இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்!


சிறப்புக் கட்டுரை
ஆதித்யா -கடந்த வாரம் இலவசங்கள் அல்லது விலையில்லா உதவி என்பது வளர்ச்சியின் ஒரு குறியீடு எனப் பார்த்தோம். அதில் எழுந்த முக்கியமான கேள்வி: இதன் மூலம் அரசின் கடன் சுமைதானே அதிகரிக்கிறது என்பது. இப்போது மாநில அரசுகளின் கடன்கள் பற்றிப் பார்ப்போம். நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ரூ.30,500 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது.

ஆனால், இந்தியாவிலேயே சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலையில் இருந்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து நிதிப் பகிர்வு குறைவான அளவிலேயே கிடைத்தாலும் மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் இதர செலவுகளுக்காகவும் சந்தையில் கடன் வாங்கி, செலவழித்து வருகிறது தமிழக அரசு. மத்திய நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்திற்குக் கிடைக்கும் நிதி குறைவு, சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தமிழகத்தின் கடன் சுமையும் அதிகரித்து வருகிறது.

மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, நடப்பு 2020-21ஆம் நிதியாண்டின் இதுவரையிலான காலத்தில் தமிழகம் மொத்தம் ரூ.30,500 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது. இதன் மூலம் சந்தையில் அதிகம் கடன் வாங்கிய இந்திய மாநிலங்களுக் கான பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. முன்னதாக, ஜூலை 7ஆம் தேதி 6.63 சதவிகித வட்டியில் ரூ.1,250 கோடியைத் தமிழக அரசு கடனாக வாங்கியிருந்தது. இக்கடன் 35 ஆண்டு முதிர்வு காலத்தில் வாங்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் எப்படி?

கடனே இல்லாத ஒரு மாநிலம் கூட இந்தியாவில் இல்லை. பா.ஜ.க. நீண்ட காலம் ஆண்டு கொண்டிருக்கும் மற்றும் தற்போது ஆளும் மாநிலங்கள் கூடக் கடன்களை வைத்திருக்கின்றன. குறிப் பாக பா.ஜ.க. நேரடியாக ஆளும் அல்லது ஆட்சி யில் பங்கெடுத்திருக்கும் பீகார், ஹரியானா இரண்டு மாநிலங்களும் தமிழகத்தைவிட பற்பல மடங்கு அதிக கடனில் உழல்கின்றன. இவர்களின் ஆதர்ச மாநிலம் குஜராத். இது, தமிழகத்துக்கு மிக அருகே இருக்கிறது.

கீழே கொடுத்திருக்கும் அட்டவணை ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது. இந்திய மாநிலங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் வாங்கியுள்ள மொத்தக் கடனில் தமிழகம் மட்டும் 17 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது.

இப்படி கடன் அதிகரிக்க என்ன காரணம்?

பல வகைகளில் அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரிப் பணம் சரிவர வருவதில்லை. இதனால் அரசாங்கம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது.

வருவா குறைந்து செலவுகள் அதிகரித் துள்ளதால் மேலும் அதிகமாகக் கடன் வாங்கும் நெருக்கடியில் தமிழகம் இருக்கிறது. நிதிச் செயலாளரின் கணக்கீட்டின்படி, தமிழகத்துக்கு மாதத்துக்கு ரூ.13,000 கோடி வரையில் வருவா இழப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வருவாயும் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் தமிழகத்தின் ஜி.எஸ்.டி. வருவா 15 சதவிகிதம் வீழ்ச்சியடைந்திருந்தது.

மத்திய அரசுக்கும் கடன் சுமை இருக் கிறதா? இந்தியா இதுவரை எவ்வளவு கடன் வாங்கியுள்ளது..?

மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் உலக வங்கி மற்றும் உள்நாட்டு வங்கிகளில் கடன் வாங்குவது வழக்கம்தான்.

2010-11-ம் நிதியாண்டு முதல் இந்தியாவின் கடன் நிலை பற்றிய ஆவறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த ஆவறிக் கையின் 8-வது பதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதன்படி 2018-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை இந்திய அரசு 82,03,253 கோடி ரூபா கடன் பெற்றுள்ளது.

மேலும், இந்த ஆவறிக்கைகளின்படி 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தி யாவின் மொத்தக் கடன் தொகை 54,90,763 கோடியாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 82,03,253 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்பு, பல்வேறு திட்டங்களுக் காகக் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 28 லட்சம் கோடி ரூபா கடனாகப் பெற் றுள்ளது இந்திய அரசு.

