ஜப்பானில் வளரும் தமிழ்ச் சேவைகள்சேலம் சுபா -உலகமெங்கும் பரவிக் கிடக்கும் மண்ணின் மைந்தர்களான நம் தமிழர்களின் பேரார்வத்தால் பல நாடுகளில் செம்மொழியாம் தமிழின் பெருமை பெருகி வருகிறது. தமிழர்கள் ஒன்றுகூடும் உலக நாடுகள் பலவற்றில் அவர்களால் தொடங்கப்பட்டு செவ்வனே செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கங் களில் முக்கியத்துவம் வாந்த தமிழ்ச் சங்கமாக,சேவைகளில் சிறந்து விளங்குகிறது ஜப்பான் நாட்டின் டோக்கியோ தமிழ்ச் சங்கம்.

வருடந்தோறும் பல கலைநிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் பெற்ற நிதிகளால் பல சேவைகளைச் செய்து, பெரும் பாராட்டுகளைப் பெற்று வரும் டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர், கணேஷ் ஹரி நாராயணன், கொரோனா காலத்தில் டோக்கியோ தமிழ்ச் சங்கம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள நலிவடைந்த கலைஞர்களுக்கும், எண்ணற்ற மாணவர்களின் கல்விக்கும் பெரும் சேவைகளைச் செதுள்ளார்.

தங்கள் தமிழ்ச் சங்கம் பற்றியும் அதன் சேவை கள் பற்றியும் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார் டோக்கியோ ஹரி.கும்பகோணம்தான் எனது பூர்விகம். அப்பா கணேசன். தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் கணக்குப் பேராசிரியராக இருந்தவர். நான் எம்.சி.ஏ. முடித்ததும் ஜப்பானில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனி யில் பணி கிடைத்ததால் ஜப்பான் சென்றேன். இருபத்தி இரண்டு வருடமாயிற்று அங்கு சென்று. அங்குள்ள சூழல் மனசுக்குப் பிடித்துப்போக, குடும்பத்துடன் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டேன். தற்போது சுயமாகத் தொடங்கிய எம்.எஸ்.ஜி. ஜப்பான் கார்ப்பரேஷன் எனும் கம்பெனியின் டைரக்டராக உள்ளேன்.

நான் ஜப்பானிற்கு வந்தபோது மிகக் குறைந்த அளவிலான தமிழ்க் குடும்பங்களே இங்கு வசித்த னர். மற்ற உலக நாடுகளில் வசிப்பதை விட ஜப்பானிற்கு வருவதை விரும்பாததன் காரணம் இரண்டு விஷயங்கள் என்பதை அறிந்தேன். ஒன்று மொழிப் பிரச்னை. அடுத்து, சாப்பாட்டுப் பிரச்னை. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, உதவ, அவர்களைத் தங்கவைக்கும் பாலமாக நானே செயல்பட விரும்பினேன். என்னைத் தேடி வரும் தமிழர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செதேன். என் கம்பெனியின் நோக்கமே தமிழர்களுக்கு ஜப்பானிலும் சரி, தமிழகத்திலும் சரி... பன்முகத் தன்மை கொண்ட உதவிகளைச் செய்வதுதான்.

நம் தமிழ்க் குடும்பங்களை ஒன்றிணைக்கும் பணியை ஏற்கெனவே பல நல்ல உள்ளங்கள் செது வந்தாலும், இன்னும் சிறப்பாகப் பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகளைத் தந்தால் நன்றாக இருக்கும் எனும் என் எண்ணத்திற்கு முதலில் மறுப்பு எழுந்தது.காரணம், குறைந்த அளவிலான தமிழர்களே நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்பதும் அதற்கான செலவுகளும்தான். அவர்களின் ஆசிர்வாதத்துடன் என்னால் பெரிய அளவில் செய முடியும் என்ற நம்பிக்கை பிறக்க, அதற்குக் களமாகவே டோக்கியோ தமிழ்ச் சங்கத்தை நிறுவினேன். தற்சமயம் பதினான்காவது வருடத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது.

இன்று ஜப்பானில் வசிக்கும் 35,000 இந்தியக் குடும்பங்களில் சுமார் 1000 தமிழ்க் குடும்பங்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கிறார்கள். அவர் களை எல்லாம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒருங்கிணைத்து, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தேன். தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் காலை முதல் இரவு வரை அறுசுவை உணவுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செது அவர்களை மகிழ்வித்தோம். அங்கு வாழும் தமிழர்களின் குழந்தைகளின் தனித்திறமைகளை மேடை ஏற்றினோம்.

இப்படி டோக்கியோ தமிழ்ச் சங்கம் அழைத்ததின் பேரில் ஜப்பானுக்கு வந்த பிரபலங்கள், மற்றும் கலைஞர்களின் எண்ணிக்கை ஏராளம். கமல், ரஜினி முதல் சின்னத்திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் இங்கு வந்துள்ளனர். 500 குடும்பங்கள் தரும் நிதி உதவிகளாலும், என் வருமானமும், சில குறிப்பிட்ட நல்ல உள்ளங்கள் தரும் நன்கொடைகளாலும் பொழுதுபோக்கைத் தாண்டி நாங்கள் சேவை செது வருவது இறை வனின் கருணைதான்.

அதிலும், இந்த கொரோனா காலத்தில் ஒரு வருடமாக இணையதளத்தின் காணொளிக் காட்சிகள் மூலம் உலக தமிழ்ச் சங்கங்களின் கூட்டு முயற்சியில் உலகத் தமிழர்களை எல்லாம் இணைத்து இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியது பெரும் சாதனை. தீபாவளி அன்று தொடர்ந்து 48 மணி நேரம் லைவ் ஆகவும், பொங்கல் பண்டிகை யின்போது தொடர்ந்து நான்கு நாட்களும், பல்வேறு நாட்டுக் கலைஞர்கள் தொடர்ந்து அளித்த நிகழ்ச்சிகளும் மறக்க முடியாதவை. உலக இசை தினத்தன்று நியூசிலாந்தில் ஆரம்பித்து ஒரு நாட் டிற்கு இரண்டு பேர் வீதம் 8 மணி நேரம் இசை நிகழ்ச்சிகளை வழங்கி அமெரிக்காவில் முடித்தோம். அதேபோல் நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒவ் வொரு நாட்டுக்கும் இரண்டு பேர் தங்கள் வீடுகளில் பிரம்மாண்ட மான கொலுகளை அமைத்து, அதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்டு களித்தது நம் பாரம்பரியத்தை வளர்க்க உதவியது.

தமிழகம் முழுவதுமுள்ள நாட்டுப்புறக் கலைஞர் களுக்கு தீபாவளி சமயத்தில் அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினோம். வாழ்வாதாரம் இழந்து தவித்த 300 புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையானவற்றை வழங்கி னோம். ரோட்டரி கிளப் நார்த் சென்னையுடன் இணைந்து கண்ணம்மா எனும் திட்டத்தின் கீழ்வசதியற்ற பள்ளி மாணவிகளுக்கு ஒரு வருடத்திற் குத் தேவையான நாப்கின்கள் மற்றும் உள்ளாடைகள் வழங்கி மகிழ்வித்தோம். ரேடியோ மிர்ச்சியுடன் இணைந்து கல்விக்கு கைபேசி மற்றும் கல்விக்கு முதல்படி எனும் திட்டங்களின் வாயிலாக ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கைபேசி, மடிக் கணினிகள் தந்ததுடன், கல்லூரி சேர விரும்பு வோருக்குத் தகுந்த கல்லூரியில் கட்டணம் செலுத்திச் சேர்த்துள்ளோம்.

இதுவரை சுமார் ஐம்பத்தாறு லட்சங்கள் சேவைக்காகவே செலவு செதுள்ளோம். இவை அனைத்தும் என்னால் மட்டுமல்ல, உலகம் முழு வதும் பரவிக் கிடக்கும் தமிழ்ச் சங்கங்கள் தந்த ஆதரவாலும், இசைக்கலைஞர்கள் மற்றும் இசைப் பிரியர்கள் தந்த கொடையாலும் மட்டுமே சாத்திய மாயிற்று. மேலும் எங்கள் டோக்கியோ தமிழ்ச்சங்கத்தின் வைஸ் பிரசிடெண்ட் குறிஞ்சி செல்வன், செயலாளர் கவுரிசங்கர் போன்றவர்களின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல், நாங்கள் இங்கு அனுப்பும் நிதிகளைச் சிரமம் பாராமல் தகுந்தவர் களிடம் கொண்டு சேர்த்த நல் உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றிகளைச் சொல்ல வேண் டும். இன்னும் இதுபோல் பல நிகழ்ச்சிகளை ஜப்பானில் நிகழ்த்தி அதில் கிடைக்கும் நன்கொடைகளை தமிழ்நாட்டுக்கு தந்து உதவும் திட்டங்கள் சீக்கிரம் நிறைவேறும்" தெளிவாகவும் உறுதியுட னும் சொல்லி முடித்தார் டோக்கியோ தமிழ்ச்சங்க நிறுவனரான ஹரி.இவரின் சேவைகள் ஜப்பான் தமிழுடன் மேலும் பெருக வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.

Post Comment

Post Comment