புவனம் ஆளும் ஸ்ரீ புவனேஸ்வரி!


மஹா பலன் தரும் தசமஹா வித்யா! 5
சுவாமி ஆத்ம சைதன்யா -தசமஹா வித்யா தேவியரில் நான்காவது இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கக்கூடியவள் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி! அன்னையின் பத்து வடிவங்களில் நான்காவதாகக் கூறப்படுவது ஸ்ரீ புவனேஸ்வரி வடிவமாகும்.

ஜீவர்கள் தாம் சந்திக்கும் இரவு பொழுதைப் போல பரம்பொருளாகிய சிவனும் ஒரு இரவைச் சந்தித்தார். எந்த இரவில் ஜீவர்களுக்கான செயல்கள் அனைத்தும் நின்று விடுகின்றனவோ அந்த இரவை சிவராத்திரி என்று அழைப்பர். சிவராத்திரியில் சிவனுக்கு யாதொரு செயலும் இல்லாததால் மஹா பிரளயம் ஏற்பட்டு மாயை மட்டும் எஞ்சியது. அந்த சிவனின் ராத்திரி தேவதையே இந்த புவனேஸ்வரி என்று, ‘தேவி புராணம்’ கூறுகிறது.

உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்கு முன்பு தாம் வசிப்பதற்கு ஒரு இடம் வேண்டுமென்று நினைத்தாள் ஸ்ரீ புவனேஸ்வரி. அதனால் பிரம்ம லோகம், கயிலாயம், வைகுண்டம், பூலோகம் முதலிய லோகங்களின் மேற்பகுதியில் சர்வ லோகம் என்று அழைக்கப்படும், ‘மணித்வீபத்தை’ படைத்தாள். இந்த மணித்வீபத்துக்கு சமமான உலகம் வேரெங்கும் கிடையாது. இது எல்லா உலகத்துக்கும் மேலே குடையாக அமைந்தது.

அமிர்த கடல் சூழ்ந்திருக்கின்ற இந்த ஒப்பற்ற மணித்வீபத்தில் சிவந்த மாலை, சிவந்த ஆடை,சிவந்த உதடுகளுடன் விளங்குகிறாள் அன்னை புவனேஸ்வரி. சிவந்த கண்களையும் அழகிய முகத்தையும் கொண்ட இவள், கோடி மின்னல் கொடிகளின் ஒளியையும் லட்சுமி தேவியின் அழகு தோற்கும்படியான பேரழகோடும், பிரகாசத்தோடும் விளங்குகிறாள்.

ஒரு முறை திருமால், மற்ற இரு மூர்த்திகளிடமும், நமக்கெல்லாம் மூலமாக இருப்பவள், மஹா மாயா யோகிகளால் அடையத்தக்கவள் இவளே. மற்றவர்களால் அடைவதற்கு அரியவள். பகவானின் இச்சா வடிவமும் இவளே" என்று கூறினார்.

முன்பொரு சமயம் மும்மூர்த்திகளும் மணித்வீபம் சென்று அன்னையின் திருவடிகளைத் தொழுவதற்கு முயன்றபோது அன்னையின் திருவடிகளிலுள்ள பளிங்கு போன்ற நகங்களில் அண்ட சராசரங்கள், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், வாயு, அக்னி, யமன், சூரியன், வருணன், சந்திரன், திதிவேஷ்டா, குபேரன், இந்திரன் முதலான தேவர்களும், மலைகள், டல்கள், நதிகள், கந்தர்வர்கள், அப்சரஸ், அஸ்வினி தேவர்கள், அஷ்ட வசுக்கள், சாத்தியர்கள், சித்தர்கள், பித்ருக்கள், அனந்தன் முதலான அஷ்ட நாகங்கள், ராட்சசர்கள், கயிலாயம், ஸ்ரீவைகுண்டம், பிரம்ம லோகம் முதலிய அனைத்தையும் கண்டனர். இவற்றையெல்லாம் கண்டதும், இவளே உலகத்தின் தாய் என்று உணர்ந்து, அன்னையின் அருகில் இருந்து நூறு வருடங்கள் பணிவிடை செய்து மகிழ்ந்தனர்.

இதனால் மகிழ்ந்த அன்னை புவனேஸ்வரி தேவி, அகங்காரம் உள்ளிட்ட ஏழு குணங்களைக் கொண்ட மஹா தத்துவத்தை பிரம்மனிடம் கொடுத்து, இதிலிருந்து பஞ்சபூதங்களை உண்டாக்கிக்கொள்" என்று கூறினாள். மேலும், ரஜோ குணம் கொண்டு, வெள்ளாடை தரித்து புன்னகையுடன் விளங்கும் மஹா சரஸ்வதி என்னும் சக்தியை தன்னிடமிருந்து பிரித்து பிரம்மனிடம் அளித்தாள். இவள் என்னுடைய அனுபூதி. இவளை இனி எப்போதும் நீ கௌரவிக்க வேண்டும். இவளுடன் சத்திய லோகம் சென்று படைப்புத் தொழிலைத் துவங்கு" என உத்தரவிட்டாள். மேலும், சத்வ குணத்தவனான விஷ்ணுவை எப்போதும் கௌரவிக்க வேண்டும் என்றும், அவரே ஆபத்து காலங்களில் பல அவதாரங் கள் எடுத்து உங்களைக் காப்பார்" எனவும் கூறினாள். ‘நவாக்க்ஷர’ மந்திரத்தை எப்போதும் ஜபம் செய வேண்டுமென்றும் அதனால் விருப்பங்கள் அத்தனையையும் நிறைவேற்ற முடியும் என்றும் கூறி பிரம்மனை சத்திய லோகம் அனுப்பி வைத்தாள்.

பின்னர் தனது உடலிலிருந்து இச்சா சக்தியை பிரித்தெடுத்து மஹாலட்சுமியாக உருவாக்கி மஹா விஷ்ணுவிடம் கொடுத்து, இவளே மஹாலட்சுமி. இவளை உனது வலது மார்பில் தாங்கிக்கொள். இவள் என்றும் உன்னை விட்டு நீங்காமல் இருப்பாள். இவள் அனைத்து மங்களத்தையும் தரவல்லவள்" என்று கூறி மஹாலட்சுமியை மஹாவிஷ்ணுவிடம் ஒப்படைத்தாள்.

அடுத்ததாக, தன்னிடம் உள்ள ஞான சக்தியை பிரித்தெடுத்து மகேஸ்வரியாக-மகாகாளியாக உருவாக்கி சிவபெருமானிடம் கொடுத்து, உன்னுள் பாதியாக இவளை ஏற்றுக்கொள். இவளே ஞானசக்தி. இவளை மிக கௌரவமாக நீ வைத்திருக்க வேண்டும். கயிலாயத்தில் அமர்ந்து உன்னுடைய மறைவு தொழிலை செ. சதாசர்வ காலமும் புவனேஸ்வரி மந்திரத்தை ஜபம் செதுகொண்டே இரு" என்று கூறினாள். பின்பு சரஸ்வதி, லட்சுமி, மகேஸ்வரி மூவரையும் பார்த்து, இவர்கள் மூவரும் என்னுடைய குணங்களில் உதித்தவர்கள். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பேதம் பார்ப்பவர்கள் நரகத்தை அடைவர்" என்று கூறி மூவரையும் அவரவர் லோகங்களுக்கு அனுப்பி வைத்தாள். மூவரும் அங்கிருந்து திரும்பி அவரவர் சக்திகளோடு அவரவர்களின் லோகங்களில் அன்னையினுடைய மூல மந்திர ஜபத்துடன், அவரவர் தொழிலை இன்றுவரையிலும் செது வருகிறார்கள்.

புவனேஸ்வரி என்னும் திருநாமத்துக்கு, ‘புவியின் தலைவி’ என்று பொருள். புவி என்பது நம் வாழும் இடத்தைக் குறிப்பதால், இவள் பூமியாக விரிந்த சக்தியாவாள். எவ்வாறு ஒரு தா தன்னுடைய குழந்தைகளை தனது மடியில் வைத்துக் கொஞ்சி மகிழ்வாளோ, அவ்வாறு அன்னை புவனேஸ்வரியும் தன்னுடைய மடியாகிய பூமியில் நம்மைக் கிடத்தி மகிழ்கிறாள்.

இந்த புவனம் முழுவதும் புல், பூண்டு, மரம், பறவை, மிருகம், பாம்பு, மனிதன் போன்ற ஜீவராசிகளை படைத்தவள் இவளே. இந்த ஜீவராசிகளுக்கு உருவமும், பெயரையும் கொடுத்தவள் இவளே. இயற்கை என்னும் பெயருடன் தியாகம் என்னும் வடிவமுடன் விளங்குகிறாள். அன்னையின் மேலிரு திருக்கரங்களில் பாசமும், அங்குசமும் தாங்கியிருக்க, கீழிரு திருக்கரங்களில் அபயமும், வரதமும் தாங்கு கிறாள். தனது இடது காலை மடித்தும், வலது காலை தாமரை மலர் மீது வைத்திருக்கிறாள். இவளது மூல மந்திரம், ‘க்ரீம்’ என்பதாகும். இது சிந்தாமணி பீஜம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இவளது மந்திரம் நினைத்தது அனைத்தையும் கொடுக்கவல்லது. இந்த அன்னை சுக்ல துவாதசி திதியில் பிறந்தவள். அன்னையினுடைய இரவு, ‘சித்த ராத்திரி’ என அழைக்கப்படுகிறது. நமது உடலின் இருதய பாகத்தில் இருப்பவள் இவளே.

‘எல்லா உயிர்களையும் காக்கும் தலைவியாக புவனேஸ்வரி விளங்குகிறாள்’ என்று வாயு புராணம் கூறுகிறது. அன்னையின் கையில் இருக்கும் அங்குசம் குரோதம் என்பதாகும். இந்த குரோதத்தை மிகப்பெரிய முனிவர்கள் கூட கட்டுப்படுத்த முடியாமல் துன்பத்துக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்ட குரோதத்தை தனது கட்டுக்குள் வைத்துள்ளவள் இவளே என்று, ‘பிரபஞ்ச தந்திரம்’ கூறுகிறது. பதினான்கு உலகமும் இவளுக்கு சொந்தம் என்பதால் இவளுக்கு, ‘புவனேஸ்வரி’ என்று பெயரிடப்பட்டது என்று, ‘தட்சிணாமூர்த்தி சம்ஹிதை’ கூறுகிறது. புவனேஸ்வரியின் திரிகுண, ஷட்குண, திருபாதகுண யந்திரங்களில் முக்கோணங்களில், ‘ஹரிஹர’ என்ற இரண்டு நாமங்களை எழுத வேண்டும் என்பதால் ஹரியின் அம்சமாகவும், ஹரனின் அம்சமாகவும் விளங்குகிறாள் என்று, ‘சாரதா திலகம்’ புகழ்ந்து உரைக்கிறது.

புவனேஸ்வரியின் வழிபாடுகளை அவள் திருவடிகளைத் தொழுது அவளுடைய மந்திரங்களை பன்னிரெண்டு லட்சம் முறை ஜபம் செது, இனிப்பு பால் பாயசத்தால் ஹோமம் செதால் சகல சித்திகளும் உண்டாகும்.

அன்னையின் தியானம் :

‘பாஸ்வத்ர ரத்ன மௌலீஸ்புரத் ருத ருதஸ்சே சரோரோகாம்

சத்யசம் தப்த காத்ர ஸ்வரக மானசீயக பாஸ்சுராவி ப்ராபாவி

விஷ்வா காசாவ காசம் ஜுரய அசிதிரம் பாசாங்குச இஸ்ட்ட

பீதினம் பங்கி துங்கஸ் தமனாது ஜெகத் மாதுர் கனம் மௌவ்னா’

‘பிரகாசிக்கின்ற ரத்தினங்களாலான கிரீடத்தில் மின்னும் சந்திரனின் அழ கிய கலையை அழகுற செவதும், உருக்கிவிட்ட பொன் செந்தாமரையை செங்கதிர் போன்று பிரகாசிக்கின்ற கதிர்களால் ஆகா யத்தின் எல்லா பகுதிகளிலும் பாசம், அங்குசம், அபயம், வரதம், நிமிர்ந்த ஸ்தலம் உற்றவளுமாகிய ஜகன்மாதா புவனேஸ்வரி எங்களைக் காக்கட்டும்’ என்பது இந்த தியான ஸ்லோகத்தின் பொருள்.

காயத்ரி மந்திரம் : ‘ஓம் நாராயணிஸ வித்மஹே புவனேஸ்வரிஸ தீமஹி தன்னோ தேவி ப்ரச்சோதயாத்’அன்னை புவனேஸ்வரி யின் மந்திரம் நிறைவானது.

நீக்கமற நிறைந்தது. அன்னையை குங்குமப்பூ கற்பூரக் கலவை கொண்டு மந்திரித்து வழிபட, ராஜ வசியம் உண்டாகும். தேன், சர்க்கரை, அரிசி மாவு, நெ கலந்து அன்னையின் உருவத்தை பிராண பிரதிஷ்டை செது பூஜித்து, அந்த மாவை சாப்பிட்டு வந்தால் அரசியலில் மிகப் பெரிய பங்கு வகிக்கலாம்.

ஸ்ரீ புவனேஸ்வரி தேவி யின் வரலாற்றைக் கூறும் பொழுதும், கேட்கும் பொழுதும், மந்திரங்களை உபாசிக்கும்பொழுதும் வாயில் வெற்றிலை இல்லா மல், தலைப்பாகை இல்லா மல் இருக்க வேண்டும். தலை முக்காடிட்டிருப்பது விசேஷம். வடக்கு திசை அல்லது மேற்கு திசை பார்த்து நெ தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அன்னைக்குப் பிடித்த பால் பாயசம் வைத்து வழிபடவேண்டும் என்று,‘சாக்த உபாசனை’ கூறுகிறது. சாக்த உபாசகர்கள் தேவியை வழிபடும்பொழுது சிவப்புப் பட்டாடை உடுத்தி வழிபட வேண்டும்.

(தொடரும்)

Post Comment

Post Comment