8 லட்சம் செலவில் பொன்னியின் செல்வன்


சித்திரக்கதை புத்தகம்
பொன்.மூர்த்தி -தங்கம், அரசு ஓவியப் பள்ளியில் படிப்பை முடித்து, தினத்தந்தி நாளிதழில் பணியில் சேர்ந்தார். அங்கு கன்னித் தீவுக்குப் படம் வரைந்தார். பின் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் ஓவிய ராகவும் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓவுக்குப் பின் 84 வயதிலும் தம் வாழ்நாளின் லட்சியமாக அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின்செல்வன்’ சரித்திரப் புதினம் முழுவதற்கும் சித்திரக் கதையைத் தீட்டி பத்து நூல்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.

1086 பக்கங்கள் கொண்ட இந்தச் சரித்திரக் கதை அவரின் மனைவி ஓவியர் சந்திரோதயத் துடன் இணைந்து 1050 சித்திரங்களுக்குமேல் வரைந்து நான்கு ஆண்டுகள் உழைப்பில் ரூபா எட்டு லட்சம் செலவில் இந்த நூல்களை உருவாக்கியிருக்கிறார்.

தமிழில் வெகுஜன வாசிப்பைப் பிரபலப் படுத்தியதில் கல்கிக்கு முக்கியப் பங்குண்டு. குறிப்பாக, ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவல் குறிப்பிடத்தக்க வாசகர்களை நூல் வாசிப்பிலிருந்து பத்திரிகை உலகுக்குக் கொண்டுவந்தது. அதுமட்டுமல்ல, அன்றைய தமிழ் வாசகர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்கியின் கதை மாந்தர்களின் பெயர்களைச் சூட்டி மகிழும் அளவுக்குப் புதினப் புரட்சியை ஏற்படுத்தியது. ஓவியர் தங்கமும் தன் மகளுக்குப் பொன்னியின் செல்வி என்றும் மகனுக்கு ராஜேந்திரன் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

இன்றைக்கும் தமிழ் வாசிப்பு வட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் கைகளிலும் தவழ்கிறது பொன்னி யின் செல்வன். அதற்கு, கல்கியின் எழுத்து நடையும் வரலாற்றுப் பார்வையோடு நேர்மை யான கதைப் படைப்பும்தான் காரணம். அதற்கு மணிமகுடமாக அமைந்தது ஓவியர் மணியம் வரைந்தளித்த ஓவியங்கள்.

தங்கம் எழுதிய ‘அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை’ என்ற பயண நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது. கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்கம் எழுதிய ‘ஒற்றன்’ சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது.

1951களில் கல்கி இதழின் வழியே தமிழ்ப் பரப்பில் விறுவிறுப்பான கதை யா உலாவந்த பொன்னியின் செல்வனை, தங்கமே ஒரு எழுத்தாளர் என்கிற படியால் பெரிய முயற்சி எடுத்து உரையாடல்களையும் ஓவியத்தையும் வரைந்து சிறப்பாக வடிவமைத்திருக் கிறார். மணியம் ஓவியச் சாயல் மாறாத இவரது தூரிகையால் சித்திரக் கதைகள் பளிச்சிடுகின்றன.

வந்தியத்தேவன், குந்தவைப்பிராட்டி, நந்தினி, ஆழ்வார்க்கடியன், பழுவேட்டரை யர்கள், பூங்குழலி, சேந்தன் அமுதன், அருள் மொழி வர்மன், ரவி தாசன் போன்ற கல்கியின் சிறந்த கதாபாத்திரங்களை ஓவியர் மணியம் வழியே பின்பற்றி கல்கியின் வார்த்தைகளே உரையாடல்களாக உருவாக்கி சித்திரக் கதை யாக பத்து நூல்களாக அவரே பதிப்பித்திருக்கிறார்.

பொன்னியின் செல்வனை சித்திரக் கதை யாகத் தமிழகச் சிறுவர், சிறுமியர்கள் பார்த் துப் படிப்பதற்கு உருவாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக என் மனம் நினைத்து ஏங்கியது.

பொன்னியின் செல்வனைச் சித்திரக்கதை யாக உருவாக்க அசாத்திய திறமை வேண்டும். நம்மால் முடியுமா என்ற எண்ணம் என்னைப் பின்னுக்குத் தள்ளியது. தினந்தோறும் வந்தியத் தேவன், குந்தவைப் பிராட்டி, நந்தினி, பழுவேட்டரையர், அருள்மொழி வர்மன் ஆகியோரின் மணியம் வரைந்த முகங்களைப் பார்த்து வரைந்து வந்தேன். அந்தப் பயிற்சி நல்ல பலனைத் தந்தது" என்கிறார் ஒரு மாணவ பாவனையோடு ஓவியர் தங்கம்.

அமரர் கல்கியின் அழியாப் படைப்பான பொன்னியின் செல்வனைப் படக்கதையாக் கும் முயற்சியில் தங்கம் ஈடுபட்டிருக்கிறார். தொடக்கத்திலிருந்தே நான் படித்து வருகி றேன். கல்கியின் வழித்தடத்திலிருந்து வழுவாமல் பின்பற்றுகிறார். இதனால் கல்கி யின் எழுததைப் படிக்கும் உணர்வு ஏற்படு கிறது. அது எழுத்துக் காவியம், இது அதற்கு வரையப்பட்ட எழில்மிக்க ஓவியம்" என்கிறார் முன்னுரையில் மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி.

பெரியவர்கள் மட்டுமே படித்து மகிழ்ந்த ஒரு மகாகாவியத்தைக் குழந்தைகளும் படித்து மகிழக்கூடிய அளவில் மிகச் சிரத்தை எடுத்து தாமே சொந்தச் செலவில் பதிப்பித்திருக்கிறார் தங்கம். பொன்னியின் செல்வனைப் பல பேர் பல வடிவங்களில் படமாகவும், டிஜிட்டல் வடிவிலும், அனிமேஷனாகவும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற பரிமாணங்களில் உருவாக்கி மகிழும் சூழலில், கோட்டோவிய மாக வரைந்து, ‘பொன்னியின் செல்வன்’ என்கிற வைரத்தைத் தோண்டி சித்திரக்கதை யாக எடுத்திருக்கிறார் தங்கம். இந்த நல்ல முயற்சியை வரவேற்க வேண்டியது ஓவியத் தையும் எழுத்தையும் நேசிக்கும் அனைவரின் கடமை.

நூல்: கல்கியின் பொன்னியின் செல்வன்

சித்திரக்கதை, ஆசிரியர் : ஓவியர் தங்கம்.

வெளியீடு : தங்கப்பதுமை பதிப்பகம்,

ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,

மாரியம்மன் கோயில் அஞ்சல்,

தஞ்சாவூர்- 613501. செல்பேசி : 9159582467

விலை : 1 முதல் 9வது பாகம் வரை ஒவ்வொரு நூலும் 200/- ரூபா. பாகம் 10 - ரூ.300/-

Post Comment

Post Comment