எங்க நாட்டிலே...ஆஸ்திரேலியா


இங்கு தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்துப்படிக்க முடியும்
கிறிஸ்டி நல்லரெத்தினம் -



1950ஆம் ஆண்டு மாலை நேரம். ஜெம்ஸ் - மாத்தா தம்பதியர் தம் வீட்டின் வராந்தாவில் அமர்ந்து பரந்த முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் தமது ஆறு செல்வங்களையும் கனிவுடன் நோக்கினர். என்ன அமைதியான வாழ்க்கை!

இரண்டாம் உலகப்போர் முடிந்து எங்கும் அமைதி! நாடுகளின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் விண்ணைத்தொட உயரும் நாட்கள் அவை.

அந்த ஆறு செல்வங்களும் Baby boomers எனும் ஒரு புதிய சமுதாயத்தின் பிரதிநிதிகள். இவர்கள் மட்டுமா? இல்லை, 1946 - 1964 ஆண்டுகளுக்குள் பிறந்த எல்லோருக்கும் இப்பெயர் பொருந்தும். இக்கால கட்டத்தில் உலகின் ஜனத்தொகை ஒரு பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்தது.

ஐம்பது ஆண்டுகள் தாண்டி இந்தப் புதிய சமுதாயத்தினர் இன்று தங்கள் முதிர்வயதை எட்டி தம் பணிகளில் இருந்து ஓவு பெறும் தருணம். சடுதியாக ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகையில் இந்த முதிய பிரஜைகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

இன்று ஆஸ்திரேலியாவின் ஆறில் ஒருவர் 65 வயதுக்கும் மேற்பட்டவர் ஆவார். இந்தியாவின் சராசரி நடுத்தர வயது (Median age) 28 ஆகவும் ஆஸ்திரேலியாவில் இது 38ஆகவும் இருப்பது இந்நாட்டின் முதியவர் களின் ஜனத்தொகை விகிதாசாரத்தை நன்கு உங்களுக்குப் புரியவைக்கும். ஜனத்தொகை யின் 2.1 சதவிகிதமானோர் 85 வயதிற்கும் மேற்பட்டவர்கள்!

நாட்டுக்காக உழைத்த இவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் சுமை இன்று அரசின் கைகளில். முதியோர் பராமரிப்பு, ஓவூதியம், வைத்திய சேவைகள், முதியோர் பொழுது போக்கு, நிதி முதலீடுஎனப் பல துறைகளில் இவர்களின் தாக்கங்கள் இல்லாமல் இல்லை. இம்முதிய பிரஜைகளைப் பராமரிக்கும் பெரும் பொறுப்பு மத்திய, மாநில அரசு வரவு - செலவு திட்டத்தில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே.

எனினும் 1983இல் அமல்படுத்தப்பட்ட சட்டத்திற்கமைய எல்லா ஸ்தாபனங்களும் தங்கள் ஊழியர்களுக்குக் குறைந்தது அவர்கள் சம்பளத்தில் 9 சதவிகிதத்தை ஒரு ‘ஊழியர் சேம நிதியத்தில்’ சேமிக்க வேண்டும். ஊழியர் களும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தன்னிச்சையாக இந்த நிதிக்கு மாதந்தோறும் செலுத்த முடியும். இவற்றிற்கு வரிச்சலுகைகள் பல உண்டு. ஓய்வு பெற்ற பின்னரே இந்நிதி யில் ஊழியர்கள் கைவைக்க முடியும்.

ஆஸ்திரேலியாவில் ஒரு ஊழியர் வேலை யில் இருந்து ஓய்வுபெற வயதெல்லை கிடையாது என்றால் நம்புவீர்களா? எழுபது வயதைத் தாண்டிய பலர் கூட இங்கு வேலைக்குச் செல்வது சகஜம். ஒருவர் அரசினால் வழங்கப்படும் வாழ் வாதார ஓவூதியத்தைப் பெற 67 வயதையும் எட்ட வேண்டும். இந்த ஓவூதியத்தைப் பெற அரசின் பலவிதமான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

சரி, நீங்கள் பல வருடங்கள் வேலை பார்த்து ஓவு பெற்றுவிட்டீர்கள். உங்கள் ஆபீஸ் நண்பர்கள் விடைபெற்றுப் போன பின் தனிமைதான் உங்கள் நண்பன். இத் தனிமையையும் விரட்டியடிக்கத்தான் ஆஸ்திரேலிய அரசின் பல முன்னெடுப்புகள் உதவுகின்றன. உதாரணமாக U3A என அழைக்கப்படும் University of Third Age எனும் அமைப்பு அநேக உள்ளூர் நகரங்களில் அமைந்துள்ளன. இங்கு பரீட்சை இல்லாத பாடங்கள் நடத்தப்படுகின்றன! என்ன, மீண்டும் பாடசாலையா என முகம் சுளிக்க வேண்டாம்.

நீங்கள் ஓவு பெற்ற ஓவிய ஆசிரியரா? வாரத்திற்கு ஒரு நாள் சில மணி நேரம் ஓவியம் கற்பிக்க ஆவலா? நீங்கள் க்3அ இல் இணைந்து ஒரு ஓவிய வகுப்பை ஆரம்பிக்க லாம். உங்கள் மாணவர்கள் எல்லாம் உங்கள் வயதை ஒத்த ‘இளைஞர்கள்’தாம்! இதில் விசித்திரம் என்னவெனில் உங்களுக்கும் ஊதியம் இல்லை, மாணவர்களுக்கும் செலவு கிடையாது. அரசு இச்சேவைக்கான கட்டட மற்றும் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஒருவர் எத்தனை பாடங் களையும் தெரிவு செய முடியும். ஓவியம், யோகாசனம், நாட்டு நடப்பு, சரித்திரம், பட விமர்சனம், புகைப்படக் கலை, இசை - நாட்டியம் என பல சுவாரசியமான தலைப்புகளில் வகுப்புகள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். இதுபற்றி மேலும் அறிய கீழ் உள்ள வலைதளத்தைத் தட்டிப் பாருங்கள்.

https://u3awaverley.org.au/

நீங்கள் கைவேலைகளில் ஆர்வமுள்ளவரானால் உங்களுக்கும் இருக்கவே இருக் கிறது Men`s Shed எனும் அமைப்பு. இங்கு மர வேலை, இரும்பு மற்றும் மோட்டார் சம்பந்தப்பட்ட எல்லா உபகரணங்களும் உண்டு. உதாரணமாக நீங்கள் ஒரு மரப் பலகையை இங்கு கொண்டுவந்து இங்கிருக் கும் நவீன எந்திரங்களின் உதவியுடன் ஒரு மரத்தள பாடத்தை உருவாக்க முடியும்.

இவ்வாறான அரசு முன்னெடுப்புகள் முதிய பிரஜைகளின் தனிமையைப் போக்கு வது மட்டுமின்றி, அவர்கள் மனோதிடத்தையும் சரீர சுகத்தையும்பேணிப் பாதுகாக்கும் கருவி களாகப் பயன்படுகின்றன என்பதில் ஐயமில்லை.

என் தமிழக நண்பர் ஒருமுறை இம் முன்னெடுப்புகளைப் பார்த்து நம் ஊரிலும் பாடசாலை விடுமுறையிலாவது இதுபோன்ற முதியோர்க்கான வகுப்புகளை நடத்தலாமே என அங்கலாத்தார். இதிலும் உண்மை இல்லாமல் இல்லை!

அடுத்து ஆஸ்திரேலியாவின் தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றிப் பார்ப்போமா?இறுதியாக நடைபெற்ற 2016ஆம் ஆண்டு ஜனத்தொகை கணக்கெடுப்பின்படி (அடுத்த கணக்கெடுப்பு இவ்வருடம் நடைபெறும்) ஆஸ்திரேலியாவில் வீட்டில் தமிழ் பேசுவ தாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,161 பேரில் 28, 055 பேர் இந்தியாவிலும் 27,352 பேர் இலங்கையிலும் 9,979 பேர் ஆஸ்திரேலியாவிலும் பிறந்தவர்கள். நியு சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் விக்டோரியா மாநிலத்திலுமே பெரும்பாலான தமிழர்கள் வாழ்கிறார்கள்.

தமிழ் வளர்ப்பதில் பல அமைப்புகள் தன்னலம் பாராது தம்மை அர்ப்பணித்து சேவையாற்றி வருகின்றன.

இங்கு பல்கலைக்கழக நுழைவுப் பரிட்சைகளில் (பிளஸ் 2விற்குச் சமமானது) Language Other than English எனும் பிரிவின் கீழ் தமிழ் மொழியையும் விக்டோரியா மாநிலத்தில் ஒரு பாடமாக எடுக்க முடியும். இதற்கான வகுப்பு களை அநேகத் தமிழ்ச் சங்கங்கள் நடத்து கின்றன. மற்ற மாநிங்களிலும் இதை ஒத்த செயல்பாடுகள் உள்ளன. இம் முன்னெடுப்பு இளம் சமுதாயத்தினருக்கு தமிழ் மொழியின் பாவனையைச் செயல்படுத்தும் ஒரு நல்ல கருவியாகக் கணிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் பல வானொலி நிலையங்களைப் பயன்படுத்தி, தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. 1978இல் அரசு உடமையான ‘சிறப்பு ஒலிபரப்புச் சேவை’(SBS & Special Broadcasting Service) முதன்முதலில் தமிழ் ஒலிபரப்பை ஆரம்பித்தது. இவ்வொலி பரப்பைக் கீழே உள்ள வலைதளத்தின் மூலம் கேட்க முடியும்:https://www.sbs.com.au/language/tamil சிட்னி நகரில் இருந்து ஒலிபரப்பும் ‘இன்பத் தமிழ் ஒலி’ ஒலிபரப்பு 1995ல் இருந்து நடத்தப்படுகின்றது. சிறப்புப் பட்டிமன்றம், அறிவியல், பேட்டிகள், கவிதை மன்றம் என பல சுவாரசியமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் இவ் வானொலியை அதன் முகநூல் தளத்தின் மூலம் உலகின் எப்பகுதியிலும் இருந்து செவிமடுக்கலாம்.

சமய வழிபாடு ஆஸ்திரேலிய பிரஜைகளின் பண்பாட்டிலும் குடும்ப வாழ்விலும் ஆழப் பதிந்ததொன்று. ஜனத்தொகையில் 60 சதவிகிதமானோர் ஏதாவது ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இதே வேளையில் அநேக இளம் வயதினர் (39%)எந்தச் சமயத்தையும் சாராது இருப்பது கவலையே.

ஆஸ்திரேலியா பல்லின, பல சமய வழிபாடுகளைப் பின்பற்றும் பெரும் தேசமாகும். மிகப் பெரிய சமயமாக கிறிஸ்த வர்கள் 52.2 சதவிகிதத்தையும் இஸ்லாமிய மதத்தவர் 2.6 சதவிகிதத்தையும் பௌத்தர்கள் 2.4 சதவிகிதத்தையும் இந்துக்கள் 1.9 சதவிகி தத்தையும் பங்கு போட்டுள்ளனர். 2016 ஜனத் தொகை கணிப்பின்படி 4,40,300 இந்துக்கள் இம்மண்ணில் வசிக்கிறார்கள். வேகமாக வளர்ந்து வரும் சமயங்களில் இந்து மதம் இங்கு முன் இடத்தை வகிக்கிறது.

அநேகமான மாநிலங்களில் இந்துக் கோயில்கள் அம்மாநில இந்துமா சபைகளால் நிர்மாணிக்கப்பட்டு கம்பீரமா வான்தொட்டு எழுந்தருளி இருக்கும் காட்சி இந்நாட்டின் பல் இன மக்களின் கலாசாரத்தின் அடையாளங் கள் எனப் பெருமையாக் கூற முடியும்.சிட்னி முருகன் ஆலயம், ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஆலயம், மெல்பெர்ன் சிவா - விஷ்ணு ஆலயம், வக்ரதுண்டர் விநாயகர் ஆலயம், கான்பெரா முருகன் ஆலயம், மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் பாலமுருகன் ஆலயம் உட்பட பல ஆலயங்கள் மாநில பக்தர் களின் ஆன்மிகத் தேவைகளைப் பூர்த்தி செது அருள்பரப்பி வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்துக் கோயில் களின் அழகை அவற்றைப் பார்க்கும், குறிப் பாக மேல்நாட்டவர், எவரும் பாராட்டாமல் இருந்ததில்லை. ஆகம சாஸ்திர முறையில் அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களின் சிற்பக் கலையின் அழகையும் அதற்குத் தேவையான கல் பாறைகளின் தேர்வு முறை தொடக்கம் கர்ப்பக்கிரகத்தையும் கோபுரங்கள் அனைத் தையும் தலைசிறந்த தமிழகச் சிற்பிகளை அழைப்பித்து செதுக்குதல் வரை நுணுக்கமாக ஆராந்து நிறைவேற்றும் கோயில் பரிபாலன சபையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அநேகமான கோயில்களை ஒட்டி திருமண மண்டபங்களும் வடை பாயசத்துடன் நாவுக்கு ருசியான சைவ உணவு வகைகளும் பரிமாறப் படுவது ஒரு சிறப்பு!

கிறிஸ்தவர்களும் பல மாநிலங்களில் தமிழ் வழிபாட்டை ஊக்குவிக்கும் முகமாகத் தமிழ் ஆலயங்களை நிறுவி பராமரித்து வருகின்றனர்.

புலம்பெயர்ந்து வந்து இங்கு தமக்கென ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்திக்கொண்ட பலர் தாம் பிறந்த மண்ணை மறவாமல் அங்குள்ள விளிம்புநிலை மக்களுக்கும் தாம் கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் தம்மால் ஆன உதவிகளைச் செது வருகின்றனர். பழைய மாணவர் சங்கங்களும் மற்ற தமிழ் சமூக அமைப்புகளும் இதை முன்னின்று நடத்துவது மகிழ்ச்சிக்குரிய விடயமே.

ஆஸ்திரேலியாவின் கலைத்துறையில் திரைப்படத் தயாரிப்பு முன்னணி வகிக்கிறது. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இந்நாட்டில் கேமராவின் பசிக்கு நிச்சயம் தீனி தேவைக்கு அதிகமாக உள்ளது.

அநேகத் தமிழ், ஹிந்தி திரைப்படங்கள், விசேடமாகப் பாடல் காட்சிகள் இங்கு படமாக்கப்படுவது சகஜம். ஊறுகா பாட்டிலுடன் மாதவன் மெல் பேர்ன் விமான நிலையத்தில் ‘நளதமயந்தி’யில் அலைவதையும் உலக நாயகனின் ‘இந்தியன்’ பாடல் காட்சியில் கோலாவுடன் கொஞ்சுவதையும் உங்களுக்கு ஞாபகம் இருக்குமே?

கொரோனா பாதிப்பால் ஹாலிவுட்டில் திரைப்படங்கள் படமாக்க முடியாத நிலையில் அநேக பிரபல அமெரிக்க ஸ்டூடியோக்கள் இங்கு களம் அமைத்துப் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. இவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு 400 மில்லியன் Location Incentive Boost எனும் நிதி உதவி திட்டத்தை கடந்த வருடம் அறிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் வரை 2.1 பில்லியன் மதிப்புள்ள 37 திரைப்படத் திட்டங்கள் கையிருப்பில் உள்ளனவாம். மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு பல வரிச் சலுகைகள் வழங்கி இவர்களைக் கவர முனைகின்றன.

தற்போது ஹாலிவுட்டின் முன்னணி நட்சத் திரங்களான Nicole Kidman, Tom Hanks, Liam Neeson, Chris Hemsworth, Matt Damon, Dwayne Johnson ஆகியோர் இங்கு கூடாரமடித்துப் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் உங்களுக்கும் இவர் களின் இப்படங்களில் ஆஸ்திரேலியாவின் வனப்பு மிகு இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க வாப்புண்டு.

கொரோனாவின் கொடிய பிடியில் சிக்கி உலக நாடுகள் தத்தளிக்கும் வேளையில் ஆஸ்திரேலியா முன்நோக்குடன் எடுத்த பல நடவடிக்கைகளினால் வைரஸ் பரவலை ஒருவாறு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது எனலாம். எனினும் நாட்டின் ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, விமானப் போக்குவரத்து,சர்வதேச மாணவர் வருகை, கட்டடம் மற்றும் கல்வித் துறை போன்றவை பெரும் பாதிப்பை முன்னோக்கின என்பது உண்மை.

இச்சுமைகள் போதாதென்று வைரஸின் ரிஷிமூலம் தேட உலக சுகாதார நிறுவனத்திடம் சீனா மீது ஒரு விசாரணையை ஆரம்பிக்கு மாறு ஆஸ்திரேலியா வற்புறுத்தியது. இச்செயல் சீனாவை ஆத்திரமடையச் செதது வியப்பல்ல. இதற்குப் பதிலடியாக சீனா இங்கிருந்து ஏற்றுமதியாகும் நிலக்கரி, பருத்தி, பார்லி, திராட்சை ரசம் (ஒயின்), மற்றும் இறால் ஆகிய பொருட்களை வாங்க மறுத்தது.

இந்த வர்த்தக முறுகலில் இடையில் மாட்டிக்கொண்ட விவசாயிகளும் உற்பத்தி யாளர்களும் விழிபிதுங்க மத்திய அரசின் உதவியை நாடி நிற்கின்றனர். இன்றுவரை இதற்கான தீர்வு காணப்படவில்லை.‘எங்களைச் சீண்டினால் இதுதான் கதி’ என சீனா மற்ற உலக நாடுகளை எச்சரிப்பதற்காகவே இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ஆவாளர்கள் கருதுகின்றனர். ஆஸ்திரேலியாவின் மொத்த ஏற்றுமதியில் 32 சதவிகிதம் (பெறுமதி : 123 பில்லியன்) சீனாவுடனாதலால் இந்நாட்டின் பொருளாதாரத்தில் இச்செயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா அண்மையில் சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒரு சமர் புரிந்து வெற்றியீட்டிய செதியையும் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்கள் தளங்களில் செதிப் பதிவுகளை வெளி யிடுவது தெரிந்ததே. ஆனால், இச்செதி களை முதற்கண் சேகரித்து வெளியிடும் செதி நிறுவனங்களுக்கு இந்தத் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒரு நயா பைசாகூட கொடுப்பதில்லை. என்ன, ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தா னாம்’ எனும் முதுமொழி ஞாபகத்தில் வருகிறதோ?

இதற்கு எல்லாம் முடிவுகட்டும் வகையில் அரசு "News media bargaining code" எனும் புதிய சட்டத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இச்சட்டத்தின் கீழ் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பல உள்ளூர் செதி நிறுவனங்களுடன்பல லட்சங்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைச் செயும் என எதிர்பார்க்கலாம். கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளும் ஆஸ்திரேலி யாவின் இப்புதிய சட்டத்திற்கு விருப்பம் தெரிவித்திருக்கின்றன. இது எல்லா செதி நிறுவனங்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியே!

கடந்த நான்கு வாரங்களாக இந்த ரம்மிய மான பூமியைப் பற்றியும் அதன் சரித்திரக் கலாசார, பொருளாதார முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்துகொண்டோம். ஆஸ்திரே லியா என்றதும் அதன் பச்சைப் பசேல் புல்வெளி சார்ந்த மலைப் பகுதிகளையும் அங்கு அமைதியா அசைபோட்டபடி மேயும் பசுக்களும் எம் நினைவிற்கு வரும். இக்காட்சி யின் பின்னால் இந் நாடு உருவாகும்போது ரத்தம் சிந்திய இம் மண்ணின் மைந்தர்களையும், புது நாடு தேடி உலகின் பல பாகங்களில் இருந்தும் குடிபெயர்ந்து தம் கனவை நனவாக்க வந்த நல்ல பிரஜைகளையும் நாம் நினைவுகூருவோம்!

(முற்றும்)

Post Comment

Post Comment