‘பொதுவாக ஒரு நாடு கடன் வாங்குவது உள்கட்டமைப்பு, புதிய திட்டங்கள் உள்ளிட்ட சில விஷயங்களுக்காகத்தான். எவ்வளவு கடன் வாங்குகிறோம் என்பதை அரசாங்கமே பட்ஜெட்டில் வெளிப்படையாகச் சொல் கிறது. பல வகைகளில் அரசாங்கத்துக்கு வரவேண்டிய வரிப் பணம் சரிவர வரு வதில்லை. இதனால் அரசாங்கம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது. மேலும், அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வரிப் பணத்தில் மக்களுக்காகப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, அலு வலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வழங்கப்படும் பி.எஃப். தொகைக்கு, அரசாங் கம் 8 சதவிகிதத்திற்கு மேல் வட்டி வழங்கு கிறது. இந்த வட்டித் தொகையானது அரசாங் கத்திற்குக் கிடைக்கும் வரிப் பணத்திலிருந்தே செலுத்தப்படுகிறது. இதனால் அரசாங்கத் திற்கு நஷ்டமே ஏற்படும். இதேபோன்று வழங்கப்படும் பல சலுகைகளால் அரசாங்கம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகிறது.உலக வங்கியில் கடன் வாங்குவது ஒரு பாதுகாப் பான விஷயம். காரணம். அங்குதான் மிகக் குறைந்த அளவிலான (2 அல்லது 3 சதவிகித வட்டி) வட்டிக்குப் பணம் தரப்படும். இதுவே உள்நாட்டுக் கடன் என்றால் வட்டி அதிகமாக இருக்கும்.

ஆக, மத்திய - மாநில அரசுகள் கடன் வாங்குவது என்பது ஆபத்தான விஷயம் போலவும், ஒவ்வொரு தனிமனிதன் தலை யிலும் பல ஆயிரங்களில் கடன் இருப்பது போல அச்சம் தரும் வகையில் அரசியல் கட்சிகள் சித்தரிப்பதும் தவறு. மாநிலங்கள் அதிக பட்சம் கடன் வாங்கக் கூடிய உச்சவரம்பை அதன் வளார்ச்சிக்கேற்ற விகிதங்களில் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. தமிழகம் அதன் விளிம்பு வரை இப்போது கடனி லிருப்பதுதான் அபாயகரமான விஷயமாக வர்ணிக்கப்படுகிறது.

மேலும் மேலும் கடன் வாங்காமல் இருக்க என்ன செய வேண்டும்?

‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே நேரடி மானியம் என்ற திட்டத்தை வகுத்தார்கள். அந்தத் திட்டத்தை தற்போது பி.ஜே.பி அரசாங் கம் அமல்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் மானியம் என்பது ஒரு நிறுவனத்திற்கு வழங் கப்பட்டது. உதாரணமாக உரம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு மானியத்தை வழங்கி, விவ சாயிகளுக்குக் குறைந்த விலைக்குச் சந்தையில் உரத்தை விற்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியது. அந்த மானியத்தை வாங்கிக் கொண்டு, நிறுவனங்கள் உரம் தயாரிப்பில் அந்த மானிய தொகையைப் பயன்படுத்தாமல் ஏமாற்றின. இதனைத் தடுப்பதற்காக, ‘நிறு வனங்கள் என்ன விலை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும்... நாங்கள் மானி யத்தை நேரடியாக விவசாயிகளிடம் கொடுத்து விடுகிறோம்’ என்ற முடிவுக்கு வந்தது அரசாங்கம். இதன்மூலம் பணம் சேமிக்கப்படு கிறது. இப்படி சில திட்டங்கள் கொண்டு வருவது மூலம் அரசின் செலவினங்களும் கடன்சுமையும் காலப்போக்கில் குறையும் என்பது இந்த அரசின் திட்டம்.

வரி வருவாயைத் தவிர கடன் பெற்று வளர்ச்சிப்பணிகளுக்குச் செலவிடுவது என்பது உலகின் பல வளரும் நாடுகளில் கையாளப்படும் ஒரு பொருளாதார முறை. அதனால் அரசுகள் கடன் வாங்குவதை விவா திக்கப்படுவதைவிட அந்த வளர்ச்சி திட்டங் களுக்கான ஒதுக்கீடுகளின் செலவுகளில் கசிவு இல்லாமல் இருக்கிறதா? அந்த திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்குப் பலனளிக்கும் வகையில் அமைகிறதா? என்பதுதான் விவாதிக்கப்படவேண்டிய விஷயம்.

Post Comment

Post Comment