மருந்து பாதி,அன்பே மீதி!


மதுரை ஆர்.கணேசன்திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே திருநிலை கிராமத்தில் ‘அன்பகம் மன நலம்’ மறுவாழ்வு காப்பகம் இயங்குகிறது. உள்ளே நுழை கிறோம். வாங்க" என்று முதியோர் கள் அனைவரும் வரவேற்றது கூட்டுக் குடும்ப உறவுகளை உணர்த்துவது போலிருந்தது.

மனநலம் பாதிக் கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் முதியோர் உட்பட இருநூற்று ஐம்பதுக் கும் மேலானோர் வாழ்கிற அந்தக் கூடத்தை சுற்றிப் பார்க்கும் போது பலர் குழந்தையாகவே மாறிப் புன்னகையைச் சிந்தினாலும் இன்னும் பெருமூச்சு, விரக்தி, வெறுமை, தவிப்பு, ஏக்கம், மௌனம், கொஞ்சம் கருணை, கனிவு, சிரிப்பு, காத்திருத்தல் இப்படிப் பலப் பல முகங்களில் வாழ்க்கையின் மிச்சத்தைக் காண முடிந்தது.

அன்பகத்தை நிர்வகிக்கும் ரஃபியா, ஒவ்வொருவரிடமும் அளவளாவுகிறார். ஒருகாலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் களைப் பார்த்துப் பயந்தவர், பின்னாளில் இதுபோன்ற காப்பகத்தை நடத்துவோம் என்று நினைத்திருக்க மாட்டார்.

இவரது தந்தை சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர் களைப் பார்த்து கையோடு வீட்டுக்கு அழைத்து வந்து முடிதிருத்தி, குளிப்பாட்டி, நகம் வெட்டி, உணவு அளித்து அருகே உள்ள காப்பகத்தில் கொண்டு போச் சேர்த்து விடுவாராம்.

சிறு வயதிலேயே ரஃபியா அப்பாவுடன் பக்கத்தில் இருந்து இதையெல்லாம் பார்த்து சேவைக்கு தன்னையும் தயார்ப்படுத்திக் கொண்டார். அந்த எண்ணங்கள் வளர்ந்த தும், நாமே ஒரு காப்பகத்தை ஏன் தொடங்கக்கூடாது? என்று தங்கச்சாலையில் உள்ள பகுதியில் சொந்த வீட்டையே காப்பகமாக மாற்றிவிட்டார்.

ஆனால், அப்பகுதி மக்களிடமிருந்து எதிர்ப்புகள். ஆகவே வேறு இடம் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் ரஃபியாவின் சேவை யைப் பாராட்டி பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்று திருநிலை கிராமத்தில் இலவசமாக இடம் வழங்கியது.

இதனிடையே ரஃபியாவுக்கு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் மற்றும் கணவரின் ஒத்துழைப்புடன் +2க்குப் பிறகு B.A. ஆங்கிலம் மற்றும் ஏர்லைன் பட்டயப் படிப்பையும் முடித்த கையோடு ஏர்லைன் வேலை கிடைத் தும், வேண்டாம் என்று அப்பாவுடன் இணைந்து காப்பகத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடத்தி வருகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் அமர்ந்து அன்பாப் பேசுவது, அன்னோன் னியமாகப் பழகுவது, ஆறுதல் வார்த்தைகளுடன் கலந்துரையாடுவது போன்ற ரஃபியாவின் அன்பான அணுகுமுறை கண்டு ஒரு சுகாதார அதிகாரியின் பரிந்துரையுடன் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் சமூக சேவைக் கான முதுகலை பட்டப் படிப்பினை மேற் கொண்டு அதில் ‘தங்கப் பதக்கம்’ பெற்றிருக் கிறார்.

இவர்களைப் பராமரிப்பது மட்டும் அல்லா மல் நல்ல நிலைமைக்கு வந்தவர்களுக்கு வேலை வாப்பு அளிக்கப்படுகிறது. ஊதுபத்தி, மெழுகுவர்த்தி தயாரிப்பது, ஒயர் கூடை பின்னுதல் போன்ற பல வகைப் பயிற்சிகள் அளிக்கப்படு கின்றன.

அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட இந்தக் காப்பகத்திற்கு வந்த ஆறு பேர் நலமுடன் திரும்ப, தூதரகம் மூலம் பேசி, அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர். இங்கு சிகிச்சை பெற்று முற்றிலும் குணமடைந்த ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். அன்பகத்தின் அஸ்திவாரமாக தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வடமாநிலங்கள் உள்பட 12 பேர் அறங்காவலர்களாக தற்போது நிர்வாகப் பொறுப்பில் உள்ளனர்.

2016ல் தமிழக அரசு சிறந்த சமூக சேவகருக் கான விருது மற்றும் 2017ல் சிறந்த மனநல மறுவாழ்வு காப்பகம்" என்கிற விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. மேலும் பல்வேறு பொது அமைப்புகளிடமிருந்து இதுவரை ஐம்ப துக்கும் மேலான விருதுகள் காப்பகத்திற்காகக் கிடைத்திருக்கின்றன. அன்பகத்தின் ரஃபியா விடம் பேசினோம்.

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சாலையில் பார்க்கும்போது எப்படி அணுகுவீர்கள்?

