மணக்கோலம் காட்டியருளும் மால்மருகன்!


தரிசனம்
தனுஜா ஜெயராமன் -குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்’ என்பதற்கேற்ப, சென்னை புறநகர் குன்றத்தூர் மலைக் குன்றின் மீது, வள்ளி, தெவானை சமேதராக ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருமணக் கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை ஒருபுறமிருந்து தரிசித்தால் வள்ளி சமேதராகவும், மறுபுறமிருந்து தரிசித்தால் தெவானை சமேதராகவும், நேராக நின்று தரிசித் தால் ஸ்ரீ சுப்ரமணியசுவாமி மட்டும் காட்சி தருவதும் விசேஷம்.

இந்தக் கோயிலில் தம்பதி சமேதராக அருள்பாலிக் கும் ஸ்ரீ சுப்ரமணியசுவாமி, வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறையின் இருபுறமுள்ள துவாரபாலகர்கள் முருகப்பெருமானைப் போலவே வஜ்ரம், சூலாயுதத்தோடு காட்சி தருகின்றனர். கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்கை ஆகியோருக்குச் சன்னிதிகள் உள்ளன. பிராகார வலம் வருகையில் காசி விஸ்வநாதர்-விசாலாட்சி, விநாயகர், பைரவர், நாகர், நவக்கிரகங்களுக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. முருகப்பெருமானுக்கு செயப்படும் அபிஷேக விபூதியே பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.

திருப்போரூரில் அசுரர்களை போரில் வென்ற ஸ்ரீ சுப்ரமணியர் மனம் குளிர்ந்து, திருத்தணிகை செல்லும் வழியில், குன்றத்தூர் மலைக்குன்றில் தங்கி சிவபெருமானை நோக்கி தியானம் செதார். பிற் காலத்தில் இப்பகுதியை ஆட்சி செத குலோத்துங்க சோழன் முருகப்பெருமான் தங்கிய இந்தக் குன்றில் ஒரு கோயிலை நிர்மாணித்து வழிபட்டார். முருகப் பெருமான் வழிபட்ட சிவலிங்கம் குன்றின் அடிவாரத்தில், ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் காட்சி தருகிறது.

இந்தத் திருக்கோயில் 84 படிகள் கொண்ட மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. மலைப்பாதையின் நடுவே அருள்பாலிக்கும் வலஞ்சுழி விநாயகர் தடை களை நீக்கி அருளும் வரப்ரசாதியாகத் திகழ்கிறார். மலை மீது மூன்று நிலைகளோடுகூடிய ராஜ கோபுரமும் அழகான கொடிமரமும் பக்தர்களை வரவேற்கிறது. இக்கோயில் மண்டபத்தில் அமைந்த அரச மரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் அருள்புரிகிறார். அதே போல், தல விருட்சமான வில்வ மரத்தின் அடியில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். திருக்கல்யாண மண்டபம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் என கோயில் மூன்று நிலைகளாக அமைந்துள்ளது.

பெரிய புராணம் படைத்த சேக்கிழார் பெருமானின் அவதாரத் திருத்தலம் இது. மலையடிவாரத்தில் அவருக்கு ஒரு தனிக் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் குரு பூஜையின்போது மலையில் இருந்து முருகப்பெருமான் இறங்கி வந்து சேக்கிழாருக்குக் காட்சி தருவது ஐதீகம்.

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தம்பதி சமேதராக திருமணக் கோலத்தில் காட்சி தருவதால் நீண்ட நாட்கள் திருமணம் தடைபடுவோர் இத்தல முருகப் பெருமானை வேண்டிக்கொள்ள, விரைவில் திருமணம் கைகூடுவதாகக் கூறுகின்றனர். அப்படித் திருமணம் கைகூடுவோர், சுவாமிக்கு திருக்கல்யாணம் செது வைத்தும், வஸ்திரம் அணிவித்தும், அபிஷேகம் செதும் நேர்த்திக்கடன் செலுத்து கின்றனர்.

மேலும், நெடுங்காலம் குழந்தைப் பேறு இன்றி வருந்து வோர் இத்தல முருகப் பெருமானிடம் வேண்டிக்கொள்ள, அவர்களுக்குப் பிள்ளைப் பேறு வாப்பதாகவும் அனுபவத்தில் உணர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதற்கு, இங்குள்ள அரச மரக் கிளையில் கட்டி தொங்கவிடப் பட்டுள்ள ஏராளமான தொட்டில் களே சாட்சியாக விளங்குகின்றன. குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

இது தவிர, சிறு குழந்தைகளுக்கு உண்டான உடல் உபாதைகள் குணமாக வேண்டிக்கொள்ளும் பக்தர்களும் ஏராளமானோர் உண்டு. வேண்டுதல் நிறைவேறி, குழந்தையின் உடல் நிலை சீரானோர் தவிடு மற்றும் வெல்லத்தை காணிக்கையாகச் செலுத்த, கந்தக் கடவுள் அந்தக் குழந்தையை எந்தக் குறையுமின்றி காப்பார் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.

வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் போன்ற திருநாட்கள் இக்கோயிலில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது. இவற்றில் கந்த சஷ்டி விழா எட்டு நாட்கள் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. இந்தத் திருவிழாவின் ஏழாவது நாள் வள்ளி திருமணம், எட்டாவது நாள் தெவானை திருமணமாக அனுசரிக்கப்படுகிறது.

அதேபோல், பங்குனி உத்திரம் முருகப்பெரு மானுக்குரிய தினம் என்பதால் இந்த விழாவும் விசேஷமாகக் கொண்டாடப்படு கிறது. பங்குனி உத்திரத்தன்றுதான் முருகப்பெருமான் தெவானையை கரம் பிடித்தார். இக்கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவில் கலந்து கொண்டு, ஸ்ரீ சுப்ரமணியசுவாமி யின் அருளைப் பெறுவோம்.

அமைவிடம் : சென்னை, தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் குன்றத்தூரில் அமைந் துள்ளது. நிறைய பேருந்து வசதி உண்டு.

தரிசன நேரம் : காலை 6.30 முதல் பகல் 12.30 மணி வரை. மாலை 4 முதல் இரவு 8 மணி வரை.

Post Comment

Post Comment