கனவு காணும் வாழ்க்கை

கடைசிப் பக்கம்
சுஜாதா தேசிகன்சமீபத்தில் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். கேள்வி நேரத்தில் ஒருவர் ‘எனக்கு அடிக்கடி கனவு வருகிறது. என்ன செயலாம்?’ என்றார். என்ன கனவு என்று சொல்லியிருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும்.(கனவு பற்றி நூறு வார்த்தை சிறுகதை ஒன்றை முயன்றேன் அது கடைசியில்).

சீரற்ற மூளை தூண்டுவதால் கனவுகள் ஏற்படு கிறது என்று பொதுவாகக் கூறினாலும், ஏன் வருகிறது என்று இதுவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. கண்டுபிடித்தால் அதை வராமல் தடுக்க மருந்து கண்டுபிடித்து, வாழ்க்கையின் சுவாரஸ்ய மான தருணங்களை இழந்து விடுவோம்.

இராமாயணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரிக்கு வரப்போகும் ஆபத்தின் குறியீடாகக் கெட்ட கனவுகள் வருகிறது, அதே போல் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும். எந்தக் கனவாக இருந்தாலும் நீண்ட நேரம் நீடிப்ப தில்லை சட்டென்று சிறுகதைபோல முடிந்து விடுகிறது. பெருமாள் என்னுள் புகுந்தபோது எல்லையற்ற ஆனந்தம் உண்டாகியது. அவன் பிரிவு கனவுபோல நீங்கிவிட்டது என்கிறார் நம்மாழ்வார்.

கனவுகளில் நம்முடைய ஏக்கங்கள், இச்சைகள், நிறை வேறாத விருப்பங்கள், ஏன் சில சமயம் சிக்கல்களைக்கூடத் தீர்க்க முடிகிறது. கணித மேதை ராமானுஜனின் கனவில் நாமக்கல் ஸ்ரீ நாமகிரி தாயார் கணித சமன்பாடுகளை காதில் கிசுகிசுத்தாள் என அவரே கூறியிருக்கிறார்.

1884ல் தையல் இயந்திரத்தில் ஊசி எவ்வாறு செயல்பட முடியும் என்பதைக் கண்டுபிடிக்கப் போராடினார் எலியாஸ் ஹோவ் (Elias Howe). ஒரு நாள் பழங்குடியினர் ஈட்டிகளுடன் தன்னைச் சூழ்ந்திருப்பதைப் போல் கனவு கண்டார். அந்த ஈட்டிகளின் முனையில் துளை இருந்தது. விழித்தெழுந்து, துளை கொண்ட ஓர் ஊசி தனது பிரச்னையைத் தீர்க்கும் என்பதை உணர்ந்தார்.

மாடியிலிருந்து விழுவது, பறப்பது, இறப்பது என்று நிஜத்தில் செது பார்க்க முடியாத சிலவற்றை ‘சிமுலேஷன்’ முறையில் நம் மூளை கற்பனை செது பார்க்க கனவுகள் உதவுகிறது. நமக்குள் இருக்கும் வெர்சுவல் ரியாலிட்டி! நம் வாழ்வில் 30% தூக்கத்தில் கழிக்கிறோம். அந்தத் தூக்கத்தில் 25% சதவிகிதம் நம் கண் விரைவாக இயங்குகிறது. இதை REM & Rapid Eye Movement என்பார்கள். தூக்கத்தின் ஆரம்பத்திலும், காலை எழுந்துகொள்ளும் சமயம் இது நிகழ்கிறது. இந்தச் சமயம்தான் கனவு வருகிறது என்கிறார்கள். காலைக் கனவின்போது அலாரம் அடித்து எழுந்துகொண்டு ‘விடியற்காலை கனவு பலிக்கும்’ என்கிறோம்.

கனவு வரும்போது யாரோ அழுத்துவது போலவும், சில நிமிஷம் கை கால்கள் செயல்படாமல் இருப்ப தற்குக் காரணம் கனவின்போது நம் தசைகள், பேச்சு (மூச்சு கிடை யாது) எல்லாம் முடக்கப்படு கிறது. நம் மூளை செயும் விசித்திரமான விஷயங்களில் இதுவும் ஒன்று. பழைய காதலி கனவில் வந்து அவளுடன் நீங்கள் ஓடிவிட்டால்? கனவு பிரச்னை (நூறு வார்த்தை சிறுகதை) டாக்டர் ராகவனைத் தெரியுமா உங்களுக்கு? எந்தப் பிரச்னை என்றாலும் சுலபமாகத் தீர்த்து வைப்பார். ஜலதோஷமா? மூணு நாள் இருந்து விட்டுப் போகும். மருந்து வேண்டாம்" என்பார்.

நேற்று அவருடைய ‘கிளினிக்’ சென்றேன். வணக்கம் கூடச் சொல்லாமல், டாக்டர் நீங்க தான் என் பிரச்னையை உடனே தீர்க்க வேண்டும்" என்றேன். பிரச்னையைச் சொல்லுங்க" ஒரு வாரமா ஒரே கனவு."ராத்திரி சி.எஸ்.கே. மேட்ச் பார்த்துட்டு தூங்கினா இப்படித்தான்..."டாக்டர் கனவு பிரச்னை இல்லை. தினமும் ‘ஒரே’ கனவு வருகிறது. நிறுத்த வேண்டும் அல்லது வேறு மாதிரி கனவு வர வழி சொல்லுங்கள்!"

அப்படி என்ன கனவு?"பத்து அழகழகான பெண்கள் என்னைச் சுற்றி வருகிறார்கள். ஒவ்வொருத்தியும்கிட்டே வந்து கண்ட இடத்தில்... சில்மிஷம் செய்கிறார்கள்" சுருக்கமாக முடித்தேன். டாக்டர் சிரித்துக்கொண்டே, இதுல என்ன பிரச்னை? நல்ல கனவுதானே? ஜஸ்ட் என்ஜாய் !" என்றார்.

எப்படி டாக்டர், அந்தப் பெண்கள் குரூப்பில் நானும் ஒருத்தியாக இருக்கேன்!"

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :