நின்று கொல்லும் தெய்வம்


சோம வள்ளியப்பன்
• ஓவியம் : தமிழ்ஆகஸ்ட் 1

செல்போன் மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் பாலன், போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார். புரொபசர் ராஜாராம். அவருடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் கல்லூரியில் பணியாற்றியவர்.

‘ராஜாராமுக்கு என்ன வேலை! வீட்டில் சும்மா இருப்பவன். ஏதாவது உதவிக்குத்தான் கூப்பிடுவான். தேவையென்றால் இன்னொரு முறை கூப்பிடட்டுமே’ என்று அது ஓயும்வரை எடுக்காமல் விட்டார்.

செல்போன் மணி மீண்டும் அடிக்க, எடுத்தார். அதே ராஜாராம்தான் பேசினார்.

விஷயம் தெரியுமா பாலன் சார். ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் சிலர் நமக்கெல்லாம் மரியாதை செய போறாங்களாம். விவரங்கள் சேகரிச்சுக்கிட்டு இருக்காங்க..."

நம்ம ஓல்ட் ஸ்டூடன்ஸா? ஓ! நீங்க ‘எல்.எல்.டெக்’ காலேஜ் பத்திச் சொல்றீங்களா? சரி சரி. எந்த பேட்ச்?"

1974-79 ன்னு நினைக்கிறேன்" ஓ! அவ்வளவு முன்னாடி பேட்சா! நாற்பது வருஷமாச்சே!"ஆமாமாம். மொத்தம் 95 பசங்களாம். 65 பேர் வரை கண்டுபுடிச்சு ஒண்ணு சேர்ந்திட் டாங்களாம்."

பரவாயில்லையே. எல்லாம் இப்ப நல்ல பொசிஷனில் இருப்பாங்களே!"பின்ன! இல்லாமலா சார்? நம்ம காலேஜ் பசங்க. அதுவும் அவ்வளவு ஆரம்பகால பேட்ச் வேற! சிலர் வெளிநாடுகளில்... சிலர் தொழிலதிபர்களா பிரமாதமா இருக்காங்க."

உங்களுக்குச் சொன்னது யாரு?"ஆரவாமுதன் போன் பண்ணினான். ஆரவாமுதன் நினைவிருக்கா சார்?"எந்த ஆரவாமுதன்? காரைக்குடி யுனிவர்சிட்டி முன்னாள் வி.சி.யா?"

இல்ல சார். 1974 பேட்ச் ஸ்டூடன்ட். எஸ். ஆரவாமுதன்."என்ன ராஜாராம், விளையாடுறீங்களா? அவங்க படிச்சது 1974 ல. நான் புரோமோஷனில் வி.சி.ஆகி, பிறகு யுனிவர்சிட்டி விட்டு வெளியே வந்து... அதுவே பத்து வருஷம் ஆச்சு. சாதாரணமா ‘ஸ்டூடன்ட் ஆரவாமுதன்’ என்கிறீங்க!"

அது சரி. உங்க லெவலே வேற சார். எங்களை மாதிரியா நீங்க? அடுத்தடுத்து மேல போயிட்டு எழுபது வயசுலயும் ரெண்டு காலேஜ் ஹேண்டில் பண்றீங்க. இன்னொண்ணுக்கு அட்வைசர்."

அதை விடுங்க. அந்த ஆரவாமுதன் வேற என்ன சொன்னான்?"அவுங்க பேட்ச் ‘வாட்ஸ்அப் குரூப்’ ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சாம். மொத்தம் 95 பேர்ல இப்ப 65 பேர் இருக்காங் களாம்.

ஆகஸ்ட் 15 சென்னையில மீட் பண்ணி சேர்ந்து செலிபரேட் பண்ணப் போறாங்களாம். டீச்சர்ஸுக்கு மரியாதை செயப்போறாங்களாம்."

அப்படியா! நல்ல விஷயமாச்சே! நினைப்பா செறாங்களே! குட்... குட். முன்னாடி கூட இதேமாதிரி ஒரு பேட்ச் பசங்க செஞ்சாங்கல்ல..."ஆமாம். அது நடந்து ஒரு ஏழெட்டு வருஷம் இருக்கும். இவங்க அதையெல்லாம் விட ரொம்ப அக்கறையா பெரிசா செறாங்க சார்."

