மக்கள் நீதி மய்யம் 120 இடங்களில் ஜெயிக்கும்


தேர்தலை நோக்கி...
எஸ்.சந்திரமௌலி -வெள்ளைச்சாமி பொன்ராஜ். வயது 54. மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றியவர். அவருடன் இணைந்து புத்தகங்கள் எழுதியவர். அவரது மறைவுக்குப் பிறகு,டாக்டர் கலாமின் பெயரில் ‘டாக்டர் அப்துல் கலாம் இலட்சியக் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அண்மையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தில் இணைந்தார். கல்கியின் ‘தேர்தலை நோக்கி’ வரிசையில் இந்த வாரம், பொன்ராஜ் அளித்த பேட்டியின் தொகுப்பு:

டாக்டர் அப்துல் கலாம் பெயரில் அரசியல் கட்சி துவக்கி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று நாட்டு நடப்புகள் பற்றி வெளிப்படையாக கருத்துகள் தெரிவித்து, சுதந்திரமாக இயங்கி வந்த நீங்கள், தடம் மாறி, கமல்ஹாசனின் கட்சியில் இணைந்தது ஏன்?

டாக்டர் கலாமின் கனவுகளை நனவாக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ள டாக்டர் கலாம் இலட்சிய இயக்கம் தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபடும். ஆனால், இளைஞர்கள் இணைந்து, அவர் பெயரில் துவக்கிய கட்சியைச் செயல்பட விடாமல் தடுக்க பா.ஜ.க. அரசு சதி செய்துவிட்டது. தேர்தல் கமிஷன் எங்களுக்குப் பிறகு விண்ணப்பித்த 13 கட்சிகளைப் பதிவு செதுள் ளது. ஆனால், எங்களுடையதைப் பதிவு செயவில்லை. இந்தச் சூழ்நிலையில் கலாம் அவர்களின் இல்லத்தி லிருந்து தன் அரசியல் பயணத்தைத் துவக்கியுள்ள கமல், ‘வாருங்கள்! ம.நீ.ம. மூலமாக அவரது லட்சியங்களை நிறைவேற்றலாம்!’ என அழைத்தார். தனது தேர்தல் அறிக்கையிலும் டாக்டர் கலாமின் பல கருத் துக்களைச் சேர்த்திருக்கிறார். இன்றைய ஜனநாயகத்தில், அரசியல் தளத்தின் மூலமாகத் தான் மக்களுக்குப் பணியாற்ற முடியும். எனவே, தமிழ் நாட்டில் அறிவார்ந்த, பொருளாதாரச் சிந்தனை கொண்ட, சமூக, அரசியல் நீதியை நிலை நாட்டும் ஒரு மக்களாட்சியைக் கொடுக்கவும், பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டை முன்னேற்றவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ம.நீ.மயத்தில் இணைந்துள்ளேன்."

அரசியல் கட்சியில் சேர்ந்து, வேட்பாள ராகவும் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டீர்கள். சொல்லுங்கள், தமிழ்நாட்டுத் தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுக்குள்தான் போட்டி என்பது போல ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் நம்புவது மக்களைத்தான். கலைஞர், ஜெயலலிதா இருவரது மறைவுக்குப் பின், திராவிடக் கட்சிகளின் பொறுப்பில் இருக்கும் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஸ்டாலின் போன்ற தலைவர்களுக்கு ஒரு தொலை நோக்குப் பார்வையே இல்லை. இவர் களிடம், வேலை வாப்புகளை உருவாக்குவதற்கோ, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கோ, நல்ல திட்டங்கள் ஏதுமில்லை. கடன் வாங்கி, அரசாங்கத்தை நடத்துவதுதான் இவர்களது ஆட்சி; அரசியல்; டாஸ்மாக் வருமானத்தை நம்பி நடத்தப்படும் அரசாங்கம் எப்படி வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முடியும்? ஜெயலலிதா அவர்களோடு இணைந்து நான் உருவாக்கிய ‘விஷன் 2023’ என்றால் என்ன? என்று இவர்களிடம் கேளுங்கள். இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. டாஸ்மாக், மணல், எம் சாண்ட், ரோடு காண்டிராக்ட் என எல்லாவற்றிலும் 40% இவர்களுக்குப் போகிறது. அப்புறம் தமிழ்நாடு எப்படி முன்னேறும்? தமிழ்நாடு கடன் சுமையில் மூச்சு முட்டி திணறிக் கொண் டிருக்கிறது. இந்த விஷயத்தில் இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் வித்தியாசம் கிடையாது. இவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுப்புகிறோம்."

