இலவசங்கள் தேர்தல்களில் வெற்றியைத் தீர்மானிக்கின்றனவா?ஆதித்யா -தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. ஒருமாதிரியாக அணிகள் உருவாகிவிட்டன. தேர்தல் அறிக்கைகள் வெளியாகிவிட்டன. இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் பக்கம் பக்கமாகத் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக் கின்றன.அறிக்கைகளில் வெளியிடப்பட் டிருக்கும் விவரங்களைவிட அதிகம் விவாதிக் கப்படும் விஷயங்கள், அதில் சொல்லப்பட்டிருக்கும் இலவசங்களும் பணச்சலுகைகளும் தான். இரண்டு கழகங்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருக் கின்றன. எங்களுடையது அசல், அவர்களுடையது நகல் என்று பரஸ்பரம் குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.

இலவசங்கள் அறிவிப்பு இல்லாமல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்க முடியாதா?

இன்றைய சூழலில் ஒரு வார்த்தை பதிலாகச் சொல்ல வேண்டுமானால், ‘முடியாது’. தமிழக வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் இந்த மாதிரி ஓர் அறிவிப்பை எதிர்பார்த்துக் காத் திருக்கிறார்கள். அப்படி ஒரு காத்திருப்புக்குப் பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள்.மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பது தவறானது என்று விமர்சித்துக்கொண்டிருக்கும் தேசியக் கட்சிகள்கூட, இதுபற்றி இப்போது அதிகம் பேசுவதில்லை. இலவசம் என்ற சொல்லினால் பெறுபவர்களின் வாழ்க்கை நிலை சுட்டிக்காட்டப்படுகிறது என்பதால் அதற்கு அரசியல் கட்சிகள் வைத்திருக்கும் பெயர் ‘விலையில்லாத சலுகை’. பெயர் எதுவாகயிருந்தாலும் அதன் பொருள் அரசின் வரிப்பணம் ஒரு சாராருக்கு மட்டுமே உதவுகிறது என்பதுதான்.

இதுவரை வழங்கப்பட்ட இலவசங்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி யிருக்கிறதா?

இலவசங்கள் என்ற சொல்லே தவறான பதப்பிரயோகம். ‘நலப்பணி அரசு’ என்பது தான் சரியான பதம். அதாவது Welfare State. சத்துணவு, இலவச யூனிஃபார்ம், பஸ் பாஸ், இலவச லேப்டாப், பொது விநியோக அரிசி, கர்ப்பிணி உதவித்தொகை, அம்மா உணவகம் என்று தமிழகம் முன்னெடுத்த திட்டங்கள் போன்ற இலவசங்கள்தான் இன்றைய தமிழகத்தைக் கட்டமைத்திருக்கின்றன.இன்று தமிழகம் மனிதவளக் குறியீடுகளில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்ப தற்கு இந்த நலப்பணித் திட்டங்கள் மிக முக்கி யக் காரணம். சத்துணவு, பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தது. கர்ப்பிணி உதவித் தொகை வீட்டில் பிரசவம் பார்ப்பதைக் குறைத்தது. விளைவாக Infant Mortality Rate மற்றும் Maternal Mortality Rate போன்றவை குறைந்தன. பொது விநியோக உணவுத் திட்டம் பட்டினிச் சாவு களைக் குறைத்து Stunting and wasting எனப்படும் சத்துக் குறைபாட்டைப் போக்கியது. இவை எல்லாமே இன்று தேசிய அளவில் பிற மாநிலங் களில் நலத் திட்டமாக, காப்பி அடிக்கப்படு கின்றன.மத்திய பிரதேசம், குஜராத், சட்டீஸ்கர், பீகார் போன்ற மாநிலங்களில் 20 ஆண்டுகளுக்கு மேல் பா.ஜ.க. ஆண்டுகொண்டு இருந்தும் மனிதவளக் குறியீடுகளில் முன்னேற முடியவில்லை. அவ்வளவு ஏன், வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரி அளவைக்கூடத் தாண்ட இயலவில்லை. இந்த விவரங்களைச் சொல்லுவது இன்றைய மத்திய அரசின் அறிக்கைகள்.நோபல் பரிசு பெற்ற அமார்த்யா சென் மற்றும் ழான் த்ரே இருவரும் எழுதியுள்ள An Uncertain Glory என்ற புத்தகத்தில் இந்த நலப்பணித் திட்டங்கள் இந்தியா முழுக்க எங்கெல்லாம் மேற்கொள்ளப்பட்டனவோ, அங்கெல்லாம் விளைந்த சமூகப் பொருளாதார முன்னேற் றங்கள் குறித்துப் பேசுகிறார்கள். வெறும் வார்த்தைகளாலான கட்டுரைகளாகச் சொல்ல வில்லை. அட்டவணைகள், புள்ளிவிவரங் களைக் கொடுத்திருக்கிறார்கள். இதைப்போல பி.பி.சி.யில் ஊடகவியலாளராகப் பணிபுரிந்து இந்தியாவில் செட்டில் ஆகிவிட்ட எட்வர்ட் ல்யூஸ் எனும் ஆய்வாளர் `In Spite of the Gods` எனும் புத்தகத்தில் வடக்கு மற்றும் தென்னக மாநிலங்களில் உள்ள சமூகப் பொருளாதார வளர்ச்சி குறித்தும், குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்துக்குத் தென் மாநிலங்கள் வழங்கும் முக்கியத் துவம் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.

இதைவிட ஆச்சர்யப்படவைக்கும் விஷயம், தமிழகத்தின் நலப்பணித் திட்டங்களில் தெற்காசியாவுக்கே முன்னுதாரணமாகத் தமிழகம் இருந்து வந்திருக்கிறது என்பதுதான். அண்மையில் வெளியாகியிருக்கும் Utopia for Realists புத்தகத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒரு Case study ஆக எடுத்து ஆராந்திருக்கிறார். அதன் ஆசிரியர் Rutger Bergman. இவர் இன்றைய முன்னணிப் பொருளாதார வல்லுநர்களில் ஒருவர்.ஆக, இலவசங்கள் அல்லது கட்டணமில் லாமல் வழங்கப்படும் வசதிகள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியிருக்கிறது என்பது உண்மை. இந்த மாதிரி திட்டங்களை அறிவிக் காமல், இனி எந்த அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்க முடியாது என்பதும் உண்மை.எனவே நம் வரிப்பணத்தில் இலவசங்களை வோட்டுக்காக வாரி வழங்கி, தமிழகத்தைக் கடன்கார மாநிலமாக்கிவிட்டன திராவிடக் கட்சிகள் என்று பேசுமுன் சற்று யோசியுங்கள்...இதுவும் மாநில வளர்ச்சியின் ஒரு வடிவம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

Post Comment

Post Comment