‘விரல் நுனியில் உன் உலகம்!’காம்கேர் கே.புவனேஸ்வரி -ஐ.டி நிறுவன CEO தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் புவனேஸ்வரி. Compcare Software என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO - MD ஆக 1992-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார்.

இவர் எழுதியுள்ள 130-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் உட்பட இவரது நிறுவனம் தயாரித்துள்ள சாஃப்ட்வேர் தயாரிப்புகளும், ஆவணப்படங்கள் - அனிமேஷன் - இகன்டன்ட் - ஆடியோ வீடியோ படைப்புகளும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக இடம்பெற்றுள்ளன.

தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல், உலகெங்கிலும் பல நாடுகளிலுள்ள நூலகங்களில் இவரது புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இவர் நடத்தி வரும் ‘காம்கேர் டிவி’ என்ற யு-டியூப் சேனல் மிகப் பிரபலம்

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை அதன் பயனாளர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.முதல் பிரிவினர், தொழில்நுட்பத்திலேயே இயங்குபவர்கள். கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் தயாரித்தல், மொபைல் ஆப் உருவாக்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள்.

இரண்டாவது பிரிவினர், தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்துபவர்கள். இமெயில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர், யு-டியூப் என அத்தனை வசதிகளையும் தெள்ளத்தெளிவாகப் பயன்படுத்துபவர்கள்.

மூன்றாவது பிரிவினர், ஓரளவுக்குத்தான் தொழில்நுட்பத்துக்கு அப்டேட் ஆகியிருப் பார்கள். உதாரணத்துக்கு மொபைல் என்றால் அழைப்பு வந்தால் பேசுவதற்கும், தனக்கு வேண்டியவர்களுக்கு அழைப்பு கொடுப் பதற்கும் பயன்படுத்துவார்கள். வாட்ஸ் அப் என்றால் ஏதேனும் தகவல் வந்தால் திறந்து படிக்கத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவ்வளவுதான்.

நான்காவது பிரிவினர், தொழில்நுட்ப வசதி களைப் பயன்படுத்தாமல் ஒதுங்கி நிற்பவர்கள். முன்பெல்லாம் வங்கிக்குச் சென்றால் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஏதேனும் விண்ணப் பப் படிவம் பூர்த்தி செதுகொடுக்க யாரிட மாவது உதவி கேட்டுக்கொண்டு நிற்பதைப் பார்த்திருப்போம். அவர்களுக்கு நிகரானவர்கள் தொழில்நுட்பத்துக்கு அப்டேட் ஆகாதவர்கள். இவர்கள் ஆன்லைனில் எதைச் செய வேண்டும் என்றாலும் யாரையேனும் எதிர் நோக்கியே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

இவர்களில் மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவினர் மிக விரைவில் தொழில்நுட்பத்துக் குத் தங்களை அப்டேட் செதுகொள்ளவில்லை என்றால் தொழில்நுட்பத்தில் பின்தங்கியவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்காகவே இந்தத் தொடர். தவறவிடாமல் படியுங்கள். இனி வாசிப்பின் வேகம் உங்கள் விரல் நுனியில்!

சின்ன ஃப்ளாஷ் பேக்குடன் கட்டுரைக்குள் செல்லலாம்.1996 -ல் ஒரு நாள்!இப்போதுதான் நடந்ததைப்போல் உள்ளது.

‘தொழில்நுட்பக் கட்டுரைகளை தமிழில் கொண்டுவரலாம்’ என்று மங்கையர் மலருக்கு போஸ்ட்கார்டில் தகவல் அனுப்பினேன். அடுத்த ஓரிரு நாட்களில் அவர்களிடம் இருந்து ‘நேரில் வரச்சொல்லி’ பதில் தபால்.

அப்படி உருவானதே ஒரு வருடம் வெற்றிகர மாகப் பெண்களின் ஏகோபித்த ஆதர வைப் பெற்ற ‘உலகம் உன் கையில்’ என்ற கட்டுரைத் தொடர். ஜனரஞ்சக மான பெண்கள் மாத இதழில் நான் அறிந்த வகையில் முதன்முதலில் வெளியான தொழில்நுட்பக் கட்டுரைத் தொடர் அதுவே.

