பெண் எழுத்தாளர்களுக்கு பெரும் கௌரவம்• ஜி.எஸ்.எஸ். -அடுத்த ஆண்டு ஓர் எழுத்தாளர் சுமார் 86 லட்சம் ரூபா பரிசுத் தொகையை (ஒன்றரை லட்சம் கனடா டாலர்) வெல்லப் போகிறார். ‘சிறந்த புனைவு நூல்’ போட்டிக்கான பரிசுத் தொகை அது.

அதை வெல்லப் போவது ஒரு பெண் எழுத்தாளர்தான் என்பதை இப்போதே சொல்லிவிடலாம். காரணம், அந்தப் போட்டியே பெண் எழுத்தாளர்களுக்கு மட்டும் தான். அவர் இந்த ஆண்டு எழுதி வெளியான ஆங்கிலக் கதைக்கு மட்டும்தான் இந்த விருது. அது மட்டுமல்ல, அந்தப் பெண் அமெரிக்கா அல்லது கனடா நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த விருது கேரல் ஷீல்ட்ஸ் என்பவரின் பெயரில் வழங்கப்பட இருக்கிறது.

பில் கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ் இந்த விருது அமைப்பைத் தொடங்க இரண்டரை லட்சம் டாலர் நன்கொடை அளித்திருக்கிறார். இதற்காக ஒரு நிறுவனம் உருவாகி யிருக்கிறது. அதன் பெயர் பிவடல் வென்சர்ஸ் (Pivotal Ventures).

இலக்கியத்துக்கான நோபல் பரிசை விட்டு விட்டால் உலகில் எழுத்துக்காக மிக அதிக பரிசுத் தொகையை வழங்க இருப்பது இந்த அமைப்புதான்.

இதுகுறித்து மெலிண்டா கேட்ஸ் ‘கடந்த காலத்தில் பெண்கள் மிகச் சிறப்பான திருப்பு முனையை ஏற்படுத்தும் நூல்களை எழுதியுள் ளார்கள். என்றாலும் அவர்களுக்கு இதனால் கிடைத்துள்ள சன்மானம் என்பது குறைவாகவே இருந்திருக்கிறது. அவர்களது நூல்கள் அதிகம் பேசப்படு வதில்லை. விருதுகள் பெறு வதிலும் அவர்கள் புறக்கணிக் கப்படுகிறார்கள். எனவே, வருங்காலத்தில் பெண் எழுத் தாளர்களின் நூல்கள் போதிய கவனம் பெறுவதற்கும் அவற்றிற்குரிய கௌர வத்தை அவை அடைவதற்கும் இந்த விருது ஓர் உற்சாகமான முன்னெடுப்பாக இருக்கும்’ என்று கூறியிருக்கிறார்.

மேற்படி நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான சூஸன் ஸ்வான் என்ற பெண்மணியும் கனடாவைச் சேர்ந்த பதிப்பாளரான ஜானிஸ் ஜாவெர்ன்பி என்பவரும் ஒரு மாபெரும் புத்தக விழாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் சென்றி ருந்தார்கள். அங்கே எழுத்தாளர்களால் எழுதப் படும் நூல்களில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையில்தான் பெண்கள் எழுதும் நூல் களுக்கு மதிப்புரையும் விமர்சனமும் அளிக்கப் படுகின்றன என்பதை அறிந்தார்கள். தவிர, புக்கர் பரிசு, நோபல் பரிசு, புலிட்சர் பரிசு போன்றவை மிகப் பெரும்பாலும் ஆண்களுக்கே வழங்கப்படுகின்றன என்பதையும் கவனித் தார்கள். இதைச் சரிசெயத்தான் மேற்படி நிறு வனத்தைத் தொடங்கினார்கள். பெண் எழுத் தாளர்கள் மட்டுமே இந்த விருதுக்கு உரியவர்கள் என்று அறிவித்தார்கள். மெலிண்டா கேட்ஸ் நன்கொடையும் சேர பரிசுத் தொகையை உச்ச மாக வைக்க முடிந்திருக்கிறது.

அது சரி கேரல் ஷீல்ட்ஸ் என்பவர் யார்? அவர் பெயர் எதற்காக இந்த விருதுக்கு வைக்கப்பட வேண்டும்?

அவரும் ஓர் எழுத்தாளர்தான். சிகாகோ வின் அருகிலுள்ள ஒரு ஊரில் 1935ல் பிறந்த வர். தனது 68வது வயதில் மார்பகப் புற்றுநோ காரண மாக மரணம் அடைந் தார். ஆனால் அதற்குள் எழுத்துலகில் சாதித் துக் காட்டினார். இவர் எழுதிய தி ஸ்டோன் டயரிஸ் (The Stone Diaries) என்ற புதினத்திற்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது (அமெரிக்க எழுத்தாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவது புலிட்சர் பரிசு). கனடாவின் கவர்னர் ஜெனரல் விருதும் இந்த நூலுக்கு வழங்கப்பட்டது.

