ஹலோ! நான் ரோவர் பேசுகிறேன்...கிறிஸ்டி நல்லரெத்தினம் -ஹலோ! ரோவர் அழைக்கிறேன்... ஓவர்!" மெதுவா... மெதுவா... பார்த்து... பார்த்து ..."

செவ்வாயின் தரையைத் தொட சில மீட்டர் களே உள்ளன. குனிந்து நிலத்தை நோக்கு கிறேன். என்னைச் சுற்றிக் கீழே செங்கம்பளம் விரித்தாற்போல் குண்டும் குழியுமாகப் பரந்த நிலப்பரப்பு. மேலே அண்ணாந்து பார்க் கிறேன்.

என்னை 6 மீட்டர் நீளமான மூன்று நைலான் கேபிள்களால் இணைத்துமிகக் கவனமாகச் செவ்வாயின் தரையில், ஒரு மழலைச் செல் வத்தைத் தொட்டிலில் வைக்கும் தாயின் கவனத்துடன், வான் தூக்கி (Sky crane) என்னைத் தரையில் மெதுவாக இறக்குகிறது.

மேலே ராக்கெட்டில் இருந்து வீசிய வெப்ப மான காற்றில் எழும்பிய செவ்வாப் புழுதி என் கண்களை மறைக்கிறது.

தரையைத் தொட்டதும் என்னை இறக்கிய ராக்கெட்டுடன் இணைத்திருந்த கேபிள்களைத் துண்டித்துக் கொள்கிறேன். அந்த ராக்கெட் சிறிது தூரம் பறந்து, விலகி, தரையில் மோதி மாள்கிறது. எனக்கும் பூமிக்கு மான தொப்புள் கொடி உறவு இத்துடன் முடிவுக்கு வந்தது! நான் கொண்டுவந்த உபரணங்களும் என்னை இயக்கும் NASA விஞ்ஞானிகளும்தான் இனி என் கதியை நிர்ணயிக்கப்போகின்றன!

என் ஆறு சக்கரங்களும் செவ்வாயின் 45 கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஜெஸிரோ என்று அழைக்கப்படும் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத் தாக்கில் தரையிறங்கித் தடம் பதித்தது. இப் பள்ளத்தாக்கில் பல பில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு ஏரி இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புவதால் அங்கு உயிரினங் கள் வாழ்ந்திருப்பின் அவற்றின் எச்சங்களை யும் சுவடுகளையும் என் உதவி மூலம் கண்டறி வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம். இதன் முதற்படியான இந்தத் தரையிறக்கம் முழு வெற்றி!

என் கேமரா கண்களால் சுற்றிப் பார்க் கிறேன். நான் இறங்கிய பள்ளத்தாக்கு சமதரை எனினும் சுற்றி சிறு குன்றுகள் கரை போட்டு இருந்தன. எங்கும் சிவப்பு மணல் தரை... செவ்வாய் என்பதைவிட கவித்துவமாகச் செவ்விதழ் என்பதே பொருந்தும்! இன்று தேதி பிப்ரவரி 18, 2021.

ஜூலை 30, 2020இல் Mars 2020 எனும் பெயருடன் Cape Canaveralல் இருந்து ஆரம்பித்த பயணம் ஏழு மாதங்களின் பின்... 480 மில்லியன் கிலோ மீட்டர்கள் தாண்டி என்னை இங்கே கொண்டுவந்து விட்டது.

நான் NASAவின் செவ்வா கிரகத்தை ஆராயும் ரோவர் பயணிப்பில் (Mars Exploration Rover (MER) mission)அனுப்பப்பட்டவர்களில் கடைக்குட்டி. 2003ல் இங்கு அனுப்பப்பட்ட என் தோழர்கள் Spirit உம் Opportunity உம் செவ்வாயின் வெவ்வேறு இடங்களில் 2004ல் இறங்கி பூமிக்கு முக்கியமான தகவல்களை அனுப்பினார்கள் என்பது சரித்திரம்.

ஒருவர் 2010லும் மற்றவர் 2018லும் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்து சமாதியானார் கள். அதே சமயம் 2011ல் அனுப்பப்பட்ட இளையவன் Curiosity இன்னமும் மும்முரமா செவ்வாயின் Gale பள்ளத்தாக்கில் வேலை செய்து கொண்டுதான் இருக்கின்றான். எனவே நான் இங்கு தனிக்கட்டையல்ல!

அடே, என் பெயரைச் சொல்ல மறந்துவிட் டேனே. விடாமுயற்சி `Perseverance...’ எப்படி? சும்மா பெயர் மட்டும் இல்லை. நானே அப்படித்தான்!

வெர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் அலேக்சாந்தர் மேதர் 28,000 பேர் பங்குகொண்ட NASAஅறிவித்த பெயர் வைக்கும் போட்டியில் வெற்றி பெற்று வைத்த பெயர் என்றால் சும்மாவா!