2021-ல் ஒரு நாள்.

கல்கி குழுமப் பத்திரிகைகள் ஆன்லைனுக்கு மாறிக் கொண்டிருக் கின்ற இந்த வேளையில், ‘விரல் நுனி யில் உன் உலகம்’ என்ற கட்டுரைத் தொடரை ஆரம்பித்துள்ளேன். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி யானது, ‘உலகம் உன் கையில்’, என்னும் அன்றைய நிலையிலிருந்து, ‘விரல் நுனியில் உன் உலகம்’ என்னும் இன்றைய நிலைக்கு இந்த இடைப்பட்ட 25 வருட காலத்தில் கூகுள் வேகத்தில் உயர்ந்துள்ளது.

உலகம் உள்ளங்கையில் இருந்து விரல் நுனிக்கு வந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மங்கையர் மலர் பத்திரிகையும் தன் வாசகி களை பில்கேட்ஸாக்கும் பொருட்டு ‘ஸ்மார்ட் லேடி’ என்ற தொழில்நுட்பத் தொடர், பிளாக், ஃபேஸ்புக்கில் வாசகிகளுடன் நேரடியாக உரையாடி தொழில்நுட்ப ஆலோசனைகள் கொடுத்தல், யு-டியூப் சேனல்களில் வாசகி களின் வீடியோக்களைப் பதிவிடுதல் என அசுர வேகத்தில் வளர்ந்து இன்று பத்திரிகையையே ஆன்லைனில் கொண்டுவந்து அசத்தியுள்ளது. ‘அடடா, நமக்கு மொபைலில் மிஸ்டு கால் கூடப் பார்த்துப் பேசத் தெரியாதே?’ பின் எப்படி ஆன்லைனில் பத்திரிகைகள் வாசிப்பது என பயப்படவே தேவையில்லை.

உங்களில் ஒருசிலர் தொழில்நுட்பத்துக்கு அதிகம் பழகாமல் இருக்கலாம். அலை பேசியை போன் வந்தால் அழைக்கவும், நீங் களாக டயல் செது பேசவும் தெரிந்திருக்கிறதா? அதுபோதும். உங்களால் தொழில்நுட்ப உலகில் ஜமாத்துவிட முடியும்.

முதன் முதலில் நீங்கள் எப்போது சமைக்கக் கற்றுக்கொண்டீர்கள் என்பதை நினைவில் கொண்டு வாருங்கள். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்று ஒரு சின்ன ஒப்பீட்டை நீங்க ளாகவே செதுகொள்ளுங்கள். அதே லாஜிக் தான் தொழில்நுட்பத்தில் நீங்கள் கலக்கு வதற்கும்.

சமையல் அறையில் உங்கள் முதல் நாளில் உப்பில்தான் பெரும் குழப்பமே ஆரம்பமாகி இருக்கும். என்ன சரிதானே? எவ்வளவு உப்பு போட வேண்டும் என்பதற்கான உங்கள் அம்மாக்களின் பதில் ‘எல்லாம் கைத்திட்டம் தான்’ என்பதாகத்தானே இருந்திருக்கும். அதேதான் தொழில்நுட்பத்துக்கும்.

உங்கள் வீட்டில் மிக்ஸியையும், வாஷிங் மெஷினையும், டிஷ்வாஷரையும் உங்களைத் தவிர வேறு யாரால் ஜோராக கையாளத் தெரிந் திருக்கும் சொல்லுங்கள் பார்ப்போம்.

உங்களுக்கு உடல்நிலை சரி இருந்தாலும், இல்லாவிட்டாலும், உங்களுக்கு மனம் உற்சாகமாக இருந்தாலும் உற்சாகமாக இல்லை என்றாலும், உங்களுக்குப் பசித்தாலும் பசியே இல்லை என்றாலும் உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்காகவும் மற்றவர் களுக்காகவும் நீங்கள் சமையல் அறைக்குள் சென்றுதானே ஆகவேண்டும். அந்தக் கட்டாயம் இருப்பதால்தானே உங்களால் அத்தனை சாதனங்களையும் மிக இயல்பாகக் கையாளும் திறனைப் பெற முடிந்தது.