இவர்களது தேர்தல் வாக்குறுதிகளுடன், கமல்ஹாசனின் வாக்குறுதிகளை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

இலவசங்களைக் கொடுப்பதில்தான் இருவரும் போட்டி போடுகிறார்களே தவிர, உருப்படியான தொலைநோக்கு செயல்திட்டங் களில் கவனம் செலுத்தத் தவறிவிட்டார்கள். ஆனால், மயத்தின் திட்டம், முதல் ஐந்து வருடங்களில் மாநிலத்தின் கடன் சுமையைக் கணிசமாகக் குறைப்பதற்கு முயற்சிகள் எடுப் பது. அதற்குப் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். பொருளாதாரம் வளர்ச்சி பெற, விவசாயத்திலும், தொழில் துறையிலும், புதிய உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் தேவை. அதற்காகத் திட்டங்கள் வைத்திருக்கிறோம். வரியை மட்டுமே நம்பாமல், வரிக்கு நிகராக அரசின் வருமா னத்தை அதிகரிப்பது எங்கள் லட்சியம். அப்போது வரியைக் குறைக்க முடியும். அதன் பயனாக, மக்களுக்கு வரிச்சுமை குறையும். எங்கள் கைவசம், தமிழ்நாட்டினை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்துவதற் கான சிறப்பான செயல்திட்டம் உள்ளது."

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் அறிவித் துள்ள இலவசங்களை நிறைவேற்ற தமிழக அரசு கஜானா தாங்குமா?

தாங்காது. கஜானாவில் இருந்தால்தானே கொடுக்க முடியும். தமிழ்நாடு வாங்கியுள்ள கடன் உச்சத்தைத் தொட்டுவிட்டது. இனி கடன் வாங்க முடியாது என்பதுதான் நிலைமை. அரசாங்கத்தின் வருமானத்தில் 40% லஞ்ச ஊழலிலேயே போவிடுகிறது. ஆன்லைன் டெண்டர் என்கிறார்கள். ஆனால், அதிலும் லஞ்ச ஊழல்தான். நாங்கள் அந்த லஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்தப் பணம் முழுவதையும் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கொண்டுபோவோம். பொதுத்துறை நிறுவனங்களில், பணியாளர் களையே பங்குதாரர்களாக்குவோம். அதன் மூலமாக திறமை அதிகரிக்கும்; லாபமும் உயரும். மூன்றே வருடங்களில் அத்தனை பொதுத்துறை நிறுவனங்களையும் சீரமைத்து விட முடியும். விவசாயம், கனரக இஞ்ஜினீ யரிங், ஜவுளி, ஆட்டோமொபைல், தோல் தொழில்துறை போன்ற துறைகளுக்குத் தேவையான நிதி உதவி, தொழில்நுட்ப உதவி களை அளித்து மூன்றாண்டுகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மூன்று மடங்கு ஆக்க முடியும். இதன் மூலமாக பொருளாதாரம் வளர்ச்சி அடையும்; வேலைவாப்புகள் பெருகும்; குறைந்தபட்ச வருவா உயரும். அதுமட்டுமில்லாமல், அப்துல் கலாமின் கிராமப்புற வளர்ச்சிக்கு வித்திடும் ‘PURA‘ திட்டம் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் செயல்படுத்தப்படும்."

விவசாயக் கடன், கல்விக்கடன் ரத்து சரியா?

விவசாயிகளுக்கு விளைவிக்கும் பொருளுக்கு விற்பனை வாப்புகள் அதிகரித்து, லாபகரமான விலை கிடைத்தால், அவர்கள் வாங்கின கடனைத் திருப்பிச் செலுத்தி விடுவார்களே? படித்து முடித்த வர்களுக்கு, உடனடியாக நல்ல வேலை, சம்பளம் கிடைத்தால், கல்விக்கடனைத் திரும்பக் கட்டிவிடுவார்களே? இது நடக் காததால்தானே இந்தக் கடன் தள்ளுபடி அறிவிக்கிறார்கள். உர கம்பெனிகளுக்கு மானியம் தருவதற்குப் பதிலாக, விவசாயி களுக்கு மானியம் கொடுங்களேன்!

எஸ்.ஆர்.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி நெல்லில் அதிக மகசூல் எடுத்து, கலாம் கையால் விருது வாங்கிய விவசாயிகள் இருக்கிறார்களே! அந்த விவசாய முறையே ஏன் மாநிலம் முழுக்கச் செயல்படுத்தவில்லை? பயோ எரிசக்தி என்பது அப்துல் கலாம் விரும்பிய அருமையான திட்டம். நாட்டில் 60 மில்லியன் டன் பயோ எரிசக்தி உற்பத்தி செய முடியும். பயோ ஃப்யூயலை அப்படியே பயன்படுத்தினால் லிட்டருக்கு 50 ரூபா. அதை மதிப்புக் கூட்டி விமான எரிசக்தியாகப் பயன்படுத்தினால் லிட்டருக்கு 250 ரூபா. ஆனால், அதைச் செயல்படுத்த முடியவில்லை. காரணம் பெட்ரோலிய லாபி. படித்த மாணவர் களையும் விவசாயிகளாக மாற்றும் செயல் திட்டம் எங்களிடம் இருக்கிறது.

முன்னாள், இன்னாள் ராணுவத்தினருக்காக ‘மிலிட்டரி கேண்டீன்’ இருப்பதுபோல நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்கள் கேண்டீன்’ கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறது ம.நீ.ம. கட்சி. அது என்ன மக்கள் கேண்டீன்?

மக்கள் கேண்டீனில் எல்லாவிதமான பொருட்களும் கிடைக்கும். அங்கே மற்ற கடைகளைவிட விலை மலிவாக இருக்கும். தவிர, உள்ளூரில் உற்பத்தியாகும் பொருட்களை அங்கே விற்பனை செயவும் ஏற்பாடு செயப்படும். சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செயும் பொருட்களை அங்கே விற்பனை செயலாம். இதனால் பொருளா தாரம் குறிப்பாக கிராமப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்."

தற்போது வெளியாகும் கருத்துக் கணிப்புகள் தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கின்றனவே?

மீடியா, பணம் எல்லாம் அவர்களிடம் இருக்கிறது. சாதகமான கணிப்புகளை வெளியிடுகிறார்கள். எம்.ஜி.ஆரை விட எடப்பாடிக்கு அதிக கூட்டம் சேருகிறது; கலைஞரைவிட ஸ்டாலினுக்குக் கூட்டம் வருகிறது. எல்லாம் பணம் கொடுத்து அழைத்துவரப்படும் கூட்டம். அந்தக் கூட்டங் களைக் கூர்ந்து கவனியுங்கள். மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பார்கள். தலைவர்கள் மேடையில் இருந்து பேசிக் கொண்டிருப்பார்கள். மீடியாவில் கூட்டத் தைக் காட்டி, மாய பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தலைவர்களின் இயலாமை, அதிகார பலம், பண பலம், ரவுடியிசம், அடிமைத்தனம் எல்லாவற்றையும் பொது மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முடிவுதான் இறுதியானது. தமிழ்நாட்டில் அமைதிப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்று மக்களின், குறிப்பாக மகளிரின், இளைஞர்களின்,விவசாயிகளின் நம்பிக்கை மக்கள் நீதி மயம்தான்."

பா.ஜ.க. இந்தத் தேர்தலில் மினிமம் 10 இடங்களில் ஜெயிக்க நினைக்கிறது. ம.நீ.ம.வின் குறைந்தபட்ச இலக்கு என்ன?

இந்தியா முழுக்க ஜெயித்து, நாட்டை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. ஆனால், எங்கள் லட்சியம் 120 தொகுதிகளில் வெற்றி பெறுவது. இளைஞர்கள் ஒரு மாற்றம் வரவேண்டும் என நினைக்கிறார்கள். பாரம்பரிய தி.மு.க., அ.தி.மு.க. குடும்பத்து இளைஞர்கள் மத்தியிலும் இந்த எண்ணமே இருக்கிறது. காரணம், இந்தக் கட்சிகள் சுயலாபத்துக்காக அவர்களைப் பகடைகளாகப் பயன்படுத்துகின்றன. கட்சி உறுப்பி னர்கள் அல்லாத பொதுமக்கள் வாக்குகள் தான் எங்களின் பெரிய பலம். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த பொது மக்களில் 30%ம், தி.மு.க.வுக்கு வாக்களித்த பொது மக்களில் 20%ம், இவர்களுக்கு வாக்களிக்காதவர்களில் 30%ம் எங்களுக்கு வாக்களித்தாலே போதும், எங்கள் வெற்றி உறுதி. அதை நோக்கித்தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். முடிவு எப்படி இருந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு, தேர்தலுக்குப் பின்னரும் தொடர்ந்து உழைப்போம்."

மக்கள் நீதி மயத்துக்குப் போட்டால், நம் வோட்டு வீணாகிவிடும். பிடித்த கட்சிக்கு வாக்களித்து, ஜெயிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் பிடிக்காத கட்சியின் வெற்றியைத் தடுக்கக் கூடிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மக்கள் மன ஓட்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

மக்கள் இப்படி நினைத்துக் கொண்டு இருப்பதால்தான் நாம் 50 வருடங்களாக அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று தமிழ்நாட்டில் சின்னக் குழந்தையின் தலையில் கூட கடுமையான கடன்சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. அரசாங்க வேலையோ, டிரான்ஸ்பரோ வேண்டுமென்றால் லட்சக் கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. இதெல்லாம் மாற வேண்டும் என்றால், மக்களும் மாற வேண்டும், மாற்றம் கொண்டு வருவதற்கான கடமையை ஆற்றவேண்டும்."

ரஜினி, கமலுக்கு ஆதரவு தெரிவிப்பாரா?

கமலும், ரஜினியும் நெருங்கிய நண்பர் கள்! ரஜினி எனக்கும் நண்பர்தான். ரஜினி விரும்பும் நல்ல லட்சியத்துடன் கூடிய நல்லாட்சியை எங்கள் தலைவர் கமல் நிச்சயம் தருவார். எனவே, ரஜினி எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். முடிவு ரஜினி கையில்தான் இருக்கிறது."

Post Comment

Post Comment