தீமைக்கும் திறமைக்கும் இடையில் நடக்கும் போட்டி!

தேர்தலை நோக்கி
பொன்.மூர்த்திதமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளிடையே சூடுபிடித்துவிட்டது. பரபரப்பாகத் தேர்தல் வியூகங்களை அமைத்து தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அணிகளைச் சார்ந்தவர்கள் இங்கே வாரந் தோறும் தங்கள் பார்வைகளை எடுத்து வைக்கிறார்கள். இந்த வாரம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆத்தூர் தொகுதி வேட்பாளரும் அந்தக் கட்சியின் பொருளாளருமான திலகபாமா.

சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க.வின் செயல் திட்டம் என்ன?

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியை வெற்றியை நோக்கி நகர்த்துவது இளைஞர் கள். இளைஞர்களை, இளம்பெண்களை அதிகம் கொண்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. ஏற்கெனவே தம்பிகள் படை, தங்கை கள் படை, மக்கள் படை என முப்படைகளுக்கான உத்தியைக் கடைப்பிடித்து எல்லா வகையினரும் கட்சியின் நோக்கங்கள் கொள்கைகள் போ சேர்வதற்கும் அவர்கள் கட்சியில் பிடிப்போடு இருப்பதற்கும் வழி வகை செயப்பட்டிருந்தது. கட்சி கிராமப் புறங்களில் ஊடுருவ, தேர்தல் களத்தில் கடை நிலை தொண்டனும் முக்கியப் பணி ஆற்ற இது பேருதவியாக இருக்கும். இது பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் திட்டமாக ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ளது."

அ.தி.மு.க. பா.ஜ.க.வின் மக்கள் செல்வாக்கு எந்தளவுக்கு இருக்கிறது? தி.மு.க.வின் வெற்றி வாப்பு எப்படி உள்ளது?

செல்வி ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர் ஒரு தள்ளாட்டம் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால், தொடர்ந்து அ.தி.மு.க. தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் உத்வேகத்தில் மக்கள் பணியில் தங்களை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். அதிலும் மூத்த, 40 ஆண்டுகால அரசியல்வாதியான மருத்துவர் அயாவின் வழிநடத்தலோடு முக்கியப் பணிகள் நடக்கின்றன. மத்தியிலும் மாநிலத் திலும் ஆளும் கட்சிகள் அறிவித்திருக்கின்ற நலத் திட்டங்கள், அ.தி.மு.க.வின் ஒற்றுமை, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர வேண்டும் என்ற நம்பிக்கை இவை அ.தி.மு.க. - பா.ஜ.க.வின் செல்வாக்கை உயர்த்தியிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை இருந்தபோது செயாத திட்டங்கள், தமிழகத் திற்கு எதிராகச் செத ஊழல்கள், இன்னும் மக்கள் மனதில் இருந்து அகலவில்லை. பத்து வருடம் காந்து கிடந்தவர்கள் இன்னும் அதிகமா கொள்ளை அடித்து விடுவார்கள் என்ற பயம் மக்களிடையே இருப்பது தி.மு.க.வின் தோல்விக்குக் காரணமா அமையும் என்பது என் கருத்து. அதைவிட திராவிட முன்னேற்றக் கழகங்களின் முன்னோடிகளின் துரோக வரலாறுகளை இளம் தலைமுறை சமூக ஊடகங்களின் வாயிலாக நிறைய தெரிந்து வைத்திருக்கின் றனர். அதுவே தி.மு.க.வின் பலவீன மாக அமைந்து தோல்விக்குக் காரணமா அமையும்."

வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு பெற்றதால் வாக்கு சதவிகிதம் பா.ம.க.விற்கு அதிகம் கிடைக்க வாப் பிருக்கிறதா?

நிச்சயமாக. 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு ஒரு நம்பிக் கையைக் கொடுத்துள்ளது. வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாவட் டங்களில் 10.5 சதவிகிதத்தைப் பெற்றுத் தந்ததன் மூலம் அயா அவர்கள் குலசாமி யாகவும், பாட்டாளி மக்கள் கட்சி அடுத்த தலைமுறைக்கான இயக்கமாகவும் உயர்ந்து நிற்கிறார்கள். அதுமட்டுமல்ல, அனைத்துச் சமுதாய மக்களும் அதுபோல உரிமை பெற்று கல்வியிலும் வேலை வாப்பிலும் உயரலாம் என்று நம்பத் தொடங்குகின்றனர். அதுவே பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு சதவிகிதத்தை உயர்த்தும். மக்களிடம் இந்த இட ஒதுக்கீடு வெற்றி பெறும் ஆதரவைப் பெற்றிருப்பதற்குப் பெரும் சான்று. இன்று அந்த வெற்றியைத் தனது என்று பலரும் கொண்டாடத் தொடங்கியிருப்பதே ஆகும்."

தற்போதைய சட்டமன்றத் தேர்தல் நான்கு முனைப் போட்டியில் எந்தவிதமாக அமையும்?

என்னைப் பொறுத்தவரையில் தீமைக் கும், திறமைக்கும் இடையில் நடைபெறும் போட்டி இது.நேற்று கட்சி தொடங்கியவர்கள், சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கு கட்சி தொடங்கியவர்களை எல்லாம் நான்/ நாங்கள் போட்டியாகவே கருதவில்லை. இப் போது ஆளும் கட்சியால் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் எல்லாம் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கூட்டணியின் பின்னால் நிற்கின்றனர்."

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :