வாழணும் அவ்வளவுதான்அமிர்தா -காஞ்சிபுரத்தில் வசிக்கும் சிவானந்தன் (38) என்ற இயற்பெயர் கொண்ட வழிப்போக்கன், கலைஞர்களிலேயே வித்தியாசமானவர். 4000க்கும் மேற்பட்ட போட்டோக்களை எடுத்து இருக்கும் இவர் ஒரு இண்ட்டீரியல் டிசைனர் மற்றும் பாஷன் போட்டோகிராஃபி செய்பவர்.

உங்கள் போட்டோக்களில் ஒரு தனிமையின் சாயல் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறதே சரிதானே? என்று கேட்டதுக்கு... ஆம்... நான் திருமணம் செதுகொள்ளவில்லை. அது என்னைக் கட்டுப்படுத்தும் என்பதால். நிரந்தர வேலைக் குள்ளும் என்னைப் பிணைத்துக்கொள்ள மாட்டேன். நேரத்துக்குத் தகுந்தாற்போல் என் மனநிலைக்குத் தகுந்தாற்போல் சூழலுக்கு ஏற்ப நான் வேலைகளை மாற்றிக்கொள்பவன். ஓவியம், அட்டை வடிவமைப்பு, செதுக்குதல், இப்படி... விழா, மக்கள் கூட்டம், கல்யாணம், நூல் வெளியீடு... இதெல்லாம் எனக்கு அலர்ஜி. அதாவது கூட்டம் தவிர்ப்பவன் நான். நான் தனிமையானவன், தனித்துவமானவன். அதனால் நண்பர்கள் குறைவு. அது என் போட்டோக்களிலும் எதிரொலிக்கும்" என்று சொல்லும் வழிப்போக்கனிடம், ஏன் இந்தப் புனைபெயர் என்றதுக்கு, காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில் வழிப்போக்கன் மண்டபம் என்று இருக்கும் அங்கு உட்கார்ந்துதான் நான் என் பிளாக்கில் உளவியல் சார்ந்த கட்டுரை எழுதுவேன். என் மன அமைப்பும் அப்படியானது என்பதால், வழிப் போக்கன் என்பதே என் பெயராக வைத்துக்கொண்டேன்" என்கிறார்.

நான் என்பதை எல்லோரும் இழக்க வேண்டும் என்பார்கள். நான் என்பதை இழப்பதை நான் விரும்புவது இல்லை. வேண்டுமானால் என் எனது என்பதை இழக்கலாம். நான்தான் வாழ்க்கை என்று சொல்லும் வழிப் போக்கனிடம் போட்டோகிராஃபி தான் உங்க ஜீவிதமா? என்று கேட்டால், இல்லை. பிழைத்தல் வேறு வாழ்தல் வேறு. போட்டோகிராஃபி எனக்கு வாழ்தல்" என்றவரிடம், உங்கள் எதிர்கால திட்டம் என்ன? கேட்டதும், எந்தத் திட்டமும் இல்லை. வாழணும் அவ்வளவுதான். நான் இந்த உலகில் யாருக்கும் போட்டியாளன் இல்லை. போட்டிபோட நான் பிறக்கல, வாழவே பிறந்திருக் கேன்" என்று வாயை மூட வைத்து விட்டார் இந்தப் புகைப்படக் கலைஞன் வழிப்போக்கன்.

Post Comment

Post Comment