விஷு கனி சத்யாஆர்.மீனலதா, மும்பை -சேர்ந்து வருவது விஷுவும் கனியும் பிரிக்க முடியாதது விஷுவும் கைநீட்டமும் பார்த்து ரசிப்பது விஷுவும் கொன்னப்பூவும் அறுசுவை உண்பது விஷுவும் சத்யாவும்!"

- இத்தகைய சிறப்பினைக் கொண்ட கேரள மாநிலத்தின் புது வருடப் பிறப்பாகிய ‘விஷு’ நன்னாளன்று, சிறியோர்கள் பெரியோர்களைப் பணிந்து வணங்கி ஆசிகள் பெறுவார்கள். அப்போது, சிறியவர்கள் நீட்டும் கைகளில், பெரியவர்கள் காசுகளை வைப்பது வழக்கம். இது ‘விஷுக் கைநீட்டம்’ எனப்படும்.

விஷுவன்று அதிகாலையில் மூடிய கண் களைத் திறந்து மங்கலமான பொருட்களை முதன் முதல் காண்பது கனி காணலாகும்.

கனி காணும் நேரம், கமல நேத்ரண்டே நிற மேரும் மஞ்சத் துகில் சார்ததி,கனக கிங்கிணி வளகல் மோதிரம் அணிஞ்சு காணேனம் பகவானே!" என்கிற விஷுக்கனி பாடல் பிரசித்தமானது.

மேடம், எடவம், மிதுன மென கேரள மதங் கள் ஆரம்பமாகும். ‘வருடத்தை’ கொல்ல மென்றும், நாளை ‘திவச’ என்றும் கூறுகிறார்கள்.விஷுவைக் கொண்டாடவும், கனியைக் காணவும் அனைவரும் ஆவலுடன் செயல் படுவார்கள். ‘விஷு சத்தி’ சாப்பாடு மிகவும் பிரசித்தம்.

விஷுக்கனி காணல் படலம்

விஷுவிற்கு முதல் நாளிரவே பூஜையறையை நன்றாகச் சுத்தம் செய்து, திருவிளக்கில் சந்தனம், குங்குமம் இட்டு, அதன் முன்பு அழகிய கோலமிட்டு, கடவுள் களின் உருவப் படங்களை அலங் கரிப்பார்கள். பெரிய தட்டொன் றில் பூ, பழங்கள், வெற்றிலை- பாக்கு, உடைத்த தேங்காய் மூடிகள், பணம், அணிகலன்கள், மஞ்சள் நிறக் கொன்னப் பூ ஆகிய வற்றை ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி முன் வைப்பார்கள்.விஷுவன்று அதிகாலை வீட்டிலுள்ள பெரியவர் ஒருவர் எழுந்து, நீராடி, புத்தாடை அணிந்து, பூஜையறையில் உள்ள திருவிளக்கை ஏற்றி கமகம ஊதுபத்தியை ஏற்றி வழிபாடு செய்வார். பிறகு வீட்டிலுள்ள மற்றவர்களை எழுப்பி பூஜையறைக்குக் கூட்டிச் செல்வர். அவர்கள் தங்களது கண்களை மூடிய வாறே மெல்ல நடந்து, ஏற்றி வைத்திருக்கும் திருவிளக்கினருகே வந்து, கண்களை மெதுவாகத் திறந்து, எல்லாவற்றையும் காண்பார்கள். விஷுக் கொன்னப் பூவைக் காண்பது மிகவும் விசேஷமாகும். இவ்வாறு நல்லவைகளைப் பார்ப்பதில் ஆண்டு முழுவதும் அமைதி நிலவி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுமென்பது நம்பிக்கை.

‘ஓண சத்யா’ மாதிரியே ‘விஷு சத்யாவும்’ அமர்க்களமாக இருக்கும். ‘விஷு சத்யா’ சாப்பாட்டின் இரு ஸ்பெஷல் உணவுகள் இதோ...கசுவண்டி துவரன் ஸ்பெஷல்:

தேவை : முந்திரிப் பருப்பு -1 கப், பொடி உப்பு - சிறிது, தேங்காய்ப் பூ - அரை கப், பூண்டு (உரித்தது) - 2 பல், ஷாலட்ஸ் - 3, சீரகம் - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - தேவைக்கு, பச்சைமிளகாய் - 2, உலர்ந்த சிவப்பு மிளகாய் - 2, தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை: முதலில் முந்திரிப் பருப்புடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய்ப் பூ, பூண்டு, சீரகம், பச்சைமிளகாய், சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் இட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்.ஷாலட்ஸ்களை மெல்லிசாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண் ணெய் விட்டு அடுப்பின் மீது வைத்துக் காய்ந்த தும் அதில் மெல்லிசாக நறுக்கிய ஷாலட்ஸ், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கிய பின், ஒன்றிரண்டாக அரைத்த தேங் காய் மசாலாவைச் சேர்த்து மீண்டும் வதக்கவும்.நன்றாக வதக்கிய பின், வெந்தெடுத்த முந்திரிப் பருப்புகளை அதில் போட்டுக் கலந்து சுமார் 5-6 நிமிடங்கள் மூடி வைத்த பிறகு அடுப்பை அணைக்கவும். சூப்பரான டேஸ்ட்டி ஐட்டம் இது.

உனக்கலரி - தேங்காய்ப் பால் கஞ்சி

தேவை: உனக்கலரி (உடைத்த தவிட்டரிசி) -அரை கப், உடைத்த பச்சரிசி - அரை கப், மொச்சை - கால் கப், கெட்டியான தேங்காய்ப் பால் - 2 கப், துருவிய தேங்காய்ப் பூ - கால் கப், பாசிப் பருப்பு - கால் கப், சீரக, மிளகுப் பொடி - 1 டீஸ்பூன், தண்ணீர், உப்பு - தேவை யானது.

செய்முறை: மொச்சை மற்றும் பாசிப் பயறை சுத்தம் செய்து தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இவற்றைச் சுடுதண்ணீரில் சுமார் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் இவற்றை நன்கு கழுவி குக்கரில் போட்டு மலர வேகவிட்டு எடுக்கவும்.

உடைத்த பச்சரிசி + உனக்கலரி இரண்டையும் நீரில் கழுவி எடுத்து குக்கரில் போட்டு கொஞ்சம் நீர் விட்டு 3-4 விசில் வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவும். இத்துடன் தேங்காய்ப் பாலைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். பிறகு வெந்த மொச்சை + பாசிப் பயறு, சீரக, மிளகுப் பொடி, தேவை யான உப்பு போட்டு 4-5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி, தேங்காய்ப் பூவைச் சேர்த்துக் கலக்கி கிண்ணத்தில் விட்டுச் சாப்பிட்டால் ஹெல்த்தியோ ஹெல்தி.
Post Comment

Post Comment