அப்படியா? என்ன பெரிசாப் பண்ணுவாங்க! மாலை போடுவாங்க. ரிஸ்ட் வாட்ச் கொடுப்பாங்க. வேற என்ன..."இல்ல சார். இவங்க வேற மாதிரி பெருசா செயப்போறாங்களாம்."

அப்படியா?" செயட்டும், செயட்டும். எப்பன்னு சொன்னீங்க?"ஆகஸ்ட் 15."நிமிர்ந்து காலண்டரைப் பார்த்த பாலன், அப்படியா? இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கு. எனக்கு இன்னும் இன்விடேஷன் வரலையே!"

கூப்பிடுவாங்க சார். உங்களைக் கூப்பிடாமலா? இன்னும் நாள் இருக்கில் லையா?"அதுக்கில்லை. அன்னைக்கு ஏதும் போர்டு மீட்டிங் அல்லது ஏதாவது இன்ஸ்பெக்ஷன் ஆளுங்க வந்துட்டா நான் என்ன செயுறது? எதுவா இருந்தாலும் முன்னாடி சொல்லணும் இல்லையா?

என்னத்த படிச்சு, எவ்வளவு வயசான என்ன! இப்படித்தான் இருக்காணுங்க" என்று சொல்லிவிட்டு சிரித்தார். பின்பு, ராஜாராம், எதுக்கும் அந்த ஆரவாமுதன்கிட்ட என்னு டைய இரண்டு மொபைல் நம்பர்களையும் கொடுங்க. ஒண்ணு பிசியா இருந்தாலும் இன்னொண்ணுல கூப்பிடலாம் பாருங்க."

அதெல்லாம் பத்து நாள் முன்பே அவுங்க ‘ஃபுல் லிஸ்ட்’ வாங்கிட்டாங்க சார். ஏதாவது புது நம்பர் என்று நீங்கள் வரும் கால்களை எடுக்காமல் இருந்திடப் போறீங்க." இல்ல... இல்ல. அப்படி ஒண்ணும் வந்த மாதிரி தெரியல. என்னைக்குன்னு சொன்னீங்க?"

ஆகஸ்ட் 15"ராஜாராம் போனை வைத்துவிட்டார். பாலனுக்கு கொஞ்சம் யோசனையாக இருந்தது. பக்கத்தில் நின்று பாலன் பேசிய வற்றைக் கவனித்துக் கொண்டிருந்த அவர் மனைவி கேட்டார்கள், என்னவாம் அந்த ராஜாராமுக்கு!"ஒண்ணுமில்ல. எங்க ‘எல்.எல்.டெக்’ காலேஜ் ஒரு பேட்ச் பசங்க விழா எடுக்கப் போகிறார்களாம். எங்களுக்கெல்லாம் பெரிசா மரியாதை செயப் போறாங்களாம்."

அதுக்கு ஏன் முகத்தை இப்படி சங்கடமா வெச்சிருக்கீங்க?"இல்ல... என்னை இன்னும் கூப்பிடல. அதான்..."உங்களைக் கூப்பிடாமலா? அங்க ஹெச்.ஓ.டி. யாவும் இருந்திருக்கீங்க இல்ல. அப்ப நீங்க ‘ரீடரா இருந்தீங்களோ? உங்களைக் கூப்பிடாமல் எப்படி ஃபங்ஷன் நடக்கும்? நீங்க பின்னாடி யுனிவர்சிட்டி வி.சி. வேற ஆயிட்டீங்க. நீங்க போனா, பின்னாடியே மீடியாவும் வரும்... ஃபங்க்ஷனுக்கே ஒரு இம்பார்டென்ஸ் வரும்..."

சரி... சரி. விடு கூப்பிடுவாங்க. வீட்டு ‘லேண்ட் லைன்’ல கால் எது வந்தாலும் எடுக்காமல் விட்டுடாத. டவர் கிடைக்கல் லன்னு அதுல கூப்பிட்டாலும் கூப்பிடு வானுங்க."

ஆகஸ்ட் - 10 ராஜாராம், நான்தான் டாக்டர் பாலன் பேசுறேன்."சொல்லுங்க சார். உங்கள அழைக்க வந்திட்டுப் போட்டாங்களா?"என்ன கேட்டீங்க? அழைக்க வந்தாங் கலான்னா? அப்ப, அழைப்பதற்கு நேரா வீட்டுக்கே வர்றாங்களா?"ஆமா சார். ஒரு புரொபசர் வீட்டுக்கு நாலு பேர்ன்னு பிரிச்சுக்கிட்டு இருக்காங் களாம். எங்க வீட்டுக்கு முந்தாநாள் வந்தாங்க. பெரிய பித்தளைத் தட்டு. அதுல மெரூன் கலர் ரெடிமேட் சட்டை, வேட்டி. ஒரு கோவாப் டெக்ஸ் பட்டுப்புடைவை, பூ, பழம்... கூட ரெண்டு அரை பவுன் தங்க காயின் வேற. இதெல்லாம் எதுக்கு வேண்டாண்ணா கேக்கல. புரொபசர்களை மட்டும் கூப்பிடலை யாம். கூடவே லேப் அட்டெண்டருங்க, வாட்ச்மேன்களையும் கூப்பிடுறாங்களாம். அவுங்களுக்கெல்லாம் தங்க காயினுக்குப் பதிலா 25 ஆயிரம் ரூபாக்கு டி.டி கொடுக் கிறாங்க. மத்தபடி எல்லாம் ஒரே மாதிரியாம்"

................."

சார்..."சொல்லுயா... கேட்டுக்கிட்டுதான் இருக்கேன்."15ஆம் தேதி சாயங்காலம் நாலு மணிக்கு கார் வரும். வந்திடுங்கன்னு கூப்பிட்டாங்க"இதுவரை யாரையெல்லாம் கூப்பிட்டி ருக்காங்க?லெதர் கோபாலன். டெக்ஸ்டைல் பாண்டா, டாக்டர் ராமநாதன்..."என்னையா எல்லாரையும் கூப்பிட்டு இருக்காங்க. எனக்குத் தகவல் சொன்னால் தானே அவுங்க வரும்போது நான் வீட்ல இருக்க முடியும்! சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்தா, நான் வீட்ல இல்லன்னா என்ன செவாங்களாம்!"தெரியல சார். உங்க வீடு பெரம்பூர் தூரமுன்னு லேட் ஆவுதோ என்னவோ. நான் வேணும்ன்னா எப்ப வர்றாங்கன்னு கேட் கட்டுமா?"

வேணாம், வேணாம். எனக்குன்னு ஏதாவது ‘சர்ப்பிரைஸ் ப்ளான்’ வச்சிருக்கப் போறாங்க. நீ ஒண்ணும் கேட்க வேண்டாம். விடு."

ஆகஸ்ட் 14 காலை.சார் நான் ராஜாராம் பேசுறேன். என்ன சார் வந்து கூப்பிட்டுட்டாங்க இல்ல?"......."பசங்க உங்களை இன்வைட் பண்ண வந்தாங்கல்லியா சார்?" ம்... அதை விடு. அப்ப நான் வீட்ல இல்ல... வேற என்ன டெவலெப்மெண்ட்? நாளைக்கு என்ன நிகழ்ச்சியாம்?"அடையார்ல இருக்கிற காலேஜ் அலுமினி கிளப் லான்ல மீட்டிங். ஒரு ஸ்டேஜ் போட்டி ருக்காங்களாம். நாமெல்லாம் அவுங்க கொடுத்த டிரெசைப் போட்டுக்கிட்டு போகணுமாம். அப்படியே வரிசையாக ஸ்டேஜ் ஏறணுமாம். அங்க பெயர்கள் எழுதியிருக்கிற சேர்களில் உட்கார்ந்துக் கணுமாம்.

வரவேற்புரை முடிஞ்ச பிறகு பசங்க பேசுவாங்க போல. அப்புறம் நம்மள்ள விருப்பப்பட்டவங்க பேசலாம். நீங்க நிச்சயம் பேசுவீங்க. நிகழ்ச்சியோட ஹைலைட்டே கடைசியிலதான் சார். அவங்க அதை பிளான் பண்ணியிருக்கிற விதமே தனி. நம்ம பசங்க நம்ம மேல பெரிய மரியாதை வச்சிருக்காங்க".அப்படி என்ன டிப்ஃரென்டா செயப் போறாங்க?"நாம எல்லோரும் மேடையின் முன்பக்க விளிம்பு பக்கமாக வரிசையாக நிற்கணுமாம் சார்."நின்னு?"அவங்க எல்லோ ரும் மேடைக்கு கீழ நிற்பாங்களாம்.நாம அவங்களுக்கு அட்சதை தூவி, ஆசீர்வாதம் செயணுமாம்".....

"சார்.."சொல்லுயா... கேட்டுக் கிட்டுதான் இருக்கேன்..."அவ்வளவுதான் சார். அப்புறம் அங்கேயே டின்னர். முடிஞ்சதும் வீட்டுக்குக் கூட்டிப் போ விட்டுடுவாங்களாம்." இதுக்குத்தான் இவ்வளவு ஆட்டமா?"சார்.."ஒண்ணும் இல்லப்பா. விடு..."நாளைக்கு நிகழ்ச்சியில் பார்ப்போம் சார். அவுங்க உங்களுக்கு வாங்கிய சட்டை அளவு சரியா இருக்கா சார்?"போனை வையா"பாலன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்த அவர் மனைவி, என்னங்க.. பேசக்கூப்பிட்ட மீட்டிங்கிற்கும் வரலன்னிட்டீங்க... இவனுங்க இன்னும் கூப்பிட வரலியே! அதெப்படி உங்களை மட்டும் இன்னும் கூப்பிடலை?"கூப்பிடமாட்டாங்கடி..."அப்படியா? ஏன்?"கூப்பிடமாட்டாங்கன்னா விடேன். கேட்க மாட்டியா? என்ன உனக்கு அந்தப் பட்டுப் புடைவையும் தங்கக் காசும் வேணுமா?"அதுக்கா கேட்கிறேன்! அதெப்படி உங்ககிட்ட படிச்ச பசங்க உங்களைக் கூப்பிடாம விழா நடத்தலாம்?"

ஆகஸ்ட் 14 மாலை

பாலன் சோர்ந்து போய் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அவங்க கூப்பிட லைன்னா என்ன! விடுங்க. சின்ன பசங்க. ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்லாத ராஜாராமையும் பாண்டா வையும் கோபாலையும் கூப்பிடுறாங்க. அவுங்கெல்லாம் ரிட்டயர் ஆனபிறகு வீட்டில் உட்கார்ந் திருக்கவுங்க. மேல மேல வந்து மதிப்போட இருக்கிற உங்களைக் கூப்பிடலைன்னா அந்தப் பசங்களுக்குத்தான் நஷ்டம்"பாலனாலும் அடக்க முடியவில்லை. பொரிந்து தள்ளிவிட்டார். என்ன நெஞ்சழுத்தம் இந்த ராஜாராமனுக்கு! வாரம் ஒருவாட்டி என்கிட்ட பேசுறான். கூப்பிட் டாங்களா கூப்பிட்டாங்களான்னு என்னையக் கேட்கிறான்! வெட்டிப்பயல். கூப்பிடுங் கடான்னு அவனுங்ககிட்ட சொல்ல வேணாமா!"

ஆகஸ்ட் 15, இரவு மணி 11.

காரில் ஏசி மிகவும் சில்லிப்பாக இருந்தது. கழுத்தில் போடப்பட்ட பூமாலையில் இருந்த தண்ணீர் ராஜாராமன் சட்டை காலரை லேசாக நனைத்திருந்தது. மடியில் மடித்து வைத்திருந்த சிவப்பு நிற டர்க்கி டவல் கை வைத்துக்கொள்ள மெத்தென்று இருந்தது. மனநிறைவோடு, பெருமிதமாக பின் சீட்டில் சாந்து உட்கார்ந்திருந்தார். முன் சீட்டில் டிரைவருக்கு பக்கத்தில் ஒரு முன்னாள் மாணவர். பின் சீட்டில் ராஜாராமனுக்குப் பக்கத்தில் மற்றொரு முன்னாள் மாணவர். கார் சீரான வேகத்தில் போக்கொண்டிருந்தது.இரண்டு பேரையும் பார்த்து ராஜா ராமன் பொதுவாகச் சொன்னார். ஃபங்ஷன் ரொம்ப நல்லா இருந்ததுப்பா. ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீங்கல்லாம் பின்னாடி இவ்வளவு பெரியாட் களா வருவீங்க, இவ்வளவெல்லாம் நினைவாப் பண்ணு வீங்கன்னு நாங்க நினைச்சதே இல்லை. சொல்லப்போனா நாங்களே இவ்வளவு வருஷம் இருப் போமுன்னு கூட நினைச்சதில்லை."

சொல்லும்போதே அவர் கண்கள் கலங்கியது. பாடம் சொல்லிக்கொடுத்ததுக்கு இவ்வளவு மரியாதையா! எவ்வளவு பேரு, எவ்வளவு யோசிச்சு, பிரமாதமாகப் பண்ணி இருக்கீங்க! எவ்வளவு முயற்சி, நேரம், பணம் செலவழிச்சு அக்கறையா பண்ணி இருக்கீங்க! ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா" சொல்லிவிட்டு அமைதியாக இருந்தவரை அவர்கள் இருவரும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பின்னர் ராஜாராமன் மெதுவாகக் கேட்டார். ஏம்பா எல்லா புரொபசர்களையும் கூப்பிடலையா?"அவர்கள் இருவருமே பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். ராஜாராமனே மீண்டும் பேசினார். ‘இல்லப்பா... முக்கியமாக நம்ம வி.சி பாலன் சார் எல்லாம் வரல்ல யேன்னுதான்...’ராஜாராமன் பக்கத்தில் இருந்த மாணவர், ‘ஆமாம் சார். கூப்பிடலைதான். அவரை மட்டுமில்ல. இன்னும் இரண்டு புரொபசர்களையும் கூப்பிடலை. எங்களுக்குள்ள நல்லா டிஸ்கஸ் பண்ணிதான் அந்த முடிவெடுத்தோம்." முடிவா? என்ன முடிவு?"வகுப்பெடுத்திருந்தாலும் எல்லாப் புரொபசர்களையும் கூப்பிட வேண்டியது இல்லை... கூப்பிடக் கூடாதுன்னு... "அப்படியா?"ஆமாம் சார். பாலன் சார் ஆகட்டும் ஆரோக்கியசாமி சார் ஆகட்டும், வேலாயுதம் சார் ஆகட்டும், உங்களுக்கே தெரியும், அஸ் அ பேக்கல்ட்டி அவர்கள், ஸ்டுடென்ட்ஸ்கிட்ட எப்படி நடந்துகிட்டாங்கன்னு. வி.சி. பாலன் சார் இருக்காரே அவர், ‘மாணவர்கள்’ ‘சின்ன வயசு’ ‘தெரியாம’ ‘விளையாட்டாச் செ கிறார்கள்’ என்பது போன்ற எந்த புரிதலும் இல்லாமல், எங்க பேட்சுலயே மூணு பசங்களோட இண்டர்னல், மற்றும் லேப் மார்க்குகளில் கை வைத்து... அவுங்க வாழ்க் கையையே கெடுத்துட்டார் சார். ஆரோக்கிய சாமி சார், காலேஜ் பிராபர்டீஸ் வைத்து எவ்வளவு தவறாக எவ்வளவு சம்பாதித்தார்; வேலாயுதம் சார் கிளாஸ் எடுத்ததைவிட சொந்த வேலை செததுதான் அதிகமுன்னு உங்களுத்தெரியாதா சார்..."ஆனாலும் என்னப்பா! இவ்வளவு பேரைக் கூப்பிட்டிருக்கீங்க... அவுங்க மூணு பேரையும் சேர்த்துக் கூப்பிட்டிருந்தால் என்ன பெரிசா கூடுதல் செலவாயிருக்கும்... அவங்களையும் கூப்பிட்டு..."இல்ல சார். நிச்சயமாக செலவுக்காகப் பார்க்கவில்லை. அவங்கெல்லாம் அப்படி இப்படின்னு பலவகையிலும் சம்பாதிச்சாங்க. அப்படி இருந்தவங்களுக்கு பதவி உயர்வு களும் கூட கிடைச்சுது. பாலன், வைஸ்சான்ஸ்சிலர் கூட ஆயிட்டார். அதெல்லாம் கிடைக்கட்டும் சார். ஆனா, இன்னைக்கு நாங்க உங்களை மாதிரி ஆசிரியர்களுக்குச் செதது, அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது சார். வித்தியாசம் இருக்கணும், அது வெளிப்படையாத் தெரியவும் செயணும்

சார். இந்த அன்பையும் மரியாதையையும் நாங்க சும்மா தூக்கிக் கொடுக்கத் தயாரில்லை. அது அவங்களுக்கும் அவுங்களை மாதிரி நடந்துக்கிற மற்ற ஆசிரியர்களுக்கும் புரியணும் சார். ராஜாராமன் வீடு போ இறங்கும்வரை பேசவில்லை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :