தலையங்கம்

சபாஷ் பாண்டியா!உலகையே உலுக்கிய கொரோனாவின் சுவடுகள் இன்னமும் முற்றிலுமாக மறையவில்லை. சீனாவில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா என உலக நாடுகளைச் சுற்றி வளைத்த கொரோனா என்னும் பெருந்தொற்றானது கடந்தாண்டு இந்தியாவையும் வாட்டி வதைத்தது. கொரோனா பரவல், ஊரடங்கு எனக் கடந்த 2020ல் பொதுமக்கள் தொடர்ச்சியாகத் துன்பங்களை அனுபவித்தனர். சர்வதேச அளவில் கொரோனா பரவலில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்தியா முழுமைக்குமான ஊரடங்கு பொதுமக்களை முடக்கிப் போட்டது.

கொரோனாவின் பாதிப்பு ஓராண்டை நிறைவு செயும் வேளையில், அதன் சுவடுகளும், இழப்புகளும் நம்மை விட்டு மறையவில்லை. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பின்னர், ஊரடங்கு தளர்ந்து மக்கள் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்ட வண்ணம் உள்ளனர். இருப்பினும் கொரோனாவின் விஸ்வரூபம், இரண்டாவது அலையாக எழுந்து உலக நாடுகளை மீண்டும் பயமுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் 2வது அலைக்கு வாப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங் களில் மீண்டும் கொரோனா தாக்கம் தென்படத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி மருந்தை ஆராந்து கண்டுபிடிப்பதிலும், அதைச் சோதித்தபின் அறிமுகப்படுத்துவதிலும் மிகுந்த முனைப்பைக் காட்டி அறிமுகப்படுத்துவதில் முன்னிற்பவர்கள் நாங்கள் என்று உலகிற்குக் காட்டியிருக்கிறது இந்தியா.

கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மருந்து நாட்டிலுள்ள அனைவருக்கும் தடையின்றிக் கிடைக்க அசுர வேகத்தில் மத்திய அரசின் நல்வாழ்வுத்துறை ராணுவ ஒழுங்கில் செயல்பட்டிருக்கிறது. முதலில் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் எனத் தொடங்கி மூத்த குடியினர் எனத் திட்டமிட்டபடி தொடரும் இந்தப் பணி சீராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவ மனைகளில் காத்திருக்கும் முதியோரைக் கண்ணியத்துடனும் கனிவுடனும் கவனிக்கப்படும் செதிகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்கப்படும் இந்தத் தடுப்பூசி தேர்ந்தெடுக் கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் அரசு நிர்ணயித்த ரூ.250/-

கட்டணத்தில் மட்டுமே வழங்கப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. பெரிய நகரங்களிலுள்ள கட்டணம் அதிகம் வசூலிக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கும் இது பொருந்தும். இது மத்தியதர மக்களுக்கு வசதியான ஒரு வாப்பு.

இதன் விளைவாக இந்த ஆண்டு இறுதிக்குள் 100கோடி மக்கள் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகப் பதிவுபெறப்போகும் மருத்துவப் புரட்சி இது.

இதைப் பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்குமிடையே முன்னெடுத்து வெற்றிகண்ட பிரதமரையும் அதைத் திறம்படச் செயல்படுத்தும் மருத்துவப் பணியாளர்களையும் நன்றியுடன் மனதாரப் பாராட்டிச் சொல்வோம்.ஒரு சபாஷ்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :