சிலம்பம் பெண்களின் பாதுகாப்பு வளையம்!கோவை எஸ்.குமரேசன் - படங்கள் : தமிழ்ச்செல்விபெண்கள் வெளியில் செல்லும்போது, எல்லாச் சூழலும் அவர்களுக்குச் சாதக மாக இருப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, செயின் பறிப்பு, பாலியல் சீண்டல் போன்ற சமூக விரோதச் செயல்கள் பெண்களை மிகவும் அச்சுறுத்துகின்றன. இதுபோன்றதொரு சூழலில் பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தாற்காப்புக்கலை மிகவும் அவசியம்" என்கிறார் கோவையைச் சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சியாளர் மதன்குமார்.

கோவை நியூ தில்லை நகரில் சிலம்பம், ஜூடோ, வர்மம் ஆகிய தற்காப்புக் கலைகளை கற்றுத்தரும் மதன்குமார், இக்கலைகள் குறித்து நம்மோடு பேசுகிறார்...சிலம்பம், கராத்தே, குங்ஃபூ ஆகிய மூன்றும் பெண்கள் கற்றுக் கொள்ளக்கூடியவை. ஆனால், சிலம்பமே இவற்றுள் முதன்மையானது. கராத்தே, குங்ஃபூ கற்றுக்கொள்ள உடற்பயிற்சி செய வேண்டும். ஆனால், சிலம்பம் கற்றுக் கொள்ளும் பொழுது உடற்பயிற்சியும் இயல்பாகவே அதோடு சேர்ந்து விடுகிறது. சிலம்பத்தை அந்தக் காலத்தி லிருந்தே இருபாலாரும் பயன்படுத்தி வந்துள்ளனர். சிலம்பம் கற்றவர் தம் கையில் ஒரு கம்பு வைத்திருப் பது, பத்து ஆட்கள் உடன் இருப்பதற்குச் சமம். பத்தடி தள்ளி நின்றால் கூட, அவர்களால் எதி ராளியை அடையாளம் கண்டு தாக்கமுடியும். எளிமையான அதேசமயம் மனவலிமையோடும் கற்றுக்கொள்ளக்கூடிய கலை சிலம்பம்.

அலங்கார வரிசை, குத்து வரிசை, அடி வரிசை, பிடி வரிசை என வரிசைகள் சிலம்பத்தில் உண்டு. ஒவ்வொரு வரிசையையும் ஒவ்வொரு ஆறு மாதக் காலத்தில் கற்றுக் கொண்டு, சுமார் நான்கு வருடத்தில் முழுமையாக சிலம்பக் கலை யைக் கற்றுக்கொள்ள முடியும்.

5 முதல் 14 வயது வரை உள்ள பெண்கள் ஆர்வத் தைப் பொறுத்து மிகவும் எளிதாகக் கற்றுக்கொள்ள லாம். 5 வயதிலிருந்து குழந்தைகளுக்கு இக்கலை யைக் கற்றுக் கொடுப்பது மிகவும் சிறந்தது.

உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம்: பெண்கள் கம்போடு எல்லா இடங்களுக்கும் செல்ல முடி யுமா என்று. சிலம்பாட்டத்தில் குத்துப் பயிற்சி என்ற ஒரு முறை இருக்கின்றது. கைகளால் எதிராளியை அடிக்கக் கற்றுத்தரப்படுகிறது. கம்புக் குப் பதிலாக, கையைப் பயன்படுத்தி தாக்குவது. இதில் கையால் பிடிபோடுவது என்ற வித்தை முறைகள் இருக்கின்றன.

சிலம்பத்தில் யானை, புலி, குரங்கு பயிற்சி என்று ஒரு வித்தைமுறை இருக்கின்றது. இந்தப் பயிற்சியில் கரத்தால் அடிப்பது கற்றுத் தரப்படும். கரத்தைப் பிடித்து அடிப்பது, பிடி வைத்து அடிப் பது, யானை, புலி, குரங்கு, பாம்பு போன்ற விலங்குகள் சண்டையிடும் முறைகளை வைத்து அதனடிப்படையில் வித்தைகள் கற்றுத் தரப்படும்.

அதிகமான பிடி வரிசைப் பாடங்கள் யானையிட மிருந்தே பெற்றுக் கொள்ளப்படுகிறது. கராத்தே, குங்ஃபூவை விட சிலம்பம் கற்றுக் கொள்ளும் பொழுது நரம்புகளுக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக் கும். எதிரியிடம் இருந்து விலகி நின்று சுற்றிச் சுற்றி அடிக்கலாம். இதனால் எதிராளியை எளிதாகத் தாக்க முடியும்.

சிலம்பம் தவிர்த்து, பெண்கள் வர்மக் கலை யையும் கற்றுக் கொள்ளலாம். இதில் தொடு வர்மம், நோக்கு வர்மம் என இரண்டு இருக்கின்றன. உடலில் முக்கிய புள்ளிகளே இதற்கு அடிப்படை. இந்தப் புள்ளிகளைத் தொட்டாலே போதும், எதிராளி கீழே விழுந்து விடுவான். இக் கலையில் எதிராளியைச் சுற்றிப் பிடித்து அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. முக்கியமான வர்மப் புள்ளி களைத் தொட்டாலே போதும். கராத்தே பயிற்சியில் கைகளை நேராக வைத்து ஓடுகளை உடைக்கும் பழக்கம் உள்ளது. தீய எண்ணத்தோடு ஒருவன் பெண்ணைத் தொடும்போது, கைகளை நேராக வைத்து அவன் மணிக்கட்டைத் தாக்கினால் போதும்; அந்த மணிக்கட்டு கழண்டு விடும். இவையெல்லாம் ஆதிகாலத்துக் கலைகள். மக்கள் பயன்படுத்திய எளிய தற்காப்புக் கலைகள்.

இன்று அனைவரும் பழைமையை விரும்பித் தான் செல்கின்றோம். கடந்த பத்து வருடங்களாகப் பெண்களுக்கு இந்தக் கலையைக் கற்றுத் தருகிறேன். தற்பொழுது கோவை முல்லை நகரில் பெண்களுக் கும், மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறேன். இதற்கு முன்பு, பெர்சனல் டிரெயினிங்காக வீடுகளுக்கே சென்று பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் கற்றுக் கொடுத்து வந்தேன். தற்போது ‘ஆதிரா சூப்பர் ஜிம்’ என்ற பெயரில் மையத்தை நடத்தி வருகிறேன். கோவையில் மதுக்கரையில் பட்டி வெள்ளியங்கிரி என்ற ஆசான் இருந்தார். அவரிடம் சிலம்பக் கலையைக் கற்றுக் கொண்டேன். இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் எங்கள் மையத்தில் சிலம்பம் பயிற்சி பெற்று வருகிறார்கள். நாலரை வயது முதல் 18 வயது வரை உள்ள பெண் களுக்குப் பயிற்சி தருகிறேன். 35 வயதுக்கு மேற் பட்ட பெண்களும் சிலம்பம் கற்று வருகின்றனர்.

சிலம்பக் கலையை மட்டும் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் கற்று சென்றுள்ளனர். வர்மக் கலையை எனது தந்தை ஹடயோகி பாஸ்கர சுவாமிகள் எனக்குக் கற்றுக் கொடுத்தார். தற்போது அவர் சமாதி ஆகிவிட்டார். எனது தந்தை மருத்துவத்துடன் வர்மக்கலையையும் இணைத்துக் கற்றுக்கொடுத்து வந் தார். எனக்கு வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தார். மிகவும் நுணுக்க மான கலை. இதைக் கற்றுக் கொடுக் கும்பொழுது சில நேரங்களில் மரணம் கூட நேரிட வாப்பு உண்டு. தேவைக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இன்றைய உலகில் யாரும் தேவைக்கு இதைப் பயன் படுத்துவதில்லை. தங்களுடைய சுயநலத்துக்குப் பயன்படுத்துகின்றனர். இது வருத்தத்துக்கு உரியது.

சிலம்பத்துடன் இணைந்து ஜிம்னாஸ்டிக் கற்றுத் தருகிறோம். தற்காப்புக் கலைகள் பயிலும்போது ஜிம்னாஸ்டிக் முக்கியமான ஒன்று. மனவலிமையை அதிகப் படுத்துவதற்கு ஜிம்னாஸ்டிக் பயன்படுகிறது. வெளி நாட்டு நிறுவனத்திற்கும் பயிற்சி அளித்து உள்ளேன்.இதுவரை 150-க்கும் மேற்பட்ட குழந்தை களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளேன். ஜிம்னாஸ்டிக் கில் பெண்கள் கற்றுக் கொள்வதற்கு நான்கு பயிற்சி முறைகள் உள்ளன. ஆண்களுக்கு ஆறு பயிற்சி முறைகள் உள்ளன. ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொள் வதற்கு ஒரு வருடம் வரை ஆகும். முறையான பயிற்சி எடுப்பதன் மூலம் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம். உடலில் நெகிழ்வுத் தன்மையை அதிகப்படுத்தும். மன வலிமையை அதிகப்படுத்தும். ஒரு சிலர் ஒரு விஷ யம் செவதற்கு முன்பு ஆயிரம் தடவை யோசிப் பார்கள். ஆனால், ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொண் டவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். ஒரே தடவைதான் யோசிப்பார்கள். இவர்கள் சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்பார்கள். தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்வதன் மூலம் பெண்கள் தங்களை முறை யாகத் தற்காத்துக் கொள்ளலாம் இங்கு பயிற்சி எடுத் தவர்கள் மாநில அளவில் பரிசுகள் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஏன் இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், பெற்றோர்கள் குழந்தைகளை டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ் என்று மட்டுமே சேர்த்து விடுகின்றனர். தற்காப்புக் கலைகள் என் பதை, பெற்றோர்கள் யாருமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால் என்ன நடக்கிறது என் றால், பெண்களின் இறப்பு சதவிகிதம் அதிகரிப்பு, குழந்தைகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுதல், தற்கொலை செதுகொள்ளும் பெண்கள் என நிறைய சம்பவங்கள் நடக்கின்றன.

உடல் வலிமையும், மன வலி மையும் இருந்தால்தான் இந்தச் சமூகத்தை எதிர்கொண்டு வாழ முடி யும் என்பதைப் பெற்றோர்கள் இன்று உணர்ந்துள்ளனர். தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்ள தங்களது குழந்தைகளை அனுப்பி வைக்கின்ற னர்" என்று முடித்தார் மதன்குமார். இன்றைய பெண்களுக்கு உடல் வலிமையும் மனஆரோக்கியமும் மிகவும் முக்கியம். எனவே, பெண் குழந்தைகள் மனவலிமையும் உடல் வலிமையும் பெற சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும்.

Post Comment

Post Comment