தடையை மீறி காதலித்தேன்!ராகவ்குமார் -பிக்பாஸ் பேமஸ் நடிகை சாக்ஷி அகர்வாலை நேரில் சந்திக்கச் சென்ற போது, நமக்கே வியர்வை வரும் அளவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். மேடம் எதுக்கு இப்படி உடற்பயிற்சி செய்கிறீர்கள்?

இதெல்லாம் பெரிய ஹீரோக்கள் செய்ற வேலை என்றதும்... ஆரோக்கியம் என்பது ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானது. பிட்னஸ் பெண்களுக்குக் கண்டிப்பாகத் தேவை. இந்த லாக் டவுன் நேரத்தில் பலவித உடற்பயிற்சிகளைச் செது சமூக வலைதளங்களில் ஏற்றி, பல பெண்களுக்கு மோட்டிவேஷன் செதேன். நம் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில், தலையணை போன்றவை போதும் உடற்பயிற்சி செய. சிக்ஸ்பேக் என்பது ஹீரோக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல; ஹீரோயின்களும் செயலாம் என்று சிக்ஸ்பேக் இலக்காக வைத்து உடற்பயிற்சி செய்தேன்."

‘அரண்மனை - 3’ படத்தில் வாப்பு கிடைத்தது எப்படி?

சுந்தர் டைரக்ட் செத ஆக்ஷன் படத்தில் டப்பிங் பேச வாப்பு கிடைத்தது. முதலில் டப்பிங்கா என யோசித்தேன். படம் வெளிவந்த பின்பு நான் பேசிய கேரக்டர் வேல்யூ புரிந்தது. சுந்தர் படத்தில் நடிக்க வாப்பு கிடைக்குமா என்று காத்திருந்தேன். இதன் பயனாகச் சென்ற வருடத்தில் ஒரு நாள் நடிக்க வாப்பு கிடைத்தது."

பேயைப் பார்த்த அனுபவம் பற்றிச் சொல்ல முடியுமா?

விசுவாசம் படப்பிடிப்பு ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அப்ப ஒரு ரூமில் தங்கி இருந்தேன். கூட யாரோ இருக்குற மாதிரி ஒரு தொந்தரவான உணர்வு இருந்தது. மறுநாள் யூனிட் நபர்களிடம் இதுபற்றிச் சொன்னேன். உடனே வேற ரூம் மாத்தித் தந்தாங்க. பேயைப் பார்த்த அனுபவம் இல்லை. உணர்ந்த அனுபவம் இருக்கு."

பிக்பாஸ் தந்த அனுபவம் என்ன?

என் வீட்டில் என்னைக் கூட்டுப் பறவை போல் வளர்த்துட்டாங்க. வெளி உலக மனிதர்களைப் பற்றித் தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு மனிதர்களைப் புரிந்து கொண்டேன். நம் முன்னால் ஒருவர் காட்டும் முகம் என்பது வேறு, பின் பக்கம் அவரது முகம் வேறாக இருக்கும் என்பதை பிக்பாஸ் எனக்குப் புரிய வைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்னைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டுபோச் சேர்த்தது. சினிமாவில் ஏழு வருடங்களாக நடிக்கிறேன். இத்தனை வருட சினிமா தராத புகழை பிக்பாஸ் பெற்றுத் தந்தது."

காலேஜ் படிக்கும்போது நீங்க கெட்டியா? சுட்டியா?

இரண்டும்தான். நான் பி.இ., முடித்து விட்டு எம்.பி.ஏ. முடித்தேன். இரண்டிலும் நான் கோல்டு மெடல் வாங்கியவள். சென்னையில் நான் படித்த காலேஜ் ரொம்ப கண்டிப்பான காலேஜ். பையனும் பொண்ணும் எங்கேயும் பேசக் கூடாது என்ற ரூல்ஸ் இருந்தது. இந்த ரூல்ஸுக்கு நடுவுலேயும் நான் ஒரு பையனை லவ் பண்ணேன். அப்படீன்னா நான் எந்த அளவுக்குச் சுட்டியா இருப்பேன்னு தெரிஞ்சுக் கோங்க."

கோல்டு மெடல் தராத எந்த ஒன்றை சினிமா தந்து விட்டது?

புகழ். நிறைய பேர் படிச்சுட் டாங்க. ஏதாவது வித்தியாசமா செயணும் என நடிப்பைத் தேர்ந்தெடுத்தேன். அமெரிக்கா சென்று நடிப்புப் பயிற்சி எடுத்துக் கிட்டேன்."

இப்ப காதல் எந்த அளவில் உள்ளது?

காதல் சினிமாவில் மட்டும்தான் உள்ளது."

வருங்காலக் கனவுக் கணவர்?

என் தொழிலை நேசிப்பவரா இருக்கணும். என்னை மதிக்கத் தெரிஞ்சவரா இருக்கணும். கண்டிப்பாக நல்லா படித்தவரா இருக்கணும்."

வட இந்தியப் பெண்ணாகத் தமிழ்நாட்டை எப்படிப் பார்க்கறீங்க?

பாதுகாப்பான மாநிலமாகப் பார்க்கிறேன். நைட் ஷூட் முடித்துவிட்டு எவ்வளவு லேட் ஆனாலும் சென்னையில் எந்தவித பயமும் கிடையாது. வட இந்தியாவில் செட்டில் ஆக வாப்பு கிடைத்தும், சென்னையில் இருக்கும் பாதுகாப்பு வேறு எங்கும் கிடைக்காது என்பதால் இங்கேயே இருக்கிறேன்."

தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடும் பழக்கம் இல்லை. அகர்வால் ஏன்?

சாக்ஷி என்ற பெயர் தென் இந்திய சினிமாவில் வேறு சிலருக்கும் இருப்பதால், அகர்வால் என்ற குடும்பப் பெயரைச் சேர்த்துள்ளேன். வேறு எந்தப் பற்றும் இல்லை."

Post Comment

Post Comment