கோடைக்கேற்ற குறிப்பிது...


சம்மரை சமாளிக்க...
டாக்டர் ராஜம் முரளி -பொதுவாக மே மாத வெயில் தான் ‘அக்னி வெயில், வெளியில் செல்லவே முடியாது’ என்பார்கள், ஆனால், கடந்த சில வருடங் களாக காலநிலை மாற்றங்களால் மார்ச் ஏப்ரல் மாதங்களிலே வெயில் காலம் ஆரம்ப மாகி விடுகின்றது. இதைக் கட்டுப் படுத்தும் வல்லமை நமக்குக் கிடை யாது. ஆனால், இச் சூழலுக்கேற்ப நம்மைத் தயார்ப் படுத்திக் கொள் வதோ, பராமரித்துக் கொள் வதோ சாத்தியம்தானே? இந்தக் கோடை காலத்தில் சாதாரணமாக ஏற்படக்கூடிய சருமப் பிரச்னைகள் என்னென்ன? அதற்குத் தீர்வுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

சருமம்:

வெயில் காலம் வந்தவுடன் சிலருக்கு தங்கள் உடலில் ஆங்காங்கே கருமை ஏற்படும். இதை கூச்ண என்பார்கள். இதைத் தவிர்க்க, அரை கிலோ பார்லி, 50 கிராம் வெள்ளரி விதை, 50 கிராம் பச்சைக் கற்பூரம் இம் மூன்றையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். பாலுடன் இந்தப் பவுடரைக் கலந்து உதட்டுக்கு மேல் பகுதி, கை கால் மடக்கங்கள், நெற்றிப் பகுதி போன்ற இடங்களில் தடவி, சிறிது நேரம் தேத்து (ரப் செது) கழுவலாம்.

* தர்ப்பூசணியைச் சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கி கண்கள் மேல் வைத்து விட்டு 20 நிமிடங்களுக்கு ரிலாக்ஸ் செயலாம். கண் களைச் சுற்றி ஏற்படும் கருமை, கருவளையம், கண் எரிச்சல், உடல் சூடு போன் றவை நீங்கி, பார்வையில் ஒரு புத் துணர்ச்சி பிறக்கும். தர்ப்பூசணி ஜூஸுடன், சிறிதளவு கடலை மாவு கலந்து ஒரு பேக் தயாரித்து, முகம் கழுத்து போன்ற இடங் களில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.

* இளநீர் வழுக் கையுடன், சிறிது இளநீர், சிறிதளவு பச்சைப் பயறு மாவு கலந்து பேஸ்ட் போலத் தயாரித்து, முகம் கழுத்துப் பகுதிகளில் தடவலாம். அதிகமாகத் தயாரித்து முழு உடலிலும் கூட தடவிச் சிறிது நேரம் ரிலாக்ஸ் செது குளிக்க லாம். இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடல்சூடு தணிவதற்கும், உடல் குளுமைக்கும் இதுவே சிறந்த தீர்வு. மினரல் தண்ணீரில் கிடைக்கக்கூடிய சத்தும், சுவையும் இளநீரில் அதிகமாகவே இருக்கிறது.

நீச்சல் பயிற்சி எடுத்துக் கொள்பவர்கள், இப்படி பேக் தயாரித்து உபயோகிப்பதால், உடல் வியர்க்குரு, அந்தத் தண்ணீரில் கலக்கப் படும் அமிலத்தால் ஏற்படும் மற்ற அலர்ஜிகள் போன்றவை நீங்கி, உடல் புத்துணர்ச்சியை அதிகரிக்கும். பாலுடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் கடலை மாவு கலந்தும் முகம் கழுத்து போன்ற பகுதிகளில் தடவிக் கொள்ளலாம். இதுவும் அலர்ஜியைப் போக்கும்.

* ரோஜா இதழ்களை நன்கு அரைத்து பவுட ராக்கிக் கொள்ளவும். இந்த பவுடர் ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, இத்துடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு, சிறிதளவு பால், சிறிதளவு கடலை மாவு சேர்த்துக் கலந்து ஃபேஷியல் பேக்காகத் தயாரித்து முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். பார்லர் சென்று ப்ளீச் செய்துகொள்வதை விடவும் இது பயனுள்ளதாக இருக்கும். வெயில் காலத்தில் கடலை மாவு, பச்சைப் பயறு எனப் பயன் படுத்தும்போது அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொண்டால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

கை - கால்கள்:

* வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சருமம் வறண்டு போகும் தன்மை, முதலில் தாக்குவது முழங்கையையும், உள்ளங்கையையும்தான். அந்தப் பகுதிகள் மிருதுவாகவும் புத்துணர்வாகவும் இருக்க, ஆலிவ் எண்ணெ, விளக்கெண்ணெ, ஜாதிக் கா எண்ணெ, தேங்கா எண்ணெ என ஒவ்வொன்றிலும் 5 துளிகள் எடுத்துக் கலந்து முழங்கைக்கு மேற் புறத்தில் ஆரம்பித்து உள்ளங்கை வரை முழுவதுமாக இந்த எண்ணெக் கலவையைத் தடவி தேத்து ஒரு மசாஜ் கொடுக்கலாம். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். சோப்பைத் தவிர்க்கவும். இப்படிச் செவதனால் முழங்கையில் ஏற்படும் தோல் சுருக்கம், கருமை, வறட்டுத் தன்மை நீங்கி பொலிவுடன் மிருதுவாக இருக்கும்.

* கால்களில் ஏற்படும் கருமை, பாத வெடிப்பு, பாதம் வியர்ப்பதினால் ஏற்படும் அலர்ஜி போன்றவைக்கு முக்கியக் காரணம் அதிக நேரம் நிற்பதால், நடப்பதால் கால் பாதத்தின் மென்மைத் தன்மை குறைந்து இறுக்கமாக வும், கடினமாகவும் மாறுவதுதான். இதற்குச் சிறந்த தீர்வு கடுகுதான். கடுகினை அம்மியில் அரைத்து, அந்தப் பவுடருடன் சிறிதளவு பார்லி பவுடர், சிறிதளவு கடலை மாவு, சிறிது எலுமிச் சைச் சாறு இவற்றைக் கலந்து, இக் கலவையை கணுக்கால் முதல் பாதம் வரை தடவி 15 நிமி டங்கள் கழித்துக் கழுவலாம். இதனால் கால் பாதங்கள் மென்மையாக மாறும், ஆங்காங்கே ஏற்படும் கருமையும் நீங்கும்.

தலைமுடி:

* வாரம் இருமுறை எண்ணெக் குளியல் எடுத்துக்கொள்வது இந்த வெயில் காலத்தில் நல்லது. நல்லெண்ணெயில் மிளகு, வெந்தயம் சேர்த்துக் காச்சி, அதனைத் தலைக்குத் தடவ லாம். உச்சந்தலை, தலைமுடியின் நுனி என நன்கு தடவி தலைமுடி சிக்கல் இல்லாமல் வாரி, கொண்டையாகப் போட்டுக் கொள்ள லாம். அரைமணி நேரம் கழித்துக் குளிக்கலாம். இதனால் பொடுகு நீங்கி, உடல் சூடு தணியும்.

இந்த ஆயில் மசாஜ் எடுத்துக்கொண்ட பின்பு கண்டிஷ்னர் உபயோகித்துக் குளிப்பது அவசியம். இயற்கையாக வீட்டிலேயே கண்டிஷனர் தயாரிக்க...

* சீயக்கா - கால் கிலோ, பூந்திக்கொட்டை - கால் கிலோ, பயறு - 200 கிராம், வெந்தயம், கூழா கிழங்கு, ரோஜா மொட்டு - தலா 100 கிராம் இவற்றை அரைத்துப் பொடி செதுகொள்ளவும். இதனை நன்கு சலித்துவிட்டு, அந்தப் பவுடரை சுடுதண்ணீரில் கரைத்து, இதனை கண்டிஷனராக உபயோகிக்கலாம். இதனால் தலைமுடி சுத்தமாகும். இதில் பயன் படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் குளிர்ச்சி நிறைந்தவை. வெயில் காலத்திற்கு ஏற்றது. பொதுவாகவே உடல்சூடு அதிகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை இதைப் பயன் படுத்திக் குளிக்கலாம்.
Post Comment

Post Comment