அன்பைக் கொண்டாடும் பண்டிகை!


ஏப்ரல் 2 புனித வெள்ளி; ஏப்ரல் 4 ஈஸ்டர் பண்டிகை
ஜே.சி.ஜெரினா காந்த், சென்னை -உலக கிறிஸ்துவர்களின் மகோன்னதமான பண்டிகை கிறிஸ்துமஸ் எனில், அதற்கு சற்றும் குறையாத கிறிஸ்துவர்களின் இன்னொரு பண்டிகை ‘ஈஸ்டர்’ எனலாம். யேசுபிரான் தன் இன்னுயிர் நீத்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து பரத்துக்கேறிய திருநாள்! இந்தப் பண்டிகைக்கு முன்னதாகவே ஆயத்தமாக மனிதர்கள், தங் களைத் தங்கள் ஆத்துமாவை ஒப்புத்தரத் தயாராகிவிடுவர்.

ஆம்! ‘சாம்பல் புதன்’ எனப்படும் நாளி லிருந்து தொடங்கும் லெந்து நாட்கள் முக்கியம் வாந்தவை. தவக்காலம், தவசுக்காலம் என் றும் கூட கூறுவர். இந்த நாட்களில் கிறித்தவர்கள் கேளிக்கைகளில் ஈடுபடாமல் இறை சிந்தனை யோடு உபவாசமிருப்பர். சிலர் நாள் முழுமையுமாக என்று நாற்பது நாட் களும் கடும் விரதமிருப்பர். சிலர் வாரத்தில் ஒருநாள் உபவாசமெனவும் மாமிச உணவை ஒதுக்கி வைத்தும் அனுசரிப்பர்.

எந்தக் குற்றமும் அறியாத புனிதர் யேசு கிறிஸ்து பரமபிதாவின் அன்பிலே திளைத்து சிலுவைச்சாவின் வழியே தன்னுயிரை அர்ப்பணித்தார்.அவர் பட்ட பாடுகளை நினைவு கூர்ந்து நம் முடைய விருப்பு வெறுப்புகளைக் களைந்து பகை நீக்கி, பொறாமை அகற்றி, மனத் தாங்கல்களைத் தொலைத்து, உறவுகளைப் போற்றி சக மனுஷருடன் நட்பும் அன்பும் பாராட்ட வேண்டுமென்பதே இந்த தவக்கால நோக்கம்.

உபவாசமிருப்பதால் சகமனிதனின் பசியும் தாகமும் உணர முடியும். பகிர்ந்துண்ணும் எண்ணம் எழும். தன்னைப்போலவே பிறரை யும் உணரும் மனோபாவம் வரும். பாவங்களை வெறுத்து ஒதுக்கி இறையுடன் ஒன்றி வாழ வேண்டும் என்பதே விவிலியம் சொல்லும் கோட்பாடு. இந்த நாட்கள் நம்மை நாமே செதுக்கிக் கொள்ள உதவும் நாட்கள்.

ஈஸ்டருக்கு முந்திய ஞாயிறு குருத்தோலை ஞாயிறு அதாவது கச்டூட் குதணஞீச்தூ என்று அழைக்கப்படும். தேவனின் வெற்றிபவனியாக அவர் எருசலேமில் நுழைந்ததை நினைவூட்டும் விதமாக ‘ஓசன்னா’ வாழ்த்தொலியோடு கொண்டாடுவர். இதை நாம் மாற்கு , மத்தேயு, லூக்கா, யோவான் ஆகியோரின் நற்செதி மூலம் அறியலாம். இது புதிய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. குருத்தோலை ஞாயிறு தொடங்கி வெள்ளி வரை பரிசுத்த வாரம் எனப்படும். இந்நாட்களில் இன்னும் சிறப்பு ஜெபக்கூட்டங்கள் தேவாலயங்களில் நடை பெறும். புனித வெள்ளியன்று பிற்பகல் மூன்று வரை சிறப்பு ஆராதனையை ஆயர் நடத்துவார். தேவனின் ஏழு வார்த்தைகளை நினைவுகூரும் வண்ணமா பூசை தொடரும். அன்று திருப்பலி நடைபெறாது.

மூன்றாம் நாள் ஞாயிறு ஆண்டவர் உயிர்த் தெழுந்து விண்ணகம் ஏகுவார். அன்று தேவாலயம் அலங்கார வளைவுகளாலும் தோரணங்களாலும் அழகு பெற்று விளங்க மக்களும் மகிழ்வோடு புத்தாடையோடு வருவர். திருப்பலி பூசை ஆரவாரப் பாடல் களோடும் கைத்தாளங்களோடும் உற்சாகமா பூசை நடக்கும். ஆயரின் சிறப்புச் செதியோடு பிரசங்கம் முடியும் நேரம், சிலுவைக் குறியோடு கூடிய ஈஸ்டர் பன்னுடன், கேக், இனிப்பு வகைகள், தேநீரும் வழங்கப்படும். வாழ்த்துவதும் வாழ்த்துப் பெறுவதுமாக தேவாலயம் மகிழ்ச்சியோடு விளங்கும்.

ஈஸ்டர் முட்டைகள் குழந்தைகளின் விளையாட்டுக்குரியவையாக இருக்கும் பல்வேறு வண்ணங்களுடன் கூடிய முட்டை வடிவத்தினுள்ளே சாக்லெட், மிட்டாகள் இருக்கும். குழந்தைகள் முட்டையை உடைத்து அவற்றை எடுப்பர்.

சிவப்பு வண்ண மேற்பூச்சு தேவனின் ரத்தத் தைக் குறிக்கும் குறியீடாக இருந்து வந்தது. இப்போது கண்ணைப்பறிக்கும் பல்வேறு வண் ணங்களில் ஈஸ்டர் முட்டை இடம்பெறுகிறது. இது மறு பிறப்பின் அடையாளமாக, அதாவது பழையன விடுத்து புதியனவற்றுக்கு மாறுதல் என்பதன் குறியீடாகக் கொள்ளப்பட்டு வரு கிறது. மனிதகுலத்துக்காக மாண்ட இறையின் பேரன்பை உணர்ந்து இந்தத் திருநாளில் நல்ல எண்ணம், நற்சிந்தனை,மனிதநேயம் இவற்று டன் சக மனிதரைக் கொண்டாடுதலே முக்கிய நோக்கம்.

தீயசக்திகள் தலைதூக்காதபடி ஒளிதரும் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து இந்த வருடம் வரும் ஏப்ரல் நான்காம் தேதி ஈஸ்டரை சந்தோஷமாகக் கொண்டாடுவோம்! இது அன்பை வெளிக்காட்டும் பண்டிகை.

விவிலியம் அன்பைக் குறித்துப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது.

1.கொரிந்தியர் தன் சுவிசேஷத்தில் 1.கொரி ---- 13:4, 13:6, 13:13 ஆகிய வசனங்களில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். ‘அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக் குப் பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது. இறுமாப்பு கொள்ளாது.’

‘அன்பு சகலத்தையும் தாங்கும். சகலத்தையும் விசுவாசிக்கும். சகலத்தையும் நம்பும். சகலத்தையும் சகிக்கும் .‘விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றிலும் அன்பே பெரியது.’

அன்பைக் கொண்டாடுவோம்! மனிதநேயம் பகிர்வோம்! அன்புசூழ் உலகா மாற்றுவோம்!
Post Comment

Post Comment