ராகுல் முதல்வர் வேட்பாளரா?

தேர்தல் களம் 2021
எஸ்.சந்திரமௌலி1980 முதல் கடந்த நாற்பது வருடங்களாக கேரள வாக்காளர்கள் அரசியல் ரீதியாக ஒரு மரபினைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இரு முனைப் போட்டியை மையமாகக் கொண்ட கேரள அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். என்ற ஐக்கிய ஜனநாயக முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப். என்ற இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வந்துள்ளன. ஆளும் கட்சி மீதான அதிருப்திதான் இதற்குக் காரணம் என்று சொல்ல முடியாது. ஈ.கே. நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன் போன்ற மக்கள் மதித்த சிறந்த கம்யூனிஸ்ட் முதலமைச் சர்கள் கூட இரண்டாவது முறையாக வென்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளமுடிய வில்லை. ஆனால், இந்தமுறை பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி, மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கையோடு சொல்லிவருகிறது. ‘நாங்கள் மக்கள் நலனில் அக்கறையோடு பல திட்டங்களைச் செயல்படுத்தியதுடன், மாநிலம் சந்தித்த பேரிடர்களையும் மிகவும் திறமையாக சமாளித்து, மீட்டிருக்கிறோம். அண்மையில் நடந்து முடிந்த உள்ளட்சித் தேர்தலில், மாநிலம் முழுவதும் மக்கள் இடதுசாரிக் கூட்டணிக்கு அமோக ஆதரவு அளித்திருப்பதே அதற்கு சாட்சி. வரும் சட்ட மன்றத் தேர்தலிலும் எங்கள் வெற்றி நிச்சயம்’ என்று அவர் விளக்குகிறார்.

கேரள அரசியல் நோக்கர்கள், பஞ்சாயத் துத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவை, பினராயி விஜயன் அரசின் மக்கள் நலத்திட்டங்கள், பஞ்சாயத் துத் தேர்தல் வியூகம், காங்கிரஸ் கூட்டணி யில் இருந்து கேரளா காங்கிரஸ்- மணி கட்சியை, இடதுசாரிகள் தங்கள் கூட்டணிக்கு இழுத்து விட்டார்கள். இதன் பயனாக மத்திய மற்றும் தெற்கு கேரளாவில் எப்போதும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் பெருவாரியாக இருக்கும் கிறிஸ்தவர்களின் வாக்குகள் இந்த முறை பிரிந்து இடதுசாரிக் கூட்டணியின் வெற்றி வாப்புகளை அதிகரித்துவிட்டது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென் றால், தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்பாகத் தான் தங்கக் கடத்தல் வழக்கு விஸ்வரூபம் எடுத்து கேரள முதலமைச்சரது முன்னாள் முதன்மைச் செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரின் கைது வரை போனது. அதன் தாக்கம் தேர்தலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இடது சாரிக் கூட்டணிக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்பதுதான். போதாக்குறைக்கு, கேரள சி.பி.எம்.கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன், போதை மருந்து விவகாரத்தில் கைது செ யப்பட்டார். இவற்றின் தாக்கம் ஏதுமில்லாமல், பஞ்சாயத்துத் தேர்தலில் வென்ற இடதுசாரி கள், தங்கள் அரசின் மக்கள் நலத் திட்டங் களையும், மாநிலம் முழு வதிலும் மேற் கொள்ளப்பட்டிருக்கும் உள்கட்டமைப்பு மேம் பாட்டுத் திட்டங்களையும், கொரோனா தொற்று காலத்தில் எடுக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளையும் முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொள்ளவிருக் கிறார்கள். கேரள மக்கள் மனதில் தேசிய அளவில் நரேந்திர மோடியைப் போல, மாநில அளவில் பினராயி விஜயன் ஒரு வலுவான தலைவராக விளங்குகிறார் என்ற எண்ணம் நிலவுகிறது.

2016 சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தாலும், 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் 20 எம்.பி.தொகுதிகளில் 19 இடங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஆனால், அண்மையில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில், காங்கிரசால் அதுபோல வெற்றி பெறமுடியவில்லை. மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆதரவு இழந்ததற்கு என்ன காரணம்? முதல் காரணம், கூட்டணியில் இருந்து கேரளா காங்கிரஸ் - மணி கட்சி விலகியது. அடுத் தது, காங்கிரஸ் கூட்டணிக் குள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆக்கிரமிப்பு அதிகரிப்பது காங்கிரசுக்கு ஆதரவான கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மனக்கசப்பை அதிகரித்துவிட்டது. இதன் பலனாக கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதை சரிக்கட்டுவதற்காக காங்கிரஸ் கட்சிக்குள் சமீப காலமாக ஓமன் சாண்டிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படு கிறது. அதுமட்டுமில்லை, தற்போது சட்ட மன்றத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில், பாண்டிச்சேரியிலும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிட்ட சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியைப் பிடிக்க வாப்பு இருக்கும் ஒரே மாநிலம் கேரளாதான். எனவே, ராகுல் காந்தி வயநாடு தொகுதியின் எம்.பி. என்ற முறையில், கேரளாவை இழக்க விரும்பவில்லை. எனவே, அவர் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே, கேரளாவில் தீவிரமாக பிரசாரம் செயத் துவங்கிவிட்டார். அண்மையில் கேரள எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சின்னிதாலா ஏற்பாடு செத மாநிலம் தழுவிய ஐஸ்வர்ய கேரள யாத்திரையின் நிறைவு விழாவில் ராகுல்காந்தி பங்கேற்றார். ராகுல் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் பெருமளவில் திரள்வது அவருக்கும், கட்சி யினருக்கும் பெரும் உற்சாகத்தைத் தருகிறது. கேரளாவில் பிரசாரக் கூட்டங்களில் பேசும் போது, ராகுல் காந்தி இடதுசாரிக் கூட்டணி ஆட்சியை கடுமையாக விமர்சனம் செகிறார். (தேர்தல் நடைபெறும் இன்னொரு மாநில மான மே.வங்காளத்தில் காங்கிரஸ், இடது சாரிகளோடு கூட்டணி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)ஆளும் கூட்டணி வளர்ச்சித் திட்டங்களை முன்னிலைப்படுத்தினாலும், காங்கிரஸ் தரப்பு ஆட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துத் தேர்வு பெற்றவர்கள் நடத்திய போராட்டம், ஆழ்கடல் மீன்பிடிப்பு காண்டிராக்டை அமெரிக்க நிறுவனத்துக்குக் கொடுத்தது என்று பட்டியல் போடுகிறது. நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட, நிலைமை இடதுசாரிகளுக்கு ஆதரவாகவே ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், வயநாட்டில் ராகுல் களமிறங்கியதும், நிலைமை தலை கீழாகிவிட்டது. இப்போதும், பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுபோல சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கப்போவதில்லை. ராகுலின் பிரசாரம் அதற்கு மிகவும் துணை புரியும்’ என காங்கிரஸ் தரப்பு உறுதியாக நம்புகிறது. அதற்கு ஒருபடி மேலாகப் போ, ராகுல் காந்தியை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. ‘என்னது? ராகுல், கேரள முதலமைச்சர் வேட்பாளரா?’ என்று கேட்டால், ‘உங்களுக்கு நம்புவது சிரமமாக இருக்கலாம்! இரண்டு வருடங்களுக்கு முன்பு, ராகுல், கேரளாவில் இருந்து நாடாளுமன்றத்துக்குப் போட்டி இடுவார்!’ என்று சொல்லி இருந்தாலும், இதே போலத்தான் நம்பி இருக்க மாட்டீர்கள்!’ என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.

இடது சாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணி கள் மட்டுமே பங்கேற்க இருதுருவ அரசியல் நடந்து வந்த கேரளாவில், இப்போது புதிதாக வந்து இறங்கி இருக்கிறது பா.ஜ.க. கூட்டணி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ மட்டுமே ஜெயித்தார். ஆனால், பா.ஜ.க. மொத்தத்தில் சுமார் 15% வாக்குகளைப் பெற்றது. மோடி, அமித்ஷா பிரசாரம், மெட்ரோ ரயில் திட்ட சூத்திரதாரி ஈ.ஸ்ரீதரன் (இவர்தான் பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராம்) முன்னாள் போலிஸ் டி.ஜி.பி. ஜாக்கப் தாமஸ் போன்ற வர்களைக் கட்சியில் சேர்த்து, தேர்தல் களமிறக்குவது என்று பா.ஜ.க.வும் சும்மா இருக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் 20%க்கு அதிகமாக வாக்குகள் பெற்ற பகுதி களில் 42 சட்டமன்றத் தொகுதிகளைத் தேர்ந் தெடுத்து, அங்கே வெற்றிக் கனியை தட்டிப் பறிக்கத் திட்டமிடுகிறது பா.ஜ.க. கேரளாவில் மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகள். இந்தமுறை எல்லா தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி இருக்கப் போகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்ற மரபு வரும் தேர்தலிலும் தொடருமா? அல்லது மரபு மீறப்படுமா? பதில் கேரள வாக்காளர்கள் கையில் இருக்கிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :