போடுங்கம்மா வோட்டு!


எஸ்.சந்திரமௌலிதேர்தல் கமிஷன்

இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசனத்தின்படியும், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டப்படியும் உருவாக்கப்பட்டு, சுயேச்சையாக இயங்கி வரும் ஓர் அமைப்பு.

சட்டப்படி தேர்தல் கமிஷனை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாது. இது, 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி உருவானது, எனவே, ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இந்தியத் தேர்தல் கமிஷனின் தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கிறது. சுகுமார் சென் என்பவர்தான் இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் கமிஷனர். அவரது மேற்பார்வையில்தான் நம் நாட்டின் முதல் பொதுத் தேர்தல் (1951) நடைபெற்றது. ஆனால், பல்லாண்டு காலம், இந்தியத் தேர்தல் கமிஷன் என்பது இன்னொரு அரசு அமைப்பு என்ப தாகவே இருந்து வந்தது. இந்தியத் தேர்தல் கமிஷன் சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் டி.என்.

சேஷன் ஆவார். தேர்தல் கமிஷனின் சரித் திரத்தை டி.என்.சேஷனுக்கு முன், டி.என்.

சேஷனுக்குப் பின் என்று இரு காலகட்டங் களாகப் பிரிக்கலாம்.

டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் கமிஷனராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின், கையில் சாட்டை எடுத்துக் கொண்டு, ஒரு ரிங் மாஸ்டர் போல எல்லா அரசியல் கட்சிகளை யும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை என்ற ஒரு புதிய விஷ யத்தை அறிமுகப்படுத்தினார். தேர்தலில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசியல் கட்சிகள், தங்கள் தேர்தல் பிரசாரத்தை இரவு பத்து மணியோடு முடித்துக் கொள்ள வேண்டும், வீட்டுச் சொந்தக் காரர் அனுமதி இல்லாமல், வீட்டுச் சுவர்களில் தேர்தல் விளம்பரங்கள் எழுதக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளையும் கட்டாயமாக அமல்படுத்தினார். விதிமீறல்கள் பற்றிய புகார்கள் வந்தால், அரசியல் கட்சிகள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் நடவடிக்கைகள் எடுத்தார். தேர்தல் கமிஷன் என்பது ஏராள மான அதிகாரங்கள் கொண்ட சுயேச்சையான அமைப்பு என் பதை நாட்டுக்கு எடுத்துச் சொன்னதன் பயனாக, அவருக் குப் பின் வந்த தலைமைத் தேர்தல் கமிஷனர்களும் அதே பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

1989ல் கொண்டு வரப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் திருத்தச் சட்டத்தின்படி, தேர்தல் கமிஷன் என்பது மூன்று பேர் கொண்ட ஓர் அமைப்பாக மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி ஒரு தலைமைத் தேர்தல் கமிஷனரும், அவருக்குக் கீழே இரு தேர்தல் கமிஷனர்களும் இருப்பார்கள். தற்போதைய தலைமைத் தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா. மற்ற இரு தேர்தல் கமிஷனர்கள் : ராஜிவ் குமார், சுஷில் சந்திரா. டி.என்.சேஷனுக்குப் பின் டி.எஸ்.கிருஷ்ண மூர்த்தி, என். கோபாலசுவாமி, வி.எஸ்.சம்பத் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் த.தே. கமிஷனர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.

தமது பதவிக்குரிய கடமையிலிருந்து தவறும் தேர்தல் கமிஷனர்களை, தலைமைத் தேர்தல் கமிஷனரது சிபாரிசின் பேரில் ஜனாதி பதியால் பதவி நீக்கம் செய முடியும். ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிடி ஒப்புதல் இருந்தால் மட்டுமே தலைமைத் தேர்தல் கமிஷனரின் பதவியைப் பறிக்க முடியும்.

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை, மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் மேலவைகள், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகள் அனைத்துக்குமான தேர்தல்களை அவ்வப்போது நடத்தும் பொறுப்பு இந்தியத் தேர்தல் கமிஷனுக்கு உண்டு.

வாக்காளர் அடையாள அட்டை

பதினெட்டு வயது நிறைந்த இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நாட்டில் நடக்கும் நாடாளு மன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை உறுதி செயப்பட்டுள்ளது. ஒரு கால கட்டம் வரை, வாக்காளர் பட்டியலில் இருக்கும் ஒரு வருக்குப் பதிலாக அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவாளர் களைக் கொண்டு கள்ள வோட்டுப் போடுவது நடைமுறையில் இருந்தது.

இதன் காரணமாக, வாக்காளர்கள், தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாமல் போனது மட்டுமின்றி, அவர்களின் வாக்குரி மையை முகம் தெரியாத வேறு ஒரு நபர் தன் விருப்பத்துக்கு ஏற்ப தவறாகப் பயன்படுத்தும் அநியாயமும் நடந்துகொண்டிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியத் தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்திய ஓர் அதிரடியான நடவடிக்கைதான் வாக்காளர் அடையாள அட்டை. இந்திய தேர்தல் கமிஷன், இந்நாட்டின் ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது புகைப்படம் கொண்ட அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுத்துள் ளது. இந்த வாக்காளர் அடையாள அட்டை டி.என்.சேஷன் இந்தியத் தேர்தல் கமிஷனின் தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்தபோது 1993ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வாக்காளர் அடையாள அட்டையில் வாக் காளரது பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, வயது, வாக்காளர் அடையாள எண், வாக்காளரது வார்டு, தொகுதி போன்ற அடிப்படைத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். ஆரம்பக் காலத்தில் வாக்காளரின் கறுப்பு - வெள்ளைப் புகைப்படத்துடன் அவரைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருந்த அட்டை, பின்னர் வண்ணத்தில் பிளாஸ்டிக் அட்டையாக மாற்றி வழங்கப்பட்டது.

வாக்காளர்கள், புதிய முகவரிக்கு இடம் பெயரும்போது, அவர்கள் புதிதாகக் குடியேறும் பகுதிக்குரிய வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்கவும், தாங்கள் முன்பு வசித்த பகுதிக்குரிய வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயரை நீக்கவும் விண் ணப்பிக்க வேண்டும். தேர்தல் காலங்களில் திருத்தி அமைக்கப் பட்ட வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படும். அப்போது புதிய வாக்காளர்களைப் பட்டிய லில் சேர்க்க, சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் உள்ளிட்ட தகவல்களை மாற்ற விரும்பினால், அவற்றை ஆன்லைனிலேயே செதுகொள்ளும் வசதி தற்போது உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை வந்த பிறகு, அரசியல் கட்சிகளுக்கு கள்ள வோட்டு போடும் வாப்பு முற்றிலுமாக தடை செயப் பட்டுவிட்டது. தேர்தல் கமிஷன் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் 100% வழங்கப் படாத நிலையில், வாக்காளர் அட்டை இல்லை என்று காரணம் காட்டி ஒருவரது வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் தெளிவாக உள்ளது. எனவே, தேர்தல் நேரங்களில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், வேறு என்னென்ன அடையாள அட்டைகளை ஆதாரமாகக் காட்டி வாக்களிக்க லாம் என்ற தகவலை வெளியிடுவார்கள். அதன்படி, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஒரு சில ஆவணங்களைக் காட்டி வாக்களிக்க முடியும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், தேர்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட வர்கள், லஞ்ச ஊழல் செது தண்டனை பெற்றவர்கள் ஆகியோர் வாக்களிக்கத் தகுதி அற்றவர்கள்.

வாக்குச் சாவடி

தமிழ்நாட்டில் 37 மாவட்டங்கள் இருக்கின் றன. இவற்றில் 234 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி உள்ளன. அனைத்துத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக கடந்த தேர்தலில் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சில வாக்குச்சாவடி களில் 1500 வாக்காளர்கள் வரை வாக் களிக்க வேண்டி இருந்தது. இந்த முறை கொரோனா தொற்று காரணமாக, வாக்காளர் கள் வாக்களிப்பதற்காகக் கூடுத லாக ஒரு மணி நேரம் வழங்கப் பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக, இந்த முறை வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 95 ஆயிர மாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு கூறி இருக்கிறார்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கும், தேர்தலுக்கு முன்பாக ஒரு வாக்குச்சாவடியில் எப்படி வாக்களிப்பினை முறைப்படி நடத்த வேண்டும்? என்னென்ன செய வேண்டும்? என்னென்ன செயக்கூடாது? பிரச்னைகள் ஏதும் ஏற்பட்டால் எப்படிக் கையாள வேண்டும்? என்றெல்லாம் வகுப்புகள் எடுக்கப் படும்.

நகரங்களிலும், கிராமங்களிலும் மட்டு மில்லாமல் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும், சாலைப் போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிக்க ஏதுவாக, அடர்ந்த காட்டுப் பகுதிகள் கொண்ட தொலைதூர மலைக் கிராமங்களிலும் கூட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ளது அந்தியூர் சட்டமன்றத் தொகுதி. இந்தத் தொகுதிக்குட்பட்ட வேலம்பட்டி என்ற கிராமத் தில் வாக்காளர்களுக்கு அங்குள்ள பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளிதான் வாக்குச்சாவடி. இந்த வாக்குச் சாவடிக்கான வாக்குப் பதிவு எந்திரம் உள்ளிட்ட தேர்தல் நடத்த தேவையான அனைத் துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகள், தமிழ்நாட்டில் 54 கி.மீ. பயணித்து, அதன் பிறகு கர்நாடகப் பகுதி யில் 29 கி.மீ. பயணித்து, வாக்குச்சாவடியை அடைய வேண்டும். அந்தக் கிராமத்தின் மொத்த வாக்காளர்கள் 489 பேர்தான். ஆனால், அவர்களுக்கும் வாக்குரிமை உண்டல்லவா? அதனை மறுக்கலாகுமா? அந்தப் பகுதியில் செல்போன் டவர் கள் இல்லை. எனவே தொலைத்தொடர்பு வசதி இல்லாத அப் பகுதி யில், போலிஸ் மற்றும் வனத்துறையினர் பயன் படுத்தும் வாக்கி டாக்கிகளைத்தான் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்த வேண்டும்.

வாக்குச்சாவடிக்குள்ளே போ வரிசையில் காத்திருந்து நீங்கள் வாக்களித்துவிட்டு, வந்துவிடுவீர்கள். ஆனால், காலை முதல் மாலை வரை ஒரு வாக்குச்சாவடியில் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள முற்பட்டதுண்டா? வாக்குச்சாவடிக்குள்ளே தேர்தல் அதிகாரி மற்றும் இதர பணிகளுக்கான தேர்தல் பணியாளர்கள் தவிர, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட் பாளர்களின் சார்பில் ஏஜெண்ட்களும் அனுமதிக் கப்படுவார்கள். வாக்களிப்பு துவங்கும் முன் பாக, வாக்குப் பதிவு எந்திரம் சரியாக இருக் கிறதா? என்பதை சரிபார்க்கும் செயல்முறை விளக்கம் செது காட்டுவார் தேர்தல் அதிகாரி. அப்போது ஏஜெண்ட்கள் டம்மியாக வாக் களிப்பார்கள். வாக்குப்பதிவு எந்திரம் சரியாக உள்ளது என அவர்கள் சான்றளித்தபின், குறித்த நேரத்தில் வாக்களிப்பு துவங்கும், வாக்காளர்கள் நுழைந்தவுடன், அவரது வாக்காளர் அட்டை சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் டிக் செயப்பட்டதும், அவரது விரலில் மை வைக்கப்படும். அதன் பின் அவர் வாக்களித்துவிட்டு திரும்புவது வரை உங்களுக் குத் தெரிந்திருக்கும். பகல் வேளையில், ஏஜென்ட்களுக்கு அவரவர் கட்சிக்காரர்கள்

சாப்பாட்டுப் பொட்டலம் சப்ளை செதுவிட்டுப் போவார்கள். பிரியாணிதான் பெரும் பாலும் இருக்கும்! சமயத்தில் சாம்பார் சாதமும் வருவதுண்டு!

மாலையில் வாக்களிக்கும் நேரம் முடியும் நேரத்தில் எத்தனை பேர் வரிசையில் இருக்கிறார் களோ அத்தனை பேருக்கும் டோக்கன் வழங்கப்படும் என்பதும், அவர்கள் அனை வரும் வாக்களித்து முடிக் கும் வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்பதும் பல ருக்குத் தெரியாது. வாக் களிப்பு முடிந்து எத்தனை பேர் வாக்களித்திருக்கிறார் கள் என்பதை வாக்காளர் பட்டியல், வாக்காளர் கையொப்ப எண்ணிக்கை, வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான எண்ணிக்கை அனைத்தும் சரிபார்க்கப்படும். அடுத்து, வாக்குப்பதிவு எந் திரம் சீல் வைக்கப்படும். அதன் பிறகு, வாக்குப் பதிவு எந்திரத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு வாகனம் வரும் வரை அனைவரும் காத்திருப்பார்கள். அவர்களிடம் ஒப்படைத்த பிறகே, தேர்தல் பணியில் ஈடுபட்ட அனை வரும் புறப்பட முடியும்.

வாக்குப் பதிவு எந்திரம்

வாக்காளர் அடையாள அட்டை, வாக்குப் பதிவு இயந்திரம் ஆகிய கெடுபிடிகள் எல்லாம் இந்தியத் தேர்தல் சரித்திரத்தில் அறிமுக மாவதற்கு முந்தைய காலகட்டத்தில் ‘பூத் கேப்சரிங்’ என்று ஒன்று அரங்கேறும். இது வடக்கில் ரொம்ப சகஜம். வாக்குப்பதிவு முடிவடைவதற்கு சுமார் அரை மணி நேரம் முன்பாக, ஒரு ரவுடிக் கும்பல் துப்பாக்கி உள் ளிட்ட பலவகை ஆயுதங்களோடு வாக்குச் சாவடிக்குள் வந்து, அதிகாரிகளை மிரட்டி, அமைதியாக ஓர் ஓரமாக நிற்கச் சொல்லிவிட்டு, வாக்குச்சாவடியைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வார்கள். வாக்குச் சீட்டுக்களை, மொத்தமாக அள்ளி, மேஜையில் வைத்துக் கொண்டு, வாக்குச்சீட்டில் தங்களின் எஜமான கட்சித் தலைவரது ஆணைப்படி, அந்தச் சின்னத்தில் முத்திரை பதித்து, வாக்குச் சீட்டுகளை வாக்குப் பெட்டிக்குள் திணித்துவிட்டு, வந்த வேலை முடிந்தது என்ற திருப்தி யோடு புறப்பட்டுச் செல்வார்கள். இங்கே இப்படி அக்கிரமம் நடந்தது என்று வாக்குச் சாவடி அதிகாரிகள் உட்பட யாரும் புகார் கொடுக்க மாட்டார்கள். தேர்தல் கமிஷன் இது குறித்து யாதொரு நடவடிக் கையும் எடுக்காது.

ஆனால், சேஷன் வந்த பிறகு, தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டது. காகித வாக்குச் சீட்டுக்குப் பதிலாக, வாக்குப் பதிவு எந்திரம் நடைமுறைக்கு வந் தது. வாக்குப் பதிவு எந்திரத்தில் இத்தகைய தில்லுமுல்லுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவர் வாக்களித்த 12 வினாடிகள் கழித்துத்தான் அடுத்த வாக்கை பதிவுசெய முடியும். இன்னொன்று இதுபோன்ற சந்தர்ப் பங்களில், தேர்தல் அதிகாரி ஒரு பட்டனை அழுத்தி, அந்த வாக்குப் பதிவு எந்திரத்தில் மேற்கொண்டு ஒரு வோட்டு கூட போட முடியாதபடி செய்துவிட முடியும்.

இப்படியாக வாக்குப்பதிவு எந்திரத்தின் மகாத்மியத்தைத் தெரிந்துகொண்ட நாம், இந்த வாக்குப் பதிவு எந்திரம், இந்தியாவின் பாரத் எலெக்டிரானிக்ஸ் லிமிடெட் என்ற பொதுத் துறை நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டது என்பதையும், இதன் வடிவமைப்பில் எலெக்ட் ரானிக்ஸ் என்ஜினீயரான நம் சூப்பர் ஸ்டார் எழுத்தாளர் சுஜாதாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1982ஆம் ஆண்டில் கேரளாவில் நடந்த வடக்கு பரவூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் தான் முதல் முறையாக வாக்குப் பதிவு எந்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டது. அதன் பின் ராஜஸ்தான், ம.பி., தில்லியில் நடந்த தேர்தல்களில் ஒரு சில தொகுதிகளில் மட்டும் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப் பட்டது. 2003ல் நடந்த நாடாளுமன்றத் தேர்த லில் வாக்குச் சீட்டுகளுக்குப் பதிலாக முழுக்க முழுக்க எந்திரங்களே பயன்படுத்தப்பட்டன.

அவ்வப்போது, வாக்குப்பதிவு எந்திரம் குறித்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநில உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகளும் போட்டப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து வழக்குகளிலும், தீர்ப்பு தேர்தல் கமிஷனுக் கும், வாக்குப்பதிவு எந்திரப் பயன்பாட்டுக்கும் சாதக மாகவே வந்துள்ளன. குறிப் பாக 2002ல் ஜெயலலிதா

சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ‘தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப் படுவது அரசியல் சாசனப்படி சரியே!’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பொதுவாக ஒரு வாக்குப் பதிவு எந்திரத்தில் அதிகபட்சமாக 2000 வாக்குகளைப் பதிவு செய முடியும். ஒரு யூனிட்டுக்கு 16 பேர் வீதம் நான்கு யூனிட்களை இயந்திரத்துடன் இணைத்து, 64 வேட்பாளர்களுக்குரிய சின்னங் களைப் பயன்படுத்த முடியும். ஆனால், தற் போது மேம்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு எந்திரத்தில் 384 வேட்பாளர்கள் பிளஸ் நோடா வையும் சேர்க்க முடியும். இப்போது, வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களித்தவுடன், அதனு டன் இணைக்கப்பட்டுள்ள வீபாட் யூனிட் மூலமாகத் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக் குத்தான் தான் போட்ட வோட்டு போச் சேர்ந்திருக்கிறதா என்பதை வாக்காளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வளவு இருந்தபோதிலும், தோல்வி பயத்தில் இருக்கும் கட்சிகளும், தேர்தலில் தோல்வி கண்ட கட்சிகளும் வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செதுதான் அதிக வாக்குகளைப் பெற்று விட்டதாக ஜெயித்த கட்சி மீது குற்றம்சாட்டுவது இன்றைய அரசிய லில் வாடிக்கையாகி விட்டது.

வேட்பாளர், பிரசாரம்

தேர்தலில் நிற்க குறைந்தபட்சத் தகுதி ஏதா வது உண்டா? என்று பலருக்கு சந்தேகம் இருக்கக்கூடும். 25 வயதான இந்தியக் குடிமகன்கள் எவரும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம். ஆண், பெண், மூன்றாம் பாலின பேதம் ஏதும் கிடையாது. அவர் இந்தியாவில் கட்டாயமாக வாக்குரிமை பெற்றவராக இருக்க வேண்டும். ஆனால், தனக்கு எந்தத் தொகுதியில் வாக்குரிமை இருக்கிறதோ, அந்தத் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் கிடையாது. ஆனாலும், மஞ்சள் கடிதாசு கொடுத்தவராகவோ, மனநிலை பாதிப்புக்குள்ளானவராகவோ இருக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகளில் சம்பளம் பெறும் பணியில் இருப்பவர்கள், தங்கள் வேலையை ராஜினாமா செது, முறைப் படி விடுவிக்கப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிட முடியும்.

வேட்புமனு தாக்கல் செய வேட்பாளர்கள் நூறு கார் பவனி வந்த காலமும் உண்டு. ஆனால் இப்போது அதற்கெல்லாம் தடை வந்து விட் டது. வேட்பு மனுவில் வழக்கமான தகவல்கள் தவிர, வேட்பாளர்கள் தங்கள் மற்றும் தங்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் அசையும், அசையாச் சொத்துக்களின் விவரங்களையும், தாங்கள் சமர்ப்பித்த வருமான வரி ரிட்டர்ன்கள் குறித்த தகவல்களையும் குறிப்பிட வேண்டும். இதை வைத்துத்தான் சில சமூகச் செயற்பாட்டாளர்கள், நம் நாட்டில் உள்ள மக்கள் பிரதி நிதிகளில் கோடீஸ்வரர்கள், மெகா கோடீஸ் வரர்கள் எத்தனைபேர் என்று கணக்கிட்டுச் சொல்கிறார்கள். அதே போல தேர்தலில் நிற்ப வர்கள் தங்கள் மீது பதியப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகள் குறித்த விபரங்களையும், அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பதையும், ஏதாவது கிரிமினல் வழக்கில் வேட்பாளருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதா என்றும் குறிப்பிடவேண்டியது கட்டாயம். இதன் மூலமாக, நம் பிரதிநிதிகளாக சட்டமன்றங் களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் போகத் துடியாத் துடிக்கும் அரசியல்வாதிகளின் குற்றப் பின்னணிகள் அம்பலத்துக்கு வருகின் றன. எத்தனை பேர் மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற கேஸ்கள் உள்ளன என்பது போன்ற அதிர்ச்சியூட் டும் உண்மைகள் பகிரங்க மாகின்றன.

வாக்காளர்களுக்கு வோட்டுப் போடுவதற்குக் காசு கொடுக் கும் பழக்கம் வெகு கால மாகவே உண்டு. ஆனால், அதை அறிவியல்பூர்வமாக செயல்படுத்திய பெருமைக் குரிய ஸ்தலம் மதுரை திருமங்கலம் ஆகும். இன்று பெரிய அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப் பது என்பது தேர்தல் செலவின் ஓர் அங்கமாகி விட்டது. தேர்தல் கமிஷன் வேட்பாளர்களின் பிரசாரத்தையும், இதரச் செயல்பாடுகளையும் கண்காணிக்கத் தேர்தல் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் என்று ஏராள மான அரசு அதிகாரிகளை நியமித்தாலும், வேட்பாளர்கள் செயும் வரம்பு மீறிய செலவை யும், வோட்டுக்கு நடக்கும் பணப் பட்டுவாடா வையும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே நடைமுறை யதார்த்தம்.

இன்று பணமும், ஜாதியும்தான் நம் தேர்தல் களில் கோலோச்சுகின்றன. பெரிய அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய நேர்காணல்கள் நடத்தும்போது, கேட் கப்படும் முக்கியமான கேள்விகள், உங்கள் தொகுதியில் உங்கள் ஜாதி வோட்டு எவ்வளவு? என்பதும், எத்தனை கோடி ரூபா செலவழிக்க முடியும்? என்பதும்தான் வருத்தத்துக்குரிய உண்மை.

தேர்தல் திருவிழா 2021

இந்தச் சட்டமன்றத் தேர்தல், முந்தைய தேர்தல்களிலிருந்து மிகவும் மாறுபட்டது. காரணம், சற்றே குறைந்தாற்போல இருந்த கொரோனா தொற்று, இப்போது மீண்டும் தன் கைவரிசையைக் காட்டத் துவங்கி இருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக, தேர்தல் ஏற்பாடுகளிலும் சில முன்னெச்சரிக்கை நட

வடிக்கைகளைத் தேர்தல் கமிஷன் மேற்கொண் டுள்ளது. அவற்றைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

*வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் வேட்பு மனுவைத் தாக்கல் செயலாம்.

*தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

*தேர்தல் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் உடல் வெப்ப நிலையைக் கண்டறியும் கருவி வைக்கப்பட வேண்டும்.

*கை கழுவுவதற்கான சானிடைசர், சோப்பு ஆகிய பொருட்கள் வைத்திருக்க வேண்டும்.

*வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தும் அதிகாரிகள் கையுறை அணிய வேண்டும்.

*தேர்தல் பிரசாரங்களின்போது தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

*வாகன அணிவகுப்பில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லக்கூடாது.

*ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய வேண்டும்.

*சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க பெரிய அளவிலான அறைகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.

*வாக்கு எண்ணிக்கை அறையில் அதிகபட்சமாக 7 மேஜைகள் மட்டுமே போட வேண்டும்.

*கொரோனா பாதித்த நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செயப்பட்டுள்ளது. அரசு முகாம் கள் மற்றும் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம். மேலும், அத்தியாவசி யப் பணிகளில் உள்ள பணியாளர்களும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கவும் அனுமதி உண்டு.

கடைசியாக, லஞ்ச ஊழல் என்ற வைரஸ் இந்தச் சமூகத்துக்கு வெகு ஆபத்தானது. எனவே, ஊழல் பேர் வழிகளை, இந்தத் தேர்தலில் நன்றாகக் கைகழுவி விடுங்கள்; ரூபா நோட்டு மூலமாகவும் கொரோனா தொற்று பரவ வாப்பு உண்டு என்று சொல்கிறார்கள். எனவே, கண்டிப்பாக வோட்டுக்காகப் பணம் வாங்கா தீர்கள். அதன் மூலமாக உங்களுக்கு நோ தொற்ற வாப்பு உண்டு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :