இலக்கு பணமல்ல வெற்றிதான்



கருமாண்டி -



‘ரொம்பச் சந்தோசமா இருக்கு. என்ன சொல்றதுன்னே தெரியல. எனக்கு மீடியா தொடர்ந்து கொடுக்குற சப்போர்ட்டுக்கு நன்றி. ‘அசுரன்’ எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கு. தாணு சார், வெற்றிமாறனுக்கு ரொம்ப நன்றி’ என்றார்.

- தனுஷ்

2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ்ப் படமாக ‘அசுரன்’ திரைப்படம் தேர்ந் தெடுக்கப்பட்டது. ‘சிறந்த நடிகர்’ என்ற விருது இம்முறை தனுஷுக்குக் கிடைத்துள்ளது. அந்த மகிழ்வைக் கொண்டாடும் விதமா ‘அசுரன்’ பட இயக்குனர் வெற்றிமாறனுக்கு சமீபத்தில் எளிய விழா நடைபெற்றது. அப்போது வெற்றியாளர்கள் பேசியதிலிருந்து...

இன்றைய சூழலில் தம்பி வெற்றிமாறனை அறிமுகப்படுத்தியது தம்பி தனுஷ்தான். தனுஷ் தம்பி சொல்லும்போது வெற்றியோடு நாம் பண்ணுவோம் என்றார். வருங்கால இயக்குநர்கள் வெற்றியைப் பின்பற்ற வேண்டும். ஒரு கட்டத்தில் திட்டமிட்டபடி வேலைகள் நடக்காததால் வெற்றி மாறன் என்னிடம் ‘சார் இந்தப் படத்திற்காக வாங்கிய பணத்தைத் தந்துவிடுகிறேன்’ என்று சொன்னார். தேதி குறிப்பிட்ட பின் அவர் தன்னை வருத்தி வேலை செதார். அவரிடம் இருக்கும் உழைப்புதான் அவரை உயர்த்துகிறது. படத்தின் எடிட்டிங் நேரத்தில் அவருக்கு சிக்குன்குனியா நோ வந்துவிட்டது. ஆனாலும் அதைத் தாங்கிக் கொண்டு வேலை செதார். அவரின் இலக்கு பணமல்ல வெற்றிதான். அதுக்குத்தான் அவருக்கு ‘வெற்றிமாறன்’ என்ற பெயர்.

வெற்றிமாறனின் உழைப்புக்கு நான் என்றும் உதவியாக இருப்பேன் என்றும் அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன். இன்னும் இந்தப் படத்தில் நிறையபேர்களுக்கு விருது கிடைத் திருக்க வேண்டும். குறிப்பாக ஜீ.வி. பிரகாஷுக்கு இசைக்குக் கிடைக்கும் என்று நம்பினேன். நடிகர் தனுஷுக்கு இந்த விருது கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் ரவுண்டிலே தனுஷுக்கு விருதை எடுத்து வைத்துவிட்டார்கள். 1992-ல் பாலுமகேந்திரா எனக்கு ஒரு விருது வாங்கிக் கொடுத்தார். அதன்பிறகு தம்பி வெற்றிமாறன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதற்காக நடிகர் தனுஷுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்று இயக்குனர் வெற்றிமாறனையும் தனுஷையும் சிலாகித்தார் கலைப்புலி எஸ்.தாணு.

அதன் பின் வெற்றிமாறனிடம் தேசிய விருது குறித்து கேட்டபோது...

ஒரு படம் பண்ணும்போது அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு மேடை கிடைக்கும். ஆனால், எங்களுக்கு ரெண்டு மேடை கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சமூகநீதிக்கான ஓர் உரையாடல் இருந்தது. அதேநேரம் இந்தப் படத்தை மெயின் ஸ்ட்ரீம் படமாகப் பண்ணவும் செய்தோம்.

இந்த மாதிரியான விருது, படத்தில் உழைத்தவர் களுக்கு ஓர் உற்சாகம் தரக்கூடியது. மீடியா இந்தப் படத்தைக் கொண்டு சேர்த்தது. வணிக வெற்றிக்கு மீடியா ஒத்துழைப்பு கொடுத்தது. ஒரு படம் நல்லா வரும்னா அது தன்னைத் தானே சரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இந்தப் படத்தில் எனக்கு நிறைய சப்போர்ட் கிடைத்தது. என் மனைவி, அக்கா, அப்பா, குழந்தைகள் மற்றும் என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. என் உதவி இயக்குநர்கள் மிகுந்த மனபலம் வாந்தவர்கள். என் எமோஷ்னல் கோபத்தை எல்லாம் தாங்கிக் கொள்வார்கள். என் கேமராமேன் வேல்ராஜ் ரொம்ப நேர்த்தியாகச் செதிருந்தார். ஜீ.வி. பிரகாஷ் பேக்ரவுண்ட் சாங்ஸ் ரொம்ப ஸ்பெஷலா இருந்தது. ஜாக்சன் நான் தயாரிப் பாளரிடம் போடுற சண்டையை அவர் போட்டு விடுவார். அவருக்கும் நன்றி. ராமர் மேடைக்கு வந்தாலே பயம்... எடிட்டிங் வேலையை அவர் எனக்காகக் காத்திருந்து காத்திருந்து செதார். அவருக்கு நன்றி. நடிகர்கள் எல்லாருமே எனக்குக் கிடைத்த கிப்ஃட். கென் தான் இந்தக் கதைக்கு முதல் தொடக்கம். சிவசாமிக்காகக் கூட ரெண்டு மூணு பேரிடம் போ... அதன்பின்தான் தனுஷ் வந்தார். என்னை தனுஷ் நன்றாக ஊக் கப்படுத்தினார். மஞ்சுவாரியார் நடிப்புதான் இந்தப் படத்தைக் குடும்பத்திற்கான படமாக மாற்றியது. தனுஷ் எப்போதும் போல என்னை நம்பி நடித்தார். தனுஷிடம் கதை சொன்னதும் ‘மகன் கேரக்டர் யார்’ என்று கேட்டார். அதுவே ஆச்சர்யமாக இருந்தது. தாணு இந்தக் கதையை நாலு பக்கம் படித்துவிட்டு ஓ.கே பண்ணுவோம் என்றார். ரொம்ப ஸ்ட்ரெஸ்புல் வொர்க்காக இருந்தது. குறிப்பாக டப்பிங்கில் எல்லாம் என்னால் முழுதாக இருக்க முடியவில்லை. நம் வார்த்தையை நம்பி பணம் போடுபவர்களுக்கு நாம் திருப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும். அதை நான் கவனமாகக் கையாண்டு வந்தேன்." ‘தாணு சார் இந்தப் படத்திற்குக் கிடைத்தது தான் இவ்வளவு பெரிய இடத்திற்குப் போனதற்குக் காரணம்’ என்று பெரும் நன்றி பட்டியலை வாசித்தார்.

எடிட்டர் ராமரிடம் படம் குறித் தான அனுபவத்தைக் கேட்ட போது, தனுஷ் அந்தக் காலில் விழும் காட்சியை எடிட்டிங்கில் பார்த்ததும் படம் ஹிட் எனச் சொன்னேன்.வெற்றிமாறன் படம் முடியும் தறுவாயில் பெரும் சங்கடத்தில் இருந்தார். ஆனால், அதை அவர் வெளியில் காட்டவேயில்லை. நான் அந்த நேரத்தில் அவருக் காக கடவுளை வேண்டி னேன். ஆனா பாருங்க... ராமர் என்ற பெயர் இருந்தும் எனக்கு விருது கிடைக்கவில்லையே என்று கலாத்தார்.

Post Comment

Post Comment