பானகமும் கொழுக்கட்டையும்!


நீயல்லால் தெய்வமில்லை! 18
ஆத்மார்த்தி -சின்ன வயதில் இருந்தே குடும்பமாகவும் கூட்டமாகவும் ஒவ்வொரு பண்டிகையாகக் கொண்டாடத் தொடங்கியது இனிய ஞாபகமாக மனதில் பதிந்திருக்கிறது. பண்டிகைகள் அழகானவை. அவற்றோடு உள்ளிணைந்து இருக்கக்கூடிய பாவனை கள், ஒழுங்கு முறைகள், காத்திருத்தல், செமுறை, நிகழ்கணம் என்று எல்லாவற்றிலுமே அடுக்கடுக்கா அர்த்தங்கள்.

எனது பாட்டி ஸ்ரீராம நவமி அன்று நீர் மோரும் பானகமும் நைவேத்தியம் செவார்கள். பானகம் இந்த உலகத்தில் மனிதன் தயாரிக்கக்கூடிய அற்புத மான பானங்களில் ஒன்று. இனிப்பும் நீர்மமும் கலக் கப்படும்போது அளவு மிக முக்கியம். என்ன விகிதாச் சாரத்தில் அவற்றைக் கலக்க வேண்டும் என்பதுதான் சூட்சுமம். ஒவ்வொரு பதார்த்தம் செயும்போதும் ருசி பார்த்து, அதற்கேற்ப தயாரிப்பது என்பது சமையலில் காணப்படுகிற ஒரு வழிமுறை. ஆனால், தெவத்துக்கு படைக்கையில் நைவேத்யம் என்பது ருசி பார்த்து, அதற்கேற்ப திருத்தி மாற்றி ஏற்றி இறக்கி செவதல்ல. இதுதான் பக்தியின் பின்னே இருக்கக் கூடிய தாத்பரியம். எது செதாலும் அதனை கண் கொண்டு அளவெடுத்து அதற்கேற்ப மனத்திலிருந்து உப்பும் சர்க்கரையும் இன்னபிறவும் போட்டுக் கலந்து செது இறக்கி, கடவுளுக்குப் படைத்து அதன் பின்னரே நைவேத்தியம் பிரசாதமாக மாற்றம் பெறும் போதுதான் அதனை ருசி பார்க்கவே முடியும். கண்ணால் அளவெடுத்து, மனதால் ருசி பார்த்து செய வேண்டிய பெரிய காரியம்.

ஒவ்வொரு முறையும் அந்த பானகம் வெவ்வேறாக ருசிக்கும். ஆனால், அத்தனை இனிய வேறொரு பானத்தை நாங்கள் அருந்தியது இல்லை என்றுதான் நினைப்போம். வருடத்தில் ஒரே ஒரு தினம் வந்து செல்லக்கூடிய ஸ்ரீராமநவமி என்கிற பண்டிகையை ஒட்டி தயாரிக்கப்படும் அந்த பானகம் நினைவின் தித்திப்பாகத் தன்னை பூசிக்கொண்டு இருக்கிறது. ஆன்மிகத்தின் யதார்த்தம் புரிய வருகிறது.

பிள்ளையாரை பிடித்ததற்குப் பல காரணங்கள் உண்டு. கொழுக்கட்டை முக்கியமான ஒரு காரணம். பானகம் அமுதம் என்றால், கொழுக்கட்டை தெவீக பட்சணம். ‘விநாயகர் சதுர்த்தி என்றைக்கு வரும்?’ என்று மனசுக்குள் காத்திருந்து பாட்டியிடம், ‘என்னிக்கி விநாயகர் சதுர்த்தி?’ என்று அவ்வப்போது கேட்டு கவுன்டவுன் முறைப்படி இன்னும் ஏழு நாள், ஆறு நாள், ஐந்து நாள் என்று... நாளை இன்று ஆகி அந்த தினத்தில் பூஜை புனஸ்காரம் எல்லாம் முடிவு பெற்று, கொழுக்கட்டை கையில் கிடைப்பது பரவசம். பாட்டி முதன்முறை வெல்லக் கொழுக் கட்டையும் உப்புக் கொழுக்கட்டையும் தருவாள். உப்புக் கொழுக்கட்டை வேணாம் என்று சொன்னால் அதட்டுவாள். ரெண்டுமே கலந்துதான் சாப்பிட ணும்" என்பாள். சின்ன பசங்களுக்கு உப்பை விட இனிப்புதானே பிரதானம். அது பாட்டிக்கும் தெரியும். இருந்தாலும், எடுத்த எடுப்பிலேயே வெறுமனே இனிப்பு கொழுக்கட்டை மாத்திரம் தந்தால் பிறகு உப்புக் கொழுக்கட்டையை யார் சாப்பிடுவதாம்? முதல் ரவுண்டுதான் பாட்டி சொல்வது அரங்கேறும். அதன்பின் இரண்டாவது, மூன்றாவது சுற்றுக்கள் வெறுமனே வெல்லக் கொழுக்கட்டைதான். கொழுக்கட்டையின் சுவை வேறு ஏதாவது பண்டத்தில் இருக்குமா என்ன? என் சிறு பிராயக் கனவுகளிலெல்லாம் கொழுக்கட்டை சாப்பிடுகிற காட்சி பல முறை இடம்பெற்றது.

பிள்ளையார் குழந்தைகளின் கடவுள். அவரே குழந்தைதான். முழுமுதற் கடவுள் கணபதி என்று சும்மாவா சொன்னார்கள்? எந்தக் காரியத்தையும் விநாயகனை வணங்கி விட்டு ஆரம்பித்தல் என்பது இந்து மத அடிப்படைகளில் ஒன்று. என்னை வசீகரிக்கும் இன்னொரு சொல் உண்டு. அது, ‘இஷ்ட தெவம்’ என்பது. எத்தனையோ தெவங்கள் இருக்க, நம் மனம் நாடும் தெவத்தின் பெயர்தான் இஷ்ட தெவம் என்பது. ஊரெல்லாம்... செல்லும், திரும்பும் வழிகளெல்லாம்... தேசமெல்லாம் எளிதில் காணக்கிடைக்கிற தெவ ரூபம் விநாயகர். அவரை வணங்குதல் இனிது. மேலும், எளியது. எனது இஷ்ட தெவம் கணபதி.

மனிதன் முயற்சியை கைவிடக் கூடாது. முயற்சியின்றி எதுவும் நடக்காது என்றபோதும் தன்னை மீறிய ஒரு சக்தி தன்னோடு பிணைப்பில் உள்ளதென்பதும் தன்னை அதுதான் வழி நடத்துகிறது என்பதும் வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் மனிதனுக்கு மிகத் தேவை யான ஒரு கிரியா ஊக்கி. ‘செய வேண்டியதை நீ செ. நடக்க வேண்டியது தானே நடக்கும்’ என்பது ஒரு வகை நம்பிக்கை என்றால், ‘செய வேண்டியதை நீ செ. கிடைக்க வேண்டியதை இறைவன் உனக்குத் தருவார்‘ என்பது நம்பிக்கையின் நற்பாதை. அதுவே, ஆன்மிகம் என்னும் மறைமுறை.

பக்தியின் ஊற்றுக்கண், ‘பிள்ளையார் சுழி போட்டு எதையும் தொடங்கு’ என்று சின்ன வயதில் கற்றுத் தந்தார்கள். அது இன்றளவும் மனமகிழ்வுக்கான வாசலாகவே தொடர்ந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி என்பது எல்லா பண்டிகைகளைப் போல இன்னும் ஒரு பண்டிகை அல்ல. காலையிலேயே எழுந்து சீக்கிரமாகக் குளித்து, சைக்கிள் கேரியரில் பாட்டி கோலமிட்டுத் தந்து அனுப்பிய மரப்பலகையில் பிள்ளையாரை வாங்கி அதில் இருத்தும்போதே ஒரு ரூபா நாணயத்தை அவரது தொப்பையில் பதித்து, எருக்கம் பூ மாலை, அருகம்புல் ஆகியவற்றை அவருக்கு அணிவித்து, அதன் பின்னர் மெல்ல ஒரு குழந்தையை அமர வைத்து சைக்கிளை உருட்டி வருவது போலவே வீடு வரை பிள்ளையாரை அழைத்து வந்து, மிகப் பத்திரமாக வீட்டுக்குள் கொண்டுபோய் சேர்ப்பது வரை பக்தியின் பரவசத் தருணங்கள். வேண்டிய வரம் தரும் கடவுள் விநாயகர். மனதில் நினைத்தாலே உள்ளமெல்லாம் வியாபித்து புத்துணர்வும் நம்பிக்கையுமாக பெருக்கெடுக்கும் தெய்வம் அவர்.

‘விநாயகர் பாட்டு’ வரிசையில் எத்தனையோ ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ‘விநாயகனே வினை தீர்ப்பவனே... வேழ முகத்தோனே ஞால முதல்வனே’ என்கிற பாடலை மறக்கவே முடியாது. ‘சிந்து பைரவி’ படத்தில், ‘மகா கணபதிம்’ பாடல் உள்ளமெல்லாம் பக்தி ரசத்தில் நீந்தும்.காலத்துக்கு ஏற்ப எல்லாமே மாறுவது இயற்கை யின் நியதி. பின்பற்றுகிற முறை மாறலாமே தவிர, பின்பற்றுதல் மாறவே மாறாது. ‘உண்டு என்பார்க்கு உண்டு’ என்பதுதான் பக்தியில் ஒளிந்து இருக்கக்கூடிய ஆன்ம ரகசியம். பக்தியும் இசையும் திரைப்படங்களும் பாடல்களும் அதற்கான சூழல்களும் பாடுவோர் குரல்களும் எழுதுவோர் வார்த்தைகளும் இசையமைப் பும் காட்சிப்படுத்துதல் இன்னபிறவும் எல்லாமும் மாறிக்கொண்டே இருக்கின்றன. மக்கள் பிரியத்தோடு ஏற்றுக்கொண்ட நடிகர் வரிசையில் அஜித்குமாருக்கு முக்கிய இடம் உண்டு. சிவா இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தில் முதல் பாடலாக ஒலிப்பது, ‘வீர விநாயகா’ என்று தொடங்கும் கணபதி போற்றி பாடல்.

கதைப்படி திரைப்படம் வட இந்தியாவில் நிகழ் வதாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு டாக்ஸி ஓட்டுன ராக தனது தங்கையுடன் வாழ்ந்து வரும் கணேஷ் என்கிற கதாபாத்திரத்தில் தோன்றினார் அஜித்குமார். ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெறுகிறது. அங்கே கணபதி ஊர்வலத்தில் எல்லோரும் பக்தியில் திளைக்கும் ஆனந்த நடனம் இந்த கானம். இதனை எழுதியவர் பாடலாசிரியர் விவேகா.

இந்தச் சூழலில் தன்னை மறந்து நாயகனும் மக்கள் எல்லோரும் நண்பர்களுடன் கலந்து கொண்டு ஆடித் திளைத்து மகிழ்ந்து பாடுவதாக நிகழ்கிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போதும் பார்க்கும்போதும் நாமும் அந்தக் கூட்டத்தில் ஒருவராக கணபதியின் ஆன்மிக வெள்ளத்தில் ஒரு துளியாக நம்மை மாற்றிக் கொள்கிறோம். அப்படி மாறும் போது, அத்தனை பேதமையும் அழிந்து, எல்லாம் ஒன்றே என்கிற ஏகத்துவத்தில் கரைந்து, அருள் மழை யில் நனைய முடிகிறது. இந்தப் பாடல் தருகிற உற்சாகம் அபார மானது. இந்தப் பாடலைப் பாடிய அனிருத்தும் விஷால் தத்லானி இருவரும் இந்த யுக இளைஞர்கள். இவர்கள் தமது அதியற்புத குரல் கொண்டு இந்தப் பாடலை பாடுகிற உற்சாகமும் உக்கிரமும் ஒருங் கிணைந்து மிளிர்கிறது. மிகப் பலமான மேளதாள இசை இந்த பாடலின் மேலதிக பலமாக மாறுகிறது. வழங்கிய விதம் அட்டகாசம் என்று பாராட்டத் தகுந்த வகையில் உள்ளமெல்லாம் நிறைகிறது இந்த பாடல்...

‘வீர விநாயகா... வெற்றி விநாயகா...

சக்தி விநாயகா... பேரழகா...

தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்க்கையும்

எத்திக்கும் தோன்றிட வேணுமையா...

ஈசன் பெற்ற ஆசை மகனே

ஈடு இணையே இல்லா துணையே

நாடு நகரம் செழிக்கும்

உன்னை நாடி வந்தோர் வாழ்க்கை உயரும்...

நீ புகுந்து விளாசு... வா புகுந்து விளாசு

கொண்டாடு இது உற்சாக நேரம்...

நீ விட்டு விளாசு... வா விட்டு விளாசு

கொண்டாடு இனி கூத்தாடும் காலம்...’

நாவில் இனிக்கும் கொழுக்கட்டை போலத்தான் மனதில் இனிக்கும் இந்தப் பாடலையும் சொல்லத் தோன்றுகிறது. இதற்கு இணையும் மாற்று இல்லை என்பது வழக்கம் போல பாராட்டுவதாகத் தோன்ற லாம். ஆனால், யோசித்துப் பாருங்கள்... கொழுக் கட்டை விலைக்குக் கிடைத்தாலும் வீட்டில் சாதாரண உணவுப் பண்டங்களைப் போல் அதைச் செதாலும் எத்தனை சந்தர்ப்பங்களில் அதை வாங்கி உண்டாலும் பால்யத்தில் பதின்பருவத்தில் காத்திருந்து வருடத் துக்கு ஒருமுறை பிள்ளையார் சதுர்த்தி அன்றைக்கு பக்தியில் திளைத்து, பூஜை முடித்து அதன் பிறகு பாட்டி தருகிற அந்தப் பிரசாதம், நெவேத்தியக் கொழுக்கட்டை இனித்தது போலவா, இன்றைக்கு விலைக்குக் கிடைப்பதும் இன்ன பிறவும் இனித்து விடப்போகிறது? தெவீகத்தின் தித்திப்பு அபூர்வ மானது. அதையே இந்தப் பாடலும் மெப்பிக்கிறது

(மேலும் வலம் வரும்)

Post Comment

Post Comment