மும்பை பரபரஆர்.மீனலதா, மும்பை -ஆசாதி கா அம்ருத் மகோத்சங்

இந்திய நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாவதைக் குறிக்கும் வகையில் பொருட்காட்சி ஒன்று புனே ‘ஆகாகான் அரண்மனையில்’ ஆசாதி கா அம்ருத் ‘மகோத்சவ்’ என்ற பெயரில், சமீபத்தில் ஆன்லைன் வழியே திறந்து வைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் சாதனைகளை விளக்கும் விதமாகவும், சுதந்திரப் போராட்டத்தின் தியாகப் பயணம் அனைவருக்கும் தெரியும் வகையிலும், அடுத்த 25 ஆண்டுகளில் நாடு நிகழ்த்தக்கூடிய சாதனைகள் பற்றியும் அங்கே வைக்கப்பட்டுள்ளன. (1942 ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி சுமார் 21 மாதங்கள் இந்த அரண்மனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

மீண்டும் விக்டோரியா!

மும்பையில் விக்டோரியா குதிரை வண்டிகள் பிரசித்தி பெற்ற வைகளாக பல வருட காலமிருந்தன. விலங்குகள் தன்னார் வலர்கள் தொடர்ந்த வழக்கின் காரணமாக குதிரை வண்டிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டன. அதற்குப் பதிலாக, மும்பையில் பேட்டரி யால் இயங்கும் விக்டோரியா வண்டிகளின் சேவை விரைவில் தொடங்கப்படவிருக்கின்றன. ஒரு மணி நேரத்தில் 20 கிலோ மீட்டர் வரை ஓடும். கேட் வே ஆப் இந்தியா; மரைன் ட்ரைவ், நரிமன் பாயின்ட் ஆகிய இடங்களில் இயங்கும்.

35 வருடக் காத்திருப்பு!

மலாடு மேற்கு கோலி ஸமாஜ் ஹால் அருகேயுள்ள புஜாலே ஏரிப் பகுதியில் அனைத்துத் தரப்பு மக்கள் வசிக்கின்றனர். நிறைய தமிழர்களும் உள்ளனர். கடந்த 35 வருட காலமாக பஸ் வசதியில்லாத காரண மாக, இங்கு வாழும் மக்கள் ஆட்டோ, டாக்ஸியில் பய ணம் செய்து வருகிறார்கள். இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு செவி மடுத்து, பெஸ்ட் (B.E.S.T) நிர்வாகம் பஸ் வசதியை சமீபத்தில் தொடங்கி இருக் கிறது.

தூய்மை நீர் விருது

நவீனத் தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தித் தூய்மை யுடனும், பாதுகாப்புடனும் குடிநீர் விநியோகம் மும்பை மக்களிடம் கொண்டு செல்லப் படுகிறது. இது 99.3% சுத்த மானது. பழைய குழாய்கள் நீக்கப்பட்டு, புதிய குழாய்கள் போடப்பட்டுள்ளன. குறைந்த விலையில், குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. தினமும் 3,850 மில்லியன் லிட்டர் தண்ணீரை மும்பை நகராட்சி வழங்கி வருகிறது. இத்தகைய சிறந்த பணியைப் பாராட்டும் வண்ணம் மும்பை மாநகராட்சிக்கு, இந்தியன் வாட்டர்ஸ் வொர்க்ஸ் அசோசி யேஷன் ‘தூய்மை நீர் விரு தினை’ வழங்கி கௌரவித்துள்ளது பெருமைக்குரிய விஷயம்.

பெண்கள் தடுப்பூசி மையம்

மராட்டிய மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்கள் குடும்பத்திற்காக அநேக பெண்கள் திடமனதுடன் போராடி வெற்றிபெற்றனர். உலக மகளிர் தினத்தன்று, மாநிலம் முழுவதும் பெண்களுக்கென 189 தடுப்பூசி மையங்கள், மாவட்டத்திற்கு 5 வீதம் அமைக்கப்பட்டன. பெண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இம் மையங்கள் பகல் நேரங்களில் இயங்கும். வயதான பெண்டிருக்கு இது மிகவும் வசதியாக உள்ளது.

கிதாப் கானா

மும்பை ஃப்ளோரா ஃபௌண்டன் அருகே மிகவும் பிரபலமான ‘கிதாப் கானா’ அமைந்துள்ளது. பிரபல தொழிலதிபர் சமீர் சோமையா என்பவரால் உருவாக்கப்பட்டு, அவரது தாயாரின் பிறந்த நாளான 2.3.2011 அன்று தாயாரின் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கிருக்கும் புத்தகங்கள் அனைத்தும் பலருக்கும் உபயோகமானவை களாகும். டிசம்பர் 2020 இல் திடீரென தீ விபத்து ஏற்பட அநேக புத்தகங்கள் எரிந்து போயின. மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டு, தற்சமயம் 50,000 வகை புத்தகங்கள் அழகாக வைக்கப்பட்டு மக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. வருபவர்கள் மாஸ்க் அணிந்து இடைவெளி விட்டு அமர்ந்து படிக்கிறார்கள்.
Post Comment

Post Comment