தேயிலையைப் போல பறிக்க முடியாது வோட்டுகளை!

• நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்எஸ்.மோகன், கோவில்பட்டி

? பிரியங்கா தோட்டத் தொழிலாளர்களுடன் இயல்பாகப் பழகினாராமே?

! ராகுலும் பிரியங்காவும் எளிய மக்களையும் மாணவர்களையும் தங்கள் செகைகளால் கவர்வது உண்மை. ஆனால், தேயிலையைப் பறிப்பதுபோல எளிதாக வோட்டுகளைப் பறித்துவிட முடியாது.

பா.சக்திவேல், கோவை

?1000த்தைவிட 1500 பெரிது என்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்தானே?

! எண்களைவிட மக்களின் எண்ணங்கள்தான் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அ.சு.நயினார், பாளையங்கோட்டை

குஷ்பு பிரசாரத்தைத் துவக்கிவிட்டாரே?

நெல்லை தொகுதியில் அதிகாரபூர்வ பா.ஜ.க. வேட்பாளராக நைனார் நாகேந்திரன் அறிவிக்கப்படும் முன்னரே அவருக்காக வாக்கு சேகரிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் அவர் மக்களின் வாழ்த்துக்காக ஐந்து விரல்களையும் விரித்துக் கையைக் காட்டும்போது, அவரது பழைய கட்சியின் சின்னம்தான் நினைவுக்கு வருகிறது.

அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி

தபாலில் வாக்களிக்கும் வசதியை ஏன் அரசியல் கட்சிகள் வரவேற்றகவில்லை?

! 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், அத்தியாவசியப் பணியி லிருப்போருக்கு அளிக்கப்பட்டிருக்கும் வசதி இது. ஆனால், கடந்த காலங்களில் இந்தத் தபால் வோட்டுகள் எழுப்பியிருக்கும் சந்தே கங்களும் சர்ச்சைகளும், ‘இது ஆளும் கட்சி யின் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவிடும்’ என்று அரசியல் கட்சிகள் அஞ்சுகின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை. அதில் இன்பதுரையின் வெற்றியை நிர்ணயித்தது 49 தபால் வோட்டுகள். அவை செல்லாதது என்ற வழக்கு மாவட்ட, உயர், உச்ச நீதிமன்றம் என்று பயணித்து இன்னும் தீர்ப்பு வரவில்லை. அடுத்த தேர்தல் வந்துவிட்டது. இப்போது புரிகிறதா? அரசியல் கட்சிகளின் அச்சம்.

ரஞ்சினிப் பிரியன், பள்ளிப்பாளையம்

இன்றைய குணசித்திர நடிகர்களில் யாருக்கு முதலிடம்?

தன் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து உள்வாங்கி அதைத் தன் உச்சரிப்பாலும் உடல்மொழியாலும் வெளிப்படுத்தும் பிரகாஷ் ராஜுக்கு முதலிடமும் நாசருக்கு இரண்டாம் இடமும் கொடுக்கலாம். நடிகைகளில் அம்மா சரண்யாவுக்கு முதலிடமும் சேச்சி ஊர்வசிக்கு இரண்டாம் இடமும் கொடுக்கலாம்.

பிரதிபா, ஈரோடு

தேர்தல் காலங்களில் ஏன் அரசியல் தலைவர்களின் சிலைகளைத் துணியால் மூடுகிறார்கள்?

வாக்குகள் பதிவு செயுமிடத்தின் 200 மீட்டர் சுற்றளவிற்கு எந்த அரசியல் கட்சியின் சுவரொட்டி களோ, விளம்பரங்களோ கட்சித் தலைவர்களின் சிலைகளோ இருக்கக் கூடாது என்ற தேர்தல் ஆணைய விதிகளை அமல்படுத்த எவருக்கோ உதித்த எண்ணம் இது. ஓட்டுச்சாவடிக்குப் போகும் வழியில் 15 நிமிடத்தில் ஒரு தலைவர் சிலை பார்த்து மனதை மாற்றிக்கொண்டுவிடும் புத்திசாலிகள் வாக்காளர்கள் என்று ஆணையம் நமது வாக்காளர்களை மதிப்பீடு செதிருக்கிறது.ஆனால் சிலையை மறைத்திருக்கும் விதத்திலிருந்தே அது அம்மா சிலை, இது எம்.ஜி.ஆர். சிலை என்பதை உறுதி செது கொள்ளும் வகையில் மறைத்திருப்பது நம்மவர்களின் புத்திசாலித்தனம்.

மல்லிகை மன்னன், மதுரை

ஒரு ஐ.பி.எஸ். பெண் போலிஸ் அதிகாரியே தன் உயர் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறாரே?

பெண் அதிகாரி உள்துறைச் செயலரிடம் நேரில் புகார் கொடுப்பதைத் தடுக்க அந்த உயர் அதிகாரி செத முயற்சிகளே அவரது குற்றத்தை உறுதி செகிறது. உயர் நீதிமன்றம் தன்னிச்சை யாக வழக்குப் பதிவு செது அதன் கண்காணிப்பில் விசாரணை நடத்த ஆணையிட்டிருப்பது முந்தைய வழக்குகளிண் கதியை இது அடையாது என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

வண்னை கணேசன், சென்னை

ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னவாயிற்று?

எல்லா அரசு திட்டங்கள் போலத் திட்டமிட்டபடி முடியாமல் பாதியில் நிற்கும். குழப்படிகளினால் எங்கள் நகரம் ஸ்மார்ட் சிட்டியாக வேண்டாம். சாதா சிட்டியாக யிருந்தாலே போதும் என்று மக்கள் எண்ண ஆம்பித்துவிட்டார்கள்! ஒரு ஸ்மார்ட் சிட்டிக்கு 1000 கோடி என்ற பட்ஜெட்டில் நூறு நகரங்கள் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்துக்கு 10 நகரங்கள். பட்ஜெட்டில் பாதியை மாநில அரசுகள் ஏற்க வேண்டும். கடனில் மூழ்கியிருக்கும் தமிழக அரசு வரும் ஆண்டுகளில் இதற்குச் செலவிட முடியுமா என்பது சந்தேகமே.

அ.ஜெயபால், சிதம்பரம்

தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சரிவர நடத்த வில்லை என்ற புகார் எழுந்திருக்கிறதே?

நாங்கள் மதிக்கப்படவில்லை என கண்ணீர் விட்டிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. வருத்தமளிக்கிறது என்கிறார் வைகோ. தேசிய அளவில் ஒற்றுமையுடன் போராடி வெல்ல வேண்டியதற் காக இதை ஏற்கவேண்டியிருக்கிறது என்கிறார் தொல்மா... பேச்சுவார்த்தைக்கு வரும் தலைவர்களை அறிவாலயத்தின் நுழை வாயிலியே வரவேற்று அது ஏமாற்றத்தில் முடிந்தால்கூட மரியாதையுடன் வழியனுப்பவர் கலைஞர். தொகுதிகளில் இடம் தராவிட்டாலும் என் மனதில் இடம் தந்திருக்கிறேன் என்று பேசி சமாதனப்படுத்தியவர் கலைஞர். ஆனால் அவரது வாரிசு இவற்றைச் செயத் தவறி யிருக்கிறது. முதல் சுற்றுப்பேச்சுவார்த்தைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி தொடர்ந்த பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்கவில்லை என்பதைக் கவனித்தீர்களா? கலைஞர் பல்கலைக் கழகத்தில் ஸ்டாலின் கற்க வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது.

அயன்புரம் சத்திய நாராயணன், சென்னை

மறைந்த பத்திரிகையாளர் கிருஷ்ணமூர்த்தி குறித்து.ஒரு பிரபல நாளிதழின் ஆசிரியர், ஒரு போராளியின் மகன், நாணயவியல் அறிஞர் சேர சோழ பாண்டியர்கள் வெறும் குறுநில மன்னர்கள், மற்ற வட இந்தியப் பேரரசுகளோடு ஒப்பிடுகையில் தமிழ் நாட்டில் நாணய முறை இல்லை, பண்டமாற்று முறையே வழக்கி லிருந்தது என்பதே நாணயவியல் அறிஞர்களின் கருத்தாக இருந்தது. வழுதி நாணயங்களை இவர் கண்டெடுத்து அதில் காணப்படும். ழகரம் தமிழுக்கே உரியது என்பதைப் பல சான்றுகளோடு முன்வைத்து இவர் விடாப்பிடியாக வாதாடிய பின்னர்தான் தமிழகத்தைப் பற்றிய அறிஞர்களின் பார்வையை மாற்றியது. யூனிகோட் வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே கணினியில் தமிழைப் பயன்படுத்தும் முறையை முயற்சி செதவர்.

சா.சோக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்

என்னுடைய திட்டங் களைத் தி.மு.க. காப்பி அடிப்பதாகக் கமல்ஹாசன் கூறுகின்றாரே?

இப்போது காப்பியடித்த தோடு சொந்தமாகவும் சேர்த்து எழுதியிருக்கிறது அ.தி.மு.க." என்று சொல்லப்போகிறாரோ!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :