மதுமிதாவுடன் ஒரு மாலைப் பொழுது!பேட்டி : எஸ்.சந்திரமௌலி - அட்டைப்படம், படங்கள் : ஸ்ரீஹரிஎனக்கு ஜாங்கிரி மதுமிதாவும் வேணாம்; பிக்பாஸ் மதுமிதாவும் வேணாம்; வெறும் மதுமிதான்னு சொன்னாலே எல்லாருக்கும் என்னைத் தெரியணும். அந்த அளவுக்கு நான் உயரணும். நிச்சயமா அப்படி ஒரு இடத்தைப் பிடிப் பேன்" என்கிறார் ராஜ் டி.வி.யில் காமெடி ஷோ மூலமாக சின்னத் திரையில் அறிமுக மாகி, பின்னர், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலமாக வெள்ளித் திரையில் வெற்றிகரமாகத் தடம்பதித்து வரும் நடிகை மதுமிதா ரொம்ப ஜாலியான டைப். கேள்விகளை முடித்த மாத்திரத்தில் கலகல வென்று பதில் சொல்கிறார். சில கேள்வி களுக்கு நடித்தே பதில் சொல்கிறார்.

உங்க அப்பா அரசியல் கட்சிப் பேச்சாள ராமே?

ஆமாம்! எங்கள் அப்பா வண்ணை கோவிந்தன் அ.தி.மு.க.வின் பிரசாரப் பேச்சாளர். ஆனால், நான் பிறந்து ஒரு வயசு இருக்கும்போதே அவர் மறைந்துவிட்டார். எனவே, என் அப்பாவின் முகத்தை நான் போட்டோவில் மட்டுமே பார்த்திருக் கிறேன். அவர் கட்சிக் கூட்டங்களில் பேசுகிறபோது, எத்தனை பேர் அவரைப் பார்த்திருப்பார்கள்? அவருடைய சூடான அரசியல் பேச்சைக் கேட்டிருப்பார்கள்? ஆனால், அவர் முகத்தைப் பார்க்கிற அதிர்ஷ்டம் கூட எனக்குக் கிடைக்கவில் லையே! நாங்கள் ஐந்து பெண்கள். நான் தான் கடைசி. எங்கள் அம்மாவும், மூத்த அக்காவும்தான் வேலைக்குப் போ, குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பைச் சுமந்தார்கள்."

ஸ்கூல், காலேஜ் படிப்பெல்லாம்?

கல்லூரிக்கெல்லாம் நான் போக வில்லை; திருவொற்றியூரில் அரசாங்கப் பள்ளியில் படிப்பை முடித்தேன். ஸ்கூலில் படிக்கிறபோதே பாட்டு, டான்ஸ்ல ரொம்ப ஆர்வம். ஜோதிகா அறிமுகமான ‘பூவெல் லாம் கேட்டுப் பார்’ படம் வந்தபோது, அதில் ஜோதிகா டான்ஸ் ஆடும் பாட்டுகள் எல்லாவற்றுக்கும் நான் டான்ஸ் ஆடிக் காட்டி அக்கம்பக்கத்தாரை அசத்துவேன்."

அப்படியே டி.வி.க்கு வந்துட்டீங்களாக்கும்?

நீங்க ஒண்ணு! அது ஒண்ணும் ஈசியா வரலை. எனக்கு டி.வி. சீரியல்களில் நடிக்க ணும்னு ரொம்ப ஆசை. அப்போது இருந்த எல்லா டி.வி. சேனல் ஆபீசுக்கும் போ சீரியல்ல நடிக்க சான்ஸ் கேட்பேன். அவங்க எல்லாம், ‘வெளியாளுங்கதான் டி.வி. சீரியல் எடுத்துக் கொடுப்பாங்க. நாங்கள் அதை டெலிகாஸ்ட் மட்டுமே பண்ணுவோம்’ என்று சொன்னபோது, சான்ஸ் இல்லைன்னு இப்படிச் சொல்லாமல் சொல்லித் தட்டிக் கழிக்கறாங்கன்னுதான் நான் நினைச்சேன். ஒரு நாள் ராஜ் டி.வி.ல சான்ஸ் கேட்டு விட்டு, வழக்கமான பதிலால் ஏமாற்றத்தோடு புறப்பட்ட சமயம், அங்கே இருந்த கேமராமேன் பத்ரி, ‘உங்க போட்டோ பின்னால அட்ரஸ், டெலிபோன் நெம்பர் எழுதிக் கொடுத்திட்டுப் போங்க! டி.வி.சேனல்லயே தயாரிக்கிற இன்-ஹவுஸ் புரோகிராமுக்குத் தேவைப்பட்டா சொல்றோம்!’ என்று சொன்னார். போட்டோ கொடுத்து, ஆறு மாதங்கள் கழித்து அதிர்ஷ்டம் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டியது. ஆர்த்தி கணேஷ், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் பங்கேற்ற ‘சூப்பர் காமெடி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வாப்பு கிடைத்தது. அப்புறம், வரிசையா எல்லா சேனல்களிலும் காமெடி ஷோக்களில் ஒரு ரவுண்டு வந்தேன். அப்படியே காமெடி தொடர்களிலும் நடிக்க சான்ஸ் கிடைத்தது."

வெள்ளித் திரைக்கு எப்படி பிரமோஷன் கிடைச்சுது?

காமெடி நிகழ்ச்சிகளிலும், காமெடி சீரியல்களிலும் நடிச்சதால சினிமாவிலும் காமெடி ரோலுக்குத்தான் கூப்பிட்டார்கள். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் உதய நிதி ஸ்டாலினுக்கு ஹன்சிகா ஜோடி; சந்தானத்துக்கு ஜோடி நான். அந்தப் படத்துலதான் ‘ஜாங்கிரி மதுமிதா’ ஆனேன். அதன் பிறகு அடுத்தடுத்து சினிமா வாப்புகள் வர ஆரம்பித்தன. கடந்த ஒன்பது வருடங்களில் சுமார் ஐம்பது படங்களில் நடித்துவிட்டேன்."

சின்னத் திரை - வெள்ளித் திரை காமெடி எப்படி?

டி.வி.யில பண்ணும்போது கொஞ்சம் ஃப்ரீடம் கிடைக்கும்; சொந்தமா ஏதாவது சேர்த்துச் சொன்னாலும் ஒத்துக்குவாங்க. நிறைய வசனம் பேச வாப்பு கிடைக்கும்; சினிமாவுல காமெடி சீன்ஸ் நிறைய ஷூட் பண்ணுவாங்க. ஆனால், அது எல்லாமே கடைசியில் படத்தில் வரும்னு கியாரண்டி கிடையாது. படம் நீளம்னா, முதல் பலி காமெடி சீன்ஸ்தான். உதாரணம் சொல்லணும்னா ஜில்லா படத்துல விஜ கூட பத்து சீன்லயாவது நடிச்சிருப்பேன். கடைசியில ஒரு சீன் கூட படத்துல இல்லை. ஆனாலும், எனக்கு நடிக்க ஸ்கோப் கிடைக்கும்படியாகச் சில படங்கள் கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். என் ரோல் மாடல் மனோரமா ஆச்சிதான். காமெடி நடிகையா பிரபலமாகி, குணச்சித்திர நடிகையாகக் கோலோச்சியவர். அதுபோல ஒரு கட்டத்துல காமெடிரோல்களில் இருந்து குணச்சித்திர ரோல்களுக்குப் பரிமாணம் அடைய வேண்டும் என்பதுதான் என் ஆசை."

உங்க கல்யாணம் லவ் மேரேஜாமே?

ஆமாம்! நானும், என்னோட சொந்த மாமா பையனும் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்குக் கூட குடும்பத்துல எதிர்ப்பு இருந்தது. அவர் பேர் மோசஸ் ஜோயல். சினிமாவுல அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கார். அவரும் நானும் ஒரு படத்துல சேர்ந்து ஒர்க் பண்ணி இருக் கோம். அவர் என்னை வெச்சு ஒரு குறும்படம் எடுத்திருக் கார். அவருக்கு நானும், எனக்கு அவரும்தான் செட் ஆகும்னு தோணிச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டோம்."

லாக்டவுன் எப்படிப் போச்சு?

எப்பவும் ஏதாவது புதுசா கத்துக்கணும்னு எனக்குள்ளே ஒரு வெறி இருக்கும். லாக்டவுன் காலத்துல பைக் ஓட்டக் கத்துக்கிட்டேன். (கீழே விழுந்து வாரினது தனிக்கதை) அப்புறம் கார் ஓட்டவும் கத்துக்கிட்டேன். திடீர்னு சிலம்பம் கத்துக்க ஆசை வந்தது. அதையும் டிரை பண்ணி னேன்." பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கையில் வெட்டுக்காயம் பண்ணிக் கொண்டு பெரிய பரபரப்பு ஏற்படுத்தினீங்க. பிக்பாஸ் பங்கேற்பு மூலமாக நீங்க கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடம் என்ன?‘பிக்பாஸ்’ எனக்கு வாழ்க்கையில் கற்றுக் கொடுத்த விஷயங்கள் ஏராளம். அதன்பின் எனக்கு இந்தச் சமூகம், வாழ்க்கை பற்றிய பார் வையே கூட மாறிவிட்டதுனு சொல்லலாம். முன்பெல்லாம் விமர்சனங்களை சரியானபடி என்னால் கையாள முடியாது. இப்போது, அது எப்படின்னு தெரிந்துவிட்டது. வாழ்க் கைக்கே ஒரு புது அர்த்தத்தை என்னால் பார்க்க முடிகிறது."

Post Comment

Post Comment