‘‘இது கார்ப்பரேட்டுக்கு எதிரான அரசியல்தான் படம்!’’

சினிமா பேட்டி
ராகவ்குமார்சரியா சொன்னா ஒரு வருஷம் ஆச்சு. நிறைய பேர் படத்தை OTT தளத்தில் ரிலீஸ் பண்ண சொன்னாங்க. ஆனா ‘காடன்’ படம் தியேட்டரில் ரிலீஸ் பண்ணாத்தான் அதை உணர முடியும் என்று வெயிட் பண்ணி ஊரடங்கிற்கு பின்பு இந்த மார்ச் மாதம் காடனை கொண்டு வரேன். இந்த மார்ச் 3ம் தேதி வன விலங்குகள் பாதுகாப்பு நாள். யானையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘காடன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் இந்த நாளில் செவது பொருத்தமானதாக உள்ளது" என்கிறார் பிரபு சாலமன்.

‘கும்கி’ படத்திலும் யானை, காடனிலும் யானை... யானை உங்களுக்கு வெள்ளித்திரை சென்டிமென்ட் அடையாளமா?

என்னுடன் பழகிப் பார்த்தவர்களுக்கு நான் எந்தவித சென்டிமென்டும் பார்க்க மாட்டேன் என்று தெரியும். உண்மையில் ‘கும்கி’ படத்தில் சொல்லாத யானை விஷயங் களை, இந்தப் படத்தில் சொல்லி உள்ளேன். கும்கியில் காதல் முன்னிலைப்படுத்தப்பட்ட தால், யானை பற்றி முழுமையாகச் சொல்ல முடியவில்லை. ‘காடன்’ படத்தில் முழு யானை யின் வாழ்வியலைச் சொல்லப்போகிறேன்.

சங்கர் என்றால் பிரம்மாண்டம், பாரதிராஜா என்றால் கிராமம், பிரபு சாலமன் என்றால் காடும் காடு சார்ந்த இடமும் என்று வைத்துக் கொள்ளலாமா?

இதுபோன்ற அடையாளம் எதுவும் என் மீது விழுந்து விடக்கூடாது என்று விரும்பு கிறேன். ஆனால், தேடல் மறுபடியும் காட்டை நோக்கிச் செல்ல வைத்து உள்ளது."

அப்படி என்ன தேடல் செதீர்கள்?

அஸாமில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் சில நிறுவனத்தினர் யானையின் பாதையை மறித்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சுவர் எழுப்பி விட்டனர். ஒரு நாளைக்கு பல கிலோ மீட்டர்கள் நடக்கும் யானைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதை புரிந்துகொண்ட சமூக ஆர்வலர் ஒருவர் சட்டப்படி போராட்டம் நடத்தி அந்தச் சுவரை இடிக்க வைத்து யானைகளின் வாழ்க்கையைக் காப்பாற்றினார். இந்த விஷயம்தான் காடன் கதையை நான் தேர்வுசெய முக்கிய காரணம். மேலும் ஒரு காட்டில் உள்ள ஒரு யானை ஒரு மரத்தை உடைத்துச் சாப்பிட்டால் அம்மரத்தின் விதைகள் விழுந்து காடு வளர்கிறது. யானைகள் ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் வரை கூட்டம் கூட்டமாக நடக்கக் கூடியது. நடக்கும்போது போடும் சாணம் கூட காடு வளர உதவுகிறது. இயற்கைச் சீற்றம் தடுப்பு மற்றும் மழைப் பொழிவு போன்ற காரணி களுக்கு காட்டில் உள்ள யானைகள் முக்கியம். பள்ளுயிர் சுழற்சியில் யானைகளின் பங்களிப்பு அவசியம். இந்த யானைகள் கொலை செயப்படுவது வேதனை அளிக்கிறது.

காடன் என்றால் என்ன அர்த்தம்?

காடன் என்றால் காட்டில் வசிப்பவன் என்று பொருள்."

காடன் பாகுபலி ராணா தேர்வு ஏன்?

வனத்தில் உள்ள ஒருவர் அங்கு உள்ள மரங்கள் போலவே கம்பீரமான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ராணா சரியான தேர்வு என்று நடித்த படங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டேன். படப்பிடிப்பு நான்கு ஆண்டுகள் வரை நடந்தது. ராணா உடலை ஏற்றியும், குறைத்தும் பல நாட்கள் நடித்துக் கொடுத்தார். ராணா சரியான தேர்வு என காடன் வெளியான பின்பு புரியும்."

உங்கள் படத்தில் காதல் இருக்குமே?

காடன் யானையைக் காதல் செய்கிறான். இப்படத்தில் இரண்டு புதுமுகப் பெண்கள் நடிக்கிறார்கள். இவர்களில் ஒருவர் மாவோயிஸ்ட் பெண்ணாக வருகிறார். விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

மாவோயிஸ்ட் பற்றி உங்கள் பார்வை என்ன?

வனங்களில் உள்ள மக்கள், ‘கார்ப்பரேட் அமைப்புகள் வளர்ச்சி’ என்ற பெயரில் அரசாங்கம் செயும் அராஜகம் மற்றும் தவறான போக்கு இவற்றை எதிர்க்கிறார்கள். இவர்களை அரசு மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துகிறது."

உங்கள் படங்கள் சொல்லும் அரசியல், கார்ப்பரேட்டுக்கு எதிரான அரசியலா?

கண்டிப்பாக இது கார்ப்பரேட்டுக்கு எதிரான அரசியல்தான்."

யானைகளை வைத்துப் படம் எடுக்கும் போது நடைமுறைச் சிக்கல்கள் என்ன?

இந்தியாவில் ஒரு யானையை வைத்துப் படம் எடுத்தாலே நிறைய சட்ட ரீதியான சிக்கல்கள் வரும். படத்தில் 18 யானைகள் என்பதால் பெரும்பாலான காட்சிகள் தாலாந்து நாட்டில் எடுக்கப்பட்டன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :