டர்ன் அடிக்கிறதையும் பார்க்கிறோமே!சின்ன வயசுல வாழ விடாமல் வயித்தெரிச்சல் கொட்டியாச்சு? இப்ப என்ன கொஞ்சல் வேண்டி யிருக்கு?" என மருமகள்கள் கடுப்பாவதும் ‘கல்யாணம் ஆன புதுசுல இருந்து இத்தனை வருடமா ஒட்டாதவ, இப்ப வந்து ஈஷிக்கிறது எதுக்கு?’னு மாமியார்கள் புலம்புவதும் நியாயம் தானே?

ஒரு ஆணியும் பிடுங்க வேணாம்! (சாம்பிள் 3)

பொறாமையாலும், கீழான பார்வையாலும் குடும்ப உறவுகளுக்குத் தீ வைத்த நிறைய உறவுகள் திடீர் ஞானோதயம் பெற்று, வாங்க, பழகலாம்"னு கூப்பிடுவதும் பரிசுகள் தருவதும் ‘யூ டர்ன்’ பாசக் காட்சிதான்!காலம் கடந்து போயாச்சு! ஒரு ஆணியும் இப்போ பிடுங்க வேணாம்!" என்று சொல்வதைத் தவிர வேற வழி?

ஸோ, வாழ்க்கை ஒரு ரங்கராட்டினம்! காலச் சுழற்சியில் தட்டுகள் மேலும் கீழும் போகத்தான் செய்யும்! எந்த நிலையில் இருந்தாலும் உறவு களுடன் ஓரளவு புரிதலோடு வாழ்ந்துவிட்டால் ‘யூ டர்ன்’ அடித்து அசிங்கப்படத் தேவையில்லை! நட்போ, குடும்பமோ எந்த உறவிலும் ஈகோ அமிலம் ஊற்றாமல் இருந்தாலே - நாம் ஒருவேளை ‘யூடர்ன்’ அடிக்க நேர்ந்தாலும் - அது அதிக வேதனை தராது. இல்லையா?

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :