ஓடிடி தளங்களும்...கலாசாரச் சீரழிவும்


டி.வி.ராதாகிருஷ்ணன்இயல்... இசை... நாடகம்...

முதலில் இப்போது நாம் ஒருவருடன் ஒருவர் பேசுவது உரைநடை. இது இயல் ஆகும்.நாம் பேசுவதைப் பாடலாகத் தெரிவித்தால் அதுவே இசை. உரைநடையும், இசையும் சேர்த்தால் அதுவே நாடகம். நாடகத்தின் பரிணாம வளர்ச்சியே திரைப்படங்கள்.

16 எம்எம்., 35 எம்எம்., சினிமாஸ்கோப்.70 எம்.எம்., எனத் தொடர்ந்து பல மாற்றங்களைத் திரைப்படங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

திரைப்படங்களை நாம் சாதாரணத் திரையரங்கு சென்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், விஞ்ஞானம் வளர வளர சில திரைப்படங்களைச் சில சிறப்பு ஒலி/ஒளி அமைப்புள்ள திரையரங்குகளில் பார்த்தால்தான் சிறப்பா இருக்கும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், குடும்பத்துடன் திரையரங்கு செல்வது, அங்கு ஸ்டாலில் விற்கும் அநியாய விலையில் உணவுப் பண்டங் களை... வேறு வழியின்றித் தங்கள் குழந்தை களுக்காக வாங்குவது, தவிர்த்து அவர்கள் செல்லும் வாகனத்தை நிறுத்த அதற்கான கட்டணத்தை அளிப்பது...என ஒரு திரைப்படத்தைப் பார்க்க சாதாரண நான்கு நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 2000 ரூபா வரை ஆனதால், குடும்பத்தலைவரால் ஒரு திரைப்படத்திற்குச் செல்வதைப் பலமுறை யோசிக்க வைத்தது.

இந்தச் சமயத்தில்தான் direct to home (DTH) என்று ஆரம்பித்து படங்கள் திரையிடப்பட்டன.

பின் ‘ஓடிடி’ அதாவது ‘ஓவர் தி டாப்’ என்ற தளங்கள் உருவாகின. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் போன்றவை இன்று பிரபலமாகியுள்ள தளங்கள் ஆகும். இன்று ஒவ்வொரு தளங்களிலும் லட்சக்கணக்கான அங்கத்தினர்கள். அதிலும் குறிப்பாக ஒரு தளத்திற்கு அங்கத்தினர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டிவிட்டதாம். அதுவும் சென்ற ஆண்டு லாக்டவுன் காலத்தில், பலரும் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது. திரை யரங்குகளும் இல்லை. அதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து பொழுதைப் போக்க மக்கள் ஓடிடி தளத்திற்கு அதிகமாக வந்தனர்.

ஒவ்வொரு தளத்திற்கும் அதற்கேற்றாற் போல உறுப்பினர்கள் கட்டணம்.

உதாரணத்திற்கு ஆயிரம் ரூபா ஆண்டுக் கட்டணம் என்றால், ஒரு கோடிக்கு மேலான அங்கத்தினர்கள் கொண்ட தளத்தின் சந்தா எவ்வளவு வந்திருக்கும்... கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

தயாரித்து பல காரணங்களால் திரைக்கு வராத திரைப்படங்கள் இவர்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட விலை பேசி வாங்கி தளத்தில் வெளியிட்டன.

சமீப காலங்களில் ‘பொன் மகள் வந்தாள்’, ‘சூரரைப் போற்று’ ,‘மாறா’ ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாயின. ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி முப்பது நாட்களுக்குள் ஓடிடி தளத்திற்கு வந்து விட்டது. இதற்கான தணிக்கைச் சான்றிதழில் only for theatrical release என்று உள்ளது. அப்படி தணிக்கைக் குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழ் ஓடிடிக்கு பொருந்துமா? எனத் தெரியவில்லை.

இவை தவிர்த்து... வெப் சீரீஸ்கள் மூலம் மக்களைக் கவர போட்டி போட்டன இத்தளங்கள்.

இவற்றுக்குத் தணிக்கை இல்லை எனப்படும் போது... பல சீரிஸ்கள் சமூக விரோதிகளை கதாநாயகனாக்கிப் பாராட்டும் போக்கு, பிற மதத்தை, இனத்தை, கடவுள்களை விமர்சிக்கும் நிலை போன்றவை தொடர்ந்தன. சர்வ சாதார ணமா இந்தச் சமூக விரோதிகள் பேசும் கெட்டவார்த்தைகள் ஒவ்வொருவர் வீட்டு வரவேற்பு அறைகளிலும் கேட்கத் தொடங்கின.ஆண், பெண் பேதமின்றி மது அருந்துவதும், புகைபிடிப்பதும், பிறர் மனைவியை/கணவனைக் கவர்வதுமாக பாத்திரப் படைப்புகள் இவற்றில் உலாவரத் தொடங்கியுள்ளன.

ஒரு வீட்டின் மருமகள், தன் கணவன், மாமனார்,வேலைக்காரன் ஆகியோருடன் உறவு கொண்டு பிறக்கும் குழந்தையின் தகப்பன் அவர் தான் என ஒவ்வொருவரிடம் சொல்லி நம்ப வைப் பது போல ஒரு சீரிஸ். இந்த உடலுறவுக் காட்சிகளால் இந்த வெப் சீரிஸ் பார்ப்பவர்களின் கீழ்த் தர உணர்ச்சியினைத் தூண்டிப் பார்க்க வைத்தது.

இயற்கைக்கு மாறுபட்டு வேறுவிதத்தில் உடலுறவு வைத்திருந்தான் என கணவனைக் கொன்று விடுகிறாள் ஒருவள். இது ஒரு வெப் சீரிஸின் கதை. கணவனை மனைவி கொல்வதில் ஆரம்பித்து... கிளைமாக்ஸில் அதற்கான காரணம் இதுதான் என்று முடிகிறது அது.

மற்றுமொரு சீரிஸ் இந்து மதக் கடவுள் பற்றிய சர்ச்சைக்குரிய வசனங்களையும், காவல்துறையை மிகவும் கேவலமாகக் காட்டியதாகவும் வழக்குத் தொடரப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் அந்தத் தயாரிப்பாளரை ஏற வைத்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் தேச நலனைக் கருத்தில் கொண்டு, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை நியாயமான விதத்தில் கட்டுப்படுத்தலாம் என்கிறது சட்டம். ஆகவே, சில காட்சிகளும், வசனங்களையும் நீக்கும் அதிகாரம் இருப்பதால் தணிக்கை தேவை இதுபோன்ற சீரிஸ்களுக்கு என்கின்றனர் பெரும்பாலானோர்.

உச்ச நீதிமன்றமும் சமீபத்தில், சமூக வலை தளங்களில் சில சமயங்களில் ஒளிபரப்பாகும் ஆபாசக் காட்சிகளை ஒழுங்குபடுத்த உரிய நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் சமநிலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளது.

மைய அரசு சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் உள்ளிட்டவற்றிற்கான வழிகாட்டு நெறிமுறைகளைச் சென்ற மாதம் வெளியிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மைய அரசுக்கு வழிகாட்டு நெறிமுறைகள், சட்ட விதிமுறைகள் இவற்றையும் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளதா என்றும் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செயவும் கூறியுள்ளது.

இந்நிலையில், இனிவரும் காலங்களில் திரைப் படங்களும், வெப் சீரிஸ்களும் ஓடிடியில்தான் அதிகம் வெளிவருதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதால், ஆரம்ப நிலையிலேயே அரசு தலை யிட்டுத் தேவையான சட்டங்களை இயற்றி, கலாசாரச் சீரழிவின்றி தொடர்களைத் தயாரிக்க வேண்டிய அவசியத்தைத் தயாரிப்பாளர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பா இருக்கிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :