குடும்பத் தலைவிக்கு மாதச் சம்பளம் அவசியமா? அவசியமற்றதா?


கருத்து யுத்தம்
-அவசியம்

கண்டிப்பாக அவசியம். குடும்பத் தலைவி யின் ஆத்மார்த்தமான உழைப்பை ஊதியத்தால் ஈடுசெய முடியாது. ஆனாலும், அவளுக்கென்று கொஞ்சம் பணம் கைவசமிருந் தால் தன்னம்பிக்கையும் தைரியமும் பெறுவாள். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. ஆனால், பணமும் தேவை. சின்னச் சின்னத் தேவைகளுக்குக்கூட அடுத்தவர் கையை எதிர்பார்க்க வேண்டி இருக்காது. ஊதியம் குடும்பத் தலைவிக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் அருமருந்து. எனவே, குடும்பத் தலைவிக்கு ஊதியம் என்பது வரவேற்க வேண்டிய கருத்து.- ஹேமலதா ஸ்ரீனிவாசன்

‘நலிந்தோருக்கு நாளும் கிழமையும் இல்லை’ குடும்பத் தலைவிக்கு ஞாயிற்றுக் கிழமையும் இல்லை. அப்படி விடுமுறை இல்லாமல் இருக்கும் குடும்பத் தலைவியைக் கவனித்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும். காலை முதல் இரவு வரை உழைக்கும் குடும்பத் தலைவிக்கு, கட்டாயம் மரியாதை அளிக்கும் வகையில் மாதச் சம்பளம் அவசியம். - ரமா ராஜகோபாலன்

சரிபாதிக்கும் மேலான மகளிருக்கு, அவரவர் கைச்செலவுக்கே பணம் இன்றிச் சிரமப்படும் நிலைமைதான் நீடிக்கிறது! மாதச் சம்பளம் என்ற பெயரில் பணம் கிடைப்பது வேண்டுமானால் சர்ச்சையாகலாம். மற்றபடி அவளுக்கென்று மாதம் ஒரு தொகை கிடைப்பது வரவேற்கத்தக்கதுதான். எப்படி, எந்த முறையில் பணம் வந்தாலும் அவள் தனக்காகச் செலவு செயாமல் குடும்பத்திற்காகத்தான் செலவிடப் போகிறாள். இது நிச்சயம். அதனால் தாராளமாகத் தரலாம்! நாம் வாங்கிக் கொள்ளலாம். - சாயீசுதா

சம்பளம் என்பது ஒரு நிர்ணயிக்கப்பட்ட வேலை, குறித்த நேரம், திறமை என்று பல அளவுகோல் வைத்துத் தருவதுதான். ஆனால் ஒரு குடும்பத் தலைவியின் பொறுப்பு என்பது அப்படியா என்ன? ‘நீதான் இந்த வீட்டு ஹோம் மினிஸ்டர், ஃபைனான்ஸ் மினிஸ்டர்’ என்று சொன்னாலும், தனக்கென்று இஷ்டப்பட்ட செலவைச் செய, ஒரு நெருடல் ஏற்படுகிறது. அதைத் தவிர்க்கும் வகையில், ‘இந்தாம்மா இந்த மாசம் உனக்குன்னு இந்தத் தொகை...’ என்று தர முன்வந்தால், கொஞ்சம் சுதந்திரம் இருக்கும்.- அகிலா ராமசாமி

குழந்தைகளுக்கு பாக்கெட் மணி என்பது போல் பெண்களுக்கு மாதச் சம்பளம் அவசியம் தேவை... ஒரு புத்தகம் 200ரூபாயிலிருந்து 300ரூபாக்குள் எனில், அவர்கள் வாங்க ஆசைப்படும்போது இத்தனை விலையில் இந்தப் புத்தகம் தேவையா? என்பார்கள். எவ் வளவோ நியாயமான சின்னச் சின்ன ஆசைகள் இருக்கலாம். அதை நிறைவேற்றிக் கொள்ள சம்பளமாக வேண்டாம்; கைச்செலவுக்காக சிறு தொகை கொடுத்தால் மகிழ்ச்சியடைவாள்.- விஜி வீரா

அவசியமற்றது

குடும்பத் தலைவிக்கு மாதச் சம்பளம் அவசியமில்லாதது. ஏனென்றால், கணவன் தன் சம்பளத்தை மனைவியிடம் கொடுக்கிறான். வீட்டுச் செலவிற்குக் கொடுக்கும் அப் பணத்தில் மீதம் சேமித்து கணவனுக்குக் கொடுக்கக்கூடிய சாமர்த்தியம் கொண்டவள் தான் பெண். அப்படிப்பட்ட அந்தக் குடும்பத் தலைவி தனக்கென்று சம்பளத்தை வாங்கி என்ன செயப் போகிறாள்? அதையும் வீட்டிற்குத்தான் செலவு செவாள்! அப்படி இருக்கும்போது தனியாக அவளுக்கென்று சம்பளம் தரவேண்டிய அவசியமே இல்லையே! - உஷா முத்துராமன்

குடும்பத் தலைவி அவள் செயும் வேலைகளுக்கு சம்பளத்தை விட அதிகமாக எதிர்பார்ப்பது சுதந்திரமாக இருப்பதையும் மற்றவர்களின் பாராட்டுகளையும்தான். குடும்பத் தலைவி பிரதிபலன் பாராமல் தன் குடும்பத்தைப் பராமரிக்கிறாள். அதில் அவள் அடையும் மகிழ்ச்சிக்கு சம்பளம் ஈடாகாது. அவள் செயும் சின்னச் சின்ன வேலைகளுக்கு மனமுவந்து பாராட்டினாலே போதும்!- ராதிகா ரவீந்திரன்

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண் களுக்கு வேண்டுமானால் இது உதவிகரமாக இருக்கலாம். இதைச் சேமிப்பதன் மூலம் தங்கள் வாழ்வில் பெரும் மாற்றங்கள் காண லாம். ஆனால், மற்ற பெண்கள் இதைப் பெற்றுக் கொண்டால் அவர்களையே அவர்கள் தாழ்த்திக் கொள்வது போலாகிவிடும். ஏனென் றால், அவர்களின் உழைப்பிற்கு ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என்று ஒரு சிறிய தொகை கொடுத்து சிறுமைப்படுத்தக்கூடாது. இதற்கும் மேலான சிறந்த மதிப்பிற்குரியவர்கள் அவர்கள்.- சுஜாதா கணேஷ்

குடும்பத் தலைவிக்கு மாதச் சம்பளம் அவசியமற்றது. இது அவளுடைய பொறுப்பு களையும், கடமைகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது. ஒரு குடும்பத் தலைவி யின் தியாகத்திற்கும், பொறுப்பான அவளு டைய நிர்வாகத்திற்கும் நீங்கள் எந்த விலையும் நிர்ணயிக்க முடியாது. குடும்பத்தின் அச்சாணி அவள். தாயாக, தாரமாக, மகளாக, மருமகளாக, தங்கையாக அவள் செயும் எண்ணற்ற வேலைகளுக்கு, கடமைகளுக்கு, எந்த விலை யும் நிர்ணயிக்க முடியாது? அதனால் பெண் களுக்கு மாதச் சம்பளம் அவசியமற்றதே! - வள்ளி சுப்பையா

சம்பளம் தருவதா? நடக்கிற காரியமா இது? அவளின் ஆத்மார்த்த பணிகளுக்கு, சேவை களுக்கு நேரம் காலம் பாராத உழைப்புக்கு சம் பளம் கணக்கிட முடியுமா? ஒவ்வொரு பெண் ணின் உழைப்பும் அவள் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாகச் செயப்படுகிற ஆராதனை! அது குடும்பத்துக்கே மூலாதாரம். அவள் பெண்மையை, தாமையை, கேவலம் பணத்தோடு சம்பந்தப்படுத்துதல் தேவையில் லாத ஒன்று. - செல்லம் ஜெரீனா
Post Comment

Post Comment