மனநலம் பாதித்தவர்களைப் பார்த்ததும் முதலில் பெயர் கேட்பேன். பிறகு, அவர் களுடைய அனைத்து விவரங்களையும் கேட்டுக் கொள்வேன். ஒருவேளை அவர்களுடைய பெயர் சொல்லாமல் மற்ற விஷயங்களையும் சொல்ல மறுத்து விட்டால், அருகில் இருக்கும் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, அவர்கள் மூலமாகவே எங்களுடைய காப்பகத்திற்கு அழைத்து வருவோம்.

இவர்களைப் பராமரிப்பது சிரமமா இருக்கு மில்லையா?

சில நேரங்களில் என்னுடைய பொறுமை எல்லை மீறிப் போவது உண்மைதான். இது சவாலான பணி. ஆனால், இதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சேவை செயும் பொழுது மனதில் ஒருவித நெகிழ்ச்சி பிறக்கிறது. மன நிறைவு ஏற்பட்டு மீண்டும் பொறுமை நிறைகிறது.இவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டி லிருந்து தெருவிற்கு வந்தவர்கள்தான். மறுபடியும் நலம் பெற்று ஒரு கைத்தொழி லையும் கற்றுக் கொடுத்தால், எங்கிருந்து விலக்கப்பட்டார்களோ அல்லது விலகி னார்களோ அங்கேயே திரும்ப நல்ல நிலையில் கொண்டு சேர்க்க முடியும். அப்பணியைத்தான் நான் செய்கிறேன்.

காப்பகத்தில் இருப்பவர்களைப் பராமரிக்கும் செலவுகளுக்கு என்ன பண்ணுவீர்கள்?

மொத்தம் நான்கு காப்பகங்கள். இதில் இரண்டிற்கு அரசு நிதியுதவி செகிறது. ஒண்ணு, சென்னை மாநகராட்சி ஒத்துழைப்புடன் இயங்குகிறது. அத்துடன் நல்ல மனம் கொண்ட நன்கொடையாளர்கள் உதவு கிறார்கள்.இவர்களுடனேயே இருக்கிறீர்களே! உங்களுக்கென்று ஆசை, லட்சியம், இலக்கு ஏதும் இல்லையா ?

ஏன் இல்லை? இவங்க யாருமே ரோட்டுல இருக்கக்கூடாது என்கிற பெரிய ஆசை இருக்கு. ஆனால், அது நடக்குமா?

அதனால் எங்க காப்பகத்திற்குக் கூட்டி வந்து ஒவ்வொருத்தரையும் பார்த்துப் பார்த்துப் பத்திரமா மாத்திரை, மருந்துகளுடன், அன்பு, பாசத்தையும் கொடுக்கிறோம், இவர்களில் யாருக்கு என்ன வேலை ஆர்வம் இருக்கிறதோ கேட்டு அதற்கேற்ப வேலை வாப்புகள் ஏற்படுத்தித் தருகிறோம்.பெண்கள் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. தங்களைச் சுயமாகச் சம்பாதிக்கும் நிலைக்கு மாத்திக்கணும். அப்படி மாறினா நான் இலக்கை அடைந்தது போலத்தான்! அன்பகம் தொடங்கிய 22 ஆண்டுகளில் சுமார் 3,500 பேர் இருந்தவர்களில், 3,000க்கும் மேற்பட்டவர்களை அவர்களுடைய குடும்பத்தினரிடம் சேர்த்திருக்கிறோம். தற்போது நான்கு இடங்களையும் சேர்த்து மொத்தம் 400 பேர் நலம் பெற்று வருகின்றனர்.எனக்கு நல்ல வேலை, கைநிறைய சம்பளம் கிடைச்சதையும் விட்டுட்டு அப்பாவுடன் இந்த சேவைப் பணிக்கு வந்தேன். இதுல கிடைக்கிற திருப்தி, சந்தோஷத்தால் எல்லாவிதமான டிப்ரஷன், ஸ்ட்ரஸ் எல்லாம் பறந்திடுது.

இவர்களைப் போன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகளில் ஈடுபடுவதில் சந்தோஷப்படுகிறீர்களா?

என்னோட பிரண்ட்ஸ் எல்லோரும் சொல்லுவாங்க ரஃபியா நீ எப்பவும் ரொம்ப ஹாபியா இருக்க. கொடுத்து வச்சவன்னு.அதற்குக் காரணம் என்னு டைய முழு ஈடுபாடு. எனக்கு வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச் னைகள், மன உளைச்சல் எல் லாம் இவங்களைப் பார்த்ததும் விலகிடும். பாதி மருந்தாக இருந்தாலும், மீதி அன்பால் மட்டுமே அவர் களை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடிகிறது. அத்துடன் அவர் களுக்கு ‘நான் கூட இருக்கிறேன்’ என்கிற வார்த்தை பெரிய பலமாக இருக்கிறது.

அப்பாவிற்கு அடுத்து இந்தக் காப்பகங்களை நான் நடத்துகிறேன். எனக்குப் பிறகு இந்தக் காப்பகத்தைக் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் என் மகளையும் அடிக்கடி அழைத்து வருகிறேன். அன்பால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை இந்த அன்பகத்திற்கு வந்தால் புரியும். மனதால் குழந்தைகளான இன்னும் மனமுதிர்ச்சிஅடையாத மனங்களிடம் தாயன்போடு அணுகுகிற ரஃபியாவைப் பாராட்டத் தோன்றும்!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :