உண்மையான இலக்கியப் படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்பொன்.மூர்த்தி -எழுத்தாளர் இமையம் எழுதி 2018-ல் வெளியான ‘செல்லாத பணம்’ நாவலுக்கு 2020க்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக் கிராமங் களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளையும் பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலவும் முரண்பாடு களையும்... ஆதிக்கத்தின் குரூரங்களையும்... தம் படைப்புகளில் முன்நிறுத்தும் இமையத்திடம் கல்கிக்காகப் பேசினோம்...

‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்திய அகாதமி பரிசு கிடைத்திருக்கிறது. இது நாவலுக்கான வெற்றியா? எழுத்தாளருக்கான வெற்றியா?

சாதிய ஒடுக்குமுறைக்கான வெற்றியா? எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாவலுக்கான வெற்றியாகத்தான் பார்க்க முடியும். இது சாதி மேலாதிக்கத்துக்கு எதிராகக் கிடைத்த வெற்றி அல்லது சாதி கீழ்மைக்குக் கிடைத்த வெற்றின்னு சொல்ல முடியாது. ஒரு உண்மையான இலக்கியப் படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்."

‘செல்லாத பணம்’ சாதி மாறிய காதல் திருமணங் களில் நடக்கும் அவலங்களை வலியுறுத்துகிறதா?

இல்லை. உயர்ந்த படிப்புப் படித்த ஒரு பெண்ணுக்கும், ஆட்டோ ஓட்டும் ஒரு பையனுக்கும் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிகிறது. அந்தத் திருமண உறவில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படுகிற குடும்ப வன்முறையின் காரணமாக அந்தப் பெண் தீவைத்துக் கொளுத்தப்படுகிறாள். அவ்வாறு தீவைத்துக் கொளுத்தப்பட்ட பெண், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்ற மூன்று நாட்களை மையமாகக்கொண்டு சிகிச்சை பெற்று இறந்துபோகிற கணம் வரை நடக்கிற கதை ‘செல்லாத பணம்’. இது பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை யில் நடக்கக்கூடியதாக எழுதப் பட்டுள்ளது."

‘கோவேறு கழுதைகள்’ ஒடுக்கப்பட்ட சாதிக்குள்ளும் படிநிலை அடக்குமுறை இருப்பதை வலியுறுத்தியது. ‘செல்லாத பணம்’ இரண்டு சாதிக்குள் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு குறித்துப் பேசப்பட்டது. அடுத்த நாவல் எப்படிப்பட்டது?

ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது சாதி சம்பந்தமான நாவல் இல்லை. அல்லது சாதி ஏற்றத்தாழ்வு களைப் பற்றி மட்டுமே பேசப்படுகிற நாவல் இல்லை. சாதி ஏற்றத்தாழ்வு களைப் பற்றி எழுதுவது என் நோக்கமில்லை. சமூகத்தில் சாதி எவ்வாறு செயல்படுகிறது? மதம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுவது மட்டுமே என் நோக்கம். சாதிக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாடு எடுப்பது, அல்லது மதத்திற்கு ஆதரவாக ஒரு நிலைப்பாடு எடுப்பது என்பது என்னுடைய எழுத்தின் நோக்கம் அல்ல. சாதி கூடாது, சாதி சார்ந்த இழிவுகள் கூடாது, மதம் கூடாது, மதம் சார்ந்த பூசல்கள் கூடாது, மதம் சார்ந்த வன்முறைகள் கூடாது என்பதுதான் என் எழுத்தின் நோக்கம்.

‘கோவேறு கழுதைகள்’ ஒருவிதமான சமூகத்தின் முகத்தைக் காட்டியது. ‘செல்லாத பணம்’ சமூகத்தின் இன்னொரு முகத்தைக் காட்டியது. ‘கோவேறு கழுதைகள்’ சாதிய படிநிலைகள் குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்து வதற்காக எழுதப்பட்டது. ‘செல்லாத பணம்’ பொருளாதாரம், கல்வி இவை குடும்ப உறவு களுக்குள் எவ்வித மான சிக்கல்களை உருவாக்குகிறது என்பதைப் பேசுவதற்காக எழுதப்பட்டது. மனிதர்கள் ஏன் இணைந்து வாழ முடியாமல் இருக்கிறார்கள். விலங்குகள் இணைந்து வாழ்கின்றன, பறவைகள் இணைந்து வாழ்கின்றன. ஆனால் மனிதர்கள் (ஆணும் பெண்ணும்) இணைந்து வாழ முடிய வில்லை. இதற்கான உளவியலை அறிவதுதான் செல்லாத பணம் நாவல்."

ஒரு எழுத்தாளர், படைப்பாளி, கலைஞன் கட்சி சார்ந்து, சாதி சார்ந்து, மதம் சார்ந்து, ஒரு குழு சார்ந்து செயல்படுவது சரியா? அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அவ்வாறு செயல்படக்கூடாது. சாதி சார்ந்த அடையாளமோ, மதம் சார்ந்த அடை யாளமோ, குழு சார்ந்த அடையாளமோ அல்லது அரசியல் கட்சி சார்ந்த அடையாளமோ ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய சிந்தனையை வழங்காது. மாறாக அவனுடைய சிந்தனையை மழுங்கடிக்கவே செயும். ஆகவே ஒரு குறுகிய வட்டம், அது சாதியாக, மதமாக, குழுவாக எதுவாகவும் இருக்கலாம். இந்தக் குறுகிய வட்டத்துக்குள் நின்று சமூகத்தைப் பார்த்து எழுதுவது என்பது ஒரு வட்டத்துக்குள்ளேயே செயல்படுவதைப் போன்றது. கிணற்றுக்குள் இருக்கும் தவளை, தான் இருக்கும் இடமே கடல் என்று நினைத்துக் கொள்வதைப் போன்றது."

உங்கள் கதை மாந்தர்கள் உண்மையான தன்மையில் இயங்குகின்றனரே. புனைவு கலந்த படைப்பா? உண்மைச் சம்பவங்களா?

உண்மையை அப்படியே எழுதினால் அது இலக்கியமல்ல, புனைவுகளாக மட்டுமே எழுதி னாலும் அதுவும் இலக்கியமல்ல. உண்மையையும் புனைவையும் சரிவிகிதத்தில் நேர்த்தியான விதத்தில் எழுதப்படுவதே சிறந்த இலக்கிய மாகும். அவ்வாறு எழுதப்படாத படைப்புகள் இலக்கியமாகாது."

மனிதர்களுக்குள் ஏற்படும் ஏற்றத்தாழ்வு நிலை நீங்க, சாதிக் கட்டுமானத்தை உடைக்க வேண்டும்; அல்லது மதக் கட்டுமானத்தை உடைக்க வேண்டும் என்கிறார்கள், எது சரியான வழி?

இரண்டையுமே உடைக்க வேண்டும். இரண்டில் ஒன்று இருந்தாலும் அந்தக் கட்டு மானத்தை உடைக்க முடியாது. இந்தக் கட்டு மானத்தை உடைப்பதற்கு முதலில் கடவுள் என்கின்ற கற்பனையை உடைக்கவேண்டும். கடவுள் என்கின்ற ஒரு கற்பிதம்தான், கோயில் என்கின்ற கற்பிதம்தான் சாதியையும் மதத்தை யும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு காப்பாற்றப்படுகின்ற நம்பிக்கைகள்தான் சமூகத்தில் கலவரத்தைத் தூண்டுகின்றன. ஆகவே சமூகத்தில் கலவரத்தைத் தூண்டு கின்ற, சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக் கின்ற எதுவாக இருந்தாலும் அவை அகற்றப் படவேண்டும்."

தற்போது சமூக ஊடகங்கள் வளர்ந்த நிலையில் அச்சு ஊடகங்கள் நிலை மாறி வருகிறது. இதனால் எதிர்கால எழுத்தாளர் - வாசகர் உறவு எப்படி இருக்கும்?

இது ஒரு நவீன அறிவியல் தொழில்நுட்ப யுகம். இந்த யுகத்தில் இதுதான் வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கை முறையை நீக்கிவிட்டு இன்று யாராலும் வாழ முடியாது. செல்போன் இல்லாமல் இன்று மனிதனால் ஒரு மணி நேரம்கூட வாழ முடியாது. கார் மற்றும் ஏ.சி. இல்லாமல் இன்று வாழ முடியுமா? கற்பனை செய முடியாது. இது ஒரு பரபரப்பான வாழ்க்கை முறை கொண்ட காலம். இந்தக் காலத்தில் அச்சு ஊடகம் தேந்து விட்டது. சமூக ஊடகம் வளர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது. இரண்டும் ஒரே நேரத்தில் வளர்ந்துகொண்டிருக்கின்றன. ஏனென்றால் எண்பதுகளில் அச்சிடப்பட்ட பத்திரிகைகள் எவ்வளவு? 2020ல் அச்சிடப்படும் பத்திரிகைகள் எவ்வளவு? எண்பதுகளில் விற்கப் பட்ட புத்தகங்கள் எவ்வளவு? 2020ல் விற்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று ஒப்பீடு செது பார்த்தால், முன்னைவிட இப்போது அச்சு ஊடகம் வளர்ந்திருக் கிறது. வாசகர்களின் எண்ணிக்கையும் வளர்ந் திருக்கிறது. பதிப்பகங் களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. அதே போன்று சமூக ஊடகங்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. ஆகவே அச்சு ஊடகம்தான் மேலானது என்றோ, சமூக ஊடகம் மலிவானது என்றோ கூறமுடியாது. சமூக ஊடகத்துக்கென்று சில பண்புகள் இருக்கின்றன, அச்சு ஊடகத்துக்கென்று சில பண்புகள் இருக்கின்றன. ஒன்றைவிட ஒன்று மேலானது என்று கூறமுடியாது. இரண்டும் தேவைதான்."

Post Comment

Post Comment