‘தி ஸ்டோன் டயரிஸ்’ கதை டெசி என்கிற சாதாரண குடும்பப் பெண்மணியின் சுயசரிதை வடிவத்தில் எழுதப்பட்டது. டெசியின் அம்மா அவளைப் பிரசவித்தவுட னேயே இறந்து விடுகிறார். அம்மாவை இழந்த டெசி அடுத்த வீட்டுப் பெண்மணியால் வளர்க்கப்படுகிறாள். அவளுக் குத் திருமணமும் நடக்கிறது. ஆனால், அவள் கணவன் குடிகாரன். ஒருநாள் குடித்துவிட்டு தடுமாற்றத்தில் மாடி யிலிருந்து கீழே விழுந்து இறந்து விடுகிறான். இதற்குள் மூன்று குழந்தைகளுக்கு தாயாகி விட்ட டெசி மீண்டும் தந்தையுடன் வசிக்க வருகிறாள். காலப்போக் கில் டெசியின் அப்பா மூளைக்கட்டி காரணமாக இறந்து விடு கிறார். நாளிதழ் ஒன்றில் தோட்டக்கலை தொடர்பான பகுதிக்குப் பொறுப்பாளராக பகுதி நேர வேலையில் அமர்த்தப்படும் டெசி ஒவ்வொரு இதழுக்குமான கட்டுரையை அக்கறையுடன் எழுதுகிறார். அந்தப் பத்திரிகை யின் ஆசிரியர் அவளை விரும்புவதாகச் சொல்ல, அவருடன் பழகவும் செய்கிறார். ஆனால், திடீரென ஒரு நாள் அந்த ஆசிரியர், ‘இனி நீ அந்தப் பகுதியை எழுத வேண்டாம். முழு நேர ஊழியர் ஒருவர் அதைச் செய்வார்’ என்று கூறிவிடுகிறார்.

வேலையை இழந்த டெசி மனச்சோர்வு அடைகிறார். படுக்கையில் இருந்து எழவே கஷ்டப்படுவது, தன் தேவைகளையே கவனித் துக் கொள்ள முடியாமல் இருப்பது, அடிக்கடி கோபப்படுவது என்று அவள் வாழ்க்கை மிக மோசமாக அமைகிறது. இதற்குள் வளர்ந்து பெரியவர்களாகி விட்ட அவளது குழந்தைகள் அவரவருக்கு என்று குடும்பம் அமைகிறது. தனது எண்பதாவது வயதில் டெசிக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அதிலிருந்து உயிர் தப்பினாலும் அவளது கால் முட்டி முழுவதும் தேந்து போ படுக்கையில் கிடக்க வேண்டிய நிலை. அவளது பள்ளிப் பருவத் தோழிகளெல் லாம் இதற்குள் இறந்து விட்டிருக்கிறார்கள். கடந்தகால சோகங்களை எண்ணியே வாழ்க்கை யைக் கழிக்கும் டெஸி ஒரு நாள் இறந்துவிடுகிறாள்.

டெசி தனது வாழ்வில் தனக்கு நெருங்கிய பலரது மரணங்களை சந்திக்க நேர்கிறது. அவள் மனம் அமைதியடைய மறுக்கிறது. வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளும் போராட்டமாகவே அவள் வாழ்க்கை அமைகிறது.

‘பெண்களின் மீட்சிக்கான ஒரு கருவியாக நான் எழுத்தைப் பார்க்கிறேன். குறைந்தபட்சம் சக பெண் எழுத்தாளர்களின் நட்பும் ஒத்துழைப்பும் இதற்குத் தேவை’ என்றார் கேரல் ஷீல்ட்ஸ். அவரது வாழ்நாள் தாண்டியும் அவர் புகழ் சொல்வதாக அவரது நூல் மட்டுமல்ல, மேற்படி விருதும் அமையவிருக்கிறது.

அடுத்த ஆண்டில் அறிவிக்க இருக்கும் முதல் கேரல் ஷீல்ட்ஸ் விருது யாருக்கு கிடைக்கப்போகிறது என்பது குறித்த பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்டது. இதனால் பல்வேறு காரணங்களால் முடங்கிப் போயிருக்கும் பல பெண் எழுத்தாளர்கள் புதிய உற்சாகத்துடன் படைப்புகளை உருவாக்க வாப்பு உண்டு.


Post Comment

Post Comment