‘ப்ராஜெக்ட்’ வழிக் கல்விகனடாவிலிருந்து மங்கை ஜெய்குமார் -அம்மா, திஸ் இஸ் தன்வி. எங்க குடும்ப நண்பரோட பொண்ணு. இங்க உள்ள ஒரு பப்ளிக் ஸ்கூலில் 11th Std. படிக்கறா" (Public School - நம்ம ஊரு கவர்ன்மென்ட் பள்ளி போல) என்று ஒரு பதினாறு வயதுப் பெண்ணை, நாங்கள் கனடா வந்து இறங்கிய சில நாட்களில் அறிமுகம் செது வைத்தாள் என் மகள். பார்த்தவுடன் பிடித்துப் போகும் துறுதுறுப்பு. இடைவிடாத படபடப் பேச்சு. எல்லோரிடமும் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் சுபாவம். பேச்சில் அடிக்கடி அவள் படிக்கும் பள்ளி அடிபடவே, அதைப் பற்றி விசாரித்தேன். அவ்வளவுதான். ஆரம்பித்து விட்டாள்... உற்சாகத்துடன். நயாகரா அருவி போல...ஆன்ட்டி, நான் ஐந்தாவது வரை இந்தியாவில் படித்து விட்டு, 6th Std. கனடா வந்து தொடர்ந்தேன். இந்தியாவில் நான் படித்த முறைக்கும் இங்குள்ள முறைக்கும் ரொம்பவே வேறுபாடு. முதலில் அட்ஜெஸ்ட் செய ரொம்ப சிரமப்பட்டேன். இப்போ நல்லா பழகிட்டேன். இங்கு எல்லாமே ப்ராஜக்ட் அடிப்படையிலான கல்வி முறைதான். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஐ ஜஸ்ட் லவ் மை ஸ்கூல்௰பேசிக்கொண்டே போனவளை நிறுத்தி, உன் பள்ளி பற்றியும், நீ பண்ணின ப்ராஜக்ட்ஸ் பத்தியும் சொல்லேன், கேட்போம்" என்றவுடன் அவள் சொன்னது இதோ: இயற்கைக் காட்சிகளைப் புகைப்படம் எடுத்து அதில் உள்ள வண்ணங்களைப் பற்றியும், அந்த வண்ணங்களின் பல்வேறு ஷேட்ஸ் (shades) பற்றிய ஒரு பகுப்பாவு செது ஒரு ப்ராஜக்ட்.

சிறு வயதிலிருந்தே இயற்கையை ரசிக்கவும், இயற்கையோடு இணைந்து வாழவும் வழிசெயும் கல்வி முறை.ஏதாவது ஒரு திரைப்படத்தின் காட்சியை எடுத்துக் கொண்டு, அந்தக் காட்சியில் நடிப்பவர் களின் முகபாவத்திற்கேற்ப வசனங்களை மாற்றி, வேறுவிதமாக அக்காட்சியை நகைச்சுவையாகவோ அல்லது பயங்கரக் காட்சியாகவோ கற்பனைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம்.

2 அல்லது 3 நிமிடக் காட்சிதான். பிறகென்ன? படைப்பாற்றலுக்கேற்ற மதிப்பெண்களை அள்ள வேண்டியதுதான்! சினிமாத் துறையை ஒட்டிய மற்றுமொரு ப்ராஜெக்ட். திரையுலகின் பிரபலமான பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்களின் படங்களுடன் அவர்கள் சார்ந்த துறையைப் பற்றிய (அவர்களைப் பற்றி அல்ல) குறிப்பும் எழுத வேண்டும். இதன் மூலம் ஒரு சினிமா எடுப்பதில் உள்ள அத்தனை சிரமங்களையும், எத்தனை பேரின் உழைப்பு அதில் அடங்கியிருக்கிறது என்பதையும் நன்றாகப் புரிந்து கொண்டதாகச் சொன்னாள் தன்வி.

தான் மிக விரும் பிச் செத ஒரு ப்ராஜெக்ட் பற்றி தன்வி சொன்னது: களிமண் ணால் ஒரு முகச்சிற்பம் செது அதில் அவரவருக்குப் பிடித்த விஷயங்களைக் கண், மூக்கு, வா என்று ஒட்டி (விளக்க உரையுடன்) தயார் செய வேண்டும். அப்படித் தன்வி செததுதான் படத்தில் உள்ள முகம்:இரண்டு கண்கள் - ஒரு கண்ணிற்குக் கனடாவின் சின்னமான மேப்பிள் இலையும், மற்றொரு கண்ணிற்கு மிகப் பிடித்தமான புத்தகத்தின் மேலட்டை.

‘எல்’ ஆங்கில எழுத்தின் வடிவத்தில் மூக்கு. இதற்கு என்ன அர்த்தம்? கேட்டேன் தன்வியிடம். எனக்குப் பிடித்த நகரம் லண்டன். அதன் முதல் எழுத்துதான் இந்த மூக்கு." அதென்ன வா கப்பல் மாதிரி?" - எனக்கு கப்பலில் உலகம் சுற்ற ரொம்ப ஆசை. அதான் இப்படி" இப்படியாக ஒரு முகச் சிற்பம் செது அசத்தியிருக்கிறாள். ஆசிரியரின் பாராட்டு தல்களையும் அள்ளியிருக்கிறாள்.

மேலே சொன்னதெல்லாம் சில மாதிரிகள்தான். இதே போல் எல்லாப் பாடங்களிலும் ப்ராஜெக்ட் உண்டு. முழுக்க முழுக்க செயல்முறைப் பயிற்சி அடிப்படையில் அமைந்த கல்வி! நிர்வாகத் திறன், சுயதொழில் தொடங்கி அதன் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொள்ள வாப்பளிக்கும் ப்ராஜெக்ட். இப்படிப் பல௰ முற்றிலும் மாணவர்களே க்ரியேட்டிவிடி மூலம் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். மிக ஆரோக்கியமான போட்டி மாணவர்களிடையே. எல்லாவற்றிற்கும் மதிப்பெண்கள்தான் - ரேங்க்/கிரேட் என்பதெல்லாம் கிடையாது.

இவை தவிர Literary Test என ஒன்று - தாங்கள் வசிக்கும் நாடு / நகரத்தைப் பற்றியும், அதன் சட்டதிட்டங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ள வகை செயும் அற்புதமான தேர்வு!இங்கு பொதுப் பள்ளிகளில் சீருடை கிடையாது. பெற்றோர் கள் ஒப்புதல் கடிதம் கொடுத்து அனுமதிக்கும் மாணவ மாணவி யருக்கு மட்டும் 6ம் வகுப்பிலிருந்து செக்ஸ் கல்வி போதிக்கப்படு கிறது. பாடத்திட்டத்திலும், விளையாட்டுத் துறையிலும் மாணவ மாணவியர் தங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்க அனுமதியும் சுதந்திரமும் உண்டு. தேர்ந்தெடுத்த துறையில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. சுதந்திரத்துடன் கூடிய கண்டிப் பும் உண்டு. சீருடை இல்லாவிட்டாலும், உடை விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. பெற்றோர்களும் ஆசிரியர்களும் அடிக் கடி தொடர்பில் இருப்பது அவசியம். மாணவர்கள் புகைபிடித் தாலோ, மது அருந்தினாலோ 2000 டாலர் அபராதம் விதிக்கப்படு வதுடன் பள்ளியை விட்டு வெளியேற்றப்படுவதும் உண்டு.

மொத்தத்தில் பள்ளி இறுதி முடித்து வெளியேறும் மாணவர் கள் வாழ்க்கையின் அடிப்படை விஷயங்கள் அனைத்தும் கற்றுத் தேர்ந்தவர்களாக, தன்னம்பிக்கையும், சுய சிந்தனையும், சவால் களைச் சந்திக்கத் தேவையான துணிவும், விவேகமும் கொண்ட வர்களாக வெளியேறுகிறார்கள். தினமும் புதுப்புது விஷயங்கள் கற்றுக்கொள்வதால் தன் பள்ளியைப் பற்றிய பெருமையும், நேசமும் தன்விக்கு மிக அதிகம். அவள் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. நமக்கு இப்படி ஒரு வாப்பு அமையவில்லையே என்ற ஆதங்கமும் கூடவே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

Post Comment

Post Comment