என்னை இந்தச் செந்தரையில் இறக்கு வதற்கு NASA செலவழித்த தொகையைச் சொன்னால் வாயைப் பிளப்பீர்கள். ரெடி தானே? 2.4 பில்லியன்கள்... இதைவிட நான் இங்கு உலாவி படங்களை பூமிக்கு அனுப்பும் செலவு 300 மில்லியன்கள். என் பூர்வீகத்தையும் சொல்லியாக வேண்டுமே.நான் உருவானது NASAவின் Propulsion Laboratory (JPL), கலிபோர்னியாவில்.என்னையும் தோழன் Curiosity போலவே வடிவமைத்தார்கள். நான் ஒன்றும் உருவத்தில் பாக்கெட் சைஸ் அல்ல. ஒரு சிறு காரின் அளவு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒரு டன் எடை. எனது ரோபோ கையின் நீளம் ஏழு அடி. இது சாதாரண கை இல்லீங்க. கை நுனியில் ஒரு அதிநுட்ப கேமரா, நிலத் தாதுக்களை ஆராயும் ரசாயன உபகரணம், பாறைகளைத் துளையிடும் கருவி ஆகிய வற்றை அடக்கி நகரும் ‘டேமினேட்டர்’ ஆக்கும்! நான் இயங்குவது அணுசக்தியில். மேலதிக மாக மின்கலங்களை மின்னேற்ற புளுடோனி யம் ஜெனரேட்டர் வேறு உண்டு.

ஒரு ரகசியம் : நான் Ingenuity எனும் ஒரு மினி ஹெலிகாப்டரையும் என்னுடன் கொண்டுவந்தேன். அது தற்போது என் வயிற்றுக்கு அடியில் பாதுகாப்பாக ஒளிந் துள்ளது. ஒரு சமதளமான தரைப்பரப்பை அடைந்ததும், அதை இறக்கிப் பறக்கவிடுவதுதான் திட்டம்.Ingenuity வெற்றிகரமாகப் பறக்கு மானால் மனிதச் சரித் திரத்தில் முதல் தடவை யாக இன்னொரு கிரகத்தின் வானில் பறந்த விமானம் எனும் பெருமையைத் தட்டிக் கொள்ளும்.

இன்னும் சில வாரங் கள் பொறுத்திருந்து பாருங்களேன், என் சாகசங்களை! நீங்கள் எல்லோரும் கொரோனாவின் கொடுமையில் முடங்கிக் கிடக்கும்போது 2020 ஜூன் 30ஆம் தேதி என்னை Atlas V ராக்கெட்டில் ஏற்றி அனுப்பினார்கள்.

ஏழு மாதங்கள் கழித்து செவ்வா கிரகத் தின் விண் பரப்பைத் துளைத்துக்கொண்டு ராக்கெட் தரையிறங்க ஆரம்பித்தது. இப்பயணத்திலேயே இதுதான் மிகவும் நுணுக்கமான வேலை.

‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது இதைத்தானோ சொன்னார்கள்?இந்தப் பொறுப்பு ‘வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின்’ தலைவர் (Guidance & Controls Operations Lead) எனும் முக்கிய பொறுப்பை வகித்த இந்திய வம்சா வளி அமெரிக்கரான டாக்டர் ஸ்வாதி மோகன் கையில். இதனால் பாதி கவலை குறைந்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அவரின் சுவாரசியமான பேட்டியைக் கீழே உள்ள இணைப்பில் தட்டிப் பாருங்கள் : https://youtu.be/yEdXdmi_AUw நல்லது. இதுவரை நான் செய்தவற்றைச் சொல்லட்டுமா?

என் கை கேமராவினால் செவ்வாயின் தரைப் பரப்பைப் படம்பிடித்து NASAஅவிற்கு தினமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறேன். அண்மையில் ஒரு ஒலிப்பதிவு வேறு அனுப்பி வைத்தேன். அதில் செவ்வாயின் நிலப்பரப்பில் நான் ஊர்ந்து செல்லும்போது எனது ஆறு டயர்களில் செவ்வா கற்கள் நசுங்கி எழும் ஓசையும், காற்று வீச்சின் ஒலியும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

உங்களுக்கு இந்த ஒலிப்பதிவைக் கேட்க ஆவலா? கீழ் உள்ள இணைப்பைத் தட்டி என் ஒலிநாடாவைக் கேட்டுப் பாருங்களேன். இதுமட்டுமல்ல. என் பயணத்தைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள நீங்கள் நாட வேண்டிய NASAஅவின் உத்தியோகபூர்வ வலைதளம் இதுவே https://www.nasa.gov/ அது சரிதான், எப்படி இங்கிருந்து பூமிக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறேன் என்று சிந்திக் கிறீர்களா? என்னை ஏற்றி வந்த ராக்கெட் செவ்வாயை வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது. நான் என்னிடம் உள்ள க்ஏஊ அலைபேசி மூலம் ராக்கெட் இடம் பேசுவேன். அது பூமியுடன் என் சமிக்ஞைகளைப் பகிர்ந்து கொள்ளும். ஆனால், NASAஅவிற்கு என் சமிக்ஞை சென்றடைய பதினொரு நிமிடங் கள் எடுக்குமாம். என்னைத் தரையிறக்கும் போது இந்த நேர இடைவெளி NASAஅவிற்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது என்பது உண்மை. ஆனால், என்னுள் பதிந்துள்ள அதிநுட்ப கணினி இந்த ஆபத்தான செயலை வெற்றியுடன் நிறைவேற்றியது.

இக் கிரகத்தில் கால் பதிக்க பல நாடுகள் நெடு நாட்களா முயன்று வருகின்றன. 1970ஆம் ஆண்டில் சொவியத் யூனியன் தனது Mars 4NM, Mars 5NM எனும் ராக்கெட் பயண முன்னெடுப்புகள் மூலம் இதற்கு வித்திட்டது. ஆனால் 1971ல் தொடங்கி 1979 வரை Mars 2, 3....Mars 7 என பல ராக்கெட்டுகளை அனுப்பி பல தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்நோக்கி திட்டங்களைக் கைவிட்டது.

1976ல் அமெரிக்காவின் இரு வைக்கிங் (Viking probes) விண்கலன்கள் செவ்வா கிரகத்தின் வான்வெளிக்குள் நுழைந்து வெற்றிகரமாகத் தங்கள் பொதிகளை மெது வாகத் தரையிறக்கின. இது வான்வெளி ஆராச்சியில் ஒரு மைல்கல்லாக கணிக்கப்படு கிறது. இவை பூமிக்கு அரிய தகவல்களைத் தொடர்ந்து அனுப்பியதுடன் செவ்வாய் தரையின் முதலாவது வண்ணப் படத்தை அனுப்பி வைத்தன.

இதன் பின்னர் NASAஅவின் Mars Pathfinde விண்ணூர்தி ஜூலை 04ஆம் தேதி, 1997 செவ் வாயில் களம் இறங்கி என்னை ஒத்த ஆனால் மிகச் சிறிய Sojourner எனும் வானூர்தி உதவி யுடன் பரிசோதனைகளை மேற்கொண்டது. செப்டெம்பர் 1997ல் இது அமைதியடைந்தா லும் அந்தச் சில மாதங்களில் 17,000க்கும் அதிகமான படங்களை பூமிக்கு அனுப்பி வைத்தது. செவ்வா கிரகம் ஒரு காலத்தில் வெப்பமாகவும் ஈரமாகவும் நீர்நிலைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது என இவ்வாராச்சியில் தெளிவானது.

1990களில் வேறு பல விண்கலங்கள் செவ் வா கிரகத்திற்கு அனுப்பப்பட்டாலும் தொழில்நுட்பக் கோளாறுகளால் அவற்றின் பயணங்கள் தோல்வியையே தழுவின. 2003ல் ஐரோப்பியவிண்வெளி நிறுவனம் அனுப்பிய Mars Express தன் பெயருக்கு ஏற்றாற்போல் செவ்வாயை அடைந்து சொல்லிக்கொள்ளாமல் மறைந்தே போனது.

சீனாவின் தேசிய வான்வெளி அமைப்பி னால் செவ்வாக்கு 23 ஜூலை 2020 அனுப்பப் பட்ட Tianwen&1 விண்கலம் இந்த பிப்ரவரி செவ்வா கிரகத்தின் வானிலைக்குள் நுழைந்து கிரகத்தைத் தற்போது வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அது தன் கலத்தைத் தரையிறக்குவதற்குப் பொருத்தமான இடத் தைத் தெரிவு செத பின் என்னைப் போல் ஒரு ரோவரை செவ்வாயில் தரையிறக்கும்.

விண்ணை ஆள நினைக்கும் நாடுகளுக் கிடையிலான பனிப்போர் செவ்வாயையும் எட்டிவிட்டது என்றே எண்ணுகிறேன். நான் செவ்வாய் கிரகத்தில் இரண்டு வருட மாவது ஊர்ந்து திரிந்து NASA எனக்கு இடும் கட்டளைகளுக்கு அமைய பணிகளை நிறை வேற்றுவேன். நான் சேகரிக்கும் பாறை மாதிரி களைச் சிறு குழாகளில் நிரம்பி NASA நியமிக்கும் இடங்களில் வைப்பதுதான் திட்டம். அவற்றை பூமிக்கு எடுத்துச் செல்வ தற்கான திட்டங்களை Mars Sample Return (MSR) எனும் முன்னெடுப்பின் கீழ் NASA வகுத்துக்கொண்டுதான் இருக்கிறது.

இத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செயப் பட்ட பின்பே மனிதனை செவ்வாக்கு அனுப்புவது பற்றிய யோசனையை NASA செய்யும்.அது எப்படி சாத்தியமாகும் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இனி வர இருக்கும் நாட்கள் மிகச் சவா லானதாகவும் அதே சமயம் உற்சாகமான தாகவும் இருக்கும் என்பதில் ஜயமில்லை.

விண் பயணத்தில் மனிதகுலத்தின் மறு அத்தியாயத்தைப் புரட்டும் நாட்கள் இவை. இந்த நீண்ட பயணத்தில் நீங்களும் என்னுடன் இணைத்து பயணிப்பீர்கள் என உறுதியா நம்புகிறேன்.ஓவர்!

Post Comment

Post Comment