இன்று விதம்விதமாக சமைத்துச் சாப்பிடு வதையும், சமைத்துப் போடுவதையும்கூட ‘ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர்’ ஆகக் கருதுபவர்கள் அதிகரித்துவிட்டார்கள். தினமும் யு-டியூப் சேனல் பார்த்து விதவிதமான டிஷ்களை செ யக் கற்றுக்கொண்டு சமையலில் அசத்தும் பெண்கள் பெருகிவிட்டார்கள். டிவியில் சமை யல் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த வர்கள் சட்டென யு-டியூப் சேனலுக்கு மாற முடிந்திருப்பதற்கு அவர்களின் ஆர்வம் மட் டுமே காரணம். வேறென்ன சொல்ல முடியும்?

பெண்கள் எங்கு அதிகம் புழங்குகிறார்களோ அங்கிருந்துதானே வளர்ச்சியின் ஆரம்பப் புள்ளியும் தொடங்கும்.

அடுத்து பெண்களின் நாட்டம் அதிகம் இருப்பது வாசிப்பதில். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இளைஞர்களிடம் ‘நீங்கள் கடைசியாக வாசித்தது என்ன புத்தகம்?’ என்று கேட்டபோது 99 சத விகிதத்தினர் ‘பாடப் புத்தகங்களைத் தவிர வேறெதுவும் படித்ததே இல்லை’ என்ற பதிலையே சொன்னார்கள். ஒரு சிலர் தங்கள் அம்மா லைப்ரரியில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்ததாகவும், அதில் இரண்டு மூன்று கதைகள் படித்ததாகவும் சொன்னார்கள். ஆக அம்மாக்களிடம் இருந்துதான் வாசிக்கும் வழக்கமும் பிள்ளைகளுக்கு வருகிறது.

அச்சுப் புத்தகங்கள் இ-புத்தகங்களாகி பெருகி வருவதாலும் அனைவரும் தொழில்நுட்பத்துக்குள் அசுர வேகத்துக்குள் நுழைய அட்டகாசமான வாப்புகள் ஏராளமாக உள்ளதாலும் உங்கள் அனைவரையும் தொழில் நுட்ப சாகசங்களைச் செய ஒருகரம் கூப்பி வரவேற்கிறது உங்கள் ‘மங்கையர் மலர்’.

சமையல், வாசிப்பு இரண்டையும் தாண்டி பெண்களின் கவனம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எனச் சொல்லலாம். தொலைக்காட்சி சீரியல்களையும், காமெடி ஷோக்களையும், சமையல் நிகழ்ச்சிகளையும் தங்கள் ஓவு நேரத்தில் கவனித்து வந்த நம் பெண்களுக்கு மங்கையர் மலர் தனது யு-டியூப் சேனலில் அவர்களும் பங்கெடுக்கலாம், வீடியோ எடுத்து அனுப்பலாம், தங்கள் திறமைகளை நிரூபிக்க லாம் என பொக்கிஷ வாப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

கடந்த 40 வருடங்களாக, அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சியையும், அதில் பெண்களின் முன்னேற்றத்தையும் கவனித்து தன்னையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளது மங்கையர் மலர். இன்றும் அதைத்தான் செய்கிறது. உங்களுக்கான புதிய தளத்தையும் களத்தை யும் அறிமுகப்படுத்தி பெண்கள் அனைவரையும் தங்களுடன் அரவணைத்துக் கூட்டிச் செல்ல மங்கையர் மலர் எடுத்துள்ள புது அவதாரமே ‘ஆன்லைனில் மங்கையர் மலர்’.உங்களுக்கு உதவுவதற்காகவே ‘விரல் நுனியில் உன் உலகம்!’ என்ற இந்தத் தொடர்.

(முன்னேறுவோம்...)
Post Comment

Post Comment