புகழ் தேடித்தரும் ஸ்ரீ புலீஸ்வரி!


பரிகாரத் திருக்கோயில்
பொ.பாலாஜிகணேஷ் -ஒரு திருக்கோயில் கருவறையில் ஒரு மூலவரை மட்டும்தானே தரிசிப்பது வழக்கம். ஆனால், ஒரு கருவறையில் ஏழு அம்மன்களை ஒரே சமயத்தில் தரிசிக்கும் திருத்தலம் நாகை மாவட்டம், நூபர நதிக்கரையில் (கொள்ளிடம் ஆற்றங்கரையில்) அமைந்துள்ளது. அது, அருள்மிகு புலீஸ்வரி அம்மன் கோயிலாகும். இக்கோயில் கருவறையில் ஏழு மூலவர் அம்மன் திருச்சிலைகளை ஒருசேர தரிசிப்பது விசேஷம்.

கருவறையில் அன்னை ஸ்ரீ புலீஸ்வரி மூலவராக சங்கு, சக்கரம் தாங்கி வைஷ்ணவி தேவியாக நான்கு திருக்கரங்களுடன் நடுநாயகமாக வீற்றிருக்க, அருகில் ஸ்ரீ பிராம்ஹி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ கௌமாரி,ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ இந்திராணி, ஸ்ரீசாமுண்டி ஆகியோர் அமர்ந்து சப்த மாதர்களாகக் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக் கின்றனர்.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் நதிக்கரையில் அமைந்த தீத்துக்குடி கிராமத்தில் இறை பக்தி கொண்ட ஒரு பக்தர் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய சப்த மாதர், தாங்கள் அருகில் உள்ள ஒரு வனத்தில் மண்ணில் புதையுண்டு இருப்பதாகவும், தங்களை கொள்ளிடம் நதிக்கரை வனப்பகுதியில் ஒரு ஆலயம் எழுப்பி, அதில் பிரதிஷ்டை செயும்படி கூறினர்.

அன்னையரின் கட்டளைப்படி அந்த பக்தர், ஊர் பொது மக்களின் உதவியோடு வனத்தில் புதைந்திருந்த சப்த மாதர்களையும் கண்டு, அவர்களை கொள்ளிடம் நதிக்கரையில் புலிகள் நடமாட்டமுள்ள ஒரு இடத்தில் ஆலயம் அமைத்து பிரதிஷ்டை செதார். அது புலிகள் வாசம் செயும் இடமென்பதால் அன்னையின் ஆணைப்படி பொதுவில், ‘புலீஸ்வரி கோயில்’ என்று பெயர் சூட்டியதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்சமயம் இந்தக் கோயில் புதுப்பிக்கப் பட்டு, பிரபலமாக மக்களின் வழிபாட்டில் உள்ளது.

சப்த மாதர்களும் இந்தக் கோயிலில் பிரதிஷ்டை யானது ஓர் பங்குனி உத்திரம் திருநாளாகும். அதனால், இக்கோயிலில் பங்குனி மாதம் பதினொரு நாள் உத்ஸவம் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று ஆயிரக் கணக்கான காவடிகள் கொள்ளிட நதிக் கரையில் இருந்து புறப்பட்டு அம்மன் ஆலயத்தை வந்தடையும். இது தவிர, பக்தர்கள் பால் குடங்களைச் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செதும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பதினொரு நாள் உத்ஸவத்தில் ஸ்ரீ புலீஸ்வரி அம்மன் முதல் நாளில் நான்கு கரங்களுடன் சங்கு,சக்கரம் ஏந்தி வீதி உலா வருவாள். இரண்டாம் நாள் இரு கரங்களுடன் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவாள். மூன்றாம் நாள் அன்னபூரணியாகவும், நான்காம் நாள் தனலக்ஷ்மியாகவும், ஐந்தாம் நாள் கையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், ஆறாம் நாள் கையில் வெண்ணெ ஏந்தி வெண்ணெத்தாழி அம்மனாகவும், ஏழாம் நாள் கரங்களில் புல்லாங் குழலுடன் ஸ்ரீ கிருஷ்ண அலங்காரத்திலும், எட்டாம் நாள் ராஜராஜேஸ்வரி கோலத்திலும், ஒன்பதாம் நாள் குதிரைகள் பூட்டிய தேரில் புலீஸ்வரியாகவும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்பாலிக்கிறாள்.

பத்தாம் நாள் பங்குனி உத்திரத்தன்று கோயிலில் கொடி இறக்கி வைத்து, நான்கு கரங்களுடன் சங்கு,சக்கரம் ஏந்தி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்பாலிக்கிறாள். பதினொன்றாம் நாள் கோயிலில் விடையாற்றி உத்ஸவம் நடைபெறும். இன்று அம்மன் புலீஸ்வரியாக ஆனந்த சயனக் கோலத்தில் ஊஞ்சலில் வீற்றிருந்து பக்தர்களுக்குத் திருக்காட்சி தந்தருளுவாள்.

மேலும், இக்கோயில் முருகனுக்கு வைகாசி விசாகத் திருவிழாவும், ஐயப்ப சுவாமிக்கு டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி, மகர ஜோதி தினம் வரை மண்டல பூஜைகளும் நடைபெறுகின்றன. இச்சமயம் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இங்கு இருமுடி கட்டி சபரிமலை யாத்திரைக்குச் செல்வது வழக்கம்.

ஸ்ரீ புலீஸ்வரி அம்மன் கோயிலில் திருமணம் செதுகொண்டால் சகல விதமான கிரக தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதனால், இக்கோயிலில் முகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. அதேபோல், திருமணம் தடைபடும் ஆண், பெண் இருபாலரும் ஸ்ரீ புலீஸ்வரி அம்மனுக்கு வஸ்திரம் சாத்தி பிரார்த்தனை செதுகொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், இந்த அம்மனிடம் வேண்டிக்கொண்டு குழந்தைப் பேறு பெறுகின்றனர். அப்படி பிள்ளைப் பேறு பெற்றவர்கள் குழந்தைக்குப் பெயர் வைக்கும் வைபவத்தை இந்த ஆலயத்தில் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வைபவம் முடிந்தவுடன் சில காலம் கழித்து, அந்தக் குழந்தையை அம்மனுக்கே தத்து கொடுக்கும் வழக்கமும் இந்தக் கோயிலில் நடைபெறுகிறது. ‘தாயே, இது உன்னால் கிடைத்த பிள்ளை. அதனால், இதை உன்னிடமே ஒப்படைக்கிறோம். உனது ஆசிர்வாதத்தோடு மீண்டும் எங்களிடமே இதை திரும்பக் கொடு’ என்று கூறி வழிபட்டு, உரிமையோடு அந்தக் குழந்தையை தாங்களே மீண்டும் தத்து எடுத்துக்கொள்ளும் வழக்கத்தையும் இந்தக் கோயிலில் காண முடிகிறது.

இவை தவிர, பக்தர்களின் அனைத்து வேண்டுதல் களையும் செவிமடுத்து, அதை நிறைவேற்றித் தந்து புகழின் உச்சியில் அமர்த்துபவளாக ஸ்ரீ புலீஸ்வரி அம்மன் திகழ்கிறாள். எந்நாளும் விழாக்கோலமாகத் திகழும் இந்த சப்த மாதர் ஆலயத்தை வாப்பு கிடைக்கும் பக்தர்கள் அவசியம் தரிசித்து அம்மனின் அருளைப் பெறலாமே!அமைவிடம் : சீர்காழியில் இருந்து கொள்ளிடத்துக்கு பேருந்து வசதி உண்டு.

தரிசன நேரம் : காலை 6 முதல் பகல் 12 மணி வரை. மாலை 4 முதல் இரவு 8 மணி வரை.

Post Comment

Post Comment